வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
கதை தலைப்பு : சித்ராங்கதா
கதாசிரியர் : தமிழ் மதுரா
ஒரு சில கதைகள்ல மட்டும் தான் நாமலே வாழ்ந்த உணர்வு வரும். நாமலே அழுது..
நாமலே சிரிச்சி….
நாமலே காதலிச்சி…
நாமலே வெட்கபட்டு…
நாமலே கோவப்பட்டு…
நாமலே காதல சொல்லி…
நாமலே வாழ்க்கைல அடிவாங்கி..
நாமலே வாழ்க்கைய ஜெயிச்சி….
இப்படி எல்லாமே நாமலே செய்யறமாதிரி ஒரு உணர்வு குடுக்கற எழுத்து எல்லாம் எவ்ளோ பெரிய பெருமையான வார்த்தை சொன்னாலும் அதுக்கு ஈடாகாது…
அப்படி ஒரு எழுத்து… நம்ம உடல் பொருள் ஆவி அத்தனையும் அதுக்குள்ள இழுத்து நமக்கு இன்னொரு பிறவிய குடுக்கும்.
அப்படி ஒரு பிறவியா நான் வாழ்ந்த கதைகள்ல இதுவும் ஒன்னு…
ஒரு அழகான, ஆழமான, உணர்ச்சிமிக்க காதல் கதை…
சரயு, ஜிஷ்ணு, ராம்…. இவங்க மூனு பேரும் தான் மொத்த கதையும்.
ஆனா இவங்களுக்குள்ள இருக்க புரிதல், காதல், நட்பு எல்லாம் ஆசிரியர் காட்டின விதம் எல்லாம் மனசுல ஒவ்வொரு நொடியும் தாக்கும்…
வீட்டுக்கு கடைக்குட்டி சரயு அம்மா இறந்த அப்பறம் சந்திக்கும் இன்னல்கள், பெரிய இழப்புகளை கடந்து எப்படி வாழறா ?
ராம், சரயு, ஜிஷ்ணுவோட சந்திப்புகள், அவங்க செய்யற கலாட்டா, ஜிஷ்ணுக்கு கிடைக்கும் தூய்மையான அன்பு எல்லாம் படிக்கறப்போ மனசுல சந்தோஷத்த உணர முடியும்.
எதிர்பாராத பல திருப்பங்களோட, நம்மலையும் அந்த எழுத்துல கட்டி இழுத்துட்டு போய் கடைசில நிக்க வைக்கறாங்க.
கதை கொஞ்சம் பெருசு தான், ஆனா பாருங்க மனசு மறுபடியும் முதல்ல இருந்து போலாம்னு அடம் பிடிக்கும்….
அப்படி மறுபடியும் மறுபடியும் எல்லாரையும் படிக்க தூண்டுற கதை தான் நம்ம “சித்ராங்கதா”
இந்த தலைப்போட அர்த்தம் காதலனையே நினைச்சி வாழ்ந்த அர்ஜுனனோட ஒரு மனைவியின் பெயர்…
அந்த பேருக்கும் இந்த கதைக்கும் எப்படியான சம்பந்தம் இருக்குன்னு படிச்சி பாத்துட்டு சொல்லுங்க….
நம்ம தமிழ் மதுரா சிஸ்டரோட ஒரு மைல்கல்-ன்னு இந்த கதைய சொல்லலாம்..
இந்த கதை படிக்கணுமா ?
இதோ கதை லிங்க் :
இந்த கதாசிரியர் பத்தி தெரிஞ்சிக்கணுமா ?
இதோ இந்த லிங்க் குள்ள போய் பாருங்க:
தமிழ் மதுரா