48 – ருத்ராதித்யன்
“அது என்ன முந்தீர்வு ஆத்ம காலம்?”, சந்தேகமாக கேட்டான்.
“நீ இவ்வுடலில் வாழும் காலம் முடிந்து, உன் ஆத்மாவிற்கு தீர்ப்பு வழங்கும் காலத்திற்கு இடையில் இருக்கும் காலம்…. அது உனக்கு புரியாது….. உன் கடந்த காலத்தை அறிய முற்படு, உனக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கிறது….. “, எனக் கூறிவிட்டு அந்த வாகனத்திலேயே கால் நீட்டி படுத்துக் கொண்டார்.
அவன் அவரை ஒருமாதிரி பார்த்துவிட்டு அந்த சுவடிகளை படிக்க, ஆட்களை வரச்சொல்லி கட்டளையிட்டான். அவன் அவனது ஆராய்ச்சி நிலையம் சென்று வேலையை முடித்துக் கொண்டு திரும்புகையில் பழந்தமிழ் கற்ற இருவர் அவனுக்காக காத்திருந்தனர்.
அதனிடையில் அந்த சுவடியின் காலத்தை அறியவும் கூறி சிலதை சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தான்.
அர்ஜுன் கேட்டபடி நரேன் யோகேஷிடம் பேசி சுடரெழில் நாச்சியாரை இந்தியா வரவழைக்க முயன்று கொண்டிருந்தார்.
“சார்…. இப்போதான் எனக்கு சிக்னல் வந்திருக்கு … நான் அங்க போய் நிலவரம் பாத்துட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்….”, என ஏஞ்சலிடம் இருந்து சிக்னல் வந்ததும் நரேனிற்கு அழைத்து கூறினான்.
“சரி யோகேஷ்…. எனக்கு இப்போ நாச்சியார் ரொம்ப முக்கியம்…. வல்லகியும் தான்…. நாளைக்கு அவங்க இந்தியால இருக்கணும்….”, என நரேன் அழுத்தம் நிறைந்த அதிகார குரலில் கூறினான்.
“ஏன் அவங்களையே எல்லாம் கேக்கறீங்க? அந்த நாச்சியார் சரியான திமிர் பிடிச்ச ஆளு…. அந்த வல்லகி என்ன ரகம்ன்னு புரியல…. “, ஏற்கனவே ம்ரிதுள் மற்றும் அதித் ஒவிஷ்கர் செய்து கொண்டிருக்கும் வேலைகளை பார்த்து வெறுத்து கூறினான்.
“உனக்கு அது தேவை இல்ல யோகேஷ்…. உன்னோட பெரிய லாட் இப்போ என் கைல… எனக்கு நீ இத செய்…உன் லாட் அதிக சேதாரம் இல்லாம உனக்கு கெடைக்கும்….”, நரேன் குரலில் இதற்குள் நுழையாதே என்னும் கட்டளை இருந்தது.
“ஓகே சார்….. நான் அங்க போனதும் ஃபோன் பண்றேன்…”, எனக் கூறிவிட்டு கினியா வளைகுடா நோக்கி தன் பயணத்தை துவங்கினான்.
அக்ரா பாயிண்ட்…….
கடல் ஓரம் கரை ஒதுங்கியவர்களை எழுப்பி ரிசார்ட்டில் தங்க வைத்துவிட்டு, யோகேஷ் ம்ரிதுள்ளை காண சென்றான்.
அங்கே ஏற்கனவே தர்மதீரணும், யாழினியனும் அவனுடன் அமர்ந்து இருந்தனர்.
“என்ன யோகேஷ்?”, அவனை பார்த்ததும் தாங்கள் பேசிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு கேட்டான் ம்ரிதுள்.
“நரேன் சார் ஃபோன் பண்ணாரு …. “
“யாரு?”, கண்கள் சுருக்கி யோசனையுடன் கேட்டான்.
“இந்தியன் சிபிஐ ஸ்பெஷல் விங் ஹெட் ….. “
“என்ன விசயம் முழுசா சொல்லு…”
யோகேஷ் மற்ற இருவரையும் பார்த்துவிட்டு ம்ரிதுள் முகத்தை பார்த்தான்.
“ஒரு நிமிஷம்…”, என அவர்களிடம் கூறிக் கொண்டு, அவனுடன் வெளியே வந்தான்.
“என்னனு சொல்லு…..”
யோகேஷ் தனக்கு அழைப்பு வந்ததில் இருந்து அனைத்தும் கூறினான்.
“எதுக்கு அவங்களுக்கு அவங்க ரெண்டு பேரும் வேணும்?”, என ம்ரிதுள் கேட்டான்.
“தெரியல… கேட்டாலும் அந்த மனுஷன் சொல்ல மாட்டான்… சரியான இம்சை பிடிச்ச டிபார்ட்மெண்ட் அவனோடது…. அதுல இருக்க ஒவ்வொருத்தனும் வில்லனுங்க….. நம்ம சித்தேஷ் யோகி இவனுங்க கைல தான் மாட்டினான்… அவன் சாவ மிரட்டலா செஞ்ச ஆளுங்க அவன் டீம்….”, நரேனை பற்றி மேலோட்டமாக கூறினான்.
“ஹோ….. சரி நான் அவன்கிட்ட பேசணும்…. அதுக்கு முன்ன நாச்சியார்கிட்ட பேசணும்….”, எனக்கூறி நாச்சியார் இருக்கும் அறை நோக்கி நடந்தான்.
“ நாச்சியா ….. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்….”
“ம்ம்…”, என கூறிவிட்டு வெளியே அவனுடன் நடந்தாள்.
“சிபிஐ ஆபீசர் நரேன் உன்கிட்ட பேசனுமாம்… அவருக்கு உன் ஹெல்ப் வேணும்ன்னு சொல்றாங்க….”, அவளுக்கு தெரிய வேண்டிய விசயத்தை மட்டும் கூறினான்.
“நிஜமா சிபிஐ ஆபீசர் அஹ் இல்ல வேற எதாவது பிளான் பண்றியா ?”, சந்தேக கண்களுடன் கேட்டாள்.
“உன்கிட்ட நான் ஏன் பொய் சொல்ல போறேன்? நிஜமா தான்…. இப்போ அவரே கால் பண்ணுவாரு நீயே பேசு….”, என கூறிவிட்டு யோகேஷிடம் வீடியோ கால் செய்ய சொன்னான்.
நரேனும் பரிதியும் உறங்காமல் யோகேஷ் போனுக்காக காத்திருந்தனர்.
“சொல்லு யோகேஷ்… அவங்கள பாத்துட்டியா?”, என நரேன் மிடுக்குடன் கேட்டான்.
“இதோ சார்… ம்ரிதுள் அதுக்கு முன்ன உங்ககிட்ட பேசணும் ன்னு சொன்னான்….”, என ம்ரிதுளிடம் கொடுத்தான்.
“யாழினியன வர சொல்லு ம்ரிதுள்…. எல்லார்கிட்டயும் ஒரே முறையா பேசிடலாம்… “, நரேன் கூறியதும் யோகேஷிடம் அவனை அழைத்து வர கூறினான்.
“நரேன் சார்….. எனக்கு உங்க உதவி இப்போ தேவை…. இவங்கள எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்தியா கொண்டு போகணும் …. நீங்க வல்லகி அண்ட் நாச்சியார் மட்டும் கேக்கறீங்க…. அவங்கள தவிர இன்னும் சிலர் இங்க இருக்காங்க….. அவங்களுக்கும் பிரச்சினை இல்லாம அங்க வர ஏற்பாடு செய்யணும் ….”
“நீங்க மடகாஸ்கர் தானே போனீங்க…. இப்போ எப்படி அக்ரா பாயிண்ட் ல இருக்கீங்க?”, நரேன் கேட்டான்.
“சார்…. அது பெரிய கதை… எங்களுக்கும் நிறைய குழப்பம் இருக்கு அதுல…. இந்தியால என்னோட இல்லீகள் பிசினஸ் எல்லாமே நிறுத்திடறேன்….. எனக்கு இது மட்டும் இப்போ செஞ்சி குடுங்க….”
“உன்னால முடியாத விஷயம் இருக்கா ம்ரிதுள் … நீ இப்படி பேசறது ஆச்சரியமா இருக்கு…. “
“இல்லீகள் பிசினஸ் நிறுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் சார்…. அதனால் தான் இவங்கள அங்க அனுப்ப அந்த வழிய நான் இப்போ தேடல…. நானும் வேணும்னா சரண்டர் ஆகறேன் ….. “
“இது நல்ல ஐடியா… இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்ன என் வேலை எனக்கு கன்பார்ம் ஆகனும்…..”
“இதோ ஒரு நிமிஷம் யாழினியன் வந்துட்டான்….”
“வந்துட்டான்னு சொல்ற அளவுக்கு அவனோட பழக்கம்மா ம்ரிதுள்?”, என பரிதி கேட்டாள்.
“மேடம்…. நீங்களா….? “, ம்ரிதுள் அதிர்ந்து கேட்டான்.
“நான் தான்…. வல்லகி எங்க? அவங்கள வரசொல்லு…. பிறைசூடன், தசாதிபன் எல்லாரும் எனக்கு இப்போ வேணும் ம்ரிதுள்….”, பரிதி கூறிய பாவனையில் நாச்சியார் அவளை கூர்ந்து பார்த்தாள்.
“மேடம்…. நான் சுடரெழில் நாச்சியார்….. உங்களுக்கு என் உதவி வேணும்ன்னு சொண்ணீங்களாம்…என்ன விசயம் ன்னு தெரிஞ்சுக்கலாமா?”, நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.
“உங்க கண்ல இன்னும் சந்தேகம் இருக்கு நாச்சியார்…. யாழினியன் வந்துடட்டும்….”எனக் கூறி விட்டு பரிதி அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
யாழினியன் வந்து வீடியோ காலில் இருப்பவர்களை பார்த்துவிட்டு சல்யூட் வைத்தான்.
“சார்… மேடம்….. நீங்க…?”, என இழுத்தான்.
“இன்னொரு ஹெக்டிக் கேஸ் இனியன்….. சுடரெழில் நாச்சியார் அண்ட் வல்லகி நமக்கு இப்போ அவசியம்…. அவங்கள இந்தியா கூட்டிட்டு வர பொறுப்பு உங்களுக்கு தரோம்…. நாளைக்கு இங்க இருக்கணும்….”, என பரிதி கூறினாள்.
“மேடம்… இன்னும் சிலரும் இங்க இருக்காங்க… எல்லாரையும் இந்தியா கூட்டிட்டு வந்துடவா?”, என கேட்டான்.
“யார் யார் இருக்காங்கன்னு எனக்கு ஃபோட்டோ லிஸ்ட் அனுப்புங்க… நீங்க இந்தியா வரதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்…. ம்ரிதுள் அடையாளம் மாத்திட்டு வரட்டும்… நாளைக்கு இங்க நீங்க எல்லாரும் இருக்கணும்….. சென்னைல மீட் பண்ணலாம்…. “, என அவனுக்கு வேண்டிய கட்டளைகளை கூறிவிட்டு நாச்சியாரை அழைத்தாள்.
“உங்க சந்தேகம் இப்போ தீர்ந்து இருக்கும்…. உங்க உதவி தேவை. உங்க துறை சம்பந்தப்பட்டது தான்.. உங்க தங்கச்சி எதுக்குன்னு நாளைக்கு சொல்றேன்.. இதுக்கு மேல அதப்பத்தி பேசமுடியாது நாச்சியார்…. “, பரிதி கூறியவிதம் நாச்சியாரை நம்ப வைத்தது.
“கண்டிப்பா பண்றேன் மேடம்…. “, என கூறிவிட்டு எழுந்து விட்டாள்.
யாழினியன் அனைவரையும் ப்போட்டோ எடுத்து பெயர், வயது போன்ற விவரங்களுடன் நரேன் எண்ணிற்கு அனுப்பி வைத்தான்.
ஆருத்ரா அவர்கள் இந்தியா வர தனது தனிப்பட்ட செல்வாக்கைக் பயன்படுத்தி அவர்களுக்கு தனி விமானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தாள்.
சக்தி அந்த ஏற்பாடுகளை கனகச்சிதமாக முடித்துவிட்டு பரிதிக்கு அழைத்தான்.
“மேடம்… பிளைட் விவரம், யார் அங்க அவங்கள கைடு பண்ணுவாங்க, எல்லாமே இந்த ஃபைல்ல இருக்கு…. அவங்க டைம்க்கு மிட்நைட் கிளம்புற மாதிரி வரும்…. நம்ம ஆளு ரிசார்ட் போயே எல்லாரையும் பிக்கப் பண்ணிப்பான்….. வேற ஏதாவது விட்டு போய் இருந்தா சொல்லுங்க….”
“பெர்பெக்ட் சக்தி….. சென்னைல இருந்து யாரு அவங்கள அங்க கூட்டிட்டு போறது?”, பரிதி.
“ஜான் அங்க அனுப்பிட்டோம் மேடம்… யாத்ரா மேடம் அத பிளான் போட்டு அனுப்பிட்டாங்க…. அருணாச்சல் ல தான் நமக்கு இன்னும் யாரும் உதவிக்கு கிடைக்கல…..”
“வரும் சக்தி…. ஓகே பை…”
“ம்ம்….. “, சக்தியும் பெருமூச்சை இழுத்துவிட்டு விட்டு, தான் செய்திருக்கும் ஏற்பாடுகள் பற்றி ஆருத்ராவிடம் கூற சென்றான்.
“சரி சக்தி…. நானிலன் விசயம் வெளிய தெரியாம இங்க கொண்டு வர பாரு…..”
“மேடம்…. எனக்கு ஒரு சந்தேகம்….”
“என்ன?”
“அந்த பாட்டி சொல்றது எல்லாம் நிஜமா? இவளோ ரிஸ் எடுக்கணுமா?”, என தயங்கியபடி கேட்டான்.
“இங்க நடக்கற எல்லாமே நம்பறமாதிரி தானே இருக்கு…. இந்த பைரவ், அந்த புலி, இந்த தீரன் எல்லாமே …… அது தவிர அர்ஜுன் யாத்ரா…. அவங்களுக்காகவாது நாம செஞ்சி அவங்கள சந்தோசமா வாழவைக்க முயற்சி பண்ணலாம் சக்தி…. “
“மேடம்…. உங்களுக்கு ஆதி சார பிடிச்சி இருக்கு தானே?”, தயக்கத்துடன் கேட்டான்.
“பிடிச்சி இருக்குன்னு சொல்றத விட, எனக்கு நிம்மதி குடுக்கற ஒரு குடும்பம் எனக்கு கெடச்சி இருக்கு சக்தி… ஆதிய பிடிக்காம அவர் குடும்பத்துல வாழ முடியாது இல்லையா?”, சிரிப்புடன் கேட்டாள்.
ஆருத்ரா சிரிப்பது அபூர்வம், அவள் இப்போது அடிக்கடி சிரிப்பது கண்டு சக்திக்கு ஆச்சர்யம் தான்…
“ஓகே மேடம்… நான் நாளைக்கு நானிலன் கூட இங்க வந்துடறேன்…. “, என கூறிவிட்டு அவனை அழைத்து வர கிளம்பினான் திருச்சி நோக்கி……