6 – அர்ஜுன நந்தன்
வாயில் நுரை தள்ளி செத்துக்கிடந்தவனைக் கண்டு பரிதி பதறவில்லை. அவள் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்தாள்.
பரிதி ,” அங்கிள் ரொம்ப வேகமா அவங்க போயிட்டு இருக்காங்க போல ?”
செத்துக் கிடந்தவனை ஆராய்ந்துக் கொண்டே கேட்டாள்.
டிஐஜி,”ஆமாம் மா. அந்த கோவில்ல என்ன இருக்குனு தெரியனும்.அங்க போலீஸ் பாதுகாப்புப் போடச் சொல்லவா?”.
பரிதி, “விஷயம் மீடியாக்குப் போனா, உண்மை வெளிய வராது அங்கிள். அங்க மக்கள் பார்வைக்கு படறமாதிரி எந்த நடவடிக்கையும் நாம இப்ப எடுக்கக் கூடாது”.
டிஐஜி ,”வேற என்ன செய்யறது? இவன்கிட்ட ஒரு தகவலும் நமக்கு கிடைக்கலயே. விசாரிக்க இவ்ளோ தூரம் கொண்டு வந்தும் பிரயோஜனம் இல்லாம போயிடிச்சி”.
பரிதி அங்கிருந்தவர்களின் மீது பார்வையை செலுத்தியவாறே டிஐஜியிடம் ,” இவங்க உங்க ஆளுங்களா அங்கிள்? யாரு இவன் கூட இருந்தது?”.
டிஐஜி,”எனக்கு பர்ஸசனல்லா இவங்களத் தெரியும். டிபார்ட்மெண்ட் ஆளுங்க தான் . நம்பிக்கையான பசங்க ரெண்டு பேரும். இவன இந்த ரூம்குள்ள விட்டுட்டு வெளியத் தான் இவங்க இருந்தாங்க.”
பரிதி ,” இதே தப்பு தான் எப்பவும் நடக்குது. ஏன் உள்ள அப்பப்ப வந்துட்டாவது போகனும். இந்த இடம் யாரோடது? ஏன் இங்க இவன கொண்டு வந்தீங்க?”.
டிஐஜி,”டிபார்ட்மெண்ட் செல்-ல வச்சா பாதுகாப்பு இல்லன்னு தான் இங்க கொண்டு வந்தேன். ஆனா இங்கயும் வந்து வேலைய காட்டிடாங்க. இந்த வீட்ல ரொம்ப வருஷமா யாரும் இல்ல. பக்கத்துல வேற எந்த வீடும் இல்ல அதான் ரெண்டு வருஷமா ஒரு சிலர இங்க வச்சி விசாரிச்சிட்டு இருக்கோம். இது எங்க மூனு பேர தவிர யாருக்கும் தெரியாது”.
பரிதி ,” சரி போட்ஸ்மார்டம்க்கு அனுப்பிட்டு ரிப்போர்ட் வந்ததும் சொல்லுங்க அங்கிள்”.
பின் தனியாக டிஐஜியை அழைத்து ,” உங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து தான் யாரோ இத செஞ்சி இருக்காங்க .சீக்கிரம் நம்ம வேலைய நாம ஆரம்பிக்கனும்.”
“இன்னிக்கு ஆரம்பிச்சரலாம் சாயந்திரம் 6 மணிக்கு பெரியக் கோவிலுக்கு பின்னாடி வந்துருமா” , டிஐஜி.
“சரி அங்கிள், இன்னும் 2 மணிநேரத்துல ரிப்போர்ட் வேணும்”, பரிதி.
“வந்ததும் கூப்பிடுறேன்”, டிஐஜி.
டிஐஜியிடம் விடைப்பெற்று இல்லம் திரும்பித் தலை முழுகிவிட்டு யோசனையுடன் உலாவிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளது கைப்பேசி அழைத்தது. அதை எடுத்து குரல் தழைத்து பேச ஆரம்பித்தாள்.
“அவன் செத்துட்டான் அடுத்து யாரவச்சி நமக்கு தகவல் கிடைக்கும்னு பாக்கணும்”, பரிதி.
“நான் ஆள அனுப்பறேன் . இந்த விஷயம் வெளியே தெரியாம மேலிடத்துக்கு கொண்டு போகணும்,” கைபேசியில்.
“இப்பவே நம்ம ஆளுங்கள இறக்கணுமா? கொஞ்ச விவரம் சேகரிச்சிட்டு அப்பறம் இறக்கலாம்ல?”, பரிதி.
“இல்ல இப்பவே லேட் தான். நீ ஒரு பக்கம் முயற்சி பண்ணு. நான் நம்ம ஆளுங்கள வச்சி வேலைய பாக்கறேன். இதுல அதிகமா ஆளுங்கள சேக்க முடியாது. நாம தான் பண்றோம்னு ரெக்கார்ட் இல்லாம பண்ணனும். ஜனங்களுக்கும், அவனுங்களுக்கும், அவங்க மத்தில நாம இருக்கிறது தெரியக்கூடாது. இப்ப விஷயம் சீரியஸ் ஆகிட்டு வருது” , கைப்பேசியில்.
“சரி நீங்களே வர்றீங்களா?”, பரிதி.
“இல்ல நம்ம பெஸ்ட் ஏஜெண்ட்ஸ் இரண்டு பேர மட்டும் அனுப்பறேன். அவங்க உன்ன கான்டாக்ட் பண்ணுவாங்க “, கைப்பேசியில்.
“ம்ம்ம்…… சரி என்ன பிளான்னு சொல்லி அனுப்புங்க”,பரிதி.
“இந்த தடவ பிளான் நான் போட போறது இல்ல . நீ இந்த கேஸ்அ சக்ஸஸ் பண்ணி சீக்கிரம் நம்ம சேம்பர்க்கு வரணும். பாய் ,” கைப்பேசியில்.
பரிதி ஆழமாக முச்சை இழுத்து விட்டாள். பின் தயாராகி அலுவலகம் செல்லும் சமயம் டிஐஜியிடம் இருந்து போன் வந்தது.
“சொல்லுங்க அங்கிள் ரிப்போர்ட் ரெடியா?”, பரிதி.
“வந்துரிச்சி மா, நீ என் வீட்டுக்கு வரமுடியுமா?”, டிஐஜி.
“வரேன் அங்கிள்”, பரிதி.
15 நிமிடத்தில் பரிதி டிஐஜியின் முன் நின்றாள். டிஐஜி ரிப்போர்டை அவளிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
பரிதியின் கண்கள் பளிச்சிட்டன. ரிப்போர்டின் நடுவில் இருந்த மெமரிகார்டை எடுத்து தனது லேப்டாப்பில் புகுத்தி ஓபன் செய்து பார்த்தாள்.
அதில், “அந்த கோவிலில் பல இரகசிய சுரங்க பாதைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒரு பாதையை இயக்கும் வழி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் பாதை உபயோகபடுத்தத் தயாராகச் செப்படினப்பட்டு இருக்கிறது. இன்னொருப் பாதைப் பொக்கிஷக் கிடங்கிற்குச் செல்கிறது எனவும். ஆனால் அது பல இடர்பாடுகள் கொண்டு யாரும் உபயோகபடுத்த முடியாத வண்ணம் இருக்கிறது. பொக்கிஷ கிடங்கிற்குச் செல்லும் இன்னொருப் பாதை கோவில் கருவறையின் அடியில் இருக்க வாய்ப்பிருக்கிறது”, எனவும் தெளிவாகக் குறிப்பட்டிருந்தது.
டிஐஜி ,”பொக்கிஷத்துக்காக தான் அவனுங்க மூனு பேரும் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்களா?”.
பரிதி, “இருக்கலாம். ஆனா சுரங்க பாதைய ஏன் இவனுங்க தேடிப் பிடிக்கனும்?”
“ஏன்னா அந்த சுரங்கப் பாதை நிறைய கடத்தல் நடத்த தேவைபடுது. இந்தியாவ அழிக்க தமிழ்நாடு தான் முதல் குறி. அதுக்கான ஆரம்பம் தான் இந்த சுரங்கபாதை கண்டுபிடிக்கறது “,என கூறிக்கொண்டே உள்ளே வந்தான் ஒருவன்.
டிஐஜி உள்ளே வந்தவனை கண்களால் அளவெடுத்தார். 6 அடிக்கு சற்றே குறைந்த உயரம், கட்டுகோப்பான உடல்வாகு, கண்களில் எப்போதும் மின்னும் கூர்மை ,சாதாரண மனிதன் என கூறிடமுடியாத அசாதாரண செயல்களை செய்யும் வல்லமை இருப்பதாக தோன்றியது. ஏனோ அவருக்கு அவனைப் பார்த்தும் நம்பிக்கை வந்தது, பிடித்தும் விட்டது.
பரிதி தன் வழக்கமான புன்னகையுடன் அவனை வரவேற்றாள்.
“சொத் இண்டியா வோட பெஸ்ட் டிடெக்டீவ் ஏஜெண்ட்க்கு என் பணிவான வரவேற்புகள் திரு.செந்தில் குமரன் அவர்களே…..”
“கலெக்டர் மேடம் டிஐஜி கூட முக்கியமான விவாதத்துல இருக்கறப்ப வந்து தொந்தரவு குடுத்துட்டேன் போல….”, செந்தில்.
“சரியான நேரத்துக்கு தான் வந்து இருக்கீங்க செந்தில் சார் , அங்கிள் இவர் என்னோட பிரண்ட் இவரும் ஒரு டிடெக்டீவ் தான். நமக்கு உதவியா இருக்கும்னு வர சொன்னேன்” , பரிதி.
“ஹலோ சார்….”, செந்தில்.
“வெல்கம் யங்மேன்”, டிஐஜி.
“பரிதி என்கிட்ட சொன்ன விஷயத்த நீயே பண்ணிட்ட போல…”,டிஐஜி.
“இல்ல அங்கிள் அது உங்ககிட்ட குடுத்தது , குடுத்தது தான். நீங்க சொல்றவரும் நமக்கு தேவை. சொல்லப்போன இன்னும் தேவைபடலாம்”, பரிதி.
“எனக்கு என்ன நடக்குது புரியல மா . முதல்ல தெளிவா சொல்லு”, டிஐஜி.
“ஒன்னும் இல்ல சார் நம்ம நாட்டுக்கு ஆபத்து நிறைய வழிகள்ல வந்துட்டு இருக்கு.நமக்கு கண் முன்னாடி ஒரு விஷயம் நடக்கறது தெரிஞ்சி இருக்கு.ஆனா அதுல யார் யார் சம்பந்தப்பட்டு இருக்காங்க யாரோட தலைமைல நடக்குது என்ன லாபம் அவங்களுக்கு இதெல்லாம் நாம கண்டுபிடிக்கனும். நம்ம நாட்டோட இரகசியத்த காப்பாத்தனும்”, செந்தில்.
“ஆமா அங்கிள்.இன்னும் நிறைய நாம கண்டுபிடிக்கனும் அப்ப தான் நம்ம நாட்டோட அறிதான வளங்களையும் காப்பாத்த முடியும். இவர் இன்டெலிஜென்ஸ் ஏஜெண்ட் பட் இது நம்ம ரெண்டு பேர தவிர யாருக்கும் தெரிய கூடாது. இவருக்கு வேண்டிய உதவிய நீங்க செய்யனும்,” பரிதி.
“சரி பரிதி. ஆனா எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்கு “,டிஐஜி.
“உங்க சந்தேகத்த நான் சாயந்திரமா மீட் பண்றப்ப கிளியர் பண்றேன். இப்ப எனக்கு டைம் ஆச்சி பாய்”, பரிதி.
“இந்தாங்க செந்தில் சார் மெமரிகார்ட் காப்பி இதுல இருக்கு. நீங்க டிஐஜி சார் கிட்ட இனிமே பேசறத பேசிக்கோங்க”, பரிதி.
“கலெக்டர் மேடம் இனிமே தனியா போகாதீங்க “,செந்தில்.
“ஏன் செந்தில் சார்”, பரிதி.
“உங்கள போட்டு தள்ள ஒருத்தன் வந்தான் அவன அடிச்சி படுக்க வச்சிட்டு தான் உள்ள வந்தேன். இனிமே கேர்புல்லா இருங்க. கத்துகிட்ட கராத்தே நியாபகம் இருக்கு தானே? “, செந்தில்.
“அவன நான் வார்ம்அப்க்கு டிரை பண்றதுக்குள்ள உங்கள யாரு படுக்க வைக்க சொன்னா? இனிமே என்னைய தேடி வந்தா நான் தான் சாய்ப்பேன். காட் இட்”, பரிதி.
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். டிஐஜி விநோதமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
செந்தில் குமரன் சிரித்துக் கொண்டே டிஐஜியிடம் ,” ஒன்னும் இல்ல சார். அவங்க கராத்தேல பிளாக் பெல்ட். அதான் அப்படி சொல்லிட்டு போறாங்க. இது எங்களுக்குள்ள வழக்கமா நடக்கற விஷயம் தான். “
டிஐஜி ,” உங்களுக்கு இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லுங்க செந்தில் சார்”.
“செந்தில் மட்டும் போதும் சார்னு கூப்பிட வேணாம்”, செந்தில்.
“சரி நீயும் சார்னு கூப்பிடக் கூடாது”, டிஐஜி.
“ஓகே அங்கிள். நான் தங்கறதுக்கு ஒரு வீடு வேணும். அப்பறம் அன்அபிசியல்ஆ கன் புல்லட்ஸ் வேணும்.”
“சரி இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள வீடு ரெடி பண்றேன்”, டிஐஜி.
“இந்த ஊர்ல இருக்கற ரியல்எஸ்டேட் ஓனர்ஸ் , புரோக்கர்ஸ் லிஸ்ட் வேணும். இந்த டிஸ்ட்ரிக்ட் ல இருக்கற பிக் ஷாட் பிஸினெஸ்மேன்ஸ் , ஓரளவு செல்வாக்கு இருக்கற அத்தனை பேரோட லிஸ்ட் வித் டீடைல்ஸ் எனக்கு வேணும். இப்ப பசிக்கிது போய் சாப்பிடலாமா அங்கிள் நல்ல வாசனை வருது”, செந்தில்.
டிஐஜி,”சரியான ஆள் தான் நீ. வா சாப்பிடலாம். அம்மா இன்னொரு பிளேட் எடுத்து வை. உன் சமையல் வாசனை இழுக்குதாம் இவர”.
டிஐஜி மனைவி சிரித்துக் கொண்டே,” உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் போங்க. வாங்க தம்பி சாப்பிடுங்க”.
“உங்க பேரு என்ன ஆன்ட்டி?”, செந்தில்.
“என் பொண்டாட்டி பேரு பரிமளம்”, டிஐஜி.
“உங்கள கேட்டா அவரு ஏன் பதில் சொல்றாரு ஆன்ட்டி? உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு பட் நியாபகம் வர மாட்டேங்குது. ஓகே பர்ஸ்ட் சாப்பிடுறேன் அப்பறம் யோசிக்கறேன்” எனக் கூறிச் சாப்பிட்டை ருசித்துவிட்டு, ”நல்ல பேர் நல்ல சாப்பாடு . இனிமே ஆன்ட்டி கையாள அடிக்கடி சாப்பிடனும்னு ஆசைபட்றேன்”, செந்தில்.
“நீ எப்ப வேணா வந்து சாப்பிட்டு போ பா. நான் செஞ்சி தரேன்”, பரிமளம் சிரித்துக் கொண்டே கூறினார்.
டிஐஜி யோசனையுடன் சாப்பிடாமல் அமர்ந்து இருந்தார்.
“அங்கிள் சீக்கிரம் சாப்பிடுங்க நிறைய வேலை இருக்கு”,செந்தில்.
டிஐஜி மனதிற்குள் ,”இவன் என்ன இப்படி பேசறான் வயசு பொண்ணுங்க கிட்ட சொல்ற வசனம் இங்க பேசிட்டு இருக்கான். பரிதியும் முழுசா ஒன்னும் சொல்ல மாட்றா. என்ன நடக்குதுனு பாப்போம்”