56 – ருத்ராதித்யன்
“ இன்னிக்கி நைட் யார் எல்லாம் கெளம்பணும் நுவலி?”, வல்லகி யோசனையுடன் உள்நுழைந்தவளை கேட்டாள்.
“நீங்க, நான், நாச்சியார் அக்கா, கண்மயா அக்கா, நானிலன் அண்ணா, ஆதி சார், அர்ஜுன் அண்ணா….”, என கூறிவிட்டு ஆருத்ரா அருகில் சென்றவள் அவள் கையை பிடித்துக் கொண்டு, “ நீங்க இன்னிக்கி ஜாக்கிரதையா இருக்கணும் ம்மா…”, என கவலையுடன் கூறினாள்.
“ஹே என்ன நுவலி நான் இல்லாம நீங்க எல்லாம் கிளம்பினா எப்படி?”, யாத்ரா கேட்டாள்.
“நீங்க தேவி குகைக்கு போய் நாங்க வர வரைக்கும் தியானம் பண்ணனும் யாத்ரா க்கா…”
“அப்போ நாங்க?”, என கேட்ட பாலா மற்றும் தர்மதீரணுக்கு, “ஆருத்ராம்மாக்கு காவலா இருக்கணும்…. “, என கூறினாள்.
“நுவலி…. பாலாவ நம்மளோட கூட்டிட்டு போலாமே? அவ அப்பா அம்மாகிட்ட பத்திரமா கூட்டிட்டு வருவேன்னு வாக்கு குடுத்திருக்கேன்….”, நாச்சியார்.
“வேணாம் நாச்சி… பாலா இங்க இருக்கறது தான் நல்லது…. “, வல்லகி மறுத்துவிட்டு பாலா காதில் ரகசியமாக ஏதோ கூறி வெளியே அனுப்பினாள்.
“வல்லா…..”
“அவளுக்கு ஒன்னும் ஆகாது நாச்சி… நீ அந்த குகை எங்க இருக்குன்னு கண்டுபிடி … நான் ஒருத்தன பாத்துட்டு வரேன் …. அர்ஜுன் சார் அந்த ராஜ் கர்ணா இன்னும் மகதன் இடத்துலயா இருக்கான்?”, என எழுந்தபடி கேட்டாள்.
“ஆமா வல்லகி…”
“வாங்க அவன ஒரு தடவ பாத்துட்டு வரலாம்….”
“அவனையும் ஸ்கேன் பண்ண போறியா வல்லகி?”, யாத்ரா சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமா யாத்ரா…. இப்போ அவன் தப்பிக்கவும் போறான்… யார் கூட்டிட்டு போறாங்கன்னு பாக்கணும்ல?”, என கண்ணடித்து வல்லகி கூறியதும், கஜேந்திர நெடுமாறன் ஆதிக்கு அழைத்து மகதன் குகைக்கு அருகில் புதிதாக ஆட்கள் சூழ்ந்து உள்ளனர் என்று கூறினான்.
அஜகரன் ரௌத்திரம் கொண்டு மகதன் இருக்கும் இடம் செல்ல, அவன் நெருங்கமுடியாத மூலிகை நெடி அஜகரணை சுற்றியது. எந்த பக்கமும் செல்ல முடியாமல் அவன் அப்படியே சுருண்டு தலையை தனது உடலுக்குள் புகுத்திக் கொண்டான்.
மகதன் வெறி கொண்டு ராஜ் கர்ணா அருகில் வந்த நான்கு பேரை கொன்றுவிட்டு, மனிதர்களை பின்னே செல் என்பது போல பார்த்தான்.
அவனும் மயக்க மருந்தின் வீரியத்தினால் மயங்கி சரிய, ராஜ் கர்ணா தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தான்.
விநாயக் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு காட்டிற்குள் மறைந்துவிட, கண்மயா யாழனுடன் ஆச்சி குடிசைக்கு தள்ளி இருந்த இன்னொரு குடிசையில் யாத்ராவின் இரத்தத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.
“மை டியர் மாயா டார்லிங் ….. உன்ன பாத்து எவ்ளோ நாள் ஆச்சி….. இன்னிக்கி நைட் உனக்காக நான் இந்த மலை அடிவாரத்தில் காத்துட்டு இருப்பேன்.. நீ கண்டிப்பா வரணும்… உன்கூட ஆருத்ராவும் வரணும்…. சகஸ்ரா இப்போ எப்படி இருக்கா தெரியுமா? நீயே வந்து பாரு…”, என ஒரு ஒலி தகவல் ஒலித்து முடிந்தது.
அந்த குரல் அவனுடையது தான்…. அவன் இங்கு வந்துவிட்டான் என்றதும் கண்மயா உடல் வேர்த்து, நடுக்கம் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.
அர்ஜுனும், யாத்ராவும் காட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும், வல்லகிக்கு அங்கிருந்த மூலிகை நெடி சட்டென மூக்கில் ஏறியது. அஜகரன் சுருண்டு படுத்திருப்பது அவளால் நன்றாக உணரமுடிந்தது.
“சார்…. ஒரு நிமிஷம்….. இங்க மூலிக நெடி பயங்கரமா இருக்கு… நீங்க இங்க வாங்க…. “, எனக் கூறி முன்னேறியவர்களை தடுத்தாள் .
“நெடுமாறன் சார்…. அங்க இருக்க கேமரா வேலை செஞ்சா என்ன நடக்குதுன்னு பாருங்க…”, அருகில் வந்து நின்றிருந்தவனிடம் கூறினாள்.
மகதன் மயங்கி இருப்பது மட்டும் நன்றாக தெரிந்தது. ராஜ் கர்ணா அங்கில்லை, கூட்டமாக ஐம்பது பேர் வந்து அவனை அழைத்து சென்று விட்டனர்.
“நீங்க மிதிலன் அண்ணா கிட்ட இந்த மூலிகைக்கு மாத்து போட சொல்லுங்க…. கண்மயா எங்க இருக்காங்க?”, என யாத்ராவை பார்த்து கேட்டாள்.
“அந்த கடைசி குடிசைல…”
“மகதனுக்கு ஒன்னும் இல்ல… மயக்கம் தெளிஞ்சிடும்… வாங்க கண்மயாவ பாக்க போலாம்….”, என முன்னே நடந்தாள் .
“என்ன நடக்குது வல்லகி?”, அர்ஜுன் கேட்டான்.
“அவன் முன்னேற ஆரம்பிச்சுட்டான் அர்ஜுன் சார்…. நாம பின்தங்கிய நிலையில் இருக்கோம். இன்னிக்கி சிலை எடுத்தா மட்டும் தான் நாம அடுத்த அடி எடுத்து வைக்க முடியும்…”
“இன்னும் நமக்கு அது எங்க இருக்குன்னு கூட தெரியலியே….”, யாத்ரா.
“எனக்கு தெரியும்… நாச்சி இன்னிக்கான அந்த இடம் பேர் என்னன்னு சொல்லிடுவா …. “
“பழைய பேர் என்னனு சொல்லிட்டீங்களா வல்லகி?”
“இல்ல.. அந்த பேர் எனக்கு தெரியாது…. ஒரு குறிப்பீடு தகவலா தான் இருக்கு… அதே குறிப்பீடு அந்த சுவடிலயுமிருக்கு… “
“இது எந்த மாதிரி நிலை வல்லகி?”, யாத்ரா கேட்டாள்.
“நான் எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் தெரியாத நிலைல இருக்கேன் யாத்ரா…. ஆனா இது இப்படி தான் நடக்கணும்ன்னு ஒரு வரைபடம் எனக்குள்ள போட்டுக்காட்டுது… ஆச்சியோட நினைவுகள் எல்லாம் பயங்கரமா இருக்கு…”
“அவங்களோட எல்லா நினைவுகளுமா பாத்த?”
“அவங்களோட 100 பிறவிகளும் பாத்தேன்…”, வல்லகி இருவரையும் ஆழ்ந்து பார்த்து கூறினாள்.
“என்ன?”, இருவரும் திகைத்து கேட்டனர்.
“ஆமா அர்ஜுன் சார்… இது ஆச்சியோட 100வது பிறவி.. இப்போ அவங்க வயசு 500க்கும் மேல…. இப்போ விட்டா மறுபடியும் இந்த சந்தர்ப்பம் அமைய இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு மேல ஆகலாம்…. “
“என்ன தான் விசயம்? முழுசா சொல்லு வல்லகி….”, யாத்ரா கேட்டாள்.
“இன்னிக்கி ராத்திரி உங்களுக்கு புரியும் யாத்ரா… அர்ஜுன் சாருக்கு அந்த தீவுல இறங்கினதும் புரியும்…. மத்தவங்க வாய் வழியாக கேக்கறதவிட நீங்களே உணர்ந்தா தான் உங்க முழுபலம் வெளிப்படும்….”
“ரொம்ப மர்மமா போகுது வல்லகி….”
“இனிமே நடக்கப்போற விசயங்களுக்கு முன்ன இது மர்மம் இல்ல யாத்ரா… கண்மயா நடுங்கிட்டு இருக்காங்க… சமாதானம் பண்ணுங்க..”, என அந்த குடிசையின் வாசலில் நின்றாள்.
“என்னாச்சி…?”
“ரிஷித் …..”
“அவனால என்ன பண்ண முடியும்?”
“அவனால என்ன பண்ண முடியாதுன்னு கேளுங்க…. இப்போ ரொம்ப பலமா இருக்கான்…. அவன் தேடிப் போனது கெடச்சிடிச்சி….”, எனக் கூறியபடி மெல்ல அந்த குடிசைக்குள் நுழைந்தாள்.
“அவன் வந்துட்டான் யாத்ரா… இங்க வந்துட்டான்…”, என கண்மயா அழுதபடி கூறினாள்.
“அவன் வந்தா வரட்டும்… நாங்க இத்தன பேரு இருக்கோம்ல… அவனால ஒன்னும் பண்ண முடியாது….”, யாத்ரா அணைத்தபடி தைரியம் கூறினாள்.
“உனக்கு அவன பத்தி முழுசா தெரியாது ….. அவன் குரல்ல இருந்த குரூரம் இத்தன வருஷத்துல நான் கேட்டதே இல்ல….அவ்ளோ கோவமா இருக்கான். சகஸ்ராவும் அவனோட இருக்கா….. அவ என்ன நிலமைல இருக்காளோ தெரியல….. “
“அவன் என்ன சொன்னான்?”, அர்ஜுன் கூர்மையாக கேட்டான்.
யாழன் வார்த்தை மாறாமல் ஒலித்த செய்தியை கூறினான்.
“அவனுக்கு எதுக்கு ஆருத்ரா அண்ணி வேணும்?”
“அவங்க யார் பக்கம் இருக்காங்களோ அந்த பக்கம் தான் வெற்றி கிடைக்கும்….”, வல்லகி கூறிவிட்டு யாழன் அருகில் வந்து அவனை ஆராய்ந்தாள்.
“புரியல வல்லகி…”
“இது பத்தாயிரம் வருஷ போர் யாத்ரா… நமக்கு
புரியாது… அர்ஜுன் சார்… நாம கெளம்பறதுக்கு முன்ன சில வேலைய முடிக்கணும்…. வாங்க போலாம்…. கண்மயா காலைல நீங்க செஞ்ச சேப்டி சொல்யூஷன் எடுத்துக்கோங்க.. நைட் கெளம்பணும்…..”, என கூறிவிட்டு நாச்சியார் இருந்த டென்ட் சென்றாள்.
ஆதி நடந்தவைகளை எண்ணி கோபத்தில் அமர்ந்து இருந்தான். ஆருத்ரா யாருக்கோ அழைத்து பாதுகாப்பு அதிகப்படுத்த கட்டளையிட்டு கொண்டிருந்தாள்.
“எப்படி பரத்? எப்படி இத்தன பேரு நமக்கு தெரியாம ஊருக்குள்ள வந்தாங்க?”
“காட்டுவழியாவே வந்திருக்காங்க சார்… எப்படின்னு இன்னும் புரியல… நம்ம கேமரா எல்லாமே அவங்க க்ராஸ் ஆனப்போ சிக்னல் கட் ஆகி நமக்கு அலர்ட் வரல…. “
“நம்ம பக்கம் யாராவது இறந்து இருக்காங்களா?”
“இல்ல சார்…. தாஸ் இப்போ தான் எல்லாரையும் சரிபார்த்து சொன்னாரு… “
“எப்படி பரத் யார் கண்ணுலையும் படாம உள்ள வந்துட்டு போனாங்க? நம்ம அவ்ளோ மோசமா பாதுகாப்பு பண்ணி இருக்கோமா?”, ஆதி அவனிடம் காய்ந்து கொண்டிருந்தான்.
“எல்லாமே ஃபர்ஸ்ட் கிளாஸ் காட்ஜட்ஸ் சார்…. எப்படின்னு எனக்கும் புரியல…”
“ஆதி சார்…. இதுல புது டெக்னாலஜி விட பழைய டெக்னாலஜி தான் இனிமே அதிகம் அவன் உபயோகிப்பான். நாமளும் அத கொஞ்சம் செயல் படுத்த ஆரம்பிக்கணும்…”
“அது என்ன வல்லகி?”, ஆருத்ரா கேட்டாள்.
“பிளாக் மேஜிக்….”
இப்படி கூறியதும் மற்றவர்கள் முழித்தனர். நாச்சியார் மடகாஸ்கர் நினைவில் உள்ளம் கொதித்தாள்.
“என்னாச்சி எல்லாரும் அப்படி பாக்கறீங்க ? அவன் இப்போ பிளாக் மேஜிக் ஹேன்டில் பண்ண கத்துகிட்டான். அவன் அந்த குகையவும் கண்டுபிடிச்சி அந்த மருந்த எடுத்துட்டான்…..”
ஆதியின் உள்ளத்தில் பெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. கைகளை இறுக்கிக் கொண்டு அந்த சுவடியை எடுத்து நாச்சியாரிடம் கொடுத்து, “அந்த தீவோட இன்னிக்கி பேர சீக்கிரம் சொல்லுங்க நாச்சியார்…. “, என கூறிவிட்டு ஆருத்ராவின் கைப்பிடித்து வெளியே அழைத்து சென்றான்.
அவர்கள் இருவரும் சென்றதும் வல்லகி அந்த சுவடியின் வரிகளில் மறைந்திருந்த குறியீட்டை எடுத்து கொடுக்க, அதன் அர்த்தம் அறிய நாச்சியார் தர்மதீரணுடன் அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுனும், வல்லகியும் மிதிலனுடன் அங்கிருப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து விட்டு கொம்பன் மற்றும் பைரவன் இருக்கும் இடம் சென்றனர்.
“கொம்பா….. பைரவா …..”, அர்ஜுன் அழைத்ததும் இருவரும் வந்து நின்றனர்.
வல்லகி இருவரையும் பார்த்துவிட்டு சற்று தொலைவில் அரூபமாக பல மிருகங்கள் இருப்பதையும் உணர்ந்து மென்னகை புரிந்தாள்.
“இன்னிக்கி இருந்து உங்க பாதுகாப்பு வளையம் ஆரம்பம் ஆகட்டும்…. ஆருத்ரா உங்களுக்கு அம்மா தானே….?”, என கேட்டதும் மற்ற மிருகங்களும் பறவைகளும் அவர்கள் அருகில் வந்து ஆம் என தலை அசைத்தன.
“அப்போ உங்க பொறுப்புல விட்டுட்டு போறேன்…. நீங்க தான் இங்க இருக்க எல்லாருக்கும் இனிமே காவல்….”, என வல்லகி அழுத்தமாக கூறிவிட்டு தூரத்தில் நின்ற அரூப உருவத்தை பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பி சென்றாள்.
கொம்பனின் கண்கள் மின்ன, பைரவன் உடலில் புதிய வலு உருக்கொண்டது.