41 – அர்ஜுன நந்தன்
அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.
போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
நந்துவின் மயக்க குண்டு வீச்சால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருந்தது.
“செழியன் இந்த மயக்க குண்டு யாரோட ஐடியா?”, யாத்ரா.
“நந்து வோடது தான். அவனுக்கு அனாவசியமா ஒரு உயிரை எடுக்கிறதுல எப்பவும் விருப்பம் இல்லை. அதான் இப்படி பிளான் பண்ணிட்டான்”, அர்ஜுன்.
“நைஸ்… “, என யாத்ரா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே குப்பத்தின் வாயிலுக்கு வந்தாள்.
“இந்தா யாத்ரா கை கழுவிட்டு வா”, என நந்து ஒரு தட்டில் சாப்பாட்டுடன் வந்தான்.
“தேங்க்யூ நந்தன். எதாவது வீட்டு திண்ணைல உக்காந்துக்கலாம் எல்லோரும் ஒன்னா சாப்பிடலாம்”, யாத்ரா.
கருப்பசாமியின் வீட்டு திண்ணையில் நம் சகாக்கள் அனைவருக்கும் சாப்பாடு பறிமாறப்பட்டது.
“ஆஆஆஆஆஆஆ….. சூப்பர் வாசனை கருப்பண்ணா…. என்ன மீன் இது?”, யாத்ரா.
“கெழுத்தியும், வஞ்சரமும், அப்பறம் அது பச்சைமீன்னு நாங்க சொல்வோம் நல்லா ருசியா இருக்கும். எல்லாரும் நல்லா சாப்டுங்க”, கருப்பசாமி.
அனைவருக்கும் நல்ல பசி அருமையான விருந்தே கருப்பசாமி ஏற்பாடு செய்திருக்க வயிறாரச் சாப்பிட்டனர்.
“கருப்பசாமி எனக்கு ஒரு சந்தேகம்”, என நரேன் கேட்டான்.
“கேளுங்க சார்”, கருப்பசாமி.
“உங்களுக்கு இவ்வளவு ஆள்பலம் செல்வாக்கு இந்த ஏரியால இருக்கிறப்ப, நீங்க ஏன் தலை மறைவா இருந்தீங்க?”, நரேன்.
“அது யாத்ரா பாப்பா தான் என்னை நேர்ல பாத்து பேசினாங்க. நான் இங்க இருந்தா இன்னிக்கு நடந்தது அன்னிக்கே நடந்து, நாங்க இந்த குப்பத்தவிட்டு போயிருக்க வேண்டி வரும். நான் வெளி வேலைல இருக்கிறாமாதிரி பேர் பண்ணிட்டு அந்த சந்தனபாண்டியன பாக்காம சுத்திட்டு இருந்ததால இத்தனை நாள் எங்க குப்பத்துக்கு பாதுகாப்பா இருந்தது. எனக்கும் அரைமனசு தான் போக, ஆனா அந்த புள்ள அவ்வளவு அழுத்தமா சொன்னதால கிளம்பிட்டேன். இப்ப தானே தெரியுது கூடவே ஒரு துரோகிய வச்சி இருந்தேன்னு”, கருப்பசாமி.
நரேன் நம்பாமல் யாத்ராவைப் பார்க்க,” என்ன நரேன் அவர் சொல்றது நம்ப முடியலியா?”, என யாத்ரா கேட்டாள்.
“ஆமாம்”, என நரேன் தலையசைத்தான்.
“இங்க வா சொல்றேன்”, என நரேனை அருகில் அழைத்தாள் யாத்ரா.
“அவர் பொண்ணு மதுரைல தான் படிக்குது. ஊரவிட்டு போலன்னா அத தூக்கிடுவேன்னு சொன்னேன். அதுவும் இல்லாம அவருக்கே தோணினது போல அதான் நான் சொன்னமாதிரி நடந்துகிட்டாரு”, என அமைதியாகக் கூறி முடித்தாள் யாத்ரா.
நரேன் தலைநிமிரந்ததும் அங்கிருந்த நம் மற்ற சகாக்கள் சிரிப்பதில் இருந்து இவனுக்கு தான் இது கடைசியாக தெரிய வந்து இருக்கிறது எனப் புரிந்தது.
“நல்லா வந்து மாட்டுனேன் பாரு இவங்க கிட்ட. அந்த வீணா போன அர்ஜூனை சொல்லணும்”,என நரேன் முனுமுனுத்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டனர்.
அவர்கள் தஞ்சை வந்து இறங்கியதும் பாலாஜி ஒரு தகவலைச் சொன்னான்.
மும்பையில் இருக்கும் டாப் கில்லர்ஸை இஷான் தஞ்சைக்கு அனுப்பியுள்ளான். யோகியை மீட்கவும் பரிதி அண்ட் கோ வை தீர்த்து கட்டவும்.
“அதானே பாத்தேன், சரியாவே சண்டை போடலியே. நமக்கு வேலை இல்லாம போலீஸ் போர்ஸ் வச்சே எல்லாம் முடிஞ்சிருச்சேன்னு பீல் பண்ணேன். சூப்பர் நியூஸ் சொன்ன பாலாஜி நீ”, என யாத்ரா ஆடத் தொடங்கினாள்.
“என்னடா பைத்தியம் ஆகிட்டாளா?”, நரேன் அர்ஜுன் காதைக் கடித்தான்.
“டார்லிங் நாளைக்கு யார தூண்டிலா யூஸ் பண்ணலாம்”, என அர்ஜுன் நரேனைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“எதுக்கு செழியன் தூண்டில்? மொத்தமா வலைய விரிச்சிடலாம்”, என யாத்ரா கண்ணடித்தாள்.
“கோர்ட்ல இருந்து வெளியே வரப்ப உங்க கச்சேரிய வச்சிக்கோங்க”, பரிதி .
“தேங்க்யூ டார்லிங்”, என யாத்ரா பரிதியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
“பாலாஜி எத்தனை பேர் வராங்க?”, செந்தில்.
“55 பேர் சார் கன் சூட்டர்ஸ்ல இருந்து கத்திய பயன்படுத்தறவங்க வரைக்கும் எல்லாம் கலந்து”, பாலாஜி.
“சூப்பர். நான் ரெடி”, சிவி.
“நானும் தான் ரெடி”, நெடுமாறன்.
“நான் இல்லாமயா?”, நந்து.
“மச்சான் நீ இல்லாம நா எப்ப தனியா கொன்னு இருக்கேன்?”, அர்ஜுன் நந்துவை தோளோடு அணைத்தபடிக் கூறினான்.
“இதென்ன மனுச கூட்டமா நரபலி குடுக்கற கூட்டமா? கொல்றதுக்கு இத்தனை ஆர்வமா இப்பவே ரெடி ரெடின்னு கத்திகிட்டு இருக்குதுங்க”, என நரேன் புலம்பினான்.
“ஹாஹாஹா…. கொஞ்சம் மோசமான கூட்டம் தான். என்ன பண்ண? நாமலும் அவங்க கூட மிங்கிள் ஆகறது தான் நமக்கு நல்லது நரேன்”, எனக் கூறியபடி செந்தில் அருகில் வந்தான்.
“ம்ம்”, நரேன்.
அடுத்த நாள் காலை சந்தனபாண்டியனும் சேரலாதனும் கோர்ட்க்கு முதலில் கொண்டு வரப்பட்டனர்.
சேரலாதன் கடத்தி வைத்திருந்த கோவில் சிலைகள் நகைகள் அனைத்தும் சந்திரகேசவனிடமும் சந்தனபாண்டியனிடமும் கூட்டுறவு வைத்துச் செய்தது எனவும். சந்திரகேசவன் கடையிலும் வீட்டிலும் கோவில்களில் காணாமல் போன நகைகள் ஆதார பூர்வமாகப் போலீசார் கைபற்றி இருப்பதாக கோப்புகள் சமர்பிக்கப்பட்டு இருந்தது.
கடத்திய சிலைகள் அனைத்தும் சந்தனபாண்டியனின் குவாரியில் கண்டெடுக்கப்பட்டதாக நிரூபிக்கப் பட்டது. சேரலாதனின் அறையில் யோகியுடன் போட்ட ஒப்பந்த பத்திரம் பணம் அனைத்தும் கைப்பற்றப் பட்டதாக கோர்ட்டில் நிரூபணமாகி அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனைக் கொடுக்கப்பட்டது.
சிவியும் நெடுமாறனும் கொதித்தனர். “எதுக்கு ஆயுள் தண்டனை தூக்கு தண்டனை குடுக்க வேண்டியது தானே?”,என்று தான்.
“இருங்க டா. பாத்துக்கலாம்”, என யாத்ரா அவர்களை அடக்கினாள்.
அடுத்ததாக யோகி கொண்டு வரப்பட்டான். அவனும் சேரலாதனும் சேர்ந்து செய்த ஆயூத கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற வழக்குகள் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் முதல் குடியுரிமை வரைப் பறிக்கப்பட்டு தூக்கு தண்டனைக் கொடுக்க கோர்ட் உத்திரவிட்டது.
பரிதி அர்ஜூனிடமும் செந்திலிடமும் கண் காட்ட அவர்கள் முதலில் வெளியே வந்து மரத்தின் அருகிலும் வாகன மறைவிலும் நின்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு முன் யாத்ரா நந்துவையும் முகிலையும் கோர்ட்டின் மொட்டை மாடிக்கு அனுப்பி இருந்தாள்.
கதிரையும் பரத்தையும் ஆயுதங்கள் இருக்கும் வண்டியை எடுத்து வர அனுப்பினாள்.
“நரேன் சார்”, யாத்ரா.
“என்னம்மா?”, நரேன்.
“நாம வெளியே போலாமா?”, யாத்ரா.
“போலாமே”, என நரேன் வெளியே வந்தான்.
சிவியும், நெடுமாறனும், யாத்ரா நந்துவை அனுப்பியதும் வெளியே சென்றிருந்தனர்.
பாவம் நரேன் அவள நம்பி போறான். என்ன ஆகுமோ?
“யாத்ரா…. கோர்ட்க்கு வெளிய தான் ஆளுங்க நிக்கறாங்க. நாம யோகி இருக்கிற வண்டிய வெளியே கொண்டு போனாலே தானா எல்லாரும் தேனிக்கூட்டம் மாதிரி நம்ம பின்னாடி வருவானுங்க”, நந்து.
“சரி. அர்ஜுன்கிட்ட சொல்லி வண்டிய கிளப்ப சொல்லு. நானும் நரேன் சாரும் பைக்ல வரோம்”, எனக் கூறிப் போனை வைத்தாள்.
“வாங்க நரேன் சார். கெட்டியா பிடிச்சிக்கோங்க. விழுந்துடமாட்டீங்களே?”, யாத்ரா.
“இரு நாம ஏன் பைக்ல போகணும் கார்லயே போலாமே”, நரேன்.
“கார் எல்லாமே புல் நரேன் சார். வாங்க நாம ஜாலியா பைக்ல போலாம்”, யாத்ரா.
கண்களில் பிரௌன் கூலர்ஸ் அணிந்து தான் அணிந்திருந்த வெள்ளைச் சர்ட்டை முழங்கை வரை ஏற்றி மடக்கிவிட்டு பைக்கில் படு ஸ்டைலாக அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள் யாத்ரா.
அவளை கண் இமைக்காமல் பார்த்த நரேன், “அர்ஜுன் சும்மா இவகிட்ட சரண்டர் ஆகல . என்னா கெத்து என்னா திமிர் கலந்த அழகு….. இரண்டும் நல்லா இருந்தா சந்தோஷம் தான்”, என தனக்குள் முனகியபடி அவளின் பின்னால் அமர்ந்தான்.
“நரேன் இந்தாங்க இந்த வெபன்ஸ் வச்சிக்கோங்க”, என ஒரு வெபன் சூட்டைக் கொடுத்தாள் யாத்ரா.
“இது எதுக்கு யாத்ரா. இப்ப வீட்டுக்கு தானே போறோம்”, எனக் கேட்டபடி அதை அணிந்து கொண்டான் நரேன்.
“வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சிலருக்கு காரியம் பண்ணணும் நரேன் சார். நேத்து நைட் சொன்னது மறந்துட்டீங்களா?”, யாத்ரா பைக்கை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட் அணிந்து நரேனின் தலையிலும் கவிழ்த்திருந்தாள்.
“நீ வண்டிய நிறுத்து நான் கார்ல வந்துக்கறேன்”, என நரேன் கத்தத் தொடங்கினான்.
“அதுல இடம் இல்ல ஆல்ரெடி நம்ம பசங்க முன்னாடி போயிட்டு இருக்காங்க பாருங்க”, என அவர்களை ஓவர்டேக் செய்து சென்ற வண்டிகளைக் காட்டினாள் யாத்ரா.
யோகியை தனி வண்டியிலும் சந்தனபாண்டியன் சந்திரகேசவன் சேரலாதனை தனி வண்டியிலும் ஜெயிக்கு அழைத்து சென்றனர். அவர்கள் வண்டியை தொடர்ந்து நமது சகாக்கள் செல்ல அவர்களை தொடர்ந்து இஷானின் ஆட்கள் தொடர்ந்தனர்
“நீங்க கம்முன்னு இருந்தாலும் வந்து சேந்துடறானுங்க உங்க கிட்ட அடி வாங்க. அவனுங்கள இன்னிக்கு நானே சும்மா விடப்போறது இல்ல” , என நரேன் குமுறினான்.
“அப்படியே உங்க பின்னாடி எத்தனை வண்டில வர்றானுங்கன்னு பாருங்க நரேன். அவனுங்கள முன்னாடி விட்டு சிந்தாம சிதறாம பட்டில அடைச்சப்பறம் கும்மிக்கலாம்”,என யாத்ரா கூறினாள்.
“ஒரு பத்து பைக் இருபது கார் வருது இப்போதிக்கு”, நரேன்.
“நாட் பேட்”, என மையின் ரோட்டில் இருந்து பிரிந்த ஒரு சந்தில் சடாரென திரும்பினாள் யாத்ரா.
அவளை தொடர்ந்து நான்கு கார்களும் ஐந்து பைக்கும் அதே சந்தில் இவளை பின் தொடர்ந்தனர் . மற்ற வண்டிகள் அவர்களை பின்தொடர்ந்தது.
“யாத்ரா….எங்க இருக்க?”,செந்தில் போனில் கேட்டான்.
“நான் இங்க ஒரு சந்துல திரும்பி இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க? யார் யார் எல்லாம் டிரைவிங்ல இருக்கறாங்க? அவங்க கூட கான்பரன்ஸ் கால் போடுங்க. இந்த நரி கூட்டத்த ஒரே இடத்தில் கொண்டு சேத்தி உதைக்கணும்”, யாத்ரா.
“ஆல்ரெடி கான்பரன்ஸ்ல தான் இருக்கு பேபி”, சிவி.
“பைன் . இவனுங்கள எங்க கூட்டிட்டு வரணும்?”, யாத்ரா.
“நம்ம பழைய குடோனுக்கு போயிடலாம் காடு பக்கம் தான் இருக்கு”, நெடுமாறன்.
“இல்ல கொஞ்சம் ஓபன் பிளேஸ் சொல்லுங்க”, நந்து.
“அப்படின்னா தஞ்சைக்கு இரண்டு கீ.மீ வெளிய ஒரு வெட்டவெளி இருக்கு .இப்ப தான் அறுவடை முடிச்சாங்க வயக்காடு எல்லாம் பிரியா தான் இருக்கு”, பரத்.
“சரி அங்கயே போயிடலாம்”,என யாத்ரா கூறிக்கொண்டே தன்னை நெருங்கி வந்த பைக்கை எட்டி உதைத்தாள்.அது அங்கிருந்த வீட்டின் சுவற்றில் இடித்து கீழே விழுந்தது.
“ஹேய் காய்ஸ்…. ஐ காட் ஒன் வன்டர்புல் பிளேஸ்”, என அர்ஜுன் உற்சாகத்தில் கத்தினான்.
“ஏன்டா கத்தி தொலையற? என்ன கண்டுபிடிச்ச அப்படி?”, நந்து.
“அப்படியே எல்லாரும் மையின் ரோட் வந்து ***** டர்ன்ல உள்ள வாங்க. சூப்பர் இடம் மாட்டி இருக்கு. அதுல பொங்க வச்சிறலாம் எல்லாரையும்”, என அர்ஜுன் கூறினான்.
அர்ஜுன் முன்னே அங்கு உள்ளே போக அவனின் பின்னால் ஐந்து கார்கள் உள்ளே புகுந்தது. காம்பவுண்ட் உள்ளே ஒரு கீ.மீ அளவு பாதை நீண்டபின் ஒரு வெற்றிடத்தில் அர்ஜுன் காரை நிறுத்தினான்.
அர்ஜூனை தொடர்ந்து சிவி நந்துவும் அந்த இடத்தில் ஆஜர் ஆகினர்.
அர்ஜூனும் நந்துவும் அந்த இடத்தை கண்டதும் பயங்கர குஷியாக தன் சட்டை கையை மேலே ஏற்றிக்கொண்டு அங்கிருந்த சிலம்பாட்ட கம்புகளை ஆளுக்கு இரண்டாக எடுத்தனர்.
அவர்களை தொடர்ந்து பரத் சிவி நெடுமாறன் ஆளுக்கு ஒன்றாக எடுத்தனர்.
யோகி ஏறிய வண்டி சிறைக்கு சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு, யாத்ரா அர்ஜுன் கூறிய இடத்திற்கு வந்து கொண்டு இருந்தாள்.
ஆர்யனும் யாத்ரா பின்னாலே வந்து கொண்டு இருந்தான்.
பின்னால் வந்த அடியாட்கள் கூட்டம் அவர்களை சுற்றி வளைக்க தொடங்கியதும் நந்து ஹிந்தியில், “நீங்க எல்லாம் அவ்வளவு பெரிய பிஸ்துன்னா கன்அ யூஸ் பண்ணாம எங்கள அடிச்சே கொல்லுங்க பார்க்கலாம்”, என அவர்களின் ஈகோவை தூண்டி விட்டான்.
அவன் கூறியதைக் கேட்டதும் துப்பாக்கியை வைத்து விட்டு கத்தியை எடுத்தனர், ஒரு சிலர் கம்புகளையும் எடுத்துக் கொண்டனர்.
“மச்சா…..”, அர்ஜுன்.
“ரெடி மச்சான்”, நந்து.
இருவரும் இரு கைகளில் கம்புகளை சுழற்ற ஆரம்பித்தனர். சக்கராயுதம் தான் அவர்கள் கைகளில் சுழல்கிறதோ என ஐயம் எழும் அளவிற்கு இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கம்புகளை வேகமாக சுழற்றிக்கொண்டு இருந்தனர்.
இன்னொரு பக்கம் சிவியும் நெடுமாறனும் ஆட்களை பந்தாடத் தொடங்கினர். செந்தில் கைகளால் அடித்தே பலரின் எழும்புகளை நொறுக்கிக் கொண்டு இருந்தான்.
பரத் இன்னொரு பக்கம் தன் பங்கிற்கு விளாசிக்கொண்டு இருந்தான்.
யாத்ரா அங்கு வந்திறங்கும் சமயம் அந்த இடமே திருவிழா போல கலகலத்துக் கொண்டு இருந்தது அவளின் செவிகளுக்கும் கண்களுக்கும்.
நம் ஆண் சிங்கங்கள் அனைத்தும் களத்தில் தூள் கிளப்பிக் கொண்டு இருந்தனர்.
“நரேன் பாரேன். எப்படி நம்ம செல்லங்க சண்டை போடறாங்க. அதோ அங்க பாரு என் சீனியர் அவனோட முதுகெழும்ப உடைக்கிறாரு. அந்த பாரேன் நம்ம குட்டி பையன் பரத் கம்ப வச்சி அவன் மண்டைய உடைச்சிட்டு இருக்கான். அச்சோ அச்சோ அச்சச்சோ…. அங்க பாரு நம்ம பாகுபலி பிரதர்ஸ் ஆ…. இரண்டு பேரும் நாலு பேர கம்ப வச்சி விளாசிட்டு இருக்காங்க. அவனுங்க எலும்புல்லாம் பைசாக்கு தேறாது இனி…… “, என கூறிக்கொண்டே திரும்பியவள் விழி விரித்தபடி அப்படியே நின்றது நம் அர்ஜூனை கண்டதும்.
ஆம் அர்ஜுன் அங்கே ஒரே நேரத்தில் ஆறு பேரை தாக்கிக் கொண்டு இருந்தான்.
அவனின் ஆண்மையில் ஏற்கனவே மயங்கி இருந்தவள் இன்று அவனின் முழு வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டு சிலையாகி நின்றுவிட்டாள்.
“நரேன்…. நரேன்…..அது நம்ம செழியன் தானே? என்னாம்மா பைட் பண்றான். அவனும் நந்துவும் இவ்வளவு நல்லா பைட் பண்ணுவாங்களா?”, ஜொல்லு விட்டுக்கொண்டே கேட்டாள் யாத்ரா.
“ஆமா. ரெண்டு பேரும் நல்லாவே சண்டை போடுவானுங்க அத விட நல்லா சண்டைய இழுப்பானுங்க. அவனுங்கள வச்சிட்டு டிபார்மெண்ட்ல நான் படற பாடு எனக்கு தான் தெரியும்”, எனக் கூறினான்.
“ச்சா….. சச் எ மேன்லி ஹேண்சம் ஹீ இஸ் …. யாத்ரா பேபி இவன்கிட்ட க்ளீன் போல்ட் ஆகிட்டியேடா. என்ன நடந்தாலும் சரி இவன தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிடனும்”,என அவனின் வீரத்தில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தாள் யாத்ரா.
அவன் ஆறு பேரையும் கம்பை வைத்து தடுத்து அவர்களை காயப்படுத்தி விளையாடிக் கொண்டு இருந்தான். (என்ஜாய் பண்ணிட்டு இருக்கான் பையன்😜😜😜)
அர்ஜுன் அவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்த சமயம் ஒருவன் கத்தியால் அவனை குத்த வந்தான்.
அர்ஜூனின் தோளில் இறங்கும் சமயம் யாத்ரா சரியாக அவனின் கைகளை பற்றி அவனை ஒரு சுழற்று சுழற்றி அவனின் கையில் இருந்த கத்தியாலே அவனின் வயிற்றில் கத்தியை இறக்கினாள்.
அர்ஜுன் அப்பொழுது தான் அவளை பார்த்தான். உடனே ஒரு புன்னகை விரிய ஆறு பேரையும் அந்த பக்கம் தள்ளிவிட்டு யாத்ரா அருகில் வந்தான்.
“என்ன டார்லிங் இப்பதான் வந்தியா?”, அர்ஜுன்.
“எஸ் மை ஸ்வீட் ஹார்ட். சூப்பரா பைட் பண்ற நீ. கலக்கு நானும் கொஞ்சம் களத்துல குதிக்கறேன்”, எனக் கூறி யாத்ரா அங்கிருந்த கத்திகளில் நீளமானதும் கூர்மையானதுமாக ஒன்றை எடுத்தாள்.
அவர்கள் கம்பை வைத்து சுழற்றினால், இவள் கத்தியை தன் இஷ்டத்திற்கு சுழற்றிக் கொண்டு இருந்தாள். அதில் ஒருவன் அவளது சட்டையை தொட ,” டேய் எரும. வெள்ளை சட்டை டா. அழுக்கானா நீயா துவைப்ப. எடுறா கத்திய. தூரமா நின்னு என் சட்டைல படாம சண்டை போடு “, என தள்ளி விட்டாள்.
அப்படியும் அவளது சட்டையில் இரத்தம் தெறித்தது. சிறிது நேரத்தில் இரண்டு கைகளிலும் கத்தியை ஏந்தி வாட்போர் நடத்திக் கொண்டு இருந்தாள்.
ஆண் சிங்கங்கள் அனைவரும் இவளின் வாட்போரில் சற்று திகைத்து பின் இரசித்தனர் என்று தான் கூறவேண்டும்.
அதிலும் நந்து அடிக்க வந்த ஒருவனை,” டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா”, என அவனின் முதுகில் ஒன்று போட்டு அவனை தலையணை போல கைகளுக்கு அடியில் வைத்து யாத்ராவை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அங்கிருந்த நாற்பது பேரை அர்ஜுன் நந்து நரேன் சிவி நெடுமாறன் பரத் செந்தில் யாத்ரா அஷ்டதிக்கு பாலகர்களாக மாறி பந்தாடிக் கொண்டு இருந்தனர்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் வீழ்ந்ததும் ஒரு கருப்பு ஆடிக்கார் ஒன்று வந்து நின்றது.
அதில் இருந்து இஷான் சர்மா இறங்கினான்.
“என்னடா ******* இடியட்ஸ்…. நான் அனுப்பின ஆளுங்கள அடிச்சிட்டா நீங்க பெரிய ஹீரோஸ்ஆ?”, இஷான்.
“என்னடா ******** பொ****கி….. நீயே நேரா வந்துட்ட. உயிரோட இருக்கணும்ங்கிற நினைப்பு உனக்கு இல்லையா?”, நரேன்.
“ஹேய்…… சட் அப் பிளடி காப்ஸ்….. யூ ஆல் கோன்னா டை நவ்”, இஷான்.
“ஹாஹாஹா……. தொப்பி தொப்பி”, என இஷானை கைக்காட்டி நந்து கலாய்த்தான்.
நம் சாக்கள் அவனை பார்த்து சிரிக்க அதில் கடுப்பான இஷான் ,” சூட்”,என கத்தினான்.
அவன் கத்தியதும் அவனின் பின்னால் இருந்து குண்டுகள் பாய்ந்து நம் சகாக்கள் கூட்டத்தை நோக்கி வந்தது.
வாகனங்களின் பின்னால் சென்று ஒளிந்தவர்கள், தங்கள் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்தனர்.
“பரத் பையா நீ அப்படியே போய் நம்ம வண்டிய இங்க கொண்டு வந்துடற. கிளம்பு”, என யாத்ரா அவனை கிளப்பினாள்.
“காய்ஸ்… லெட்ஸ் ராக் அன் பையர் நௌ”, என சுட ஆரம்பித்தாள் யாத்ரா.
இப்பொழுது இஷானின் பின்னால் நூறு பேருக்கும் அதிகமாக நின்றிருந்தனர் கைகளில் விதவிதமான துப்பாக்கிகளுடன்.
“வாரேவா…..”, அர்ஜுன்.
“இன்னிக்கு தீபாவளி தான் நமக்கு”, நந்து.
“ஏன் பொங்கல் இல்லையா?”, நரேன்.
“பேசாம வேலைய பாருங்க டா”‘, என நெடுமாறன் உறுமினான்.
அர்ஜூனும் யாத்ராவும் போட்டி போட்டுக்கொண்டு எதிரில் நின்றவர்களை சுட்டுக் கொண்டு இருந்தனர்.
“அந்த புளு சர்ட்அ நான் தான் சுடுவேன். அந்த மஞ்ச சட்டைய நான் தான் சுடுவேன்”, என அர்ஜூனும் யாத்ராவும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு சுட்டுக்கொண்டு இருந்தனர்.
இவர்களின் உரையாடலை சண்டையின் இடையில் கேட்ட நரேனும் நந்துவும் தலையில் அடித்துக் கொண்டு வேறு பக்கம் சென்று விட்டனர்.
தாக்குதல் ஆரம்பித்ததும் இஷான் அவ்விடத்தில் இருந்து நகரத்தொடங்கினான். அவனை பின் தொடர சிவியை அனுப்பிவிட்டான் அர்ஜுன்.
தோட்டாக்கள் தீரவும் பரத் வரவும் சரியாக இருக்க அரஜூன் மினி லான்சரை எடுத்து ஆட்கள் வந்த வண்டியை விண்ணில் பறக்கவிட்டான்.
யாத்ராவும், நந்துவும் ஸ்னைபர் எடுத்துக் கொண்டு பின்னிருந்தவர்களைத் தாக்கி கொண்டிருக்க, அர்ஜுன் செந்தில் நெடுமாறன் மூவரும் முன்னிருந்தவர்களை சாய்த்துக் கொண்டு இருந்தனர்.
அதிக உயிர் சேதம் ஆகாமல் பலத்த காயங்கள் மட்டும் ஏற்படும்படி சுட்டனர் நம் சகாக்கள்.
“ஐ ம் கோன்னா ரீச் 25 நௌ”, யாத்ரா.
“ஐ டூ”, நந்நு கூறிக்கொண்டே ஒருவனை சாய்த்தான்.
விடாது ஒலித்த துப்பாக்கி சத்தத்தில் அந்த இடமே சிறு போர்களம் போல காட்சியளித்தது.
“ஓகே போதும்…. அங்க ஒருத்தன் தான் நிக்கறான்”, நரேன்.
“அதுக்குள்ள முடிஞ்சி போச்சா”, என நந்துவும் யாத்ராவும் கோரசாய் கேட்டனர்.
இருவரின் தலையிலும் செந்திலும் நரேனும் அடித்து அங்கிருந்து இழுத்து சென்றனர்.
பரிதிக்கு அழைத்த செந்தில் அனைத்தையும் கூறி அவ்விடத்தை சுத்தம் செய்யக் கூறினான்.
அங்கிருந்து நெடுமாறனின் பழைய குடோனிற்கு சென்றனர்.
அங்கே ஆர்யனும் சிவியும் இஷானை கட்டி வைத்து இருந்தனர்.
“ஹாய் ரியன் செல்லம். நீ எங்க இங்க? ஏன் பைட் சீன்ல வரல? மிஸ் பண்ணிட்ட போ”, யாத்ரா.
“சிவி இஷான பாலோ பண்ணத பாத்தேன் அதான் அப்படியே வந்துட்டேன்” ,ஆர்யன் சிரித்துக்கொண்டே பதிலுரைத்தான்.
“சரி சரி. அந்த ஜாக்சன் என்ன ஆனான்?”, யாத்ரா.
“செத்துட்டான்”, என்றபடி கிரிதரன் வந்து சேர்ந்தான்.
“டேய் கரிதரா…. நீ எப்ப வந்த?”, யாத்ரா அவனை தோளில் அடித்துக் கேட்டாள்.
“இன்னிக்கு காலைல தான். வந்து ஜாக்சன் பாடிய வாங்கறது தான் மிச்சம் எனக்கு. உயிரோட குடுத்தா கொறைஞ்சா போயிடுவ நீ”, என யாத்ராவிடம் எகிறினான்.
“டேய் கிரி…..”, அர்ஜுன்.
“சரி ஒன்னும் சொல்லல”, எனக் கூறிவிட்டு மனதில் ,”அவள சொன்னா இவனுக்கு வந்துடும் பொத்துகிட்டு”,என நினைத்து அமைதியாகிவிட்டான்.
பின்னர் இஷானை சில பல சித்திரவதைகள் செய்து இதுவரை அவன் செய்த குற்றங்களை ஒப்பு கொள்ள செய்து அவனுடன் நரேன் மற்றும் முகில் கதிருடன் அன்றிரவே டெல்லி அனுப்பி வைத்தனர்.
பின் ஜெயிலில் இருந்தவர்களை காண சென்றனர் செந்தில் அர்ஜுன் யாத்ரா மற்றும் நந்து.
அங்கே………