42 – அகரநதி
வீட்டிற்கு வந்த அகரனும் நதியாளும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்தபடி ஒருவர் அறியாமல் மற்றவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் ஊடல் அறிந்த பெரியவர்கள் அவர்களைக் கண்டும் காணாமல் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர்.
துவாரகன் இருவரின் முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பொறுத்து பார்த்தவன் முடியாமல் நதியாள் அருகில் சென்று அமர்ந்தான்.
“ஹாய் சிஸ்டர்…. நான் துவாரகன். அகரோட பிரண்ட்”, எனத் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான்.
“ஹலோ ப்ரோ… நான் நதியாள் அகரனோட மனைவி”, என வணக்கம் கூறினாள்.
“ஹாஹா…. சரி. எப்படி இருக்கீங்க? எப்படி அகரன கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்கன்னுலாம் கேக்கமாட்டேன். அவன எப்படி எல்லாம் படுத்தி எடுக்க போறீங்கன்னு மட்டும் சொல்லுங்க “, துவாரகன் அகரனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“என் புருஷனை நான் என்ன வேணா பண்ணுவேன்… அது உங்களுக்கு எதுக்கு ப்ரோ”, நதியாள் ஒரு புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“இல்ல. காலேஜ்ல எங்கள நிறைய படுத்தி எடுத்துட்டான். அதுக்கு ரிவென்ஞ் உங்க மூலமா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”, துவாரகன் தானாக தலையைக் கொடுத்தான்.
“ஓஹோ…. வேற என்ன என்ன பண்ண நினைக்கறீங்க அவன ?”, நதியாள் அகரனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, துவாரகனைக் கூர்மையாகப் பார்த்தாள்.
“அதுவும் இல்லாம உங்களையும் கோவப்படுத்திட்டே இருக்கான்ல. நாம ஒரு பிளான் பண்ணி அவன டார்ச்சர் பண்ணலாம். என்ன சொல்றீங்க?”, துவாரகன் குஷியுடன் கேட்டான்.
“ம்ம்… சொல்லுங்க ப்ரோ… சிறப்பா பண்ணிடலாம்”, நதியாள் உறுமும் குரலில் கூறினாள்.
அகரன் வாய்க்குள் சிரித்தபடித் துவாரகனுக்கு நேரப்போகும் நிலையை எண்ணி பரிதாபப்பட்டான்.
“நீங்க சொல்லுங்க சிஸ்டர் . உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்ண ரெடி. ஆனா அவன் பண்ணதுக்கு எல்லாம் பெருசா அனுபவிச்சே ஆகணும். அது மட்டும் தான் எனக்கு”, துவாரகன் நதியாளின் முகமாற்றத்தை அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான்.
“ஓஓ…பெருசா தானே…… நாம கொஞ்சம் மேல போய் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா ப்ரோ?”, நதியாள் அவனைத் தனியாகக் கவனிக்க முடிவெடுத்தபடிக் கேட்டாள்.
“ஓஓ ஷ்யூர் சிஸ் .. நான் ப்ளானே போட்டுத்தரேன் உங்களுக்கு , அவன எப்படி எப்படி டார்ச்சர் பண்ணணும்னு”, எனக் கூறியபடி எழுந்து நதியாளின் பின்னோடு மாடிக்குச் சென்றான்.
அவர்கள் சென்றதும் சில நொடிகள் தாமதித்து அகரனும் மேலே சென்றான்.
“மிஸ்டர் துவாரகன்… நீங்க என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க?”, நதியாள் தன் கைகளில் வளையலைப் பின்னே ஏற்றியபடிக் கேட்டாள்.
“நான் ********* கம்பெனி எம்.டி. சென்னை தான் சிஸ். இன்பேக்ட் உங்க ஆபீஸ் பில்டிங்ல ஒரு பிரான்ஞ்ச் கூட இருக்கு”, எனக் கூறினான்.
“சரி சரி. சொல்லுங்க என்ன என்ன பண்ணலாம் அவன?”, நதியாள் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டுக் கேட்டாள்.
“பர்ஸ்ட் அவன் மூஞ்சிலயே ஒரு பஞ்ச். அப்பறம் கன்னத்துல பளார் பளார்னு ஒரு பதினாறு அறை. தென் குனியவச்சி முதுகுல ட்ரம்ஸ் வாசிக்கணும். அப்பறம் கால்ல…….”, என ஒரு பத்து நிமிடம் அகரனை அடிப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் மேலே வந்த மீரா, ஸ்டெல்லா, சரண் அனைவரையும் அகரன் தன்னருகில் நிறுத்திக்கொண்டு அங்கு நடப்பதை மட்டும் கவனிக்கச் சொன்னான்.
துவாரகன் இப்படியெல்லாம் அகரனை டார்ச்சர் செய்யக் கூறுவதைக் கேட்டு மீரா, ஸ்டெல்லா, சரண் மூவரும் ஒரே போல துவாரகனை நினைத்து பரிதாபப்படும் சமயம் முதல் அடியை இறக்கி இருந்தாள் நதி அவன் கன்னத்தில்.
அடிவாங்கிய துவாரகன் சில நொடிகள் கண்களில் பூச்சிப் பறக்க நிலை தடுமாறி நின்றான்.
“சிஸ்டர் இப்ப என்னை அடிச்சது நீங்களா ?”, துவாரகன் கன்னத்தில் கைவைத்தபடிக் கேட்டான்.
“இன்னும் என்னமோ சொன்னியே மூஞ்சில பஞ்ச்… குடுக்கறேன் வா”, என அவனின் மூக்கை உடைத்தாள் நதி.
துவாரகன் மூக்கில் இருந்து இரத்தம் எட்டிப்பார்த்தது.
“இன்னும் என்னமோ சொன்னியே…. “, என நதியாள் அவனின் அடுத்த கன்னத்தை தனக்கு வாகாக வைத்து அடிக்கும் சமயம் அகரன் அவளைத் தடுத்தான்.
“போதும் நதிமா. என் மேல இருக்கற கோவத்தை அவன்மேல காட்டாத. பாவம் பையன் அடிதாங்க மாட்டான்”, என அவளின் கைப்பிடித்துத் தள்ளிக்கொண்டு தன்னறைக்கு வந்தான்.
“ஏன்டா அறிவிருக்கா உனக்கு ? உன் ஆசையெல்லாம் அவன் பொண்டாட்டிகிட்ட சொன்னா அவ உன்னை சும்மா விடுவாளா?”, சரண் துவாரகனின் இரத்தத்தைத் துடைத்தபடிக் கேட்டான்.
“அவன் காலேஜ்ல நம்மல படுத்தினதுக்கு ரிவெண்ஞ் எடுக்கலாம்னு இப்படி யோசிச்சேன் மச்சி. அவளும் அவன் மேல கோபமா இருக்கறதா சொன்னான். அதான் கொஞ்சம் ஏத்தி விட்டா நாலு சாத்து அதிகம் வாங்குவான்னு நினைச்சேன். கடைசில எனக்கே தான் அடிவிழுது”, துவாரகன் கன்னத்தைப் பிடித்தபடிக் கூறினான்.
“என் தங்கச்சி உன்னை கொல்லாம விட்டதுக்கு சந்தோஷம் பட்டுக்க. இனிமே அவகிட்ட தனியா மட்டும் மாட்டிடாத ஊருக்கு போறவரைக்கும் “, சரண்.
“ஏன்டா ? “, துவாரகன் அப்பாவியாகக் கேட்க மீராவும் ஸ்டெல்லாவும் சிரித்தனர்.
“சார் இவர்லாம் ஒரு கம்பெனிக்கு எம்.டியா ? இப்படி ஜீரோ வாட்ஸ் ஆ இருக்காரு”, ஸ்டெல்லா கலாய்த்தாள்.
“கொஞ்சம் அப்பாவி. ஒருத்தன் நல்லவனா இருந்தா தான் வச்சி செஞ்சிடுவாங்களே.. அதே தான் இவனுக்கும். நீங்க போங்க. நான் இவன கூட்டிட்டு வரேன்”, சரண் அவர்களை அனுப்பிவைத்தான்.
அவர்கள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு,” ஏன்டா அறிவு கெட்டவனே … அவன் தான் ஏதோ சொல்லி உன்னை இப்படி பேச சொல்றான்னா உனக்கு அறிவில்ல? இப்படியா வாலன்டியரா போய் உயிருக்கு உலைவச்சிப்ப?”, சரண் துவாரகனைத் திட்டினான்.
“டேய் அவன் தான்டா என் பொண்டாட்டிய பேச வைக்க ஹெல்ப் பண்ணுன்னு கேட்டான். அதான் நானும் பண்ணேன். நாளைக்கு என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சேன்”, துவாரகன்.
“சுத்தம். இன்னும் இரண்டு அடி வாங்கி இருந்த உன் நிலைமை மோசமாகி இருக்கும். ஆயிரம் சண்டை இருந்தாலும் என் தங்கச்சி அவன யாரையும் திட்ட விடமாட்ட , அவனும் அப்படித்தான். நீ இது தெரியாம போய் தலைய குடுத்துட்ட கேன கூமுட்ட”, என சரண் அவனைத் திட்டினான்.
துவாரகன் ஙே என முழித்தபடி சரணிடம் திட்டு வாங்கிக்கொண்டுக் கீழே வந்தான்.
ரூமுக்கு போனவங்க என்ன பண்றாங்கனு பாக்கலாம் வாங்க …
உள்ளே வந்ததும் நதியாள் அவனை முறைத்துவிட்டு, கோபமாக தன் கையை உறுவிக்கொண்டு பால்கனியில் சென்று நின்றாள்.
“என் கண்மணிக்கு இன்னும் கோவமா ?”, அகரன் மென்மையாகக் கேட்டபடி அவளருகில் வந்து நின்றான்.
நதியாள் தீயாய் முறைத்துவிட்டு நகர்ந்து நின்றாள்.
அகரன் சிரித்தபடி அவளை நெருங்கி நின்றான். நதியாள் அவ்விடம் விட்டு நகர்ந்து ஒற்றை ஆள் சோபாவில் சென்று அமர்ந்தாள்.
அகரன் அவளைப் பெரிய சோபாவில் தூக்கி அமரவைத்து, அவளின் மடியில் தலைசாய்த்துக் கண்மூடிப் படுத்துக்கொண்டான்.
அவள் அறியாமலே அவளின் விரல்கள் அவன் தலைமுடியை மிருதுவாக வருடிவிட்டுக் கொண்டிருந்தது.
அதில் அகரன் மென்னகைக் கொண்டு கண் திறந்து நதியாளைப் பார்க்க, அவள் வேறெங்கோ பார்த்தபடித் தலையை வருடிக்கொண்டிருந்தாள் இன்னும்.
“நதிமா…..”, அகரன் குரலில் அத்தனை மென்மையும் அன்பும் நிறைந்திருந்தது.
நதியாள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“சாரி நதிமா. நம்ம ****** கன்ஸ்ட்ரக்ஷன் லாஸ்ட் ஸ்டெஜ்ல இருக்கு டா. நம்ம சென்னை ரிஷப்சன் அன்னிக்கு கிரஷபிரவேசம் வச்சி இருக்காங்க. அதனால பக்கத்துல இருந்து எல்லாம் பாக்க வேண்டியதா இருத்தது. அதான் லேட்டா வந்தேன்”, அகரன் தன் தாமதத்திற்கானக் காரணத்தை விளக்கினான்.
“……….”, நதியாள் அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தாள்.
“ஏன்டா ஏன்கிட்ட பேசமாட்டியா?”, அகரன் ஏக்கமாக கேட்டான் வந்ததில் இருந்து அவள் தன்னிடம் உரையாடாமல் இருந்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது.
“ஐ லவ் யூ அகன்”, நதியாள் தன் மனதின் ஆழம் தொட்டுக் கூறினாள்.
அக்குரல் அகரனின் உயிர்வரைத் தொட்டு அசைக்க, “நதிமா…..”, அவசரமாக எழுந்து அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டான்.
“இதுக்கு மேல நான் உன்னை எப்படி மிஸ் பண்ணேனு சொல்ல தெரியல அகன். எப்ப உன்மேல இருக்கற காதலை உணர்ந்தேனோ அப்ப இருந்து உன்ன பாக்காம இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தான் தெரியும். உனக்கு ரொம்ப ஈஸியா இருக்கு என்னை விட்டுட்டு இருக்கறது. எனக்கு அது ரொம்பவே கஷ்டம் அகன். இனிமே என்னை விட்டுட்டு போன அவ்வளவு தான் நீ”, என அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள் நதி.
“ஐ லவ் யூ நதிமா”, என அகரனும் அவளை தன்னுள் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.
அவ்விடத்தில் காதலும், அதனால் உண்டான ஏக்கமுமே இருவரையும் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது.
எத்தனை சண்டை போடுவாளோ என்கிற யோசனையிலும் , பயத்திலும் வந்தவன் அவளிடம் தனக்கானத் தவிப்பினைக் கண்டு மனம் உருகி விட்டான். என்ன கொடுத்தேன் இவளுக்கு? இப்படி தனக்காக உருகுகிறாள்….
மௌனத்தின் பிடியில் இருவரும், இருவரின் தவிப்பையும் ஏக்கத்தையும் கண்மூடி தங்களின் அணைப்பிலேயே போக்கிக் கொண்டிருந்தனர்.
மௌனம்…..
எத்தனை சிறந்த ஒன்று ….
காதல் அதிகரித்தலும் அதில் தான்….
காதலை உயிர்ப்போடு வைப்பதும் அது தான்….
வாழ்வின் ஆகச்சிறந்த மொழி மௌனம்…..
அம்மௌனம் இன்று இருவரையும் பேரலையாகத் தன்னுள் இழுத்துக்கொண்டது…
ஒருவழியாக மோன நிலைக் கலைந்து நதியாள் முதலில் கண்திறந்தாள்.
அகரன் இன்னும் இன்பமும் துன்பமும் கலந்த மனநிலையில் அவளைத் தாங்கிக்கொண்டிருந்தான் தன் நெஞ்சமெனும் மஞ்சத்தில்….
அக்கலக்கம் பெண்ணவளுக்கு அவனின் இதயம் உணர்த்தியதோ என்னவோ அவனின் வலி துடைக்கப் பேச ஆரம்பித்தாள்.
“அகன்…. அகன்…..”, நதியாள் அவனின் சர்ட் பட்டனைத் திருவியபடி அழைத்தாள்.
“ம்ம்….”, அகரன் இன்னும் கண்திறக்கவில்லை.
“என்னை பாரேன்”, நதியாள் கொஞ்சலாக மொழிந்தாள்.
“என்ன நதிமா”, எனக் கண்திறந்தவன் அவள் கண்களில் விழுந்தான்.
எத்தனை ஆழம் அவளின் கண்கள்… ?
பெண்ணின் மனம் மட்டுமா ஆழமானது?
இல்லை … – அவர்களின் கண் தான் அதிக
ஆழமானது…….
இருவரும் கண்களில் கட்டுண்டு மீண்டும் மோனநிலைக்குச் சென்றனர்..
அந்நிலை கலைக்கவென்றே கதவு தட்டும் ஓசை வந்தது.
“அகர்…. உங்கள கீழ கூப்பிடறாங்க சீக்கிரம் வாங்க”, என சரண் கூறினான்.
“வந்துட்டோம் சரண்”, அகரன் உள்ளிருந்து குரல் கொடுத்தான்.
“வா நதிமா… கீழ போலாம்”, என எழுந்தான் அகரன்.
“உன் பிரண்ட்எ ஏன் அடிவாங்க விட்ட அகன் ? பாவம் நான் கொஞ்சம் பலமா அடிச்சிட்டேன்”, நதியாள் அவன் கண்கள் பார்த்துக் கூறினாள்.
அகரன் நாக்கை கடித்தபடி, ஒரு கண் மூடி தலைமுடியைப் பின்னிருந்து கோதியபடி அவளைப் பார்த்தான்.
“எப்படி கண்டுபிடிச்ச டார்லிங்?”, அகரன்.
“அவர் வந்து பேச ஆரம்பிக்கறப்பவே உன் முகத்துல ஆர்வம் அதிகமா இருந்தது. சரி என்ன நடக்குதுனு பாக்கலாம்னு தான் நானும் பேச்சு கொடுத்தேன்”, நதியாள் தான் அனுமானித்ததைக் கூறினாள்.
“அது நீ என்கிட்ட பேசவே இல்லயா…என் முகம் கூட நீ நிமிர்ந்து பாக்கல… அதான் நீ என்ன மூட்ல இருந்தாலும் என்னை யாராவது திட்டினா ஓபன்அப் ஆவன்னு அவன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்”, அகரன் வலிந்தபடிக் கூறினான்.
நதியாள் அகரனை இடுப்பில் கைவைத்து முறைத்தபடிப் பார்க்க, அகரன்,” தோ வந்துட்டேன் தாத்தா”, எனக் கீழே ஓடினான்.
“பிராடு பிராடு…. என்கிட்ட வருவல்ல அப்ப வச்சிக்கறேன் உன்னை”, என முனகியபடி தன்னை சரிபார்த்துக்கொண்டு கீழே வந்தாள் நதி.
“அகரா… நாளைக்கு நதியாள் அழைச்சிட்டு மறுவிருந்து போகணும். அங்க இருந்து அவ தாய்மாமா வீட்டுக்கும் போயிட்டு இங்க வரணும். இங்க வந்ததும் உன் தாய்மாமா வீடு பங்காளி வீடுன்னு ஒரு பத்து வீடு இருக்கு. அதுல்லாம் முடிச்சிட்டு அடுத்த திங்கள் உன்னையும் நதியாளையும் சென்னை வந்து குடிவைக்கறோம். சரியா?”, சுந்தரம் தாத்தா வீட்டு ஆட்களுடன் கலந்துப் பேசி எடுத்த முடிவைக் கூறினார்.
“தாத்தா…. ஒரு நிமிஷம்…. நான் ஒன்னு சொல்லட்டுமா?”, நதியாள் அகரனைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“சொல்லுடா……”, சுந்தரம் தாத்தா.
“நான் படிப்பு முடியற வரைக்கும் இப்ப இருக்கற மாறியே இருந்துக்கறேன். பிரண்ட்ஸ் கூடவே…. ஆறுமாசம் தனியா இருக்கணும்ல இப்படி இருந்துக்கறோம். சரி தானே அகன்? “, நதியாள் தன் பேச்சில் அவனையும் சேர்த்துக்கொண்டாள்.
அகரன் பேயறைந்தது போல அவளைப் பார்த்து முழித்தான். அவள் இல்லாமல் இனி தனியே இருப்பதா. அது முடியாத காரியம் …என தனக்குள் புலம்பியவன் வாய்திறக்க எத்தனித்தான்.
“ஆமால்ல… இத மறத்துட்டோம் பாரு மாப்பிள்ளை. சரி கண்ணு நீ அங்கயே இரு. படிப்ப முடிச்சிட்டு இங்க வந்தப்பறம் சடங்கு வச்சிட்டு இரண்டு பேரையும் ஒன்னா குடிவைக்கலாம். சரிதானே ?”, என எல்லோரையும் கேட்டார் மாந்தோப்பு தாத்தா.
அகரன் அவரை கொலைவெறியுடன் பார்த்தான். நதியாள் அவனைப் பார்த்து கண்ணடித்துப் பலித்துக்காட்டினாள்.
அவளின் செய்கை அவளின் எண்ணம் உரைத்திட அகரன் இன்னும் அவஸ்தையானான்.
“கிராதகி. இதுக்கு என்னை அடிச்சே இருக்கலாம்… இப்படி பண்ணிட்டாளே…. எப்படி இவங்கள சமாளிக்கறது”,என நினைத்தபடி சரணைப் பார்த்தான்.
அவனோ கடமையே கண்ணாக பெரியவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“சரி தான். அப்படியே பண்ணிடலாம் “, மீனாட்சி பாட்டி ஒட்டுமொத்த பேரின் சம்மதத்தோடு கூறினார்.
” கண்ணா பரமசிவம்… நாளைக்கு நீங்க காலைலயே வந்து கூட்டிட்டு போயிக்கங்க. அங்க இருந்து கருப்பசாமி கோவிலுக்கு வந்துடுங்க. இப்ப நீங்க ஆடு வெட்டிடுங்க. ஆறுமாசம் கழிச்சி இவங்க வெட்டிகட்டும். சரணு இரண்டு பேரையும் பாத்துக்க… அகரா சம்மதம் தானே இந்த ஏற்பாடு?”, மாந்தோப்பு தாத்தா வரிசையாகக் கூறியபடி அகரனிடம் வந்து நின்றார்.
அகரன் முறைத்தபடி சரியென தலையசைத்தான். பின் அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கிட, நதியாள் தோழிகளுடன் கீழே இருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அகரன் மனம் சோர்ந்தபடி தன்னறைக்குச் சென்றான்.
அன்று மாலை மீராவும் ஸ்டெல்லாவும் சென்னை கிளம்பினர். துவாரகனும் நதியாளிடம் பேசிவிட்டு சொல்லிக்கொண்டுக் கிளம்பினான். நதியாளும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வழியனுப்பி வைத்தாள்.
அடுத்த நாள் காலை பரமசிவம் தம்பதியரும், கண்ணன் தம்பதியரும் தாம்பாளத் தட்டோடு வந்து மணமக்களை மறுவீடு அழைத்துச் சென்றனர்.
வீடு வந்த அகரனை நதியாள் தன்னறைக்கு அழைத்து வந்து அவனை விட்டுவிட்டு கிளம்ப எத்தனிக்க, அகரன் அவளைக் கைப்பற்றித் தடுத்தான்.
“என்ன அகன் ? எதாவது வேணுமா ?”, நதியாள் கேட்டாள்.
“என் பக்கத்துலயே இரு நதிமா. பத்து நாளுக்கு மேல ஆச்சி உன்கூட ப்ரீயா பேசியே…. இப்படியே ஓடிட்டு இருந்தா எப்படி…? நான் பாவம் இல்லையா?”, அகரன் சிறுகுழந்தைப் போல அடம்பிடித்துக்கொண்டு இருந்தான்.
“எம்.டி சார் இப்படி சொன்னா எப்படி? “, நதியாள் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“அது ஆபீஸ்ல ..இல்ல இனி ஆபீஸ்ல கூட நீ சார்னு கூப்பிட கூடாது…. அகன்னு கூப்பிடு “, அகரன்.
“நீங்க சொன்னா உடனே கேக்கணுமா? என்னால அப்படி நினைச்சாமாறி மாத்திக்க முடியாது அகரன் சார். நீங்க ரெஸ்ட் எடுங்க. சரண அனுப்பி வைக்கறேன்”,எனக் கூறி அங்கிருந்துச் சென்றாள்.
“கம்முன்னு நாமலே அடி வாங்கி இருக்கலாம். இவ்வளவு கடுப்பு ஏத்தறா. கடைசில நம்மகிட்டயே வாய்குடுத்து விஷயத்த வாங்கிட்டா…. “, என மெத்தையில் கையைக் குத்தினான் அகரன்.
நதியாள்கிட்ட உனக்கு அடி கன்பார்ம் அகன்… அதுக்கும் கொஞ்சம் வையிட் பண்ணணும்… வேற வழி இல்ல…..