1 – அர்ஜுன நந்தன்
உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஒரு கையில் துப்பாக்கியோடும், மறுகையில் ஒரு காகிதத்தோடும் எதிரில் நிற்பவனைத் துளைத்தெடுக்கும் பார்வை கொண்டு அங்கிருந்த அனைவரையும் ஆளும் அரசனின் தோரணையில் உண்மை இதானா? என்று அமர்த்தலான பார்வையுடன் யாரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பை உதிர்த்து நின்று இருந்தான் நம் நாயகன் நாகார்ஜுன இளஞ்செழியன்.
பெயருக்கு ஏற்றார் போலவே உருவமும், புத்தியும் உடையவன். மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறம், உயரம் 6 அடி 2 அங்குலம், விஸ்தீரனமான தோள்கள், சிறுவயது முதல் விளையாட்டு, உடற்பயிற்சி என செய்து வலுவேறிய உடல், மொத்தத்தில் அர்ஜுனனின் அழகு, திறமையுடன் புத்திசாதுர்யமும் சற்று கூட பெற்றவன்.
இவனின் பெற்றோர் தமிழன்பன் – அங்கயற்கரசி, தேனி மாவட்டத்தில் வசிக்கிறார்கள். மேகமலையில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து தனது உழைப்பாலும், நேர்மையாலும் முக்கிய பிரமுகராகவும், தர்ம குணம் கொண்டதால் மக்களின் மனதில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளனர். இவர்களின் இளைய மகன் தான் நமது நாயகன். இவர்களுக்கு மொத்தம் இரண்டு ஆண், கடைகுட்டி பெண்.
முதலாமவன் ஆதித்ய கரிகாலன், கடைகுட்டி நன்முகை இதழி, பெற்றவர்களுக்கு சரித்திர நாவல்களின் மேல் ஏற்பட்ட காதலினால் தான் பெற்ற செல்வங்களுக்கு சரித்தர பெயரைத் தேடி தேடி வைத்து அழைத்து மகிழ்ந்தனர்.
ஆதித்யன் தொழிற்கல்வி முடித்து விட்டு தந்தையின் தொழில்களை பொறுப்பேற்று திறம்பட நடத்திவருகிறான். மேலும் தனக்கென்று ஓர் சுயதொழிலும் தொடங்கி வெற்றிகரமாக முன்னேறி வருகிறான். நன்முகை இதழி, பெயருக்கேற்றார் போல பிரகாசமான அழகுடன் அறிவும் பெற்றவள்.
தமையன்கள் சிங்கமாய் இருக்க, இவள் பெண் புலியென வலம் வருகிறாள். படித்து கொண்டே மூத்த சகோதரனுக்கு துணையாய் தொழிலில் உதவி கொண்டிருக்கிறாள். மேற்பார்வை மட்டுமின்றி அடிமட்ட தொழிலாளர் வரை நலம் விசாரித்து வேலை சரியாக நடக்கிறதா என பார்த்து கொண்டே தட்டி கொடுத்து வேலை வாங்கும் திறன் பெற்றவள்.
நம் நாகார்ஜுன இளஞ்செழியன் தொழிலில் நாட்டம் கொள்ளாமல், புலனாய்வு துறையில் விருப்பம் கொண்டு இணைந்து கொண்டான். அவன் கையில் எடுத்த அத்தனை கேஸ்களும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு மிக முக்கியமான உயர்ந்த பதவியில் இருக்கிறான். உடன்பிறந்தவர்கள் தவிர யாருக்கும் இவன் வேலை பற்றி தெரியாது.
அவனுடன் பணிபுரிவது என்பது கத்தியில் நடப்பதை போன்றது. அவன் நண்பன் முகேஷ் நந்தன் மட்டுமே அவனை சரியாக புரிந்து நடப்பவன். உயர் அதிகாரியாக இருந்தாலும் இவனை பற்றி அறிந்தவர்கள் இவன் வேலையில் தலையிடாமல் அவன் செய்வதே சரியென்று அமைதியுடன் ஒதுங்கிவிடுவர்.
அர்ஜுனனின் அமைதியே பெரும் ஆயுதம். நந்தன் அர்ஜுனுக்கு சமமான திறம் பெற்றவன் , சற்று வாய் அதிகம்.
அர்ஜுன் நின்றிருக்கும் தளத்தில் 5 பேர் ஒருவனை அடித்து பிழிந்து கொண்டிருந்தனர். அவன் கையில் இருக்கும் காகிதத்தில் தமிழ்நாட்டின் டாப் டென் பணக்காரர் ஒருவரின் முழு விவர தகவல் இருந்தது.
அர்ஜுன், “நந்து … ஏதாவது சொன்னானா அவன்?”
நந்து , “முன்ன சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கான். இங்க வச்சி இவனை விசாரிக்கறது வேஸ்ட் “
கதிர் , “சார் ஒரு பொண்ணோட போட்டோ இருக்கு, தனியா சர்ட்குள்ள வச்சி இருந்தான்”
அர்ஜுன் நந்துவை முறைத்தான். அவன் கதிரிடம் போட்டோவை வாங்கிக் கொண்டு இரண்டு மிதி மிதித்துவிட்டு வந்தான்.
நந்து ,”சும்மாவே இன்னிக்கி இவன் ஏக கடுப்புல இருக்கான், இதுல நான் அந்த நாதாரிகிட்ட பயோடேட்டா மட்டும் தான் இருந்தது -னு சொல்லிட்டேன். அந்த மும்பைகாரன் கூட நமக்கும் 3rd டிகிரி ட்ரிட்மெண்ட் நடக்கும் போலவே, எப்படி சமாளிக்கறது?”, யோசித்துக் கொண்டே அர்ஜுனிடம் போட்டோவை கொடுத்தான்.
போட்டோவில் இருந்த பெண் பார்க்க தமிழ் பெண் போல இருந்தாள்.
பெண்மையும், கம்பீரமும் கலந்து குர்தி ஜீன்ஸ் அணிந்து, கண்களில் கூலர்ஸ், கையில் காப்பு மற்றொரு கையில் ஸ்மார்ட் வாட்ச் என பழமையும் புதுமையும் கலந்து காணப்பட்டாள்.
அர்ஜுன் கதிரிடம் இந்தப் பெண்ணை பற்றி விசாரிக்கச் சொன்னான். 24 மணிநேரத்தில் அப்பெண்ணின் முழுவிவரமும் வந்தாகவேண்டும் என்ற கட்டளையுடன்.
அர்ஜுனும் நந்துவும் அந்த மும்பைகாரன் யார், எதற்காக வந்தான், யார் அனுப்பியது என்றெல்லாம் கேட்கவில்லை. எப்படி விசாரணை நடக்குதுன்னு நீங்களே பாருங்க.
“பாலாஜி இவன் நம்ம விசாரனைல எப்படி சாவான்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” , நந்து.
“இவன் செத்துட்டா நமக்கு எந்த எவிடன்ஸ்ம் கிடைக்காதே சார்?”, பாலாஜி.
“முகில் பாலாஜிக்கு புரியல போல நீங்க சொல்லுங்க” , நந்து.
“வாடர் டேப்ல படுரணமா வலி தாங்காம சாவான், சால்ட் பெட்ல எரியுது னு கத்திகிட்டே சாவான். இல்லன்னா……” , முகில்.
“இல்லன்னா எப்படி சொல்லுங்க முகில்” , நந்து.
“நீங்க அர்ஜுன் சார் கிட்ட திட்டு வாங்கறத கேட்டே செத்துருவான். கதிர் போட்டோவ குடுத்து உங்கள மாட்டி விட்டுட்டுடாரு”, முகில்.
“டேய் ஏன்டா? அவனே கம்முன்னு இருக்கான் நீ உசுப்பி விட்றியா ?” , நந்து.
நந்து அர்ஜுனைப் பார்க்க, அவன் மும்பைகாரனைக் கண்களால் அளந்து கொண்டு இருந்தான்.
அந்த மும்பைகாரனிடம் முக்கியமான தகவல் இன்னும் ஏதோ இருப்பதாக நினைத்தான் அர்ஜுன். அதனால் மற்றவர்கள் பேசியதைக் காதில் வாங்காமல் தன் முன் இருப்பவனை கண்களால் ஸ்கேன் செய்து கொண்டு இருந்தான்.
அவர்கள் அடித்த அடியில் உடல் முழுக்க இரத்தம் கசிந்து மயங்கிவிழும் நிலையில் தான் இத்தனை பேச்சு நடந்தது.
நம் அர்ஜுன் கண்களில் ஏதோ தட்டுபட, அவன் உடலில் காதிற்கும் பின்னங்கழுத்திற்கும் மத்தியில் சதையை பிடித்து இழுத்தான் . கொஞ்சம் சதையும் ஒரு அதி நவீன சிறிய அளவு பென்டிரைவ் கையுடன் வந்தது.
அதை கண்ட மற்றவர்கள் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தனர்.
நந்து கதிரிடம், “ஏன்டா ஒழுங்கா செக் பண்றேன்னு என்னை மாட்டிவிட்டியே இப்போ பாரு மொத்தமா மாட்டிகிட்டிங்க. அந்த மொத்து மொத்துனீங்க ஒருத்தனும் தலைல கை வச்சு பாக்கலியா டா?”
பாலாஜி அர்ஜுனிடம் இருந்து அந்த பென்டிரைவ் வாங்கி லேப்டாப்ல் கனெக்ட் செய்தான்.அது மிகவும் அட்வான்ஸ்டு மாடல்.
பாலாஜி , “சார் இதுல தப்பான பாஸ்வேர்ட் போட்டா இந்த பென்டிரைவ்ல இருக்கற டேட்டா எல்லாம் தானே அழிஞ்சிடும். இப்ப தான் இந்த டெக்னாலஜி புதுசா வந்து இருக்கு. மார்கெட்ல கூட ட்ரையல் தான் விட்டு இருக்காங்க. இவன்கிட்ட இது இருக்குன்னா பெரிய இடம் தான் இதுல சம்பந்தப்பட்டு இருக்கும்னு நினைக்கிறேன்”
நந்து, “ஹேக்கர்ஸ் வச்சி ஓபன் பண்ண முடியாதா?”
பாலாஜி, “இல்ல சார் , ஹேக் பண்ண கூடாதுனு தான் தானே அழியற சிஸ்டத்த இதுல வச்சி இருக்காங்க”
சரண்,” அந்த பென்டிரைவ்ல பயோ மெட்ரிக் சிஸ்டம் இருக்கு பாருங்க கைரேகை வச்சா ஓபன் ஆகலாம்”
அர்ஜுன் நந்துவின் காதில் கிசுகிசுத்தான். நந்துவும் அவன் கூறியதை செய்ய தேவையான பொருட்களை எடுத்து வந்தான்.
தடயவியல் நிபுணனான நந்து அந்த மும்பைகாரனின் உடலில் தடயங்கள் ரேகைகளை எடுத்தான்.
அதை அர்ஜுனிடம் கொடுத்தவன் மும்பைகாரனின் உடலை ஒரு சன்னமான பிளாஸ்டிக் கவரை சுற்றி இறுக்கி கட்டினான்.
அதை கண்ட முகிலும், கதிரும் அவர்கள் வழக்கமாக செய்யும் பணியை ஆரம்பித்தனர்.
வேற ஒன்னும் இல்ல மிதிக்கறது தான். அப்படி அவர்கள் மிதிக்க ஆரம்பித்ததும் அவன் வாயில் இருந்து ஒரு சின்ன பாக்கெட் துண்டு வந்தது. உடனே அவன் அதை விழுங்கவும் அவனைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர்.
அர்ஜுன் ஒரு பைப்பை எடுத்து அவன் முதுகில் அடித்த அடியில் அந்த பாக்கெட் அவன் வாயில் இருந்து கீழே விழுந்தது.
Nice start