54 – ருத்ராதித்யன்
மகதன் ஓடி வருவது கண்டு தர்மதீரன் நாச்சியார், வல்லகியின் முன் வந்து மறைத்துக் கொண்டு நின்றான். மகதனின் உருமலில் பாலாவிற்கு மயக்கம் வருவது போல இருந்தது. வல்லகியின் கையை இறுக்கி பிடித்தபடி பின்னால் சென்றாள்.
மகதன் அர்ஜுனை பிடிக்க அவனை மட்டுமே குறியாக பார்த்துக்கொண்டு நின்றது. அர்ஜுன் மகதனை வெறுப்பேற்றிய படி ஆதியின் அருகில் சென்று நின்றான்.
ஆதியின் முன்னால் மகதனும், பின்னால் அர்ஜுனும் இப்போது நின்று இருந்தனர்.
“டேய்…. நீ அவன வெறுப்பேத்தறேன்னு சொல்லி என் சோலிய முடிக்க பாக்கறியா டா?”, ஆதி மகதன் கண்களில் இருக்கும் கோபத்தைப் பார்த்துக் கேட்டான்.
“கம்முன்னு இரு டா…. அவன நான் அவுட் பண்ணிட்டேன்… என்னை அவன் அவுட் பண்ண தான் இப்படி நிக்கறான்…. ரெண்டு பேரும் ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்கோம்…”, அர்ஜுன் மகதனின் கண்களையும் கால்களையும் பார்த்தபடிக் கூறினான்.
ஆருத்ரா சிரிப்புடன் மகதன் அருகில் சென்றதும், அவள் மடியில் தலை உரசியபடி அவளை கீழே அமரச் சொன்னது. அவளும் அமர்ந்து கொள்ள, உடனே அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டது.
பாலா அதை வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சி என் தங்கத்துக்கு… ஏன் இவளோ கோவம்?”, அவன் முதுகை வருடி விட்டு முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டுக் கேட்டாள்.
மகதன் அர்ஜுனை காட்டி உருமியது. அவனிடம் தோற்றுவிட்டானாம். அவனை தோற்கடிக்க வேண்டுமாம்.
“நம்ம அர்ஜுன் தான்டா …. விடு அவன் அசால்ட்டா இருக்கறப்போ அவனை பிடிச்சிடலாம்…”, என ஆருத்ரா கடைசி வாக்கியத்தை ரசசியமாக கூறியதும் மகதன் அவளை நக்கினான்.
“டேய்…. நக்காத டா…. இப்போ தான் நான் முகத்த கழுவினேன்…”, என செல்லமாக திட்டிவிட்டு அவனை சமாதானம் செய்து எழுப்பிவிட்டு தானும் எழுந்து நின்றாள்.
“என்ன அண்ணியாரே…. அவன்கிட்ட என்ன ரகசியம்?”, அர்ஜுன் குறும்புடன் கேட்டான்.
“அது எங்களுக்குள்ள மட்டும் தான்…. என்னடா மகதா…. நீ சொல்லாத….”, என அவள் கூறியதும் சரி என தலையை ஆட்டினான் மகதன்.
“இது புலியா?”, என பாலா சத்தமாகக் கேட்டாள்.
“இங்க கிட்ட வந்து பாருங்க பாலா….”, யாத்ரா கூறினாள்.
“நோ நோ நோ…”, என வல்லகியின் பின்னால் சென்று ஒளிந்தாள்.
“வாங்க நாச்சியார்… வாங்க வல்லகி…. நீங்க தர்மதீரன் தானே?”, என ஆதி முறையாக அனைவரையும் வரவேற்றான்.
“வணக்கம்… நீங்க?”, என தர்மதீரன் கேட்டான்.
“நான் ஆதி…இவன் அர்ஜுன், அவ யாத்ரா…. இவங்க ஆருத்ரா…. இவங்க தான் நீங்க இந்தியா வரதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க……”
தர்மதீரன் மீண்டும் ஏதோ கேட்க முனையவும்,
“வாங்க உள்ள போய் பேசிக்கலாம்….”, என ஆருத்ரா கூறி முன்னே நடந்தாள் தனது லிங்க பெட்டியுடன்.
“தனுப்பா…..”
“வா சிங்கம்மா…. ஒன்னும் பிரச்சினை இல்லயே…?”, என பெட்டியை கையில் வாங்கியபடிக் கேட்டார்.
“இல்ல தனுப்பா….. இவங்க சுடரெழில் நாச்சியார்…. இவங்க வல்லகி, பாலா அண்ட் தர்மதீரன்….”
“இவர் ரணதேவ் விக்ரமன்….”, என வல்லகி முன்னால் வந்து அவரிடம் கை நீட்டினாள்.
ரணதேவும் கைக்கொடுக்க, “உங்க மனபாரம் இந்தமுறை குறைய வாய்ப்பிருக்கு… ஆனா கொஞ்சம் சிரமப்பட்டு தான் ஆகணும்…..”, என அவரிடம் கூறிவிட்டு, வனத்தின் எல்லையில் நிற்கும் அஜகரனைக் காணச் சென்றாள்.
“உங்களுக்கு என்ன உதவி வேணும் மிஸ் ஆருத்ரா?”, நாச்சியார் கேட்டாள்.
“சில சுவடிகள் படிக்கணும்….. எங்களுக்கு விளக்கம் வேணும்… சில இடங்கள கண்டுபிடிக்கணும்…”
“கொஞ்சம் தெளிவா இங்க என்ன நடக்குதுன்னு சொல்ல முடியுமா?”, தர்மதீரன் கேட்டான்.
“எல்லாமே சொல்றோம் தர்மதீரன்.. மொதல்ல ரெஸ்ட் எடுங்க…. கொஞ்ச நேரத்துல நாம பேசலாம்….”, ஆதி கூறினான்.
“சீனியர்….”, வல்லகி எல்லையில் இருந்து அழைத்தாள்.
“அர்ஜுன் சார்….. யாத்ரா மேடம்…. இங்க வாங்க..”
மூவரும் அவளருகில் சென்றதும், அவள் அஜகரனைக் காட்டி ஏதோ கூறினாள்.
“நாச்சி…. நான் கொஞ்ச நேரத்துல வரேன்…. நீ ஃப்ரெஷ் ஆகு…”, எனக் கூறிவிட்டு நால்வரும் கானகத்தில் புகுந்தனர்.
அஜகரன் முன்னே சரசரவென செல்ல நால்வரும் பின்னால் தொடர்ந்தனர்.
அன்று ரணதேவ் தாத்தாவும், வனயட்சி ஆச்சியும் சென்ற குகை நோக்கிச் சென்றனர்.
மகதன் அவர்களை தொடர்ந்து வந்தான். கொம்பன் ஒரு புறமும், பைரவன் ஒரு புறமும் ஓடிக் கொண்டு இருந்தனர்.
தீரன் எல்லையில் நின்றுக் அவர்களை பார்த்துவிட்டு, இதழி இருக்கும் குடிசைக்கு சென்று முன்னால் அமர்ந்துக் கொண்டான்.
“என்னாச்சி வல்லகி?”, யாத்ரா.
“இந்த பாம்பு நம்மல ஒரு இடத்துக்கு வர சொல்லிச்சு… “
“பாம்பு நினைக்கறதும் உனக்கு புரியுதா வல்லகி?”, யாத்ரா கேட்டாள்.
“ இது தான் முதல் முறை யாத்ரா மேடம்…. அது உடம்புல கை வச்சதும் என்னால உணரமுடிஞ்சது….”, வல்லகியின் நடையும் யாத்ராவின் நடையும் ஒரே சீரில் வேகமாக இருந்தது. அர்ஜுனும், தர்மதீரனும் பின்னால் இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முனைந்து ஓடி வருவது கண்டு அவனுடன் மெல்ல நடந்தான்.
“சாரி தர்மதீரன்…. உங்களை கவனிக்காம நானும் முன்ன போயிட்டேன்….”
“நீங்க உங்க பலத்துக்கும் உயரத்துக்கும் தகுந்த மாதிரி தான் நடக்கறீங்க… நீங்க மூணு பேருமே அதீத பலம் உள்ளவங்க… நான் சராசரி மனுஷனுக்கு இருக்க பலம் உள்ளவன் தானே….”
“வேகம் வேண்டாம் தர்மா…. மெல்லவே வாங்க….. அவன் போற எடம் எனக்கு தெரியும்…. என்னமோ மிஸ்.வல்லகிக்கு அவன் என்னவோ காட்ட நினைக்கிறான் போல….”, அர்ஜுன் முன்னால் அஜகரன் செல்லும் திசையை அனுமானித்தபடிக் கூறினான்.
“அந்த பாட்டி இன்னும் வீட்டுக்கு வரலன்னு வல்லகி நாங்க வண்டில வரப்போ சொன்னா…. அவங்கள பாக்கவா?”
“இருக்கும்…. ஆனா ஆச்சி அவங்களா வந்துடறேன்னு சொல்லிட்டு தான் போனாங்க…. “
“நீங்க சிபிஐல தானே இருக்கீங்க அர்ஜுன் சார்…?”
“ஆமா தர்மா…. ஆனா இனிமே எப்படின்னு தெர்ல….. இந்த மாற்றங்கள் என்னையும், யாத்ராவையும் இந்த சராசரி உலகத்தவிட்டு தூரமா இருக்க வச்சிடும் போல…..”, அர்ஜுன் குரலில் வருத்தம் தொனித்தது.
“இப்போ இன்னமும் நீங்க பவர்ஃபுல் அர்ஜுன் சார்….. நீங்க புது டீம் உருவாக்கலாம்…. உங்க பாடி லாங்குவேஜ் எல்லாம் புது மார்ஷ்ஷியல் ஆர்ட்ஸ் உருவாக்கும் போல…. “, அர்ஜுனின் அதிமெதுவான நடையினால் அவனின் தசைகள் நகரும் விதம் கண்டுக் கூறினான்.
“நீங்க மார்ஷ்ஷியல் ஆர்ட்ஸ் படிச்சி இருக்கீங்களா?”
“ஒரு வருஷம் போனேன்… அப்பறம் போக முடியல… வல்லகிக்கு வர்மக்கலை தெரியும்… அவகிட்ட அத கத்துக்கணும் …”
“நைஸ்… எனக்கும் சொல்லி தர சொல்லுங்க தர்மா…. “, முன்னால் சென்றவர்கள் வெகுதூரத்தில் இருந்து இவர்களை அழைத்தனர்.
“செழியன்…. அவர தூக்கிட்டு வா சீக்கிரம்…”, யாத்ரா கூறியதும் தர்மதீரணை ஒரே கையில் தூக்கி தோலில் போட்டுக் கொண்டு ஓடினான்.
இரண்டு நிமிடத்தில் அவர்கள் நின்ற இடத்தில் தர்மனை இறக்கி விட்டான். “சார்… சொல்லிட்டு தூக்க மாட்டீங்க…. எனக்கு தலை சுத்துது…”, என தலையை பிடித்துக் கொண்டு ஒரு பாறையின் மேல் அமர்ந்தான்.
வல்லகி அவன் அருகில் சென்று அவன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து, முதுகில் ஒரு இடத்தில் அழுத்திக் கொண்டு, அவனை நிற்கவைத்து வயிற்றைக் அழுத்த அவன் நிலையானான்.
“தாங்க்ஸ் வல்லகி…. “
“இங்க என்ன அஜகரா…?”, அர்ஜுன் கேட்டான்.
“உள்ள அந்த பாட்டி மயங்கிட்டாங்க…. அவங்கள தூக்கிட்டு வரணும்…. “, வல்லகி பதில் கூறினாள்.
“ஹோ…. சரி யார் உங்கூட இப்போ வரணும்?”, யாத்ரா கேட்டாள்.
“எல்லாருமே….”, வல்லகி கூறினாள்.
“என்னமோ பெருசா வச்சி இருக்கான் போல ரதுமா…. “, அர்ஜுன் கூறியபடி அஜகரன் அருகில் சென்று தடவிக் கொடுத்தான்.
அஜகரன் மரத்தில் நுழைந்து வெளியே வந்ததும் குகை திறக்க, அனைவரும் உள்ளே சென்று வனதேவியை வணங்கிவிட்டு, ஆச்சியை தூக்கிக் கொண்டு வந்தனர்.
“ஆச்சி … ஆச்சி….”, யாத்ரா எழுப்பியதும் கண்ணுக்குள் அசைவு தெரிந்தது.
“அவங்க ரொம்ப பலகீனமா இருக்காங்க… சாப்பிட எதாவது குடுக்கணும்….”, வல்லகி அவரின் உடலை தொட்டுப் பார்த்துக் கூறினாள்.
“இதோ… அவங்களுக்கு முயல் கறி கொண்டு வந்திருக்கேன் க்கா…”, என நுவலி அங்கே வந்தாள், நானிலன் உடன்.
அஜகரன் அவளைக் கண்டதும் குஷியாகி நான்கு சுற்று சுற்றி அவளிடம் வந்து நின்றான்.
நானிலன் சற்று பயந்து அர்ஜுன் அருகில் சென்றுக் நின்று கொண்டான்.
“தண்ணி…?”
“இதோ…”, என நானிலன் நீட்டினான்.
மெல்ல வாய் திறந்து தண்ணீரை உள்ளே அனுப்பினர். அவர் கண் திறந்ததும் கறியை ஊட்டி விட்டாள் நுவலி.
“போதும் டி….”
“முழுசா சாப்பிடுங்க பாட்டி…. உடம்புல மட்டும் இல்ல, மனசுக்கும் இப்போ தெம்பு ரொம்ப தேவை….”, என வல்லகி கூறிவிட்டு, மகதன் அருகில் சென்று நின்றாள்.
மகதன் அவளை முகர்ந்து அவளது வாசனையை ஞாபகம் வைத்துக் கொண்டது. அவளும் அதை அதை தடவிக் கொடுத்து, காலில் ஏற்பட்டிருந்த காயத்தை வருடி விட்டாள் .
“ரொம்ப இரத்தம் போயிரிச்சில்ல மகதா…. விடு மொத்தமா வசூல் பண்ணிடலாம்… இப்போ போய் அர்ஜுன் சார பிடிச்சிடு..”, என மெல்ல காதில் கூறியதும் அதுவும் அவனை ஒரே தாவலில் கீழே சாய்த்தது.
அர்ஜுனை தோற்கடித்த குஷியில் சந்தோஷ உருமலும் வெளியிட்டான்.
“டேய் கேடி…. இதுலாம் செல்லாது…”, அர்ஜுன் வாதிட்டான்.
“அதுலா செல்லும் அர்ஜுன் சார்… நேத்து அவன அப்படி தானே சாய்ச்சீங்க…”, என வல்லகி கூறியதும் ஆம் என தலை அசைத்தான் மகதன்.
அங்கே நடக்கும் விளையாட்டு பஞ்சாயத்திற்கு தர்மதீரணும், நானிலனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“சரி விடுங்க செழியன்…. பாட்டிய தூக்குங்க…”, எனக் கூறிவிட்டு அஜகரன் அருகில் சென்று அவன் காயத்திற்கு மருந்திட்டாள்.
அவனும் அவளை அரவணைத்து நின்று கொண்டான்.
“நாம நாளைக்கு லட்சத்தீவு போகனும் மேடம்….”, நானிலன் யாத்ராவை பார்த்து கூறினான்.
“அர்ஜுன்?”
“அவர் இங்க பாதுகாப்புக்கு இருக்கணும்…. நான், நீங்க, நுவலி, கண்மயா, வல்லகி மேடம் எல்லாரும் போகணும் …”
“நான்?”, தர்மதீரன் கேட்டான்.
“அவர் நல்லா ஈட்டி எறிவாரு நிலன்… அவரும் வரட்டும்…. “, வல்லகி சிரித்தபடி கூறினாள்.
“நான் வர வேணாமா நானிலா?”, ஆச்சி கேட்டார்.
“நீங்க வந்தா மறுபடியும் அவன் பலம் ஆகிடுவான் ஆச்சி…. இந்த தடவை நீங்க இந்த பக்கம் மட்டுமே இருக்கணும்னு நெனைக்கராங்க எல்லாரும்…..”
“எல்லாரும் ன்னா?”, யாத்ரா சந்தேகத்துடன் கேட்டாள்.
“எல்லாரும்…. இயற்கைய காக்க நினைக்கற எல்லாரும் மேடம்…..”, என நானிலன் கூறிவிட்டு வல்லகியை ஆழ்ந்துப் பார்த்தான்.