38 – காற்றின் நுண்ணுறவு
நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான்.
“என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?”, எனக் கேட்டான்.
“கொஞ்சம் உடம்பு சரியில்ல ம்ரிதுள்”, அவன் முகத்தைப் பார்க்காமல் பதில் கொடுத்தான்.
“டைஸிய நீ லவ் பண்றியா?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
யோகேஷ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“எனக்கு நேரமில்ல யோகேஷ். நம்மல தேடி இங்க வரைக்கும் ஆள் வந்துட்டாங்க… உடனே இங்க இருந்து கிளம்பணும்…. “, என இழுத்துவைத்த பொறுமையில் பேசினான்.
“அவ என்னை லவ் பண்ணா… அப்ப நான் பணத்திமிறுல அவள அலட்சியப்படுத்தினேன்…. “, எனக் கூறினான்.
“நம்மலோட யூரோப் டிவிஷனல் ஹெட் டைஸி தான். அவ அதித் கிட்ட சேர்த்து எட்டு வருஷம் ஆகுது . அவனோட ப்ரஷர அவ தான் ரொம்ப வருஷமா தாங்கிட்டு இருக்கா…. “, எனக் கூறி வந்தவன் ஒரு நொடி நிறுத்தி தொடந்தான், ” உனக்கு அவ மேல காதல் இருந்தா அவள கண்காணாத இடத்துக்கு கூட்டிட்டு போயிடு… இரக்கம் இருந்தா எங்கயாவது இறக்கி விட்டுட்டு வா…. போதும் ….. அவ கஷ்டப்பட்டது”, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
“ம்ரிதுள்”, யோகேஷ்.
“இங்கிருந்து கிளம்பணும்…. ஏற்பாடு ஆரம்பி… நான் நாச்சியாவையும், நம்பர் 50யும் என்கூட கூட்டிட்டு கிளம்பறேன். மத்தவங்கள ஊருக்குள்ள இறக்கி விட்று…. நீ உன் அப்பா கிட்ட போயிடு”, என மடமடவென உத்திரவுகளைப் பிறப்பித்தான்.
“புதுசா வந்தவன்?”
“அவனையும் ஊருக்குள்ள இறக்கி விட்று…. எல்லாருக்கும் மயக்கமருந்து போட்று…. நம்ம ஆளுங்கள அவங்களுக்கு தெரியாம காவலுக்கு நிறுத்தி வை. மயக்கம் தெளிஞ்சி எந்திரிச்சி எல்லாரும் கிளம்பினப்பறம் அவங்களை போக சொல்லு…..”
“இந்த நாலு வருஷத்துல நீ மாறிட்டன்னு நினைச்சேன் ம்ரிதுள்”
“அடிப்படை என்னிக்கும் மாறாது யோகேஷ்”, எனக் கூறி அவனை அணைத்து விடுவித்துவிட்டு நாச்சியாவையும், இனியனையும் மட்டும் ஏற்றிக்கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டான்.
“எங்க போறோம்?”, நாச்சியார்.
“வந்தது உன் ஆளு தானே… அதான் உன்னை தனியா கொண்டு போறேன்”, எனக் கூறிவிட்டு ஆக்ரோஷமாக வண்டியை ஓட்டினான்.
“சார்…. மத்தவங்க?”, இனியன் தயக்கத்துடன் கேட்டான்.
“ஷட்அப்”, என அவன் வாயை அடைத்தான்.
தன்னிடமிருந்த போனில் செக் போஸ்டில் இருப்பவர்களுக்கு தகவல் அனுப்பினான். சிக்னல் கிடைத்தால் தான் தகவல் சென்றடையும்.
டவர் கிடைக்கிறதா என அவ்வப்போது பார்த்தபடியே வந்தான்.
ஊருக்குள் வந்தவன் அங்கே ஒரு இடத்தில் தற்காலிகமாக இருவரையும் தங்கவைத்துவிட்டு எங்கோ சென்றான்.
“இவன் எங்க போறான்?”, நாச்சியார் கேட்டாள்.
“தெரியல மேம்…. ஏதோ ப்ளான் பண்ணி தான் பண்றான். அங்க வந்தது உங்க ஆளா?”, என இனியன் வெளியே பார்வையைப் பதித்தபடிக் கேட்டான்.
“ஆமா… அங்கிருக்கறவங்கள என்ன பண்ணப்போறான்?”, நாச்சியார் கலக்கத்துடன் கேட்டாள்.
“இப்ப தான் மெஸேஜ் வந்தது. எல்லாரையும் ஊருக்குள்ள இறக்கிவிட சொல்லி இருக்கான்”, என மெதுவாகக் கூறினான்.
“நிஜமாவா? இவன என்னால நம்பமுடியல”, நாச்சியார் சந்தேகத்துடன் கேட்டாள்.
“நிஜம் தான் நாச்சியா”, என்றபடி ம்ரிதுள் உள்ளே வந்தான்.
இனியன் எழுந்து நின்றான்.
“அசிஸ்டண்ட் கமிஷ்னர் யாழினியன்…. நல்ல நடிப்பு… நல்ல வேஷம்…..”, என பாராட்டியபடி இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்தான்.
இருவரும் சற்றுத் திகைத்துத் தன்னிலைப் பெற்றனர்.
“உக்காருங்க”, என இருவரையும் அமரச் சொன்னான்.
ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்ததும், “நாச்சியா… உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உன் தைரியம், உன் தெளிவு எல்லாமே என்னை உன்கிட்ட மண்டிபோட வைக்குது”, எனக் கூறி அவளை ஆழமாக நேருக்கு நேர் பார்த்தான்.
“ஆனா என்னால உன்கிட்ட நேரடியா மண்டி போட முடியாது…. அதுக்கு என் ஈகோ தடுக்குது…. இனியன்…. உன்ன இன்னிக்கு தான் கண்டுபிடிச்சேன். உன் நேர்த்தியான நடிப்புல நான் ஏமாந்துட்டேன். இன்னிக்கு காலைல நீ அவன பிடிச்ச ஸ்டைல் உன்ன போலீஸ்ன்னு காட்டிரிச்சி…. என்ன இருந்தாலும் அந்த போலீஸ் அட்டிடீயூட் வந்துடுதுல்ல”, எனக் கூறிச் சிரித்தான்.
“என்ன செய்ய அது ஊறிடிச்சி….. சரி அடுத்து என்ன பண்ணப்போற?”, இனியன் லகுவாக அமர்ந்தபடிக் கேட்டான்.
“உன்னப்பத்தி கேள்விபட்டது நிஜம் தான் போல…. “, எனக் கூறிவிட்டு, “தோஹா போறோம்…. ஒன் அவர்ல”, என எழுந்தான்.
“நீங்க யாருன்னு தெரிஞ்சப்பறம் நான் தடுக்கமுடியாதுன்னு நினைக்காதீங்க…. இப்பவும் உங்க குடுமி என் கைல தான் இருக்கு”, எனக் கூறிவிட்டுப் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டான்.
“என்ன பண்ணலாம்?”, நாச்சியார்
“பாரின் போகணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை…. ஓசில போகலாமே. ..”, எனக் கூறிவிட்டுக் கட்டிலில் சாய்ந்தான்.
“மிஸ்டர்… எழுந்திரிங்க…. வேலை இருக்கு இங்க வாங்க”, என அவனை எழுப்பிவிட்டு லேப்டாப்பை ஆன் செய்து இனியன் கொடுத்த பேப்பரை எடுத்தாள்.
“இது நாக் தானே குடுத்தான்”, எனக் கேட்டாள்.
“ஆமா… அதான் அப்பவே குடுத்தேனே…. ”
“இது… அவனா குடுத்தான்”, கையெழுத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“ஆமாங்க…. ஏன் நீங்க எதையும் நம்பவே மாட்டேங்கறீங்க?”, இனியன் சலித்துக்கொண்டான்.
“என் நேச்சர் அதான்… யாருக்கும் நான் விளக்கம் குடுக்க முடியாது…”, பட்டென கூறிவிட்டு அதில் எழுதி இருந்ததைப் படித்தாள்.
“இருபதாம் நூற்றாண்டின் எச்சமில்லா-
உயிர்களின் மிச்சம்…
முந்தைய குமரியின் மேற்கு கோடி….
பாறை சதுப்பில் துவாரமுண்டு….
நடுவெளியில் வளிகொண்டு உன்குருதி துணைக்கொண்டு இறங்கு”, என அதில் எழுதி இருந்தது.
“ஒன்னுமே புரியல… என்ன இது?”, யாழினியன் அதை மீண்டும் படித்தபடிக் கேட்டான்.
“இந்த பொருள் எல்லாத்தையும் அவன்கிட்ட குடுத்துட்டு வாங்க “, என இனியனிடம் கொடுத்தாள்.
“என்னன்னு கேட்டா பதில் சொல்லாம என்னை வேலை வாங்கிட்டே இருங்க நீங்க…”, எனச் சலித்தபடிப் பக்கத்து அறைக்குச் சென்றான்.
“வழிய கண்டுபிடிச்சிட்டாளா?”, ம்ரிதுள் அவன் வருவதைக் கண்டு கேட்டான்.
“தெரியல… நீயே வந்து கேட்டுக்க… நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்”, என அங்கேயே படுத்துக்கொண்டான்.
“உனக்கு கொலுப்பு அதிகம் தான்…. இன்னும் உன்ன உயிரோட விட்டு வச்சிருக்கேன்ல”, எனக் கடுப்புடன் கூறினான்.
“கொண்ணுக்க…. எனக்கும் இந்த வேலை எல்லாம் மிச்சம்…. “, என அசட்டையாகக் கூறியபடிப் படுத்துறங்கினான்.
“வழி தெரிஞ்சதா?”, எனக் கேட்டபடி ம்ரிதுள் உள்ளே வந்தான்.
“மடகாஸ்கர் போகணும்”
“அங்க எங்க?”
“இட்சிங்கி”
“அது சதுப்பு நிலப்பகுதி தானே”
“அங்க தான் வழி இருக்கு”
“அப்ப மால்டெவிஸ் கல்ப் எல்லாம்?”
“அது எனக்கு தெரியாது”
“எப்ப போகணும்?”
“இன்னும் கொஞ்சம் எனக்கு டைம் வேணும்”
“இரண்டு நாள் உனக்கு அங்க கிடைக்கும்”
“ம்ம்ம்….தேங்க்ஸ்”, அதையும் இறுக்கமாகவே கூறினாள்.
“ம்ம்…. நீ சிரிக்கவே மாட்டியா?”
“சிரிக்க இங்க ஒன்னும் இல்ல”, கத்தரித்தாற் போலவே இருவருக்கும் உரையாடல் நிகழ்ந்தது.
“கஷ்டம்….”, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான் ம்ரிதுள்.