42 – ருத்ராதித்யன்
மேகமலை வந்து இரண்டு நாட்கள் கழித்து அர்ஜுன் கண் விழித்தான். அருகில் கண்மயா அமர்ந்து அவர்கள் உடலில் இணைத்து இருந்த கருவிகளின் திரையில் இருந்த விவரங்களை சேகரித்து கொண்டிருந்தாள்.
யாழன் யாத்ராவிற்கு ஆச்சி கொடுத்த மூலிகை சாரினை மெல்ல மெல்லத் தொண்டையில் இறக்கி கொண்டிருந்தான்.
“மிஸ்டர்… அவ தலைய பிடிச்சு வாயில் ஊத்து …. பாதி கீழ போகுது”, என அர்ஜுன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு இருவரும் திரும்பினர்.
“சார்…. நல்ல இருக்கீங்களா? உங்களுக்கு எதாவது மாறுதல் தெரியுதா? வலி இருக்கா?”, என கண்மயா படபடவென கேட்டாள்.
“ரிலாக்ஸ் கண்மயா …. ஐ ஃபீல் குட்…”, என கூறிவிட்டு அமர முயன்றான்.
அவனுக்கு சாய ஏதுவாக தலையணை வைத்துவிட்டு அவனது இரத்த அழுத்தத்தை சோதித்தாள்.
வழக்கமாக மனிதர்களுக்கு இருப்பதை விட சற்று அதிகமாக இருந்தது. இதய துடிப்பும் அதிகமாகவே இருந்தது.
“என்ன ராசா…. கண்ணு முழிச்சிட்டியா? உடம்பு என்ன சொல்லுது?”, என கேட்டபடி ஆச்சி உள்ளே வந்தார்.
அவரின் பின் ஆருத்ரா உள்ளே வந்து அர்ஜுனை கண்களால் ஆராயி ந்துவிட்டு யாத்ரா அருகில் சென்று நின்றாள் அவளை பார்த்தபடி…
“நல்லா இருக்கேன் பாட்டி…. நீங்க வனயட்சி பாட்டி தானே?”, எப்போதோ அவரை பார்த்த ஞாபகம் அவனுக்கு வந்தது.
“பரவாலயே … இந்த அளவுக்கு ஞாபகம் இருக்கு…. உன் உடம்பு எப்படி இருக்கு? உன் மனசு எப்படி இருக்கு? என்ன என்ன உணர முடியுது?”, என கேட்டார் அவன் நாடியை பிடித்தபடி.
“வழகத்த விட பலமா உணர்றேன் பாட்டி…. மூச்சு தான் அதிகமா விட்ர மாதிரி இருக்கு….. ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கு.. சரியா தெரியல….”, தனக்குள் உணர்வதை ஒவ்வொன்றாக கூறினான்.
“நல்லது….. எந்திரிச்சி நில்லு..”, என நிற்க கூறினார்.
முதலில் காலை கீழே ஊன்ற சற்று வலித்தது. பாதங்களை முழுதாக மண்ணில் வைக்க முடியாமல் சற்றே எக்கி நிற்பது போல இருந்தது….
“கால நல்லா ஊனு ராசா….. “, ஆச்சி அவன் பாதத்தை பிடித்து ஊன வைத்தார்.
“ஊன முடியல பாட்டி….. “, முகத்தை சுறுக்கியபடி கூறினான்.
“சரி.. நட..”, என அவனை எதையும் பிடிக்காமல் நடக்க கூறினார்.
இரண்டு எட்டு எடுத்து வைத்தது கூட முன்னங்காலில் நடப்பதை போல இருந்தது. அவனால் முழுதாக காலை நிலத்தில் ஊன முடியவில்லை.
அடுத்த எட்டில் அவன் சரியும் போது ஆதி உள்ளே வந்தவன் அவனை தாங்கினான்.
அர்ஜுன் அவனை ஆரத்தழுவி கொண்டான். ஆதி அவனை தூக்கி கொண்டு வந்து அவன் இடத்தில் அமரவைத்தான்.
ஆருத்ரா ஆதியை விழி விரித்து பார்த்தாள். அப்போது தான் யாத்ரா கண் விழித்தாள்.
“என்ன அத்தான்… உங்க தம்பிய நடக்ககூட விடாம கண்ல வச்சி பாத்துக்கறீங்க போல…?”, என கேட்டாள்.
அனைவரும் அவள் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு நொடியில் அவளை அணைத்து கொண்டனர் ஆருத்ராவும், ஆதியும்…
“ஹாஹாஹா… கண்ணு முழிச்சதும் வம்பிலுக்க ஆரம்பிச்சாச்சு… இனிமே யாத்ரா 2.0 ராக்ஸ்….”, என கூறியபடி சிரஞ்சிவ் நெடுமாறன் உள்ளே வந்தான். அவன் பின்னால் கஜேந்திர நெடுமாறன், இதழி, தமிழன்பன், அங்கயற்கண்ணி, ரணதேவ் என அனைவரும் உள்ளே வந்தனர்.
இவர்களை எல்லாம் முந்திக் கொண்டு பைரவ் உள்ளே சென்று தாவி யாத்ரவின் மேல் ஏறினான். அதன்பின் தீரன் வந்து வாசலில் நின்று அழைத்தான்.
“ஹேய்…. யார் இது?”, என பைரவை தூக்கி கொஞ்சினாள்.
இங்கு வந்த இரண்டு தினத்தில், தேனுவின் பால் குடித்து அசுர வளர்ச்சி கொண்டு நின்றது பைரவ். ஓராண்டு குட்டி போல உயரமும், உடலும் வலு பெற்று இருந்தது. தீரன் முழுதாக வளர்ந்த காளையாக திமில் உயர்ந்து நின்றான்.
அனைவரும் வந்து இருவரையும் பார்த்து உச்சி முகர்ந்து, அவர்கள் உடல்நிலை விசாரித்து விட்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
“சரி எல்லோரும் கொஞ்சம் வெளிய இருங்க .. புள்ளைங்கள சோதிச்சி பாத்துட்டு வெளிய கூட்டி வரேன்….”, என ஆச்சி கூறியதும் அனைவரும் வெளியே சென்றனர் கண்மயா, யாழன் தவிர்த்து….
“கண்ணுங்களா….. உங்க உடம்புல என்னனென்ன மாறுதல் வந்திருக்குன்னு மறைவுக்கு போய் பாத்துட்டு வாங்க….”, என கூறிவிட்டு யாழனிடம் ஏதோ கூறி எடுத்து வர தன் குடிசைக்கு அனுப்பினார்.
அர்ஜுனும், யாத்ராவும் தங்கள் உடலில் இருக்கும் மாறுதல்கள் கண்டு இருவரும் ஒருவருக்கொருவர் காண்பித்து மனதில் சஞ்சலத்துடன் வெளியே வந்தனர்.
“பாட்டி…”என முதல் அர்ஜுன் பேச ஆரம்பிக்கும் முன் பாட்டி கண்மயாவிடம் இரண்டு கச்சை துணிகளை கொடுத்து இருவருக்கும் அணிவித்து வரும்படி கூறினார். அவளும் அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கண்டு வரச்சொல்லி அனுப்பினார்.
“இந்தாங்க அர்ஜுன்….”, என அவனிடம் துணியை கொடுத்து விட்டு யாத்ரா உடன் மறுபக்கம் தடுப்புக்கு சென்றாள்.
யாத்ரா உடல் முன்பை விட சற்றே பூசினார் போல இருந்தது. சட்டென கண்ணுக்கு தெரியாத புலியுடலில் இருக்கும் கோடுகள் போல உடல் எங்கும் இருந்தன. மயில் கழுத்தில் இருக்கும் இரத்தத்துடன் மஞ்சள் கலந்து உடல் முழுக்க இருந்தது. மார்பக பகுதியில் மட்டும் பச்சை குத்தியதை போல வண்ணம் மிகுந்த பூக்கள் போல மிக மிக லேசாக கண்களுக்கு தெரிந்தன….
நாபியில் புதிதாக ஒரு நரம்பு வெளியே இருந்து உள்ளே சென்றது. அதுவும் மயில் கழுத்தின் பச்சை வண்ணத்தில்… பிற உறுப்புகளும் சற்றே பெரிதாக, பலம் கூடி காணப்பட்டன. யாத்ராவினால் காலினை நன்றாக ஊன முடிந்தது. அதே சமயம் கால் பெருவிரலில் அவளின் மொத்த எடையும் தாங்கி நிற்க முடிந்தது.
யாத்ராவை முழுதாக பரிசோதித்து விட்டு, அர்ஜுன் இருக்கும் பக்கம் சென்ற கண்மயா, அவன் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்தாள்.
அவன் உடலிலும் புலியின் கோடுகளை போல யாத்ரவிற்கு இருந்தே அதே நிறத்தில் கோடுகள் இருந்தன. அவன் மார்பும் தோளும் முன்பு இருந்ததை விட நன்றாக விரிந்து இருந்தன, யாத்ரவின் மார்பில் இருந்ததை போன்ற வண்ணம் நிறைந்த இலைகள் படங்கள் போல மெல்லிசாக தெரிந்தன.
காலை அவன் ஊன முடியாமல் இருக்கும் காரணம் பாதத்தில் சிறிதாக ஏதோ
புடைத்து கொண்டு இருந்தது. அதை கண்மயா தொட்டு பார்க்க, மிகவும் கெட்டியாக இருந்தது.
இருவரின் உடலையும் நன்றாக சோதித்துவிட்டு, முதலில் வெளியே வந்தாள் கண்மயா.
“என்ன கண்ணு நான் சொன்னபடி இருக்கா?”, என ஆச்சி கேட்டார்.
“ஆமாங்க பாட்டி…. இனி இவங்க எப்படி சாதாரண வாழ்க்கை வாழுவாங்க?”, கண்மயா கலக்கத்துடன் கேட்டாள்.
“அதுக்கான பிராப்தம் இருந்தா சாதாரண வாழ்க்கை கிடைக்கும்… இல்லைன்னா இவங்க இப்படியே தான் வாழ்ந்து ஆகனும்….”
“இப்படி சொன்னா எப்படி பாட்டி? இதுக்கு மேல தான் அவகளுக்கு வாழ்கையே இருக்கு….”
“இந்த பூமல பிறப்பு எடுக்கற எல்லாருக்கும் ஒரு கடமை இருக்கு….இந்த பிரபஞ்சத்துக்கு சேவை செய்யறது….. அந்த சேவைல ஒரு பெரிய பங்கு உங்க எல்லாருக்கும் இருக்கு… நீங்க எந்த தடையும் இல்லாம செய்ய இவங்க தான் பாதுகாப்பு…. இது அவங்க கடமை…. நீங்க போக வேண்டிய இடத்துல ஆபத்து அதிகம் கண்ணு …. இவங்க ரெண்டு பேரும் இல்லாம யாரும் அந்த இடத்துக்கு போகமுடியாது….”
“அதுக்காக இவங்க வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கணுமா?”, மனம் வலிக்க கேட்டாள்.
“இல்ல கண்ணு…. மொத உங்க கடமைய சரியா செஞ்சிட்டு வாங்க.. இவங்களுக்கு ஒரு நல்லது நடக்க முயற்சி செஞ்சி வைக்கறேன்….”, என ஆச்சி கண்களை மூடி வனதேவியை நினைத்தபடி கூறினார்.
“பாட்டி….”, என அழைத்தபடி அர்ஜுன் யாத்ரா அங்கே வந்தனர்.
“வாங்க கண்ணுங்களா….. உங்களோட இந்த மனசும் உடம்பும் எவ்ளோ சுதம்ன்னு நான் புரிஞ்சிகிட்டேன் யா…. உங்களால என் ஜென்மம் முக்தி அடைய போகுது….. “, என இருவரின் கை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“பாட்டி… எங்க உடம்புல…”, என அர்ஜுன் ஆரம்பித்தான்.
“எல்லாம் தெரியும் கண்ணுங்களா…. ஒரு முக்கியமான கடமை ஒன்னு இருக்கு.. இயற்கை அதுக்காகவே உங்களை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு சில பலத்தை குடுத்திருக்கு… மனசையும், உடம்பையும் திடம் பண்ணுங்க…. ஒரு வாரத்துல அமாவாசை வருது… நீங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போகனும்…. அதுவரை உங்களை பலப்படுத்தறதுல மட்டும் கவனத்தை வைங்க…. இந்தா இத குடிங்க…. உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்லிட்டு வரேன்.. நாம இப்ப ஒருத்தன பாக்க போகலாம்…”, என சிரித்தபடி வெளியே சென்றார்.
அர்ஜுனும் யாத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, கண்மயாவை பார்த்தனர்.
அப்போது ஆருதராவும் ஆதியும் உள்ளே வந்தனர்.
யாத்ரா அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவர்கள் இடையில் இருக்கும் நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள்.
“வாழ்த்துக்கள் கோ – சிஸ்டர்….”, என கைப்பிடித்து குலுக்கி விட்டு, கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன? இது எப்போ ஆதி?”, என அர்ஜுனும் ஆதியை கட்டிப்பிடித்து தூக்கி சுற்றினான்.
” டேய்.. டேய்…. போதும்… இறக்கி விட்றா “, ஆதி கத்தினான்.
“என்னடா ரெண்டு சுத்துக்கு இப்படி கத்துற?”, அர்ஜுன் அவனை அடித்துக் கேட்டான்.
“ரெண்டா…. பத்து சுத்து சுத்திட்டு ,…. தல சுத்துது டா….”, என ஆதி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
மறுபக்கம் ஆருத்ரா கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் . யத்ராவும் சற்று ஆர்வ மிகுதியில் அவளை நசுக்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும்.
“எப்போ டா கரெக்ட் பண்ண? உன் லவ் புரோபோஸ் பண்ணியா ? அவங்க ஓக்கே சொல்லிட்டாங்களா?”, ஆர்வமாக கேட்டான்.
“டேய்…”, என ஆதி அவசரமாக ஆருத்ராவை பார்த்தான்.
“அண்ணி .. நீங்க சொல்லுங்க…. எங்கண்ணன் எப்படி புரோபோஸ் பண்ணாரு? உங்களுக்கு ஆதிய பிடிச்சி உடனே ஓக்கே சொன்னீங்களா ?”, என ஆருத்ரா அருகில் சென்று யாத்ராவை எழுப்பிவிட்டு விட்டு அவள் அருகில் அமர்ந்து கேட்டான்.
“லவ் அஹ்? அது எப்போ ?”, என கேட்டபடி இதழியும் சிரஞ்ஜீவ் நெடுமாறனும் உள்ளே வந்தனர்.
“இதுக்கு இவங்க ரெண்டு பேரும் மயக்கத்துளையே இருந்து இருக்கலாம்.. “, என தனக்குள் முணுமுணுத்து கொண்டான் ஆதி.