49 – ருத்ராதித்யன்
சக்தி திருச்சி நோக்கி தனது பயணத்தை துவக்கியதும், அவனை தொடர்ந்து ஒரு கார் சென்றது.
நானிலன் பற்றிய குறிப்பு ரிஷித்திற்கும் அந்த சுவடிகள் மூலம் தெரிய வந்தது. அவனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொல்லி அதிபனிடம் கூறினான்.
“நான் எதுக்கு உங்களுக்காக வேலை செய்யணும் மிஸ்டர் ரிஷித்?”
“நீ உயிரோட இருக்கறதுக்கு அதிபன்… உன்னோட ஆதாயம் என்னனு கணக்கு போட்டு தானே ராஜ் கர்ணாகிட்ட ஆருத்ரா பத்தி சொல்ல வந்த…. இப்போ உன்னோட பெரிய லாபம் உன் உயிர் இந்த உடம்புல எந்த சேதாரமும் இல்லாம இருக்கறது தான்….”, என கூறிவிட்டு ருதஜித்தை அழைத்தான்.
“சார்….”, என பணிவாக அவன்முன் வந்து நின்றான்.
“அந்த சுவடியோட காலம் என்ன?”
“தோராயமா 800 வருஷம் சொல்றாங்க சார்…. ஒவ்வொரு சுவடி ஒவ்வொரு காலத்தை சேர்ந்ததுன்னு தெரிய வந்திருக்கு….. நீங்க குடுத்த 6 சுவடியும் 1000 இருந்து 400 வருசம் வரை பழமையானது….. “
“இன்டர்ஸ்டிங்….. அப்போ மீதி சுவடிகளும் டெஸ்ட் பண்ணிட்டு நாளைக்கு காலைல எனக்கு ரிசல்ட் சொல்லு…..”
“அந்த சுவடில 1000 வருஷம் பழமையான சுவடிய இங்க வந்தவங்களுக்கு படிக்க தெரியலன்னு சொல்றாங்க சார்…. 400-500 வருஷம் வரை இருக்க தமிழ் எழுத்து தான் அர்த்தம் கண்டுப்பிடிக்க முடியுதாம்…. மீதி எல்லாம் எழுத்து தெரிஞ்சாலும் அர்த்தம் தெரியலன்னு சொல்றாங்க…. “, தயங்கியபடி கூறினான்.
“தமிழ் படிக்க தெரியாம தமிழ்நாட்ல இருக்கறது அசிங்கம்ன்னு தெரியாதா?”
“சார்…… அங்க தமிழே இப்போ வளர்ற பசங்களுக்கு தெரியறது இல்ல… தமிழ மறக்கடிக்கற முயற்சியா எல்லா ஸ்கூலும் அந்த வேலைய தான் பாக்கறாங்க….. ஆர்க்கியாலஜி டீம் தான் இது போல சுவடிகளை படிக்க முடியும்னு சொல்றாங்க…. “
“எங்க அவங்க?”
அவர்கள் இருவரும் அவன் கண்களுக்கு தெரிந்ததும், கண்ணிமைக்கும் நொடியில் இரண்டு சிறிய ஊசிகள் அவர்கள் கழுத்தை தைத்தது .
அவர்கள் இருவரும் வேரற்ற மரம் போல தரையினி சாய்ந்தனர்.
“உங்களுக்கு படிக்க தெரியாதுன்னு நேத்தே சொல்லி இருக்கணும்… என் டைம் வேஸ்ட் பண்ணா இதான் தண்டனை… ருதஜித் …”, என அவன் கத்தியதும் நால்வர் அவர்களை தூக்கி கொண்டு உள்ளே சென்று மிருகங்கள் இருக்கும் கூண்டில் அடைத்தனர்.
“நாளைக்கு காலைல இங்க இருப்பாங்க சார்….”
“எனக்கு பெஸ்ட் டீம் வேணும்….. “, என கூறிவிட்டு அதிபனை பார்க்க அவன் நானிலனை கொண்டு வர கிளம்பினான்.
ரிஷித் கண்களில் சிறிதாக நகை பூத்து மறைந்தது.
ஆருத்ராவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவளது உதவியாளர்களை எப்போதும் பின்தொடரும் பழக்கத்தை அதிபன் இப்போதும் கையாண்டான்.
“அதி… எங்க டா இருக்க?”, விதுரன் அழைத்தான்.
“நான் ஒருத்தனை தூக்க போயிட்டு இருக்கேன் டா…. தெரியாம போய் அந்த ராஜ் கர்ணாகிட்ட சிக்கிட்டோம் டா…. அந்த ரிஷித் சரியான சைக்கோ வா இருக்கான்….. நீ என் வண்டிக்கு பின்னாடி ரெண்டு வண்டிய அனுப்பு… நாலு பேர் வேணும்… “, என கூறிவிட்டு திருச்சி செல்லும் சாலையில் சக்தியை தொடர்ந்து சென்றான்.
அக்ரா பாயிண்ட்…..
“நாச்சி… யாரு ஃபோன்ல?”, என கேட்டபடி வல்லகி வந்தாள்.
“இந்தியன் சிபிஐ…. நம்ம இந்தியா போக ஏற்பாடு பண்றாங்க…. நானும் நீயும் அவங்களுக்கு ஏதோ ஹெல்ப் பண்ணனும் ன்னு சொல்றாங்க….”
“மறுபடியுமா? ஏற்கனவே ஒரு அட்வெஞ்சர் முடிஞ்சி இன்னும் நம்ம வீட்டுக்கு கூட போகல க்கா…. உடனே இன்னொரு இடத்துக்கு கஷ்டம்..”, என கூறி பாலா நாச்சியார் தோள் சாயிந்து கொண்டாள்.
“உன்ன யாரு கூட்டிட்டு போறா? நீ வீட்டுக்கு போ.. நாங்க போயிட்டு வந்துடறோம்….”
“நோ நோ நோ…. நான் இல்லாம என் வகி டார்லிங் எங்கேயும் வரமாட்டா…. அவ எங்க போனாலும் நானும் போவேன் அவக்கூட…. “, என வல்லகி கையை பிடித்து தொங்கியபடி கூறினாள்.
“பாலா….”, என நாச்சியார் ஆரம்பிக்கும் முன், “விடு நாச்சி….. நம்ம இல்லாம அவ வீட்டுக்கு போகமாட்டா…. எப்போ கெளம்பனும்?”, வல்லகி கேட்டாள்.
“தெரியல… யாழினியன் நம்ம விவரம் எல்லாம் அனுப்பிட்டாரு…. இன்னிக்கு கிளம்பற மாதிரி தான் இருக்கும்… நான் கொஞ்சம் தூங்க போறேன்.. பாத்துக்கோ…”, என கண்காட்டிவிட்டு சென்றாள்.
“வகி பேபி… இங்க இன்னிக்கி சுனாமி வரப்போகுது….”, பாலா தீவிரமான குரலில் கூறினாள்.
“ஏன்?”
“நம்ம நாச்சி க்கா தூங்கறதா சொல்லிட்டு போறாங்க…. வாட் அ மிராக்கிள்?”
“அவ திரும்ப வந்தா நீ காலி… போ போயி ஏஞ்சல் கேட் என்ன பண்றாங்க பாரு…. நான் சீனியர பாத்துட்டு வரேன்…”, என தர்மதீரன் இருக்கும் அறைக்கு சென்றாள்.
“ஹலோ சீனியர்….. ரெஸ்ட் எடுத்து முடிச்சிட்டிங்களா?”, என குரல் கொடுத்தபடி உள்ளே சென்றாள்.
“வா வல்லகி….. ரெஸ்ட் வீட்டுக்கு போனா தானே எடுக்க முடியும்…. நீ என்ன இந்த பக்கம்? பொழுது போகலியா?”, என கேட்டான்.
“ஆமா சீனியர்.. அதான் உங்களை வம்பிழுத்து டைம் பாஸ் பண்ணலாம்ன்னு வந்தேன்…. சுதாகர் சார் எங்க காணோம்?”, அந்த அறையை நோட்டம் விட்டபடி கேட்டாள்.
“நீ இங்க எதுக்கு வந்த அத நேரடியா சொல்லு பாப்போம்…”
“நிஜமா சிபிஐ தான் பேசினாங்களா சீனியர் ?”
“ஆமா வல்லகி…. பரிதி மேடம் தஞ்சாவூர் கலெக்டர் அஹ் இருந்தவங்க…. நான் அவங்கள பாத்து இருக்கேன்… யாழினியன் அவங்க ரெண்டு பேரையும் ட்ரைனிங் பீரியட் ல பாத்திருக்காரு….. அதனால் அவங்கள நம்பலாம்ன்னு உன் அக்காகிட்ட சொல்லு…… “, என மெலிதாக சிரித்தபடி கூறினான்.
“எப்டி சீனியர் என் அக்கா நம்பலன்னு சொல்றீங்க?”, ஆர்வமாக கேட்டாள்.
“உங்கக்கா யாரையுமே நம்ப மாட்டா…. அத நான் பாத்து இருக்கேன். அனுபவிச்சும் இருக்கேன்….. நானும் அவளும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்… “, என கூறிவிட்டு வெளியே சென்றான்.
“பார்ரா….. அப்பறம் சீனியர்….”, என கதை கேட்க அவன் பின்னோடு சென்றாள்.
“அப்பறம் என்ன படிச்சி முடிச்சி அவ நினைச்ச வேலைய வாங்கிட்டா…. நான் இன்னும் வேலை கெடைக்காம சுத்திக்கிட்டு இருக்கேன்..”, என கூறியபடி யாழினியன் அருகில் சென்றான்.
“சொல்லு இனியா…. வேற என்ன அனுப்பனும்? நீ சொன்ன மாதிரி எல்லாரோட டீடைல்ஸ் அனுப்பிட்டேன்…. “
“அவங்க நமக்கு ஒரு ஆள் அனுப்பி விடறேன்னு சொல்லி இருக்காங்க….. ம்ரிதுள் எங்க? அவன் என்ன டீடைல்ஸ் குடுத்தான்? என்ன கெட் அப் போட போறான்?”
“மிட் ஏஜ் சொல்லி இருக்கான்…. வருவான்…. இந்த லோகேஷ் ?“
“அவன் இந்த லிஸ்ட்ல இல்ல தர்மா… ஆமா மேடம் என்ன இங்க சுத்திட்டு இருக்காங்க?”, வல்லகி அங்கேயே நிற்பது கண்டு கேட்டான்.
“அவங்கள நிஜமா வீட்டுக்கு கூட்டிட்டு போறோமா இல்ல வேற எங்கயாவது கொண்டு போய்டுவோமான்னு கண்டுபிடிக்க நிக்கறாங்க….”
“நான் எதுக்கு நீங்க சொல்றது உண்மையான்னு கண்டுபிடிக்க இங்க நிக்கனும்? ஒரு தடவ காத்த இழுத்து எல்லாத்தையும் தெரிஞ்சிப்பேன் ல…. அவங்க நிஜமா சிபிஐ தானான்னு நாச்சிக்கு ஒரு டவுட்…. அதான் சீனியர் கிட்ட கிளாரிஃபை பண்ணிக்கிட்டேன்…. எதாவது உதவி வேணுமா இனியன் சார்?”
“நிஜமா வேணும்… கம்முன்னு நீ டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணிக்கோ…. எடுக்கற எல்லா கேசும் சக்சஸ் தான்….”, யாழினியன் சிரித்தபடி கூறினான்.
“அதுவும் நல்ல ஐடியா தான். அப்பறம் யோசிச்சி சொல்றேன்… மொதல் என் சீனியர்-அ உங்க டிபார்ட்மெண்ட்ல சேத்திக்கற வழிய பாருங்க…. பெஸ்ட் மேன்….. மிஸ் பண்ணிடாதீங்க….”, வல்லகி கூறிவிட்டு ஜேக் இருக்கும் இடம் சென்றாள்.
அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் இத்தனை நாள் நடந்து முடிந்து போன விசயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
“ஹாய் ஜேக்…. ஹலோ சார்லஸ்….”
“வா பிரெட்டி (pretty)….. இங்க உக்காரு….”, என பக்கத்தில் ஒரு சேர் எடுத்து போட்டான்.
“நான் தான் சார்லஸ் காத்த படிக்கற பொண்ணு… சோ இதுக்கு மேல எதுவும் மனசுல நினைக்காத..”, என கண்டிப்புடன் கூறினாள்.
“சாரி மிஸ்….. நிஜமா நீங்க வேற லெவல்…. இப்போ நம்பறேன் ஜேக்….”
“நீ என்ன மனசுல நினைச்ச சார்லஸ்?”, ஜேக் பார்த்தான்.
“வழக்கம் போல தான் டா…. ஆனா இவங்க முன்னாடி கஷ்டம்… முடிஞ்சவரை நான் இவங்கள விட்டு தூரமா இருக்கறது தான் நல்லது…”, என எழுந்தான்.
“அப்போ கூட மனசுல வர்ற நெனப்ப மாத்திக்க மாட்டியா சார்லஸ்?”, என முறைப்புடன் கேட்டாள்.
“கஷ்டம் மிஸ் வல்லகி…. நீங்க பேசிட்டு இருங்க நான் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன்…..”, என சிகரெட்டு்டன் வெளியே சென்றான்.
“என்ன விஷயம் சொல்லு வல்ஸ்… ?”
“நீ அடுத்து என்ன பண்ண போற ஜேக்?”
“தெரியல… நீங்க எல்லாரும் இந்தியா கிளம்பறதா சொன்னாங்க…. போய் ஜாக்கிரதையா இரு… இனிமே உன்னை தொந்தரவு பண்ண தான் நிறைய பேர் வருவாங்க…. இப்பதான் சார்லஸ் சொன்னான்… ஒவிஸ்கருக்கு தெரிஞ்சவங்க சர்கிள் எல்லாருக்கும் உன்ன பத்தின விஷயம் போயிரிச்சாம்… அதனால தான் ம்ரிதுள் உங்கள எல்லாம் பத்திரமா அனுப்ப அவரே சரெண்டர் ஆகறேன்னு வராரு….”
“கம்முன்னு நீயும் எங்ககூட வந்துடு ஜேக்…. நாம எதாவது யோசிக்கலாம்….”
“கஷ்டம் வல்ஸ்…. இருந்தாலும் உன்கூட இருக்கற வாய்ப்பு கிடைச்சா சந்தோஷம் தான்… ஆனாலும் நான் இதுவரை இவங்ககூட செஞ்ச விஷயத்துக்கு எல்லாம் இன்டெர்காப்ஸ் என்னையும் தான் தேடிட்டு இருக்காங்க… அதுல தப்பிக்க நான் மறுபடி அந்த இருட்டுக்குள்ள தான் போயாகணும்… “, பெருமூச்சு எடுத்துவிட்டு கூறினான்.
“மறுபடியும் மனச கொன்னுட்டு அங்கேயே ஏன் போகணும்? உன் கனவ அடைய முயற்சி பண்ணு ஜேக்… யோசி… பாய்….”, என அவனை அணைத்து விடுவித்து வெளியே சென்றாள்…
அனைவரும் சக்தி ஏற்பாடு செய்த ஆளுடன் எந்த பிரச்சனையும் இன்றி இந்தியா வந்து சேர்ந்தனர்.
அங்கே அவர்களுக்காக ஜான் காத்திருந்தான் உடன்……