39 – அகரநதி
நதியாள் மாடியில் இருந்து அகரனின் கைகளில் இருந்து விடுபட்டு சிரித்தபடி கீழே வர, அகரனும் மேல் இருந்தபடியே காற்றில் முத்தம் ஒன்றை அனுப்ப என்று இருவரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது.
அகரனின் சரசத்தைக் கண்டு மதுரனும் தேவ்வும் மூக்கிலும் காதிலும் புகைவிட்டபடி அவனைக் கண்டு முறைத்தனர்.
“பாத்தியா தேவ். நம்மல கீழ அனுப்பிட்டு அவன் என்ன வேலை பண்றான்னு? இவனுக்கு மட்டும் எப்படி அமையுது? நம்ம ஆளுங்க கூட நம்மனால பேசக்கூட முடியல…இவன் ரொமான்ஸ் உள்ள பண்ணதும் இல்லாம நம்ம கண்முன்னாடி வேற ப்ளையிங் கிஸ் குடுக்கறான்”, மதுரன் எரிச்சலுடன் கூறினான்.
“அவனுக்கு அமைஞ்சது அப்படி…. நமக்கு பாரு பக்கத்துலயே இருக்கோம். நாம பாக்கறோம்னு தெரியுது… ஆனாலும் நம்ம பக்கமே திரும்பாம எப்படி உட்கார்ந்து இருக்காளுங்க பாரு. நதி வந்துட்டா அவகூட இவளுங்களும் போய்றுவாளுங்க இப்ப.… இதுல என்கிட்ட சத்தியம் வேற வாங்கிட்டாங்க புருஷனும் பொண்டாட்டியும்….. என்ன நடக்குமோ தெர்ல”, என தேவ் சலுப்புடன் கூறினான்.
தேவ் சொல்லி முடிக்கும்முன் ஸ்டெல்லாவும், மீராவும் நதியாளுடன் அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.
மதுரன் தேவ்வை பாவமாகப் பார்த்துவிட்டு அகரனை காண மேலே சென்றனர்.
“ஆமா என்ன சத்தியம்? யார் வாங்கினா?”, மதுரன்.
“அகரும் யாளும் தான். அவங்க சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு”, என தேவ் கோவிலில் நடந்ததைக் கூறினான்.
“வேலை சிம்பிள் தேவ். அகர் கிட்ட மீராவ லவ் பண்றத சொல்லிடு.. அவங்களே உங்க இரண்டு வீட்லயும் பேசி ஓக்கே பண்ணிடுவாங்க”, மதுரன்.
“நான் மீராவ லவ் பண்றதே நேத்து தான் மது எனக்கு புரிஞ்சது. சென்னைல ஆல்ரெடி அந்த சரிதாவால பெரிய பிரச்சினை அதுல மீராவ ஹர்ட் ஆகறமாதிரி பேசிட்டா. அதுவும் என்னையும் அவளையும் சேத்து வச்சி ரொம்ப கேவலமா பேசிட்டாங்க வினயும் சரிதாவும். அதான் மீராவ இப்ப நான் லவ் பண்றதா சொன்னா எப்படி எடுத்துப்பாங்களோன்னு யோசனையா இருக்கு”, தேவ் தன் மனகலக்கத்தைக் கூறினான்.
“கொஞ்சம் சென்சிடீவான விஷயம் தான். மீராவும் இதுல என்ன நினைக்கறாங்கன்னு தெரியனும்ல…. “, மதுரன் யோசனையுடன் கேட்டான்.
தேவ் ஆமென தலையாட்ட,” சரி பர்ஸ்ட் அகர் கிட்ட மீராவ லவ் பண்றத சொல்லிடு. அப்ப தான் நாளைக்கு எதாவது பிராப்ளம் வந்தாக்கூட நமக்கு சப்போர்ட் கிடைக்கும்”, என மதுரன் யோசனைக் கூறினான்.
“அதுவும் கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு மது”, தேவ் தயங்கினான்.
“இப்படி தயங்கினாலாம் லவ்ல வேலைக்கு ஆகாது தம்பி. அகர் கிட்ட சொல்றது தான் பரவால்ல”, எனக் கூறியபடி அகரனின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.
“என்ன என்கிட்ட சொல்லணும்?”, எனக்கேட்டபடி அகரன் முகத்தை டவல் கொண்டுத் துடைத்தபடிக் கேட்டான்.
“அது…..அது வந்து….. நான்…..”, தேவ் திக்கி திக்கிப் பேசினான்.
“சொல்லு தேவ். என்ன வந்து போயின்னு சொல்லிட்டு இருக்க? என்ன விஷயம்?”, அகரன் வேறு உடை அணித்தபடிக் கேட்டான்.
“சொல்லு தேவ். அகர் கேக்கறான்ல”, மதுரன் உற்சாகப்படுத்தினான்.
“அது வந்து அகர். நான்….நான் வந்து….. அது…. முக்கியமான விஷயம் சொல்லணும்”, தேவ்.
“சொல்லுடா … அத தானே கேட்டுட்டு இருக்கேன்”, அகரன்.
“நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்”, தேவ் தயங்கியபடிக் கூறினான்.
அகரன் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சீப்பை எடுத்துத் தலை வாரியபடி,” யாரு அந்த பொண்ணு?”, எனக் கேட்டான்.
“அது…. வந்து….. “, தேவ் மீண்டும் தயங்கினான்.
“சொல்லு டா”, என மதுரன் ஊக்கப்படுத்தினான்.
“அது நம்ம …. நம்ம…… “, தேவ்.
“நம்ம? “, எனக் கேட்டபடி அகரன் அவன் அருகே வந்து நின்றான்.
“மீராவ லவ் பண்றேன் அகர். அவள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை படறேன்.. “, தேவ் ஒருவழியாகக் கூறிமுடித்தான்.
“அப்ப நதிக்கு செஞ்சு குடுத்த சத்தியம்?”, அகரன் கேள்வியாகத் தன் புருவத்தை உயர்த்தினான்.
“இல்ல அகர். நான் மீராவ லவ் பண்றதே நேத்து தான் எனக்கு கன்பார்ம் ஆச்சி. இன்னும் மீராகிட்ட கூட சொல்லல டா. யாள் சடனா இப்படி கேட்பான்னு நான் எதிர்பாக்கல. நீ தான் எங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும்”, தேவ்.
“நதிக்கு வாக்கு குடுத்தா அத காப்பாத்தணும் தேவ். நீ இப்படி சொல்ற…. அவ உனக்கு வேற பொண்ண பாத்துட்டு இருக்கா….”, அகரன் தேவ்வைப் பார்த்தபடி இழுத்தான்.
“ப்ளீஸ் அகர். எனக்கு உன்னவிட்டா வேற யாரு டா ஹெல்ப் பண்ணுவா? “, தேவ் அகரனின் டீசர்ட்டை பிடித்து இழுத்தபடிக் கூறினான்.
“அடச்சீ சட்டைய விடு. சரி முதல்ல அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு. ஒத்துகிட்டா என்கிட்ட வா. இல்லைன்னா நதி சொல்ற பொண்ணு தான் உனக்கு பொண்டாட்டி”, அகரன் கறாராகக் கூறினான்.
அகரனின் பேச்சைக் கேட்டு தேவ் திருதிருவென முழித்தான்.
“டேய் என்னடா? பிரண்டுக்கு ஹெல்ப் பண்ணமாட்டியா?”, தேவ் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்டான்.
“அதே மாதிரி நானும் உன்ன கேட்கலாம்ல மச்சி?”, அகரன் சிரித்தபடிக் கேட்டான்.
“உனக்கு என்னடா ஹெல்ப் வேணும் சொல்லு நான் செய்றேன்”, தேவ் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டான்.
“அது நேரம் வரப்ப கேக்கறேன்….. மது உனக்கு எதாவது ஹெல்ப் தேவை?”, அகரன் மதுரனின் புறம் திரும்பினான்.
“என்ன நம்மல பாக்கறான்….. சரி நாமலும் சொல்லி வைப்போம்”, என மனதிற்குள் நினைத்துக்கொண்டு,” அகர் நீ என் நண்பன் டா. உனக்கு செய்யாம நான் யாருக்கு செய்யப்போறேன்? நீ கேக்கறதுக்கு முன்னவே உனக்கு நான் செய்வேன் டா”, என அவனும் வாலன்டியராக வந்து மாட்டினான் மதுரன்.
“அப்ப உனக்கும் என் ஹெல்ப் தேவை? அப்படித்தானே? “, அகரன் புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.
“ஆமா அகர் பேபி. நீ என் பேபிக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிடு அவ்வளவு தான்”, மதுரன் சந்தடியில் என் கல்யாணமும் உன் பொறுப்பென்று அவனிடம் தள்ளிவிட்டான்.
“நீயும் அந்த பொண்ணு கிட்ட சொல்லு அதுக்கப்பறம் யோசிக்கறேன்”, என அகரன் கூறிவிட்டு அவர்களைப் பிரஸ் ஆகி பின் மேலே வரச்சொல்லிச் சென்றான்.
“என்னடா வரிசையா இன்னிக்கு பிராமிஸ் வாங்கறாங்க…. இதனால பின்னால எதாவது பெருசா சம்பவம் நடக்குமோ?”, தேவ் சந்தேகமாகக் கேட்டான்.
“நமக்கு நல்லதா இருந்தா பரவால்ல மச்சி ஆனா அவன் டோன், மாடுலேஷன் இரண்டுமே எனக்கு சரியா படல. இன்னும் பாக்கி சரண் மட்டும் தான் பிராமிஸ் பண்ணணும்”, மதுரன்..
“அப்ப நம்ம கதி?”, தேவ்.
“நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு இருக்கலாம் தேவ். அதவிட்டா வேற வழி இல்ல நமக்கு. வசமா சிக்கிட்டோம் இவன்கிட்டயும் இவன் பொண்டாட்டி கிட்டயும்”, மதுரன் கூறியபடி உடைமாற்றச் சென்றான்.
“ஆமா நீயும் யாள கல்யாணம் பண்ண கேட்டியாமே? அப்படியா?”, தேவ் தன் அதிமுக்கியச் சந்தேகத்தைக் கேட்டான்.
“ஆமான்டா…. பாத்ததும் பிடிச்சிபோச்சி. சரி நமக்கும் கல்யாண வயசு வந்துரிச்சேன்னு பொண்ணு கேட்டேன். அகர் மட்டும் அன்னிக்கு இருந்திருந்தா எனக்கு கருமாதி செஞ்சி இருப்பான் கடைசி கடைசியா பேச பேச…. அப்பறம் நடந்தது பாரு ஒரு விஷயம்…..”, மதுரன் ஏற்ற இறங்கங்களோடுக் கூற, தேவ் சுவாரஸ்யமாகத் தலையனையைக் கைக்கு வைத்தபடிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“என்ன நடந்துச்சி மது ?”, தேவ்.
“அது அகர யாள் கூப்பிடறதுக்கு சரணுக்கு கால் பண்ணாளா”, மதுரன்.
“ம்ம்…அப்பறம்….”, தேவ்.
“அன்னிக்கு வேற அகருக்கும் யாளுக்கும் சண்டையாம் …. சரண் என்கூட பேசிட்டு இருந்தப்ப அகர பாக்க யாள் வந்ததும் வச்சா பாரு ஒரு அடி”, என மதுரன் தன் கன்னத்தில் அறை வாங்கியது போல் கைவைத்துக் கொண்டுக் கூறினான்.
“நேத்து அடிச்சாளே அப்படியா?”, தேவ்.
“நேத்து ஒரு அடியோட விட்டுட்டா டா. கார் பார்கிங்ல இருந்து வந்தவ அவன பிடிச்சி மறைவா கொண்டு போய் அடி பிண்ணி எடுத்துட்டா… அடிச்சப்பறம் அவளே கட்டிப்பிடிச்சி சமாதானமும் பண்றா. அத பாத்துட்டு நான் பேக் அடிச்சிட்டேன் மச்சி”, மதுரன்.
“ஏன்டா அடிக்கு பயந்தா?”, தேவ்.
“இல்லடா…. அவங்களுக்குள்ள இருந்த பாண்டிங் சான்ஸ்லெஸ். அத பாக்கறப்பவே அவ்வளவு அழகா இருந்தது அதான் விட்டுட்டேன். அதுக்கப்பறம் ஸ்டெல்லாகிட்ட விழுந்துட்டேன் மச்சி……”, மதுரன் கண்களில் காதல் மின்னக் கூறியபடித் திரும்பி பார்க்க, அங்கே நதியாள் இடுப்பில் கைவைத்தபடி அவர்களைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.
“வா யாள்…. எப்ப வந்த?”, தேவ் சமாளித்தான்.
“ம்ம்….. மிஸ்டர் மதுரன் தன்னோட காதல் கதைய சொல்லிட்டு இருந்தப்ப”, மதுரனைப் பார்த்தபடிக் கூறினாள் நதி.
“நல்லதா போச்சி… ஸ்டெல்லாவ எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடுங்க நதியாள்…… “, மதுரன் சற்றே தெனாவட்டாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடிக் கூறினான்.
“ஓஓ…… கல்யாணம் செஞ்சா மட்டும் போதுமா ? இல்ல ஹனிமூன் ட்ரிப் வரைக்கும் அரேஞ் பண்ணி தரட்டுமா மிஸ்டர் மதுரன்?”, நதியாள் கேட்டபடியே மெதுவாக உள்ளே வந்தாள்.
“அதுவும் செஞ்சா நான் வேணாம்னு சொல்லமாட்டேன். பட் நான் ஒன் ஆர் டூ மன்த் பிளான் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எந்த கண்ட்ரிக்கு அஃப்பார்ட் பண்ண ரெடியா இருக்கீங்க?”, மதுரன் மேலும் கேள்வி கேட்க நதியாள் அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்தாள்.
“மிஸ்டர் மதுரன்…. இதுல்லாம் பின்னாடி பேசிக்கலாம். ஸ்டெல்லா கிட்ட லவ் சொல்லிட்டீங்களா? “, நதியாளும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அருகில் இருந்த மேகஜீனை எடுத்துப் புரட்டியபடிக் கேட்டாள்.
“இல்ல யாள். இனிமே தான் சொல்லணும். கம்முன்னு நீயே அதுக்கும் ஐடியா குடேன். நீ தான் நல்லா ஐடியா குடுப்பியாம் சரணும் சொன்னான்”,என நதியாளைப் பார்த்தபடி அமர்ந்து மதுரன் கேட்டான்.
“லவ்வுக்கு நான் என்ன ஐடியா மதுரன் குடுக்க முடியும்?”, நதியாள்.
“அவளுக்கு நான் அவள பாக்கறேன்னு தெரியுது …. எனக்கு அவள புடிச்சிருக்குன்னும் தெரியுது.. ஆனா அவ என்ன நிறைக்கறான்னு தான் எனக்குப் புரியல…. நீ பேசி பாரேன் அவகிட்ட என்னபத்தி”, மதுரன் ஆர்வமாக பேசினான் அவளைப் பற்றி.
நதியாள் மதுரனின் முகத்தில் இருந்த ஆர்வத்தை மனதில் குறித்துக்கொண்டாள். பின், “உங்க வீட்ல உங்க விருப்பத்துக்கு சம்மதிப்பாங்களா மதுரன்?”, எனக் கேட்டாள்.
“அதுல்லாம் பிரச்சனை இல்ல நதி….. “, எனக் கூறியவன் நதியாள் முறைப்பைக்கண்டு ,” யாள்…. நதியாள்….. நாம எல்லா முறைலையும் வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். இறைவன் ஒன்னு தானே நமக்கு. என் வீட்ல மறுப்பு வராது”, மதுரன் உறுதியாக கூறினான்.
“ஆனா என் வீட்ல வரும் மிஸ்டர் மதுரன் “, எனக் கூறியபடி ஸ்டெல்லா உள்ளே வந்து நதியாளின் பக்கம் அமர்ந்தாள்.
“ஸ்டெல்லா…… நீ எப்ப வந்த?”, மதுரன் சற்றே அதிர்ச்சியுடன் கேட்டான்.
“நீங்க அகரன் சார்கிட்ட பேசிட்டு இருந்தப்பவே வந்துட்டோம்”, எனக் கூறிய ஸ்டெல்லா குரலில் இருந்தது யாதென்று அறிய முடியாதிருந்தது.
“நாங்கன்னா?”, தேவ் திரும்பி பார்க்க மீராவும் நின்றிருந்தாள்.
“வா மீரா”, நதியாள் அவளை உள்ளே அழைத்தாள்.
மீரா அமைதியாகக் குனிந்த தலை நிமிராமல் வந்து அமர்ந்தாள்.
“சோ காய்ஸ்… உங்க இரண்டு பேரோட லவ்வர்ஸ்ம் இருக்காங்க. யூ கேன் ப்ரபோஸ் தெம். அவங்க மனப்பூர்வமா சம்மதம் சொல்ற பட்சத்துல நானும் அகனும் உங்க வீட்ல பேசறோம். நீங்க உங்க காதல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் உங்க தேர்வு தப்பானது இல்லன்னு தோணாதுன்னு நினைச்சா சொல்லுங்க. நவ் ஐ டேக் லீவ். பேசிட்டு மாடிக்கு வாங்க. இல்லைன்னா மாடில நிறைய இடம் இருக்கு.. அங்க தனி தனியாவும் நீங்க பேசலாம்”, எனக் கூறியபடி வெளியேறினாள்.
“நமக்கும் ரூமுக்கும் முதல்ல இருந்தே செட் ஆகல நாம மேல போயிடலாம்”, என தேவ் நினைத்து முடிக்கும் முன் மீரா மாடியை நோக்கிச் சென்றாள்.
அதைக் கண்டுச் சிரித்த தேவ் ,” பரவால்லயே கொஞ்சம் டெலிபதி வேலை செய்யுதோ?!”, என நினைத்தபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
அவர்கள் வெளியேறியதும் மதுரன் ஸ்டெல்லா அருகில் வந்து அமர்ந்தான்.
“ஸ்டெல்லா…..”, மதுரன்.
“ஸ்டெல்லா……. டால்…….”, மதுரன்.
“என்னை ஏன் காதலிக்கறீங்க மதுரன்?”, ஸ்டெல்லா.
“பிடிச்சிருக்கு டால்”, மதுரன்.
“நதியாள் மாதிரி நான் நடந்துக்கறதாலயா?”, ஸ்டெல்லா.
மதுரன் அவளின் கேள்வியில் அவளின் மனநிலை உணர்ந்துக் கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்து ஆழ்ந்த மூச்செடுத்தப் பின் பேச ஆரம்பித்தான்.
“இங்க பாரு ஸ்டெல்லா…. நான் நதியாள கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டது உண்மைதான். காரணம் அவகிட்ட ஏதோ ஒன்னு என்னை ஈர்த்தது. அது என்னன்னு நான் யோசிக்காமயே சரண்கிட்ட அவள கல்யாணம் பண்ண கேட்டது தப்பு தான்…. பர்ஸ்ட் டைமா நான் செஞ்ச தப்ப…தப்புன்னு உன்கிட்ட ஒத்துக்கறேன். ஒரு பொண்ணு அழகா இருந்தா அவளமாதிரி ஒருத்திய கட்டிக்கணும்னு தோணறது இயற்கை. ஆனா எப்ப அகர் நதியோட காதலை பார்த்தேனோ அப்பவே நான் புரிஞ்சிகிட்டேன் எனக்கு அவளோ, அவளுக்கு நானோ சரியான துணை இல்லன்னு. ஆனாலும் அவ சம்திங் ஸ்பெஷல் எப்பவும். லைப்லாங் என் பிரண்டா அவ வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”
“உன்னை பார்த்ததும் எனக்கு எந்த ஈர்ப்பும் வரலை தான் ஆனா பழக பழக உன் குணமும் திறமையும் ரொம்ப பிடிச்சது. உன் தைரியம் அதான் உன்னோட பெரிய பிளஸ்…. நான் உன்னை இன்சல்ட் பண்ணப்ப எல்லாம் நீ உடனே எனக்கு திருப்பி குடுத்த பாரு, அங்க நான் உன்கிட்ட விழுந்துட்டேன். உன்னோட கோபத்தை பார்க்கணும்ங்கிறதுக்காக அடிக்கடி இன்சல்ட் பண்ணேன் … ஆனா நீ நான் குடுத்ததுக்கு இரண்டு மடங்கா திருப்பி குடுத்த சொல்லாலையும் செயல்லையும்….. அது தான் என்னை உன்பக்கம் ஈர்த்துச்சி. அதுக்கப்பறம் உன் திறமை, உன் அழகு , உன் நேர்மை எல்லாமே நான் நேசிக்க ஆரம்பிச்சேன். நதியாள் வேற நீ வேற தான் ஸ்டெல்லா. கொஞ்சம் இரண்டு பேருக்கும் கைநீளுது ஒரேமாதிரி, மத்தபடி இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நான் உன்னை உனக்காகவே தான் காதலிக்கறேன். அதுல எந்த சந்தேகமும் உனக்கு வேணாம்”, மதுரன் தன்னால் இயன்ற அளவுக்கு விளக்கம் கொடுத்தான்.
அவனின் கண்களில் தெரிந்த காதலும், உண்மையும் அவன் கூறுவதில் இருக்கும் பொருளின் ஆழத்தை அறிந்தே கூறுகிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
ஆனால் அவனின் உயரம்? சமுதாயத்தில் மிகப்பெரிய புள்ளி. பிஸ்னஸ் கிங் என்று கூறப்படும் அந்த இளம் தொழில் சாம்ராஜ்யபதியா தன்னைக் காதலிக்கிறான் என்பதை அவளால் இன்னும் நம்பமுடியவில்லை.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மனு”, ஸ்டெல்லா குழப்பம் படிந்த முகத்துடன் கூறினாள்.
“நம்ம கல்யாணத்துக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு டால். சோ டோண்ட் வொர்ரி. அதுவரைக்கும் நாம ஜாலியா லவ் பண்ணலாம் சண்டை போடலாம், இன்னும் நிறைய நிறைய லவ் லைப்அ என்ஜாய் பண்ணலாம்”, மதுரன் குஷியாகக் கூறினான்.
“நான் எப்ப உங்களுக்கு ஓக்கே சொன்னேன்? அதுக்குள்ள கல்யாணத்தபத்தி பேச போய்டீங்க”, ஸ்டெல்லா சற்றே கோபமுகம் காட்ட முயற்சித்தாள்.
“அதான் உள்ள வரப்பவே என் வீட்ல ஒத்துக்கமாட்டாங்கன்னு சொல்லிட்டியே… ஆல்சோ நீ மனுங்கற செல்லப்பேர் எனக்கு வச்சி கூப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்கு மேல எனக்கு நீ என்னை லவ் பண்றன்னு தெரியணுமா பேபிடால்?”,.என அழகாக கண்ணடித்துக் கேட்க, பெண்ணவள் மனம் தான் தன் கள்ளத்தனம் கண்டுவிட்டானே என்று பதறித் துள்ளியது.
“அது… அது… சும்மா…. நான்…. “, எனப் பதற்றத்தில் அவளுக்கு வார்த்தைக் குழற ஆரம்பித்தது.
அவளின் தவிப்பைக் கண்டவன் நொடியில் அவளின் இதழை சிறையெடுத்திருந்தான். அதில் இன்னும் அதிர்ந்து அவனின் சட்டையைக் கெட்டியாக பிடித்து அவனுள் புதைந்திருந்தாள் ஸ்டெல்லா.
சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் அவளின் தோள் அணைத்து அவளின் உச்சந்தலையில் இதழ் பதித்து,” ஐ லவ் யூ டால்பேபி….. வில் யூ மேரி மீ?”, எனக் காதல் வழியக் கேட்டான்.
“ம்ம்”, என அவளும் அவன் அன்பில் கட்டுண்டு எதையும் சிந்திக்காமல் அவளவன் அணைப்பில் லயித்திருந்தாள்.
காதல் ஓர் அற்புதம் என்பதை நொடிக்கொரு முறை நிரூபித்துக்கொண்டிருந்தது அந்த வீட்டில் இருப்பவர்களிடம்.
அங்கே மாடியில் தேவ் மீரா ???