42 – அர்ஜுன நந்தன்
நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து இருந்தாள்.
“ஹாய் டார்லிங்…… இங்க எப்ப வந்த? நம்ம விருந்தாளிகள கவனிக்க என்ன ஏற்பாடு செஞ்சி இருக்க?”, என்று கேட்டபடி யாத்ரா பரிதியை கட்டிக்கொண்டாள்.
“ஸ்பெஷல் ஏற்பாடு தான் செஞ்சி இருக்கேன். ஆர்யன் இவங்கள கூட்டிட்டு வந்துடுவான் இன்னிக்கு நைட். நான் கால் பண்றேன் அப்ப வந்துடுங்க”, எனக் கூறி பரிதி அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து சென்றாள்.
“சரி நமக்கு இப்ப வேலை இல்ல. என்ன பண்ணலாம்?”,யாத்ரா.
அந்த சமயம் அர்ஜூனுக்கு இதழி போன் செய்து உடனடியாக வெண்பாவின் வீட்டிற்கு வரச்சொன்னாள்.
நால்வரும் அங்கிருந்து வெண்பா வீட்டிற்குள் நுழைய அங்கே இதழி சிவியின் காலரை பிடித்து அவனை நகரவிடாமல் செய்து கொண்டு இருந்தாள்.
“ஹே இதழ்….. அவன விடு. நீ இங்க என்ன பண்ற?”, என கேட்டபடி நந்து சிவியை அவளிடம் இருந்து விடுவித்தான்.
“இதோ இவன்கிட்ட பதில் கேட்டுட்டு இருக்கேன்”, என சிவியை கைகாட்டி கூறினாள் இதழி.
“என்ன பதில்?”, நந்து.
“கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்கறேன் பதில் சொல்லாம தப்பிக்க பாக்கறான். அதான் இன்னிக்கு எனக்கு ஒரு முடிவு தெரியணும்னு அர்ஜுன வர சொன்னேன்”, இதழி.
“டேய் என்னடா நடக்குது இங்க?”, செந்தில்.
“அது ஒன்னும் இல்லை சீனியர், இதழி நம்ம சிவிய லவ் பண்றா, அத எங்க முன்னாடி தான் முன்னாநேத்து ப்ரோபோஸ் பண்ணா. நந்தன் கால் பண்ணதும் நாங்க உடனே கிளம்பிட்டோம், என் நாத்தனார் சூழ்நிலை காரணமா ரெண்டு நாள் அமைதியா இருந்தா இன்னிக்கு பதில் கேக்கறா. அவ்வளவு தான்”, யாத்ரா இதழியின் தோளின் மீது கை போட்டு அவளை பின்னிருந்து கட்டிபிடித்தபடி கூறிமுடித்தாள்.
“டேய் அஜ்ஜு… என்னடா இது? நீ என்னடா சொன்ன?”, நந்து அதிர்ச்சியில் கேட்டான்.
“அது அவ லைப் டா. அவளோட சாய்ஸ் தப்பில்ல. மிஸ்டர். சிரஞ்ஜீவ் நெடுமாறன் தான் பதில் சொல்லணும்”, அர்ஜுன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
வெண்பா சிவியையும் இதழியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நெடுமாறனும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். செந்திலும் மற்றொரு சோபாவில் அமர்ந்துகொண்டான்.
“எதாவது பதில் சொல்லு சிவி அத்தான். இன்னும் ஒரு வாரம் ஆனாலும் அவ நகரமாட்டா அப்பறம்”, வெண்பா.
அவ்விடம் வந்த வெண்பாவின் தாய், “எல்லாரும் வாங்க சாப்பிடலாம். அப்பறம் உக்காந்து பேசுங்க”, என சாப்பிட அழைத்துச் சென்றார்.
யாத்ரா, அர்ஜுன் மற்றும் நெடுமாறன் மூவரும் முதலில் சென்று அமர்ந்தனர். பின் மற்றவர்களும் அமரும் சமயம் சிவியை தன்பக்கம் இதழி இழுக்க அவள் பக்கம் அமர்ந்து கொண்டான்.
இதைக் கண்ட யாத்ரா, “மாறா…. பையன் சாஞ்சிட்டான் டா. ஆனா ஏன் சீன் போடறான்?”, நெடுமாறன் காதில் கிசுகிசுத்தாள்.
“அது எங்கப்பன பத்தி தெரிஞ்சா அவங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னு மனசுல பட்டிமன்றம் நடத்திட்டு இருக்கான். இன்னொன்னு தங்கச்சிய கட்டி குடுக்காம எப்படின்னு யோசிக்கறான்”, நெடுமாறன்.
“அது சரி நீ எப்ப கல்யாணம் பண்ணலாம்னு இருக்க?”, யாத்ரா.
“தெரியல. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும். அதுக்கு முன்னாடி அப்பனுக்கு கொல்லி வைக்கணும்”, நெடுமாறன்.
“ரொம்ப செண்டிமெண்ட் சீன் ஓட்ற டா நீ. அப்பறம் வச்சிக்கறேன் உன்ன”, யாத்ரா.
“அம்மா எல்லாமே சூப்பர். எனக்கு மீன் வறுவல் இன்னொன்னு”, அர்ஜுன்.
“இந்தாப்பா… நல்லா சாப்பிடுங்க. நீங்கல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் செஞ்சி இருக்கீங்க. இந்த ஜென்மம் முழுக்க உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்”, வெண்பாவின் தாயார்.
“அத விடுங்கம்மா. வெண்பாக்கு எப்ப கல்யாணம்?”, யாத்ரா.
“இந்த குடும்பத்துக்கு மூத்தவங்க நெடுமாறனும் சிவியும் தான். அவங்க தான் முடிவு பண்ணணும்”, என பொறுப்பை அவர்களிடம் தள்ளிவிட்டார்.
“பரத் வீட்ல பேசிட்டு வச்சிக்கலாம் அத்தை”, சிவி.
“ஏய் வெண்பா. உங்கத்தானுக்கு இப்ப மட்டும் பேச வருது. சாப்டு தனி இடத்துக்கு கூட்டிட்டு போற. அங்க வச்சி உங்கத்தான நான் வழிக்கு கொண்டு வரேன்”, இதழி சொற்களை சிவியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நிதானமாக கூறினாள்.
“அவர் பாவம் டி. இப்பவே கொடுமை பண்ற நீ”, வெண்பா.
“வாயமூடிட்டு சொல்றத செய்”, இதழி.
செந்திலும் நந்துவும் இவர்களை கவனித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
வெண்பா அவள் அம்மாவை கீழேயே இருக்க கூறிவிட்டு, அனைவரையும் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிறு தோட்டத்தில் அமரவைத்தாள்.
“இதழ் ….. “, நந்து.
“நந்துன்னா…. எனக்கு சிவிய பிடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசை படறேன். ஆனா இவர் இன்னும் பதில் சொல்லல. அப்பா அம்மாகிட்ட அர்ஜுன் பேசிக்குவான், ஆனா சிவியோட பதில் இப்ப தெரியணும் “,என தீர்க்கமான குரலுடன் கூறினாள் இதழி.
“என்ன பதில் சொல்லணும் இப்ப உனக்கு?”, சிவி கடுப்பாக கேட்டான்.
“லவ் யூ சொல்லி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுங்க சிவி”, என அவனை பார்த்து கண்ணடித்தாள் இதழி.
அவள் அப்படி பேசியதும் யாத்ரா அங்கிருந்தவர்களை சத்தமில்லாமல் கிளப்பி மற்றொரு அறைக்கு அனுப்பி வைத்தாள்.
இதழி கண்ணடித்ததில் சிவி உறைந்து நின்ற நொடிகளில் இதழி அவனை நெருங்கி நின்றாள்.
“ஏய் தூரமா நில்லு”, என சிவி பின்னால் தடுமாறி விழ இதழி அவனை சட்டையை பற்றி நேராக நிறுத்தி, “இங்க பாரு சிவி. இந்த ஜென்மத்துல என்னைத்தவிர யாரும் உன்னை கல்யாணம் பண்ண விடமாட்டேன். உனக்கு என்னை பிடிச்சி இருக்கு ஆனா ஒத்துக்க மாட்டேங்கற. ஏன்?”.
அவர்களை அந்த தோட்டத்தின் வாயிலில் மறைந்து நின்று அர்ஜூனும் யாத்ராவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“செழியன்.. என் நாத்தனார் செம போல்டான ஆளு தான். சிவிய இப்படி லாக் பண்றா”, யாத்ரா.
“என் தங்கச்சில்ல ….”, என அவன் காலரை தூக்கிவிட்டான்.
“நல்ல குடும்பம் டா”, என சொன்னபடி நந்து வந்து நின்றான்.
“ஷ்ஷ்…”,யாத்ரா அவர்களை அடக்கிவிட்டு சிவி இதழியை நோக்கினாள்.
“நான் கல்யாணமே பண்ணிக்கல போ. இங்கிருந்து கிளம்பு முதல்ல நீ”, சிவி அவளை தூர நிறுத்தியபடி கூறினான்.
“முடியாது. பதில் சொல்லு”, இதழி வீம்பு பிடித்தாள்.
“முடியாது”, சிவியும் வீம்பு செய்தான்.
“சரி முறையா உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். நீ கோஆபரேட் பண்ணமாட்டேங்கற. நான் வேற பிளான் பண்ணிக்கறேன். இந்த ஜென்மத்துல நான் தான் உனக்கு பொண்டாட்டி நீ தான் எனக்கு புருஷன்”, என அங்கிருந்து நகர்ந்தாள் இதழி.
சிவி பிரம்மித்து நிற்க, அர்ஜூனும் யாத்ராவும் அவள் கூறியதன் உள்நோக்கத்தை ஆராயத் தொடங்கினர்.
அதற்குபின் இதழி ஊருக்கு கிளம்புவதாக கூற அன்று மாலை அவளை பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
“செழியன்…. இதழி அவ்வளவு சாதாரணமா விடற ஆள் இல்லையே. சிவி பதில் சொல்லாம இருந்தும் ஊருக்கு போறா. என்ன பிளானா இருக்கும்?”, யாத்ரா.
“அவ ஏதோ முடிவோட தான் போறா. வா பாத்துக்கலாம். ஆனா சிவி இனிமே தப்பிக்க வாய்ப்பு இல்ல”, என கூறிச் சிரித்தான் அர்ஜுன்.
பரிதி அவர்களை சற்று நேரத்தில் டிஐஜி கூறும் இடத்திற்கு வரச்சொன்னாள்.
ஊருக்கு ஒதுக்கு புறமாக காட்டுப்பகுதியில் பழைய கட்டிடமாக இருந்தது அவர்கள் சென்ற இடம்.
உள்ளே சந்திரகேசவன் ஒரு அறையிலும், சந்தனபாண்டியன் ஒரு அறையிலும் சேரலாதன் ஒரு அறையிலும் யோகி ஒரு அறையிலும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
பரிதி சந்திரகேசவனை விசாரித்ததில் பொக்கிஷம் எடுப்பதாக கூறியதால் தான் தானும் அக்கோவில் விஷயத்தில் கூட்டு சேர்ந்ததாக கூறினார். பின் தான் சுரங்கபாதை உபயோகிக்கப் போவதை தாமதமாக அறிந்துக் கொண்டதாகக் கூறினார்.
பழைய நகைகள் வைத்திருந்ததும் சேரலாதன் பணத்திற்காக தன்னிடம் விற்ற நகைகள் தான் வாங்கியதாக கூறினார். கோவில் நகைகள் என்று தெரிந்தும் வாங்கியதால் பரிதி டிஐஜியிடம் அவரை சிறைக்கு அனுப்ப உத்திரவிட்டாள்.
சந்தனபாண்டியன் இருந்த அறைக்குள் பரிதி நுழையும் சமயம், யாத்ரா அர்ஜுன் செந்தில் பரத் நந்து அனைவரும் வந்து சேர்ந்தனர்.
“என்ன பாண்டியன் இடம் சவுகரியமா இருக்கா?”, பரிதி அவனெதிரில் அமர்ந்தாள்.
“ஏய் எங்கள ஜெயில்ல தள்ளிட்டா பெரிய இவளா நீ? உன்ன உயிரோட விடமாட்டேன்”, சந்தனபாண்டியன்.
“அடடா…. இன்னும் எத்தனை நாளைக்கு இதே டயலாக்கை பேசுவீங்க? கேட்டு கேட்டு போர் அடிக்குது”, என்றபடி யாத்ரா அங்கிருந்த மற்றொரு சேரில் அமர்ந்தாள்.
“ஏய்…. உன்ன உருந்தெரியாம அழிக்காம விடமாட்டேன்”, யாத்ராவை பார்த்துக் கூறினான்.
“நீ முதல்ல இங்கிருந்து உயிரோட போனா தான”, யாத்ரா திமிராக கூறினாள்.
“நாளைக்கு எங்கள கோர்ட்ல நிறுத்தி தான் ஆகணும் நீங்க. எங்காளுங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க”, சந்தனபாண்டியன்.
“பார்ரா….ஹம்ம்…. ஏன் டார்லிங் இவன் இன்னும் எத்தனை நிமிஷம் உயிரோட இருக்கணும்”, எனக் கேட்டபடி தன் கையில் இருந்த வாட்சை கழட்டி பாக்கெட்டில் வைத்து பின் தன் சட்டையை மேலே ஏற்றினாள் யாத்ரா.
“நீ அமைதியா இரு. பாண்டியன் கிட்ட நிறைய விஷயம் தெரிஞ்சிக்கணும்”, பரிதி.
“அதான் எல்லாம் தெரியுமே உனக்கு இன்னும் என்ன?”, சந்தனபாண்டியன்.
“அந்த ஆராய்ச்சிக்காரன் குடும்பம் எங்க? அவனோட டைரி எங்க?”, பரிதி.
“தெரியும் ஆனா சொல்லமாட்டேன்”, சந்தனபாண்டியன்.
“அப்படியா…. இத பாத்துட்டு சொல்லு அந்த வார்த்தைய”, என பரிதி தன் போனில் அவன் மனைவி வீட்டில் கைகால்கள் கட்டப்பட்டு கிடக்கும் காட்சி ஓடியது.
“ஏய்… அவள விட்று”, சந்தனபாண்டியன்.
“ஒரு பொண்ணு இருக்குல்ல உனக்கு”, என பரிதி யோசனையாக இழுத்தாள்.
“வேணாம் நீ ரொம்பவும் கஷ்டப்படுவ”, சந்தனபாண்டியன்.
“பரத்”,பரிதி கத்தினாள்.
சந்தனபாண்டியன் மகளை பரத் இழுத்துவந்தான்.
“டேய்… அவள விட்றுங்க”, சந்தனபாண்டியன் கத்தினான்.
“அந்த பொண்ண நம்ம பசங்க இருக்கற ரூம்ல விட்று அங்கிருக்கற கேமராவ ஆன் பண்ணிட்டு வா”, பரிதி கட்டளையிட்டாள்.
அப்பெண்ணை சுற்றி ஐந்து பேர் அவளை நெருங்கினர்.
அதைக் கண்ட சந்தனபாண்டியன்,” வேணாம் பரிதி. நீ ரொம்ப தப்பு பண்ற. உன்ன உயிரோட பொதைச்சிருவேன். எம் பொண்ண விட்று”, சந்தனபாண்டியன் சீறினான்.
“உன் இரத்தம்னதுமே கொதிக்குதோ? இதே மாதிரி தானே மத்த பொண்ணுங்க வீட்லயும் கதறி இருப்பாங்க. சம்பாதிக்க வழியா இல்ல உனக்குல்லாம். நல்லா தானே குவாரில கொள்ளை அடிக்கற? அப்பறம் ஏன் பொண்ணுங்கள கடத்தி விக்கிற? போனவாரம் நீ அனுப்பின கன்டைனர் எங்க இருக்கு? அந்த பொண்ணுங்க உயிரோட கலங்கம் இல்லாம நாளைக்கு காலைல இங்க இருக்கணும். இல்ல உன் பொண்ண இவனுங்க மட்டும் இல்ல இன்னும் ….. சொல்லமாட்டேன் செஞ்சப்பறம் நீ வருத்தபட்டு கத்தறதுல பிரயோஜனம் இல்ல”, பரிதி ரௌத்திரத்துடன் அடக்கப்பட்ட குரலில் சொன்னாள்.
“மொதல்ல என் பொண்ண விடசொல்லு”, சந்தனபாண்டியன்.
“நீ அந்த பொண்ணுங்கள இங்க கொண்டு வந்து சேக்கறவரை உன் பொண்ணு அந்த ரூம்ல தான் இருப்பா. நான் சொல்றத நீ செஞ்சே ஆகணும். செய்யல உன்ன கொல்லமாட்டேன் ஆனா நீ வாழ்ந்த அடையாளம் இல்லாம பண்ணிடுவேன்”, பரிதியின் கண்களில் தெரிந்த உறுதி அவள் செய்து முடிப்பாள் என்பதை உணர்த்தியது.
சந்தனபாண்டியன் ஒரு வண்டி எண்ணைக் கூறி மதுரையை தாண்டி ஐம்பது கி.மீரில் நிற்பதாகக் கூறினான்.
செந்திலும் பரத்தும் அவ்விடத்திற்கு விரைந்தனர். டி.ஐ.ஜி ஏற்கனவே அங்கிருந்த போலீஸாரை அவ்விடத்திற்கு செல்ல உத்திரவிட்டு இருந்தார். ஒரு மணி நேரத்தில் அங்கு சென்ற செந்திலும் பரத்தும் அந்த வண்டியை கண்டுபிடித்து அந்த டிரைவரை கைது செய்தனர்.
பரத் அந்த வண்டியை ஓட்ட செந்தில் அங்கிருந்து கிளம்பியதும் பரிதிக்கு தகவல் கொடுத்தான்.
அந்த கன்டைனரில் 15 வயதிலிருந்து 25 வயதுவரை உள்ள 45 பெண்கள் இருந்தனர்.
“இப்ப என் பொண்ண விட்று”, சந்தனபாண்டியன் பரிதியிடம் கேட்டான்.
“அந்த பொண்ண கூட்டிட்டு வாங்க”, பரிதி கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள்.
சந்தனபாண்டியனின் மனைவியும் மகளும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர்.
“கஸ்தூரி நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகலல்ல”, என கேட்டு அருகில் வந்தவன் இருவரின் கையாளும் குத்துபட்டு கீழே விழுந்தான்.
“என்னடா பாக்கற. பணத்துக்கா பொண்ணுங்கள விக்கிற நீ உயிரோட இருக்க கூடாது. நாங்களும் இருக்க மாட்டோம்”, என தன்னை தானே குத்த முயன்றவர்களை அர்ஜூனும் நந்துவும் தடுத்து வெளியே அழைத்து வந்தனர்.
“செத்தா பிரச்சனை தீராது. அவன் பண்ண தப்ப நீங்க சரி பண்ண முயற்சி பண்ணுங்க”,அர்ஜுன்.
பின் அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பரிதியும் டி.ஐ.ஜியும் அந்த பெண்களை அவரவர் பெற்றோரிடம் அனுப்பும் வேலையை துரிதமாக முடிக்க உத்திரவிட்டு சேரலாதனை காண வந்தனர்.
“என்ன மினிஸ்டர் சார் சவுக்கியமா?”, என்றபடி பரிதி அவன் முன்னால் அமர்ந்தபடி கேட்டாள்.
“புத்திசாலி தான் நீ”, சேரலாதன்.
“அப்படியா…. சரி நீங்க பதுக்கி வச்சி இருக்கற சிலை இவ்வளவு தானா இன்னும் இருக்கா?”, பரிதி.
“உனக்கு தெரியாதா என்ன?”, சேரலாதன்.
“இந்த திமிர் மட்டும் போறதே இல்ல உனக்கு ” , என்றபடி யாத்ரா உள்ளே வந்தாள்.
“உன்ன அன்னிக்கே கொல்லாம தப்பு பண்ணிட்டேன்”, யாத்ராவைப் பார்த்துக் கூறினான் சேரலாதன்.
“ஹாஹா… டூ லேட் ரியலைசேஷன்”, யாத்ரா.
“உன் பசங்க உனக்கு கொல்லி போட காத்துட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடி கக்க வேண்டியத கக்கிடு”, யாத்ரா.
“…….”, அமைதியாக இருந்தான் சேரலாதன்.
“நந்து”, பரிதி.
“வந்துட்டேன்”, என்றபடி கையில் ஊசியுடன் வந்தான் நந்து.
“போடு”, பரிதி.
“கண்டிப்பாக போடனுமா. பவர் ஜாஸ்தி”, நந்து.
“சார் பெரிய மினிஸ்டர் அதுவும் இல்லாம பெரிய கிரிமினல். இதுல்லாம் அவருக்கு ஜுஜுபி நந்து”, பரிதி.
ஊசியில் இருந்த மருந்து அவன் உடலில் பரவத்தொடங்கியதும் அவனுடலில் லேசாக எரிச்சல் பரவத் தொடங்கியது.
நரம்புகள் புடைக்கவும் கண்களில் இரத்தம் வழிய ஆரம்பித்தது.
வலியில் துடிக்கத்தொடங்கினான் சேரலாதன்.
“எவ்வளவு எம்எல் குடுத்த?”, பரிதி.
“10 தான்”, நந்து.
“இன்னும் இருவது குடு”, பரிதி.
“வேணாம். நான் சொல்லிடறேன். ஹோம் மினிஸ்டர் கிட்ட தான் அனுப்பி வைப்பேன். இங்க சிலைய கடத்தறதோட என் வேலை முடிஞ்சிடும்”, சேரலாதன்.
“அந்த ஆராய்ச்சிக்காரன் குடும்பம்?”, யாத்ரா.
“என் மரகுடோன்ல தெற்கு மூலைல இருக்கற ரூம்ல அடச்சி வச்சிருக்கேன்”,சேரலாதன்.
“யோகி குடுத்த பணம்?”, நந்து.
“அது என் வீட்ல கார் நிறுத்தர ஷெட்ல கருப்பு ட்ரம்ல இருக்கு”, சேரலாதன்.
“வெண்பா கம்பெனில அமுக்கின பணம்?”, யாத்ரா.
“அது பழைய குடோன்ல தங்க கட்டியா இருக்கு. என் சொத்து எல்லாமே எடுத்துகோங்க. என்னால இந்த எரிச்சல தாங்க முடியல. காப்பாத்துங்க”,என தரையில் உருண்டு கெஞ்சினான்.
“உன் பசங்க முடிவு பண்ணட்டும் உன்ன காப்பாத்தறதா வேணாமான்னு”, என பரிதி அங்கிருந்து வெளியேறினாள்.
“உன்ன அப்பான்னு கூப்பிட நாக்கு கூசுதுயா. உன்ன திருத்தலாம்னு கூட இருந்த எனக்கு தெரியாமயே இவ்வளவு கேவலமான வேலைய பண்ணி இருக்க. நீ உயிரோட இருக்கறது தான் பாவம்”, நெடுமாறன்.
நெடுமாறனும் சிவியும் ஆளுக்கு ஒரு ஊசியை சேரலாதன் உடம்பில் செலுத்தினர். சில விநாடிகளில் சேரலாதன் துடிதுடிக்க மகன்களை கைக்கூப்பியபடி நரகம் சென்றான்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்….. யோகி….
“டார்லிங் இவன நாங்க தீர்த்து கட்ட பிளான் பண்ணி இருக்கோம். பர்மிஷன் ப்ளீஸ்”,என யாத்ரா அவள் கழுத்தை கட்டிக் கொண்டு தொங்கினாள்.
“சரி…. “, என அவள் வேடிக்கை பார்க்க சேரில் அமர்ந்தாள்.
“நந்தன் செழியன் வாங்க”, யாத்ரா.
“நானும் வரலாமா?”, ஆர்யன்.
“கண்டிப்பா ரியன் செல்லம்”,யாத்ரா.
“என்ன யோகி? சாப்டியா?”, நந்து.
“இல்ல இன்னும் டைம் ஆகல நந்து”, அர்ஜுன்.
“அவருக்கு சுகர் இருக்கு இன்சுலின் போடனும்”, ஆர்யன் கையில் ஊசியுடன் வந்தான்.
“அப்படியா…. சரி முதல்ல அத போடு”, யாத்ரா.
யோகி அவர்கள் வந்ததில் இருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான். ஊசி போட்ட சில நொடிகளில் உடல் மரத்து போக தொடங்கியது.
“யோகி…. வாய தொறந்து பேசு”, நந்து.
“என்னை கொல்ல போறீங்க அவ்வளவு தானே?”, யோகி.
“அவ்வளவு சீக்கிரம் நீ செத்துட்டா உனக்கான தண்டனையை யார் அனுபவிப்பா?”, யாத்ரா.
“அவனுங்க ரெண்டு பேரையும் தீர்த்த மாதிரி உன்னையும் முடிச்சிடலாம்னு தான் யோசிச்சோம். ஆனா உன் பையன் கொல்லி வைக்கமாட்டேன்னு அடம் பண்றான். அதான் கொஞ்ச நாள் நீ உயிரோட இருக்க போற”, அர்ஜுன்.
யோகி யோசனையுடன் பார்த்தான் அவர்களை.
“இது என்ன ஊசி தெரியுமா?”, நந்து.
“தெரியாது”, என தலையசைத்தான் யோகி.
“**************** ங்கிற விஷம். இத உன் உடம்புல ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவைன்னு இன்னிக்கு இராத்திரி முழுக்க போட போறோம். நீ சாக மாட்ட ஆன உன்ன நீயே சாகடிக்க முயற்சி பண்ணுவ. உன் மூளை சொல்றத உடம்பு கேக்காது. 24 மணி நேரத்துல உன் உடம்ப நீயே சாப்ட ஆரம்பிப்ப. கொஞ்சம் கொஞ்சமா உன்ன நீயே கொல்லுவ. மிச்சம் மீதி இருந்தா உன் புள்ள எடுத்துட்டு போய் காரியம் பண்ணுவான். ரியன் செல்லம் நீ ஆரம்பிச்சி விட்டுட்ட சோ நாம போய் ரெஸ்ட் எடுக்கலாம். அந்த பையன போட சொல்லிடலாம் இனி”, யாத்ரா.
“சலீம்”, அர்ஜுன்.
“சொல்லுங்க சார்”, சலீம்.
“கேரி ஆன்”, அர்ஜுன்.
“நீ எவ்வளவோ தப்பு பண்ண நானும் துணை வந்தேன். ஆனா சின்ன சின்ன குழந்தைகளுக்கு நீ பண்ணத நான் மன்னிக்கவே மாட்டேன். நீ முழு உடம்போட சாகக்கூடாது அதான் நானே இந்த மருந்த வரவச்சேன். மத்தவங்க உடம்ப திண்ணு தானு இந்த உடம்ப வளத்துன. இப்ப நீயே அதை திண்ணு அழிச்சிக்க போற. குட் பை மிஸ்டர் சித்தேஷ்யோகி”, என ஆர்யன் கூறி திரும்பி பார்க்காமல் சென்றான்.
அன்றிரவு முழுக்க சலீம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டு இருந்தான். அடுத்த நாள் காலையில் யோகியின் உடல் முழுதாய் மரத்து போனது. பசியில் முதலில் கத்த தொடங்கினான். பின் நேரம் ஆக ஆக தன் கைசதைகளை கடித்து சாப்பிடத் தொடங்கினான். இப்படியாக அவன் இரண்டு நாளில் தன் உடல் பகுதிகளை சாப்பிட்டு இறந்தான்.
அவனின் மரணம் மிகக்கோரமாய் நிகழ்ந்ததை எண்ணி டி.ஐ.ஜியும் நரேனும் வருந்தினர். பரிதி அவர்களின் கூற்றுகளை காதில் வாங்காமல் நினைத்ததை முடித்தாள்.
அதன் பிறகு வந்த விசாரணை கமிஷனில் அனைத்து ஆதாரங்களையும் காட்டி ஜெயிலில் யோகி உடல்நிலை சரியில்லாத சமயம் செய்த வைத்தியத்தால் நோய் வந்து இறந்ததாக கேஸை முடித்தனர். ஆனால் அதிகாரிகளில் இருந்து கிரிமினல்கள் வரை யோகியின் முடிவு எவ்வளவு கோரமாக நிகழ்ந்தது என்பதை பரிதியின் குழு மிரட்டலாக வைத்ததை உணர்ந்தனர்.
சந்திரகேசவன் நடத்திய நகைகடை சீல் வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவிப்பதாக ஒத்துக் கொண்டார்.
சந்தனபாண்டியனை முன் விரோதம் காரணமாக சக கைதி அவனை கொன்றதாக கூறி அதையும் மற்றவர் கேள்வி எழுப்பாதவாறு செய்தனர்.
சேரலாதனும் உணவு சேராமல் இரத்த வாந்தி எடுத்து இறந்ததாக முடித்தனர்.
நரேன் இஷான் கூறியதை வைத்து அவர்கள் சொத்துக்களை முடக்கி சட்டத்தின் முன் ஆதாரங்களோடு அவர்களை ஒப்படைத்தான். ஹோம் மினிஷ்டரின் மேலும் புகார் கொடுத்து விசாரணை கமிஷன் நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதெல்லாம் முடிந்து ஒரு மாதத்தில் அனைவரும் அவரவர் இருப்பிடம் திரும்பி இருந்தனர்.
பரிதிக்கு கொடுக்கப்பட்ட வேலை கச்சிதமாக முடித்ததால் அவள் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த இன்டெலிஜென்ஸ் டிபார்மெண்ட்யில் அடுத்த அதிகார பதவியில் சேரலாம் எனக் கூறி இருந்தனர். பரிதி பின்னர் அதைப்பற்றி முடிவெடுப்பதாக கூறி கலெக்டராக பணியை தொடர்ந்தாள்.
செந்திலுக்கும் , யாத்ராவிற்கும் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.
ஆர்யன் இந்தியாவை விட்டு பறந்து எங்கு தங்கலாம் என ஒவ்வொரு நாட்டிற்காய் பறந்தபடி இருந்தான். ஆனாலும் யாத்ராவின் நட்பை விடாது தொடர்ந்தான்.
நெடுமாறனும், சிவியும், வெண்பாவுடன் அந்த கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தினர். வெண்பா மூன்று சமபாகமாக அந்த கம்பெனியை பிரித்து முறையே நெடுமாறன் சகோதரர்களுக்கும் எழுதி கொடுத்தாள். சேரலாதனிடம் இருந்த சொத்தை யாத்ராவிடம் குப்பத்தில் இருந்த மக்களுக்கு உதவ பயன்படும் என கொடுத்து விட்டனர். நெடுமாறனின் தங்கை வடநாட்டில் ஒருவரை விரும்பி சகோதரர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
தேனிக்கு சென்ற தாஸ் குப்பத்து மக்களுக்கு அர்ஜூனின் அண்ணன் நண்பன் மூலமாக தற்காலிக இடமும் வேலையும் ஏற்படுத்தி இருந்தவற்றை பார்த்த பின், அப்பகுதியில் ஒரு இடத்தை அந்த மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்து வீட்டையும் சிறுதொழில் வங்கி ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஆதித்யனின் பரிந்துரை மூலமாக அங்கிருந்தவர்கள் அந்த பகுதியில் பல இடங்களில் வேலையில் சேர்ந்து நேர்மையாக உழைத்து வாழத் தொடங்கினர். குழந்தைகளை அரசாங்க பள்ளிகளில் சேர்க்கவும் அர்ஜுன் வழி செய்தான்.
இதழி அவளின் காதலை வெளிபடுத்திய பின் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தாள். தன் மூத்த அண்ணனிடம் அனைத்தையும் கூறிவிட்டு எப்பொழுதும் போல தன் வேலையை கவனித்தாள்.
அர்ஜூனிடம் சிவியை பற்றி விசாரித்த ஆதித்யன் தஞ்சையில் அவர்களது ஜாகத்தையே எடுத்து அலசிவிட்டு தங்கையிடம் தன் சம்மதத்தை வெளிபடுத்தினான்.
மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் சிவி கம்பெனிக்கு தயாராகிச் சென்றுக் கொண்டு இருந்தான். திடீரென மயக்கமருந்து அவன் சுவாசத்தில் கலந்தது, ஓட்டுனர் அவனை நேராக மேகமலை கொண்டு சேர்த்தான்.
கண்விழித்த சிவி சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அர்ஜுன், யாத்ரா, நெடுமாறன், வெண்பா, பரத், நந்து அனைவரும் அவன் முன்னால் அமர்ந்திருந்தனர்.
“ஏன்டா என்ன கடத்தினீங்க? வான்னு கூப்டா வரப்போறேன்”, சிவி.
“வான்னு கூப்டா வருவ, ஆனா கல்யணம் பண்ணிக்க கூப்டா வரமாட்ட”, எனக் கூறியபடி இதழி அவ்விடம் தன் மூத்த தமையனுடன் வந்தாள்.
“ஏய் நீயா என்ன கடத்தின?”, சிவி.
“நான் தான் மச்சான் கடத்திட்டு வர சொன்னேன்”, என ஆதித்யன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கைகுழுக்கினான்.
“ஏன்?”, சிவி.
“என் தங்கச்சிக்கு உங்கள கட்டி வைக்க தான். இதுக்கு மேல அவள நாங்க சமாளிக்க முடியாது. கல்யாணம் பண்ணி உங்ககூட அனுப்பிவிட்டுடறோம் நீங்க பாத்துகோங்க. ஆனா அவ கண்ல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும்”, ஆதித்யன் முழுதாக முடிக்காமல் ஒரு மிரட்டலை புன்னகையுடன் விடுத்தான்.
“செழியன் நான் உன் அண்ணன கல்யாணம் பண்ணிக்க போறேன் . ஆளு செம்மையா இருக்காரு. என்னா கம்பீரம்? என்னா சிரிப்பு? சான்சே இல்ல. பாக்கவும் நல்ல டைப்பா இருக்காரு. உன்ன கலட்டி விட போறேன்”, யாத்ரா.
“யாரு அவன் நல்லவனா? எனக்கு அண்ணன் அவன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் இந்த மூளைய யூஸ் பண்ணி யோசி. நேத்து நைட் கால் பண்ணி நம்மல இப்ப இங்க நிக்க வச்சிட்டான். எமகாதகன். சிவி மட்டும் இல்ல நம்ம எல்லாருமே இப்ப அவன் கண் காட்டினா தான் வெளியே போகவே முடியும்”, அர்ஜுன் தன் அண்ணனை பார்த்துக் கொண்டே புன்னகையுடன் கூறினான்.
நெடுமாறன் அர்ஜுன் கூறியதைக் கேட்டுக் கொண்டே ஆதித்யனை பார்த்தான் ஆறடிக்கும் அதிகமான உயரம், அதற்கு தகுந்த தேக்குமர உடல்,விடாத உடற்பயிற்சி அவனுடலை வைரம் பாய்ந்ததாக மாற்றி இருந்தது. கண்களின் கூர்மையும் ஆளுமையும் யாரையும் அடிபணிய வைக்கும். அவன் நிற்கும் தோரணை அரசவையில் நவீனகால பேரரசன் நிற்பதைப் போல் இருந்தது.
“இவனுங்க ரெண்டு பேருமே எமகாதகனுங்க. யாத்ராக்கும் சிவிக்கும் ஏத்த இடம் தான்”, என மனதில் நினைத்து கொண்டான்.
ஆதித்யன் கூறியபின் யாராலும் மறுக்கமுடியவில்லை. சிவியின் உள்ள கலக்கத்தை ஆதியே தீர்த்து பெற்றோரின் சம்மதத்தையும் கூறினான்.
ஓர் சுபயோக சுபதினத்தில் சிரஞ்சீவ் நெடுமாறன் நன்முகை இதழியின் திருமணம் இனிதே உற்றார் உறவினர் நண்பர்கள் ஆன்றோர் மற்றும் சான்றோர் ஆசியுடன் நடந்தது.
சுபம்..
இது எனது முதல் நாவல் முயற்சி. நான் செய்யும் பிழைகளை சுட்டிக்காட்டி எனக்கு மேலும் உற்சாகமும் ஊக்கமும் அளித்த என் நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவாண வணக்கங்கள். மீண்டும் ஓர் கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
ஆலோன் மகரி.