4 – அர்ஜுன நந்தன்
அனு வரைந்து முடித்து அழைத்ததும் நந்துவும், அர்ஜுனும் உறைந்து நின்றனர்.
அந்தப் படத்தில் இருந்தப் பெண் இவர்களுடன் கல்லூரியில் படித்தவள் ஆனால் வேறு பாடப்பிரிவு. ஐ.ஏ.எஸ் கோச்சிங் எடுத்துக் கொண்டு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தாள்.
பட்டம் பெற்றதும் நிச்சயம் கலெக்டர் ஆகி விடுவாள் என அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அர்ஜுனுக்கும் ,நந்துவுக்கும் அதிகம் பழக்கமில்லை. ஆனால் என்.சி.சி மற்றும் பிற சமூக சேவைகளில் அவளும் பங்கெடுத்து கொள்வதால் நன்றாகத் தெரியும். சில சமயங்களில் நாட்டின் நிலை, முன்னேற்றப் பாதை போன்றவற்றை விவாதித்து உள்ளனர். மிகவும் திறமைசாலி, வாய்ப்பிற்காக காத்திருக்காமல் தானே முன் சென்று உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஆக்கம் நிறைந்தப் பெண்ணாய் அவளை மனதில் பாராட்டி தனி இடத்தை கொடுத்தனர் நண்பர்கள் இருவரும். நிச்சயமாக அவள் நினைப்பதை சாதிக்கும் பெண்ணாய் விரைவில் கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினர்.
அவர்கள் எண்ணியது போல் அவளும் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து பயிற்சி முகாமிற்கு சென்றதாகக் கல்லூரியில் அறிந்தனர்.
அவள் எப்படி இங்கு இந்த கேஸில் சம்பந்தப்பட்டு இருக்கிறாள் என்று குழம்பினர்.
நரேன் நந்துவிடம் விசாரிக்க அவன் தான் அறிந்த விவரங்களைக் கூறினான். அவள் கலெக்டராக இருந்தால் நம் அரசு உயர்நிர்வாகி பட்டியலில் நிச்சயம் இருக்கும்.
நரேன், “அர்ஜுன் ஐ.ஏ.எஸ் ஆபீஸர்ஸ் லிஸ்ட் ல போய் பாரு. “
அர்ஜுன் தன்னிடம் இருந்த பெண்ணின் போட்டோவையும் கம்ப்யூட்டரில் அப்லோட் செய்து இருவரின் விவரங்களைத் தேட ஆரம்பித்தான்.
அதற்கிடையில் நந்து அசோக்கிற்கு போன் செய்து அந்த மும்பைகாரனின் நிலைமைப் பற்றி விசாரித்து, நாளை காலை அவனை விசாரணைச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான்.
நந்து நரேனிடம் ,”அந்த பொண்ணு குடுத்த கவர் குடுங்க “.
அதில் ஒரு கடிதம் , அந்த மும்பைகாரனின் போட்டோ ,ஒரு மெமரி கார்ட் மற்றும் ஒரு பழந்தமிழ் புத்தகத்தின் மேல் உறை இருந்தது.
அனைத்தையும் அவனின் தடயவியல் சோதனைக்காக தனியாக எடுத்து வைத்துக்கொண்டான்.
மேலும் ஏதேனும் உள்ளதா எனவும் கேட்டுக் கொண்டான்.
அர்ஜுன் ஒரு பக்கம் அப்பெண்களின் விவரமறிய கம்ப்யூட்டரில் பார்த்து கொண்டு இருந்தான். நரேன் கூறிய உயர் அதிகாரிகள் லிஸ்டில் அந்த பெண் இல்லாதது குழப்பத்தை அதிகரித்தது. வேறு அரசு பணியில் இருக்கிறார்களா என பார்த்து கொண்டிருந்த சமயம் அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஒரு உருவம் ஏறிக் குதித்தது. அர்ஜுனும் நரேனும் கணினியில் மும்முரமாக இருக்க, அதைக் கவனிக்கவில்லை.
நந்து பக்கத்து அறையில் இருந்தப் பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு இருந்தான். ஓர் உருவம் ஏறிக் குதிப்பதைக் கண்டவன், சத்தம் இல்லாமல் பால்கனியில் இருந்து கீழே புல் தரையில் குதித்தான். அந்த உருவம் செல்லும் திசையில் பின் தொடர்ந்து வீட்டின் பின்புறமாக அந்த உருவம் நுழைந்ததும், கத்தியால் குத்த நினைத்து பின் வேண்டாமென விடுத்து ,என்ன நடக்கிறது என்பதைக் காண அமைதியாகப் பின் தொடர்ந்தான்.
கதவை பூட்டி விட்டு அந்த உருவத்தைத் தொடர்ந்து மாடி ஏறினான். நரேனைத் தேடித்தான் வந்து இருக்கிறான் போலும் என நினைத்துப் பின்னிருந்து அந்த உருவத்தை நரேன் இருக்கும் அறையில் தள்ளிக் கதவைப் பூட்டினான்.
அர்ஜுனும் நரேனும் திரும்பிப் பார்க்க நந்து அந்த உருவத்தின் முகத்தைப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அவன் அழுத்திப் பிடித்ததில் வலி தாங்காமல் கத்தத் தொடங்கியது அந்த உருவம்.
பெண் குரலில் சற்று திகைத்து யாரென விசாரிக்க ஆரம்பித்தனர் நரேனும் நந்துவும்.
அர்ஜுன் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டே எனதயோ யோசித்துக் கொண்டிருந்தான்.
பின் நந்து கையை அழுத்திப் பிடிக்க முகமூடியை கழட்டி விட்டு நந்துவின் முதுகில் ஒன்று பலமாக வைத்தது அந்த உருவம்.
கணினி சத்தத்தில் மானிடரைக் கண்ட அர்ஜுன் , விவரங்களை திறையில் பார்த்து கொண்டே எதிரில் பார்த்தான் நந்துவை அடித்துக் கொண்டிருக்கும் பரிதியை.
பரிதியைக் கண்டதும் நரேன் அவளை ஆசுவாசப்படுத்தி இருக்கையில் அமரச் சொன்னான். அவளே பேசட்டும் என அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
நந்து,”எப்படி இருக்கீங்க பரிதி? நீங்க எப்படி இங்க? “.
பரிதி கன்னியிருந்த தன் கையைப் பார்த்து பின் நந்துவைப் பார்த்து ,” நீ இன்னும் மாறவே இல்ல நந்தன். இப்டியா கைய அழுத்துவ? வலி அதிகமா இருக்கு. நரேன் சார் கொஞ்சம் ஆயின்மெண்ட் இருந்தா குடுங்க . அப்பறம் கதைய சொல்றேன். அப்படியே கொஞ்சம் டின்னரும் இருந்தா கொண்டு வாங்க. கிச்சன் தாண்டி வரப்ப நல்ல வாசனை வந்தது. சாப்பிட்டு பேசலாம்.”
மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள, அர்ஜுன் நரேனிடம் அவள் கேட்பதை கொண்டு வர சொல்லி தானும் உடன் சென்று பர்ஸ்ட் எய்ட் கிட் கொண்டு வந்தான்.
நந்து பரிதியின் வேஷத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டே அவன் அழுத்திய இடத்திற்கு ஆயன்மெண்ட் போட்டான்.
பரிதி சிரித்துக் கொண்டே நந்துவிடம் ,” என்னடா அமைதியா மருந்து போட்ற ? ரொம்ப நாள் ஆச்சி உங்க ரெண்டு பேரையும் பாத்து. எப்படி இருக்கீங்க?”
அர்ஜுன் ,”எங்கள விசாரிக்கறது சரி நாங்க கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லாம எங்கள கேள்வி கேட்டா எப்படி.? “
பரிதி ,”என்னடா உன் நண்பன் கேள்வி கேட்டு நான் இவ்ளோ நேரம் பதில் சொல்லாம இருந்தும் நீ இன்னும் வாய தொறக்கலனு நினைச்சேன். அவன் வாய்ல பேசுனா நீ கைல பேசுவ இன்னும் அப்படி தானா?”.
நரேன்,”அடிக்கறதா? கொன்னுட்டு இருக்கான் இப்ப. சாப்பிடுங்க மேடம் நீங்க சொல்ல வேண்டியது நிறைய இருக்கு . விடியறதுக்குள்ளச் சொன்னா தான் அடுத்த வேலைய நாங்க பார்க்க முடியும்.”
பரிதி, ” கவலைபடாதீங்க நரேன் சார். உங்க ஆக்க்ஷன்காகத் தான் நாங்க இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்து இருக்கோம்.”
சாப்பிட்டுக் கொண்டே அர்ஜுன் மற்றும் நந்துவை பார்த்து, “இவனுங்க மாதிரி நிறைய பேர் நமக்கு தேவை நம்ம நாட்ட காப்பாத்திக்க இப்போ. விவேகானந்தர் நாட்ட மாத்த 100 பேர கேட்டாரு நாம ஒரு 20 பேர வச்சி காப்பாத்திகலாம்னு தோணுது.”
“சாப்பாடு சூப்பர் சார் உங்க மனைவிகிட்ட சொல்லிடுங்க “, பரிதி.
“சொல்லுங்க தம்பிங்களா இல்ல கேளுங்க நான் ரெடி “, பரிதி.
அர்ஜுன், “நீங்க தான் சொல்லனும் சகோ அதுக்கப்பறம் தான் நாங்க கேட்க முடியும்.”
சரி சின்னதா ஒரு பிளாஸ்பேக், வாங்க நாமளும் அவங்க கூடவே போகலாம், நில்லுங்கடா நாங்களும் வரோம்.
பரிதி, கலெக்டர் ஆப் தஞ்சாவூர்.
கலெக்டர் ஆனதும் வழக்கமா செய்யற அரசாங்க வேலைகள் எல்லாத்தையும் செஞ்சிட்டு ,முடிஞ்ச வரை மக்களுக்கு சேவை செய்யும் கலெக்டர்னு 3 மாசத்துல பேர் எடுத்தாங்க.
வழக்கமா நேர்மையா இருக்கறவங்களுக்கு வரப் பிரச்சினை எல்லாமே பரிதிக்கும் வரத் தான் செய்தது. ஆனாலும் அவங்க நினைக்கிறத முடிச்சிட்டு வந்தாங்க.
கும்பகோணம், தஞ்சை மாவட்டம்ல இருக்கற ரொம்ப பிரசித்தி பெற்ற ஊர்.
அங்க கோவில்களுக்கு அளவே இல்ல. நம்ம அரசர்கள் எல்லாம் இஷ்டத்துக்கு கட்டி வச்சிட்டு போய்டாங்க இப்ப அத நம்பனால சுத்தம் பண்ணக் கூட முடியல. பல அற்புதமான சிற்பங்கள் எல்லாம் பாதுகாக்க படாம அழிஞ்சிட்டு வரது ரொம்பவே கொடுமையான விஷயம்.
எல்லாமே பல ஏக்கர் பரப்பளவு இருக்கற கோவில்கள். பல நூற்றாண்டுகளாக நிமிர்ந்து நின்று நம் பாரம்பரியத்தைப் போற்றி நிற்கின்றன.
அந்த காலத்தில கோவில்ல தான் எல்லாமே வைப்பாங்க. நெல் முதல் வைர வைடூரியம் வரைக்கும். நம் நாட்டோட வளங்களும் வளர்ச்சியும் கோவிலில் தான் மையமாக கொண்டு விளங்கும். பல்லவர், சேரர், சோழர் பாண்டியர் மற்றும் பல சிற்றரசுகளால் பல கோவிலகள் கட்டப்பட்டு பொக்கிஷங்கள் பாதுகாக்கப் பட்டன. பல சுரங்க வழிகளும் அமைக்க பட்டு கோவில் முதல் அரண்மனை, மற்றும் பல காரியங்களுக்காக பல்வேறு ஊர்களுக்கும் பல கி.மீ அளவுக்கு நீண்டு இருந்தது. இன்றும் பல கோவிலில் சுரங்கப் பாதைகள் முழுதாக அடைக்கப்படாமல் பூட்டி மட்டும் வைத்துள்ளனர்.
ஒரு வாரக் கடைசி நாள் மாலை கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு கோவிலுக்கு பரிதி சென்றாள்.
கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுவதாகப் பலகை வைக்கப் பட்டு இருந்தது. பலகையைக் கண்டு சிறிது யோசித்தவள் கடவுளை தரிசிக்கச் சென்று வரலாம் என ஏதும் பேசாது சென்றுவிட்டாள்.
தரிசனம் முடிந்து கோவில் பிரகாரம் சுற்றி வரும்பொழுது அங்கே 15 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் எழ கோவில் நிர்வாக அறைக்குச் சென்றாள்.
தொல்பொருள் ஆராய்ச்சிக்கான உத்தரவுக் கடிதத்தைக் கேட்டாள். தலைமை நிர்வாக அதிகாரி இல்லாததால் அவளுக்கு கேட்காமலே பல தகவல்கள் அங்கு கிடைத்தது.
அக்கோவிலில் 4 மாதத்தில் 2 குரூப் ஆட்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என வந்திருக்கின்றனர். கல்வெட்டுகள் மட்டுமின்றி அங்கு சுரங்கம் இருப்பதாக ஒரு கூட்டத்தினர் கூறிச் சென்றுள்ளனர் . ஆனால் சுரங்கப் பாதையை இயக்க முடியவில்லை என குறிப்பிட்டு இருந்தனர். இப்போது இருக்கும் குரூப் மீண்டும் கல்வெட்டு எடுக்க ஆணை இருப்பதாகக் கூறிப் பணி செய்து வருகின்றனர்.
இவர்கள் குடுத்து இருப்பது போலியான ஆவணம் என்பதைப் பார்த்த நொடியில் கண்டு கொண்டாள் பரிதி.
உடனே போலீஸுக்கு கால் செய்து அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தவர்களை கைதுச் செய்ய உத்திரவிட்டாள்.
அவர்களுக்கு தலைமை வகித்தனைத் தனியாக அடைத்து வைக்கச் சொன்னாள். பின் தன் அலுவலகம் செல்லும் வழியில் அவள் பி.ஏ விற்கு போன் செய்து சில உத்திரவுகளை கூறி ஒரு மணிநேரத்தில் தனியறையில் இருக்க வேண்டும் என வைத்து விட்டாள்.
அவளின் அவசர உத்திரவின் பேரில் பி.ஏ ஆதிரை அனைத்து வேலைகளையும் தானே செய்து முடித்தாள்.
பரிதி அலுவலகம் வந்ததும் ஆதிரை தனியறையில் எடுத்து வைத்த அத்தனை பைல்களையும் காட்டினாள்.
பரிதி மேலோட்டமாக பார்வையிட்டுவிட்டு எல்லாவற்றிலும் அசலை எடுத்துவிட்டு நகலை வைக்கச் சொன்னாள்.
பின் அனைத்தும் சாப்ட் காப்பி செய்யச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகக் கூறி அசல் பைல்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டாள்.
பரிதி அவள் அறையில் இரகசிய இடத்தில் அசல் பைல்களை வைத்து விட்டுச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
யாரைப் பிடித்தால் முழு விவரம் தெரியுமென யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவரின் நினைவு வந்தது. உடனே தனியாக அவரைக் காணச் சென்றாள்.
டிஐஜி சர்வேஷ்வரன் ….