53 – அகரநதி
தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர்.
தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான்.
இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான்.
அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி மீராவின் மொபைல் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதை எடுத்தான் தேவ்.
“அகர்….. சரண்….. “, என தேவ் அங்கிருந்தே கத்த அனைவரும் அவனிடம் வந்தனர்.
“என்னாச்சி தேவ்?”, சரண்.
“இது மீராவோட மொபைல் அகர். நான் ரெஸ்டாரெண்ட் உள்ள வரதுக்கு முன்ன இங்க பத்து பேர் சம்பந்தமே இல்லாம நின்னுட்டு இருந்தாங்க. பாக்கவும் ரவுடி மாதிரி இருந்தாங்க. நான் அப்ப சரியா கவனிக்கல. இப்ப பாத்தா அவங்க தான் கடத்திட்டு போய் இருப்பாங்கன்னு தோணுது டா”, தேவ் பதற்றமாக கூறினான்.
மதுரன் கண்கள் சிவக்க போலீஸூக்கு கால் செய்யப் போக அகரனுக்கு போன்கால் வந்தது பூரணனிடம் இருந்து….
“என்னடா லூசர்ஸ்…. எல்லாரும் ரொம்ப டென்சனா இருக்கீங்களா? கவலப்படாதீங்க. நான் தான் உங்க அத்தனை போரோட ஆளுங்களுயும் தூக்கிட்டு வர சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது டா அத்தனை பொண்ணுங்களும் செமயா இருக்காளுங்க”, என விகாரமாக சிரித்தபடிக் கூறினான் பூரணன்.
“டேய்…. நீ ஆளு தெரியாம மோதற…. ஒழுங்கா அவங்கள விட்று… இல்ல நடக்கறதே வேற….. “,அகரன்.
“டேய் நிறுத்துடா….. நீயெல்லாம் பெரிய இவனாடா? உன்கூட இருக்கானே அந்த மதன் கம்பெனி எம்டி… அவன் என்ன பெரிய பருப்பா? உன்கூட இருக்கற அல்லக்கை சரண் அவன் என்ன முந்திரி பருப்பா? உங்களால இந்த தடவை ஒன்னும் புடுங்க முடியாது டா”, பூரணன் ஆணவத்தோடு பேசினான்.
“டேய்….”, மதுரன் கத்தினான்.
“டேய் அடங்குங்கடா…. சும்மா கத்தாதீங்க…. ஒவ்வொருத்தியும் சும்மா ஜீரால ஊற வச்ச ரசகுல்லா மாதிரி இருக்காளுங்க… குறைஞ்சது மூனு மாசம் அத்தனை பேர் கூடவும் நான் மஜாவா இருந்துட்டு அப்பறம் அனுப்பி வைக்கறேன். அதுக்கப்பறம் நீங்க குடும்பம் நடத்துங்க… சரியா?”, கூறிவிட்டு பயங்கரமாக சிரித்தான்.
“யூ பிளடி ப***…. நீ உயிரோட இருக்க மாட்ட டா….”, ரஹீம் கத்தினான்.
“யாருடா அவன் புதுசா? ஓஓ… ரஹீம் கம்பெனி எம்டி ரஹீம் ஆ? உங்க கம்பெனி கூட என்னோட மத்த பிஸ்னஸ்ல இம்சையா இருக்கு. உன் ஆளையும் தானே தூக்கி இருக்கேன். அவ தனி ரகம் தான்…..”, பூரணன் வரம்பற்ற பேச்சை பேசி சிரித்தான்.
“டேய் பூரண் … ஒழுங்கா பொண்ணுங்கள விட்று… உனக்கு என்ன வேணும்?”, சரண் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.
“உங்க கிட்ட இத்தனை வருஷமா நான் தோத்துட்டு இருக்கேன். இந்த முறை நான் தான் ஜெயிப்பேன். முடிஞ்சத பண்ணிக்கோங்க டா”, எனக் கூறி கால் கட் செய்துவிட்டான்.
“சே…. ஷிட் ஷிட் ஷிட்…. இவன அன்னிக்கே கொன்னிருக்கணும்… இப்ப என்ன வேலை பாத்துட்டான் …. உடனே கமிஷ்னருக்கு கால் பண்றேன்”, என மதுரன் கோபத்தில் கத்தினான்.
“மதுரன்…. கொஞ்சம் அமைதியா இரு. அவன் மட்டுமே இத செஞ்சு இருக்க மாட்டான். கண்டிப்ப நம்மல நல்லா தெரிஞ்சு வாச்ட் பண்ணி தான் தூக்கி இருக்காங்க…. அவன் கூட யாரோ இருக்காங்க…..”, ரஹீம்.
“வினய் ….. அவன் தான் இருக்கான். இதையும் அவன் தான் செஞ்சிருப்பான்”, சரண்.
தேவ் உடனே சரிதாவிற்கு அழைத்தான்.
“யாருக்கு கால் பண்ற?”, அகரன்.
“சரிதாக்கு. கண்டிப்பா அவளுக்கு தெரிய வாய்ப்பிருக்கு”, தேவ்.
“இடம் அவளுக்கு தெரியுமா? “, சரண்.
“அது டவுட் தான்… பட் நாம அவன் யூஸ் பண்ற நம்பர ட்ராக் பண்ணலாம்ல”, தேவ்.
“சரி கேளு…. மது கமிஷனர் கிட்ட பேசிட்டு உடனே போர்ஸ் அனுப்பி பூரணனோட எல்லா இடத்துலயும் ஆள அனுப்பி பாக்க சொல்லு….”, எனக் கூறிக் கொண்டே அனைவரும் தங்கள் காரை எடுக்க வர மீராவும் தாமிராவும் தலையில் கை வைத்தபடி அரைமயக்கத்தில் காரின் பின்னால் அமர்ந்து இருந்தனர்.
சரண் மீராவைப் பார்த்து ஓட, அருகில் தாமிராவும் இருப்பதைக் கண்டு நெஞ்சில் சிறிது அமைதி உண்டானது. அவளை தன் மடியில் கிடத்தி தட்டி எழுப்பினான்.
தேவ் மீராவை தன் மார்பில் கிடத்திக் கொண்டு ,” மீரா…. மீரா…. எழுந்திரி டா… கண்ண தொற டா….”, என அவளின் கன்னத்தை தட்டிக்கொண்டு இருந்தான்.
சஞ்சய் அவசரமாக தண்ணீர் கொண்டு வந்து இருவரது முகத்திலும் அடித்தான்.
தாமிரா மெல்லக் கண் திறந்து,” சரண்…. யாள கடத்திட்டாங்க…. ஸ்டெல்லா ரிஸ் கூட கடத்திட்டாங்க…”,என தட்டுத் தடுமாறிக் கூறினாள்.
“தெரியும் டா.ஏன் இங்க மயங்கி விழுந்திருக்கீங்க இரண்டு பேரும்? உங்களையும் கடத்திட்டதா சொன்னாங்களே “, சரண் அவளை நேராய் உட்கார வைத்தபடிக் கேட்டான்.
“எங்களுக்கும் மயக்க மருந்து குடுத்தாங்க. யாரோ எங்கள அந்த வண்டில இருந்து இறக்கிட்டு அவங்க ஏறிகிட்டாங்க… யாருன்னு இருட்டுல சரியா தெரியல”, மீரா பதில் சொன்னாள்.
“சார்…. திலீப் மைக் இரண்டு பேரையும் காணோம்”, சஞ்சய் அப்பொழுது தான் கவனித்துக் கூறினான்.
“சூப்பர் டா.. அவன் நம்பருக்கு மெஸேஜ் பண்ணு. அவங்க இருக்கற லொகேஷன் அனுப்ப சொல்லு டா” அகரன் அவசரமாக கூறிவிட்டு மதுரன் மற்றும் ரஹீமை கமிஷனர் ஆபீஸ் போகுமாறு கூறினான்.
தாங்கள் அந்த இடத்தைச் சேர்ந்ததும் மதுரன் போலீஸுடன் அவ்விடம் வரட்டும் என திட்டம் வகுத்தனர்.
மதுரன் தானும் உடன் வருவேன் என அடம்பிடிக்க, ரஹீம், தான் கமிஷனர் அலுவலகம் சென்று போலீஸுடன் வருவதாகக் கூறி முதலில் கிளம்பினான்.
சஞ்சய், திலீப் மற்றும் மைக் இருவருக்கும் மெஸேஜ் அனுப்பிவிட்டு காத்திருந்தான்.
“நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்கம்மா”, சரண் கூற பெண்கள் இருவரும் மறுத்து உடன் வருவோம் என வண்டியில் ஏறிக்கொண்டனர்.
திலீப் தங்களின் லொகேஷனை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அனுப்பியபடி வந்தான்.
ஒரு பக்கம் மைக் ரஹீமிற்கும் அனுப்பிக் கொண்டிருந்தான்.
அது சென்னையைத் தாண்டி மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அவர்கள் பெரிய வேனில் வந்ததால் கடத்தியவர்களை கடைசியில் போட்டுவிட்டு முன்னால் அமர்ந்திருந்தனர். மீரா மற்றும் தாமிராவை வெறுமனே சாய்த்து வைத்திருக்கும் சமயம், நதியாளை மூட்டையில் கட்டிக் கொண்டு வினய் வந்ததும் வண்டியைக் கிளப்பினர்.
திலீப்கும் மைக்கும் நொடியில் பெண்கள் இருவரையும் இறக்கி விட்டு அவர்கள் ஏறிக்கொண்டனர். மூன்று மூட்டைகளில் மற்ற பெண்களைக் கட்டி இருந்தனர்.
“டேய்…. குட்டிங்க எல்லாமே சோக்கா இருக்கு…. நமக்கு விருந்தாகுமா?”, என ரவுடிகளில் ஒருவன் மற்றவனிடம் கேட்டான்.
“கம்முனு வாடா. அந்த ஆள் காதுல வுழுந்தா அவ்ளோதான். பாக்கலாம். நம்ம தானே காவலுக்கு இருக்க போறோம்”, என மற்றவன் அவனை அதட்டினான்.
“5 ல ஒன்னு குடுத்தா கூட போதும் மச்சி”, என மற்றவன் அவர்கள் சம்பாஷணையில் கலந்தான்.
“அதுலாம் அப்பால பாத்துக்கலாம். முதல்ல பார்ட்டி கைல துட்டு வாங்கணும். அதங்காட்டி கம்முனு வாங்கடா”, எனப் பேச்சை முடித்தான்.
“ஹ்ம்ம்ம்….”, என அவர்கள் பின்னால் திரும்பி பார்த்துப் பெருமூச்சு விட்டபடி முன்னால் அமர்ந்தனர்.
திலீப்கும் மைக்கும் படுத்துக்கொண்டு மூட்டைகளை முன்னால் மறைத்துக் கொண்டதால் அவர்கள் கண்ணுக்கு படாமல் வந்தனர்.
மெதுவாக அவர்கள் இருவரும் மூட்டையை அவிழ்த்து கோணியை உருவி தங்களை அதில் நுழைத்துக் கொண்டனர்.
இருட்டில் யார் யார் என்று அவர்களுக்கும் தெரியவில்லை.
இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் அந்த கடற்கரை பங்களாவை வந்தடைந்தது அவர்கள் வாகனம்.
ரவுடிகள் இரண்டு பெண்களையும் மூன்று மூட்டையையும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று பூரணன் கூறிய அறையில் அடைத்துவிட்டு வந்தனர்.
ஸ்டெல்லாவிற்கு கொஞ்சமாக மயக்கம் தெளிய ஆரம்பித்ததும் தான் எங்கிருக்கிறோம் எனச் சுற்றிலும் பார்வைப் பார்த்தாள்.
தன்னருகில் ரிஸ் மயங்கிக் கிடப்பதைக் கண்டு யாரோ தங்களை கடத்தியிருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள்.
ரிஸ்வானாவை மெல்ல சத்தம் வராமல் எழுப்பினாள். அவளும் கண்களை கசக்கியபடி மருண்டு விழித்தாள்.
ஸ்டெல்லா சத்தம் போடாதே என சைகை செய்யவும் அமைதியாக இருந்தாள். அந்த மூட்டையை அவிழ்க்க அவர்கள் எழும் சமயம் யாரோ உள்ளே வருவது போல் தெரியவும் கண் மூடிப் படுத்துக்கொண்டனர் இருவரும் .
வினய் தான் உள்ளே வந்தான். உடன் பூரணனும்….
“பாஸ்…. நீங்க சொன்ன மாதிரி கடத்திட்டேன். இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே?”, வினய்.
“சந்தோஷம் தான். ஆனா அவனுங்க இவளுங்க நிலைமைய பார்த்து கதறணும். அப்ப தான் எனக்கு முழு சந்தோஷம் கிடைக்கும். அந்த நதியாள மட்டும் என் ரூமுக்கு இப்ப கொண்டு போ. மத்தவளுங்க இங்கயே இருக்கட்டும். அந்த அகரன் என்கிட்ட மண்டிபோட்டு நிக்கணும் இன்னிக்கு”, எனக் கூறி திரும்பியவன் ஒரு நொடி நின்று,” அந்த மதுரன் ஆளையும் கொண்டு போ”, எனக் கூறிச் சென்றான்.
“சே…. இவனுக்கு முன்ன நதியாள நான் அனுபவிக்கலாம்னு பாத்தா விடமாட்டான் போலவே”, என மனதில் பொறுமியபடி நதியாள் இருந்த மூட்டையைத் அவிழ்த்து அவளைத தூக்கிக் கொண்டுப் போனான் வினய்.
ஸ்டெல்லா மனம் பதறியபடி அரைக்கண்ணால் அனைத்தையும் கண்டாள். வினய் வெளியே சென்றதும் மற்ற மூட்டைகளை இருவரும் அவசரமாக அவிழ்க்க அதில் திலீப்கும் மைக்கேலும் இருந்தனர்.
“ஹாய் ஸ்டெல்…. சவுக்கியமா?”, திலீப் சிரித்தபடிக் கேட்டான்.
“டேய் தடிமாடுங்களா…. மீரா தாமிராவையும் அவனுங்க கடத்திட்டாங்கன்னு நாங்க நினைச்சோம்”, ஸ்டெல்லா ஆச்சரியமும் சந்தோஷமும் போட்டி போடக் கூறினாள்.
“அவங்களையும் தான் கடத்தினாங்க. நாங்க இரண்டு பேரும் அவங்கள அங்க பார்க்கிங்ல இறக்கிவிட்டுட்டு நாங்க வண்டில ஏறிட்டோம்”, மைக் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டபடிக் கூறினான்.
“சூப்பர் டா…. அந்த வினய் பூரணன் வேலை தான் இது… யாள வேற தூக்கிட்டு போயிட்டான் டா”, என ரிஸ் கவலையாக கூறினாள்.
“ஆமாடா… சாருக்கு கால் பண்ணுங்க. உடனே வரச்சொல்லுங்க போலீஸோட”, ஸ்டெல்லா.
“அதுல்லாம் ஆல்ரெடி மெஸேஜ் அனுப்பிட்டோம். யாள மட்டும் இப்ப சேப்பா பாத்துக்கணும்”, திலீப்.
இவர்கள் பேசும் சமயம் வினய் உள்ளே வர அங்கே ஆண்கள் இருவர் இருப்பதைக் கண்டு அவன் கத்தினான்.
“டேய்…. நீங்க எப்படி இங்க? ஸ்டீபன்…. “, என கத்தினான் வினய்.
“சார்….”, என ஐந்து பேர் உள்ளே வந்தனர்.
“யாரு இவங்கள தூக்கினது? பொண்ணுங்கள தானே தூக்க சொன்னேன்…”, எனக் கத்தினான் வினய்.
“சார்… நாங்க குட்டிங்கள தான் சார் தூக்கினோம். இவனுங்க எப்படி வந்தானுங்கன்னு தெர்ல சார்….”, எனக் கூறினர்.
“வினய்…. எங்கள மரியாதையா விட்று…. இல்லன்னா நீ அவ்ளோ தான்”, ஸ்டெல்லா மிரட்டினாள்.
“இந்த இரண்டு சுண்டக்கா பசங்க இருக்காங்கன்னு மிரட்டறியா…. உங்களால ஒன்னும் பண்ண முடியாது… இந்த இடம் யாருக்குமே தெரியாது”, வினய் வன்மமாக கூறிப் புன்னகைத்தான்.
“நாங்க தான் வாட்ஸ்அப்ல லொகேஷனை ஷேர் பண்ணிட்டோமே…. கொஞ்ச நேரத்துல இங்க எல்லாரும் வந்துடுவாங்களே”, என திலீப் இராகம் பாடினான்.
“அவனுங்கள பிடிச்சு கட்டுங்கடா…. இவளுங்களையும். உடனே நாம வேற இடத்துக்கு போகணும்”, என பூரணனனின் அறை நோக்கி ஓடினான் வினய்.
“பாஸ்…. பாஸ்…”, என கதவை தட்டினான்.
“என்னடா?” , என எரிச்சலாகக் கேட்டான் பூரணன்.
“மூட்டைல பசங்க வந்துட்டாங்க. நம்ம இருக்கற இடம் அவனுங்களுக்கு அனுப்பிட்டாங்க. வாங்க உடனே வேற இடத்துக்கு போகணும்”, என அவசரப்படுத்தினான்.
“யூ ப்ளடி பக்******ஸ்…. ஒரு வேலை உருப்படியா செய்ய மாட்டீங்களா? இது ஒன்னு தான் என் அப்பனுக்கு தெரியாத இடம். வேற எங்க போனாலும் ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க”, பூரணன் ஆத்திரத்தில் கத்தினான்.
“சார்… எனக்கு தெரிஞ்ச இடம் ஒன்னு இருக்கு. இங்க இருந்து பத்து கி.மீ போனா ஒரு கட்டடம் ரொம்ப நாளா பாழடைஞ்சி போய் இருக்கு. அடுத்த இடம் ரெடி பண்ற வரைக்கும் அங்க போகலாம்”, எனக் கூறி அவசரமாக அனைவரையும் இழுத்துக் கொண்டு கிளம்பினான் வினய்.
அகரன் ,சரண், மதுரன், சஞ்சய், மீரா தாமிரா ஆறுவரும் திலீப் அனுப்பிய லொகேஷனை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தனர்.
அகரன் மனமெல்லாம் இரணமாக வலித்தது. நதியாளுக்கும் மற்றவர்களுக்கும் ஏதும் தப்பாக நடந்துவிடக் கூடாது என்று கோடி முறையாக இறைவனைப் பிரார்த்தித்தான்.
தேவ் தான் வண்டியை அசுர வேகத்தில் செலுத்திக்கொண்டு இருந்தான். அவர்கள் அந்த இடத்தை நெருங்கும் சமயம் போலீஸுடன் ரஹீமும் வந்தான்.
அங்கே காலியான வீடு தான் அவர்களை வரவேற்றது.
நதியாளின் துப்பட்டா நடுகூடத்தில் ஊசலாடியபடி ஒரு பேப்பரை தாங்கி இருந்தது.
“அகரா…. உன்னை இந்த தடவை தோக்கடிக்காம விடமாட்டேன். எப்படி தேடினாலும் உன் பொண்டாட்டி மட்டும் உனக்கு கிடைக்கவே மாட்டா டா…. “, என எழுதி இருந்தது.
அகரன் மனம் நொருங்கிப் போய் அமர்ந்தான்.
“பூரணனுக்கு தன் மேல் ஏன் இத்தனை வன்மம்? நான் என்ன கெடுதல் செய்தேன் அவனுக்கு? ஒவ்வொரு முறையும் அவனை தப்பு செய்யாமல் தடுத்தது தான் அவனுக்கு இத்தனை வன்மத்தை என்மேல் ஏற்படுத்தியதா? அய்யய்யோ…. என் நதிமா….. அவளை என்ன செய்வானோ? “, என மனம் நோக சுவற்றில் சாய்ந்துவிட்டான் அகரன்.
“டேய்…. அகர்… அகர்…. இங்க பாரு… யாள் குட்டிக்கு ஒன்னும் ஆகாது டா… நாம கண்டுபிடிச்சிடலாம்”, என சரண் அவனை சமாதானம் செய்தான். இந்த பக்கம் மதுரனும் ரஹீமும் உச்சகட்ட கோபத்தில் இருந்தனர்.
தங்களின் உயிரானவர்களைத் தூக்கிச் சென்றவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை என மனதில் உறுதி எடுத்துக் கொண்டனர்.
போலீஸ் அதிகாரி அருகில் வந்து இங்கருந்தவர்களின் போன் சிக்னல் எங்கே செல்கிறது என கண்டுபிடிக்கச் சொல்ல , தாமிரா அவசரமாக தன் மொபைல் எடுத்து திலீப் மற்றும் மைக்கின் நம்பரினை ஜீபிஎஸ் போட்டு பார்க்க அது அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டியது.
ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேட சிதறிய போன் பாகங்கள் மட்டுமே அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது.
மற்ற மூவரின் நம்பர் போட்டு பார்க்க ஒரு நம்பர் மட்டும் ஆப் ஆகாமல் இருப்பதாகக் காட்டியது.
“சரண் சரண்…. ஸ்டெல்லா நம்பர் ஆன்ல இருக்கு.. வாங்க உடனே வண்டி எடுங்க”, என அவள் துரிதப்படுத்தினாள்.
“எங்க….. எங்க இருக்காங்க?”, மதுரன் கேட்டான்.
“இங்க இருந்து இரண்டு கி.மீ தாண்டி போயிட்டு இருக்காங்க… உடனே வாங்க போய் பிடிச்சிடலாம்”,என தாமிரா கூற அனைவரும் உடனே கிளம்பினர்.
அகரன் ஓடிச்சென்று வண்டியை ஸ்டார்ட் செய்ய அனைவரும் அமர்ந்ததும் காற்றினும் வேகமாக மனோவேகத்தில் வாகனத்தைச் செலுத்த முயன்று கொண்டு இருந்தான்.
அத்தனை வேகம் இதுவரை யாரும் பார்த்து இல்லை அகரனிடத்தில்… அவன் முகத்தில் இருக்கும் கோபம் அனைவரையும் திகைக்க வைத்தது.
தாமிரா வழி கூற அகரனைத் தொடர்ந்து போலீஸ் வாகனமும் வந்து கொண்டு இருந்தது.
வினய் கூறிய கட்டிடத்தில் அனைவரும் கட்டப்பட்டு இருந்தனர்.
நதியாளை மட்டும் பூரணன் அவனருகிலேயே வைத்துக் கொண்டதால் அவள் எங்கே எனத் தெரியாமல் மற்ற நால்வரும் கலக்கமாய் இருந்தனர்.
போலீஸ் சைரன் சத்தம் கேட்டதும் ரவுடிகள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் தயாராய் நின்றனர்.
திலீப்கும், மைக்கும் கொஞ்சமாக கைக்கட்டுகளை லூசாக்கி அவிழ்த்துக்கொண்டனர்.
சைரன் சத்தத்தில் ரவுடிகள் அனைவரும் வினயைத் தேடி ஓடும் சமயத்தில் மற்ற இருவருக்கும் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு வேறுபக்கம் ஓடிச் சென்று மறைந்துக் கொண்டனர்.
“சார்…. சார்… போலீஸ் வருது சார்…. கிட்னாப் பண்றதோட அவ்ளோதான்னு சொல்லிட்டு இப்ப இப்படி மாட்டவைக்கறியே…. நாங்கல்லாம் போறோம் சார்….”, எனக் கூறினர்.
“இருங்கடா…..பேசினத விட டபுளா தரேன். கொஞ்ச நேரம் சமாளிங்க”, என வினய் கூறிவிட்டு பூரணனைத் தேடிச் சென்றான்.
“பாஸ்…. இங்கயும் போலீஸ் வந்துட்டாங்க…. “, வினய்.
“ஷிட்…. நான் வேற இடத்துக்குப்போறேன். நீ தப்பிச்சிடு… “, எனக் கூறி நதியாளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
ஸ்டெல்லாவும், ரிஸ்வானாவும் நதியாளைத் தேடிக் கொண்டு இருந்தனர் அங்கே ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தபடி இருந்த சமயம் பூரணன் நதியாளை தூக்கிக் கொண்டு செல்வதைக் கண்டு அவனைத் தடுக்க ஓடினர்.
“டேய் நில்லு டா….”, என ஸ்டெல்லா ஒரு கம்பியை எறிந்தாள்.
“யாள விடு டா “, என ரிஸ்வானா அவன் சட்டையை பிடித்து இழுத்தாள்.
அவர்களை சமாளிப்பதற்காக நதியாளை கீழே போட்டவன் அவர்களையும் வண்டியை நோக்கி இழுத்துச் சென்றான்.
“விடு டா… விடு டா ராஸ்கல்”, என ரிஸ்வானா கத்த திலீப்கும் மைக்கேலும் அங்கே ஓடிவந்தனர்.
அவர்களின் பின்னே ரவுடிகளும் ஓடி வந்து அவர்களை தாக்கத் தொடங்கினர்.
ஏற்கனவே சிறிது மயக்கம் தெளிய ஆரம்பித்திருந்த நதியாளுக்கு இவர்கள் போட்ட சத்தத்தில் முழுதாக மயக்கம் தெளிந்தது.
எழுந்து பார்த்தவள் வினயும் பூரணனும் ஸ்டெல்லாவையும் ரிஸ்வானாவையும் இழுத்துக் கொண்டு போவதைக் கண்டு சினம் ஏற அருகில் கிடந்த கட்டையை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
நதியாள் கட்டையோடு அடிக்கச் செல்வதைக் கண்ட ரவுடிகள் சிலர் அவளைத் தடுக்க வந்தனர்.
தன்னைத் தாக்க வந்த அத்தனை பேரையும் அடித்துக் கீழே தள்ளினாள்.
உடைந்த கட்டையை வீசிவிட்டு காரை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
ஸ்டெல்லா எடுத்து வந்த கம்பியை எடுத்துக் கொண்டவள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த இருவரையும் தாக்கத் தொடங்கினாள்.
சிலம்பம் முதல் கராத்தே வரை முறையாக பயின்ற காரணத்தால் தன் மீது அடி படாமல் தன்னை தற்காத்தபடியே அவர்களை தாக்கினாள் நதி.
அப்படியும் சிறு சிறு காயங்கள் ஏற்படத்தான் செய்தது.
ஸ்டெல்லா விடுபட்டதும் அவளும் ஒரு பக்கம் ரவுடிகளை விளாச ஆரம்பித்தாள்.
இருபது நிமிடங்கள் அங்க இடமே சண்டை கூச்சல்களால் நிரம்பி வழிந்தது.
சரியாக நதியாளை பூரணன் தலையில் தாக்கும் சமயம் அகரன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
அகரன் கண்ணில் நதியாள் தலையைப் பிடித்தபடி மண்டியிடுவது தான் முதலில் பட்டது.
அதைக் கண்டவன் வெறி வந்தவன் போல நேராக பூரணனை நோக்கி ஓடித் தாக்கத் தொடங்கினான்.
வினய் இன்னொரு பக்கம் நதியாளை கத்தியால் குத்தும் சமயம் தன்னை சமாளித்து எழுந்தவள் அவனை தள்ளிவிட்டு வேறுபக்கம் தள்ளாடியபடி அவனின் தாக்குதலில் இருந்து தப்பித்தாள்.
அவளின் கால்களில் ஒருவன் கம்பி கொண்டு தாக்க கால் மடங்கி அங்கயே விழுந்தாள்.
மதுரனும் ரஹீமும் வினயையும் அந்த ரவுடியையும் தாக்கினர்.
சரண், ரிஸ்வானா மற்றும் ஸ்டெல்லாவைப் பாதுகாத்து அழைத்து வந்து தாமிராவிடம் ஒப்படைத்துவிட்டு நதியாளை நோக்கி ஓடினான்.
ரிஸ்வானாவும் மீராவும் அழுதபடியே நதியாளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“யாள் குட்டி”,என அழைத்தபடி சரண் அவளை நோக்கி ஓடினான்.
அதற்குள் போலீஸூம் அவ்விடம் வந்திருக்க அனைவரையும் அரெஸ்ட் செய்தனர்.
சரணுக்கு முன் அகரன் நதியாளை
தன் கையில் ஏந்திக் கொண்டு ஒரு காரில் ஆஸ்பிடல் நோக்கி விரைந்தான்.
“ஹேய் அகன்… நான் சண்டை போட்டத பாத்தியா?”, என முழுதாய் கேட்கும் முன் மயங்கி விழுந்தாள் நதி.
“நதிமா….. நதிமா….. இங்த பாரு…. என்னை பாரு நதிமா…. உனக்கு ஒன்னும் இல்ல…. கண்ண தொற டி…. “, என அகரன் அழுதபடியே அவளை எழுப்பிக்கொண்டே காரை செலுத்திக்கொண்டு இருந்தான்.
அவனின் கண் முன்னே எட்டு வயதில் நதியாள் நதியில் மூழ்கியது நிழலாடியது… அப்போதும் அவள் கண் மூடி மயக்கத்தில் இருந்தாள் கண்ணன் அளவிற்கு பதறி அவளை அவசரமாக தண்ணீர் வெளியேற்றி காப்பாற்றினான்.
இப்போதோ தன் யாதுமாக மாறிப்போனவளை இந்நிலையில் காணக் காண அவனால் வேதனையைக் கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு புலம்பியபடியே அவளை சுயநினைவுக்குத் திருப்ப முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
இருபது நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தவன் தன்னவளை நெஞ்சில் சாய்த்தபடி தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.
“டாக்டர்….. “, என அவன் கத்தியதில் அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்க்க அவன் நின்ற கோலம் யாரையும் நெஞ்சுருக்க வைக்குமளவு வேதனையாக இருந்தது.
உடனே அவளை ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை ஆரம்பமானது.
அவனைத் தொடந்து வந்த மற்றவர்களும் அவளின் நிலையை எண்ணி கலக்கத்தில் தான் இருந்தனர்.
மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்திடாமல் அடம்பிடித்தவர்களை, ஸ்டெல்லா அதட்டி வைத்தியம் பார்க்க வைத்தாள்.
நதிக்கு தலையில் ஏற்பட்ட காயத்தினால் அதிக இரத்தபோக்கு ஆகியிருந்தது.
அகரனும் மதுரனும் அவளின் இரத்தபிரிவு என்பதால் உடனடியாக இரத்தம் கொடுத்தனர்.
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. கையிலும் பலமான காயங்கள் இருந்தது.
ஸ்டெல்லா தவிர அனைவரும் அழுது வடிந்துக் கொண்டிருந்தனர்.
“டாக்டர்…. இப்ப எப்படி இருக்கா?”, சரண்.
“இப்போதிக்கு எதுவும் சொல்லமுடியாது. தலைல பலமான காயம் ஏற்பட்டு இருக்கு. இன்னும் இரத்தம் நிக்கல. அது நின்னா தான் எதுவும் சொல்லமுடியும்”, எனக் கூறி அவசரமாக உள்ளே நுழைந்துக் கொண்டார் அவர்.
அகரன் பயந்தது போலவே நடந்துவிட்டது. அவனின் ஜீவநதியின் உயிர் ஆபத்தில் இருக்கிறது.
டாக்டர் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் நெஞ்சம் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. அகரன் மயங்கி சரிய, ரஹீம் அவனைப் பிடித்துக் கொண்டான்.
அகரனை ஒரு அறையில் படுக்க வைத்தனர். அகரனின் மனம் ஓயாமல் ,” நதிமா…. நதிமா…. நதிமா….”, என ஜபிக்க ஆரம்பித்துவிட்டது.
அது அவன் வாய் வழியாக முனுமுனுப்பாக கேட்டுக் கொண்டே இருந்தது……