வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ இன்னொரு கதை இந்த மகரியின் பார்வையில் பாக்கலாம் ..
கதை தலைப்பு – தொடரும் பந்தங்கள்
கதாசிரியர் – சேதுபதி விஸ்வநாதன்
இந்த தலைப்பு பாத்ததும் தெரியும் இது ஒரு அமானுஷ்யம் கலந்த மர்ம கதை. ஆசிரியர் இந்த தலைப்புக்கு சரியா நியாயம் செஞ்சி இருக்காரு ..
முன்னோர் செய்யும் பாவம் அதனால ஏற்படர தலைமுறைகள கடந்த சாபம். நாயகன் அறிமுகமே அதை தெளிவா காட்டுது. அவனுக்கு ஏற்படும் சம்பவங்கள், வரும் கனவுகள் அதை தொடர்ந்து கேட்கும் குரல்கள் இது எல்லாம் ஆத்திகனா இருக்கற நாயகன கோவில தேடி போக வைக்குது.
நாயகி அவளை இன்னும் கொஞ்சம் நல்லா காட்சி படுத்தி இருக்கலாமோன்னு எனக்கு தோணிச்சி. இவங்களோட நண்பர்கள் அவங்க கதையின் கடைசி வரைக்கும் உதவியா வருவது நல்லா சித்தரிக்கபட்டு இருக்கு.
மனோதத்துவ முறைலையும் இதை அணுகி ஆசிரியர் நமக்கு நெறைய தகவல்கள் குடுத்து இருக்காரு.
சாபம் என்னனு கண்டு பிடிக்கவே நாயகன் ரொம்ப சிரமம் படறான். மர்மங்கறத்துக்காக எல்லாத்தையும் திகிலா காட்டாம எதார்த்தமா அவங்க வாழ்க்கை முறையை சொல்லி இருக்கறது சிறப்பு.
பொன்னாத்தா அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையா சாபத்த ஏற்று அதை நிவர்த்தி செய்ய உதவும் செயல்கள், ஒரு வீட்டுக்கு பெரியவங்க எப்டி இருக்கணும்-ன்னு காட்டிச்சி.. பெண் பிள்ளைகள் ஒரு குடும்பத்துல பிறக்காதது சாபமா ? ஏன் எல்லாரும் இப்படியே பிரம்மை பிடித்து சாகறாங்க ? இந்த கேள்வி எல்லாம் நமக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு..
சாபம் அறிய கண்டிப்பா ஒரு கடந்த காலம் போயிட்டு வரோம். அந்த காட்சிகளும் அழகா, வீரத்தோட இருக்கும் தெய்வானை, செய்யற தப்பை நிதானமா யோசிச்சி ஒவ்வொரு அடியா எடுத்து வச்ச குலசேகரன், தர்மசீலன் மன்னனை எதிர்க்கிற காட்சி அமைப்பு இந்த கதையின் முக்கியமான சிறப்பு.
நரேந்திரன் தன்கிட்ட படைபலம் குறைவா இருக்குன்னு, பெண்களை போருக்கு தயார்படுத்த ஆரம்பிக்கறது நல்லா இருந்தது. ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள், பேச்சுகள் எல்லாம் மீறி தெய்வானை ஒரு பெண்கள் படையை உருவாக்கி போரில் அவங்கள சரியா பயன்படுத்தினது அருமை.
சாபம் எத்தனை வகை, அது எப்படி தொடருது ? அதை நாயகன் எப்படி நீக்கறான் ? இது எல்லாமே திக் திக் நிமிடங்களா தான் போகுது.. கொல்லிமலை ஆகாயகங்கைல இருந்து கால பைரவ மலை ஏறுற வரை நாமலே ஏறும் உணர்வு வருது.
கடைசியில் பிரபஞ்ச சக்தியின் பலன், நம்ம வார்த்தைகளுக்கு பிரபஞ்சம் கொடுக்கற பலன் எல்லாம் ஆசிரியர் அருமையா சொல்லி இருக்காரு..
ஒரு சாபம் இன்னொரு சாபத்துக்கு வழி வகுக்கும்-ன்னு அழுத்தமா இங்க பதிவு செஞ்சி இருக்காரு..
கடைசியில் அந்த நாயகன் குடும்பத்துக்கு இருந்த சாபத்த போக்கினானா ? அவன் அந்த சாபத்துல இருந்து விடுபட்டானா ? இது எல்லாம் அந்த கதைய படிச்சி தெரிஞ்சிக்கோங்க ..
இது ஆசிரியருக்கு முதல் நாவல். அதனால சிற்சில தடுமாற்றங்கள் இருந்தது, ஆனாலும் ஆசிரியர் கதைய அருமையா குடுத்து இருக்கார். அவர் சொல்ல வந்தது கண்டிப்பா எல்லாருக்கும் புரியும் வகைல சொல்லி இருக்கறது அவரோட பலம்.
இன்னும் நிறைய கதைகளை ஆசிரியர் நமக்கு கொடுக்க மனமார்ந்த வாழ்த்துகள் ..
இந்த புத்தகம் வாங்க விரும்பறவங்க கீழ இருக்கற வலை தளத்தில் வாங்கலாம்..
https://www.wecanshopping.com/thodarum-banthangal
https://www.udumalai.com/thodurum-banthaggal.htm
மீண்டும் இன்னொரு கதையோட நம்ம மகரியின் பார்வையில் சந்திக்கலாம்..
இந்த காதசிரியர் பத்தி தெரிஞ்சிக்கணுமா?
இந்த லிங்க்-ல பாருங்க :
சேதுபதி விசுவநாதன்