22 – காற்றின் நுண்ணுறவு
“ஹேய்…. லிவ் மீ….. என்ன பண்ணீங்க என்னை?”, நிரல்யன் குரல் பலவீனமாக ஒலித்தது.
“நீ பேசினத வச்சி நீ என்ன முடிவுக்கு வந்திருந்தன்னு எனக்கு தெரியும் நிரல்யன். என் ஆராய்ச்சிக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்கள சும்மா விடமாட்டேன். அந்த பொண்ண நீ கொண்டு வரல…. ஆனா நானே அவள இங்க கொண்டு வரமுடியும்… பாக்கறியா?”, மாமல்லன் அதிகபட்சத் தலைகனத்துடனும், திமிருடனும் கூறினான்.
“உன்னால முடியாது”, என நிரல்யன் கஷ்டப்பட்டுப் புன்னகைத்துக் கூறினான்.
“எதையும் முடிச்சி காட்றது தான் என் பழக்கம்”, எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நிரல்யன் மீண்டும் மயக்கத்திற்கு சென்றிருந்தான். மாமல்லன் அவனுக்கு கொடுத்திருந்த மருந்தின் வீரியம் அவன் மூளை தவிர மற்ற அனைத்தையும் மறத்துப் போக வைத்தது. உடல் அசைவுகள் ஏதுமின்றி ஜடம் போலப் படுத்திருந்தான்.
அவன் மூளையின் பெரும் பாகம் அவனின் தங்கை சாக்க்ஷி ஆக்கிரமித்திருந்தாள்.
அதனால் எமோஷன்ஸ் மானிட்டரில் அதிகபடியான சிகப்பு நிறக்கோடுகள் ஒளிர்ந்தது. சாக்க்ஷி தன் அண்ணனை காணாமல் தவிக்கத் தொடங்கினாள்.
அங்கே காட்டு பங்களாவில் நாச்சியாவும், ராகவியும் அந்த அறையை தங்களால் முடிந்தவரை அலசி ஆராய்ந்துவிட்டிருந்தனர்.
ம்ரிதுள் கூறிய பஸ்ஸலுக்கான விடையை நெருங்கியதாக உணர்ந்தாள் நாச்சியார்.
“ஹாய் ப்யூட்டி கேர்ள்ஸ்…. உங்களுக்காக லஞ்ச் ரெடி… வாங்க சாப்பிடலாம்”, ம்ரிதுள் உற்சாகமாக அழைத்தான்.
“இந்த செட்டப்போட நாலு முக்கியமான பீஸஸ் மிஸ் ஆகுது”, நாச்சியார்.
“அப்படியா?”, ம்ரிதுள் மலர்ந்த முகத்துடன் கேட்டான்.
“ஆமா…. அப்பறம் இது எல்லாம் ஒவ்வொரு வகையான உலோகத்துல செஞ்சி இருக்காங்க… இது எல்லாத்தையும் இணைக்கற பகுதி இது அத்தனையும் இழுத்து நிக்க வைக்கறமாதிரி இருக்கணும்”, ராகவி.
“ம்ம்… இன்ட்ரெஸ்டிங்”, கைக்கட்டி அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நீங்க இதெல்லாம் எங்க இருந்து திருடினீங்க?”, நாச்சியார் முகத்துக்கு நேராகக் கேட்டாள்.
“உனக்கு இவ்வளவு தைரியம் இருக்க கூடாது நாச்சியார். அதனால தான் நீ இங்க இருக்க… உன்னால உன் டீமும் கஷ்டப்படுது…. முதல் சாப்ட வாங்க, உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு”, எனக் கூறிவிட்டு மலர்ந்த முகத்துடனே வெளியேறினான்.
நாச்சியாரும் ராகவியும் சாப்பிட டைனிங் ஹால் செல்லும் பாதையில் இருக்கும் ஒரு அறையில் வலியில் யாரோ அலறும் சத்தம் கேட்டது.
“ஆஆஆஆஆ….. வேணாம் விட்று…. எனக்கு தெரியாது… நான் எடுக்கல…. எல்லாமே ஒரே பார்சல்ல தான் போட்டேன்”, என ஜிதேஷ் அலறும் சத்தம் இவர்களுக்கு தெளிவாகக் கேட்டது.
அங்கிருந்த ஜன்னலை நாச்சியார் லேசாகத் திறந்துப் பார்த்தாள்.
எதிரே ஒரு பக்கம் ஜிதேஷ் கைகால்கள் கட்டப்பட்டு, நாற்காலியில் பிணைத்து வைக்கப்பட்டிருந்தான்.
மற்றொரு பக்கம் அதித் ஒவிஸ்கர் லைவில் ஜிதேஷ் ரணப்படுவதை கண்டு இரசித்துக்கொண்டிருந்தான்.
“அப்ப அந்த இரண்டு பொருள் மட்டும் எங்க போச்சி? யார் எடுத்தா?”, அதித் மிக மிருதுவான குரலில் கேட்டான்.
“எனக்கு தெரியாது பாஸ்…. ப்ளீஸ் என்னை உயிரோட விட்றுங்க”, எனக் கதறினான்.
தலையில் சூடான மெலுகு ஊற்றி, அதற்கு மேல் ஹேர்செட்டிங் ஜெல் தடவி நன்றாக நிற்கவைத்து ஒவ்வொரு முடியாக ம்ரிதுள் சிரமமே இன்றி பிடுங்கிக்கொண்டிருந்தான்.
முதலில் சூட்டினில் வலி தெரியாமல் எரிச்சலை மட்டும் உணர்ந்தவன் நேரம் ஆக ஆக ஒவ்வொரு முடிக்கும் இரத்தம் வழிவதில் வலி உணர்ந்து உச்சகட்ட குரலில் கதறிக் கொண்டிருந்தான்.
ம்ரிதுள் அவன் கைகால்களை சுத்தம் செய்ய உத்திரவிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து அவன் ஒவ்வொரு விரலாக வெட்டி ஒரு கூடையில் போட்டுக்கொண்டிருந்தான். அதன் பின் ஜிதேஷின் உடையைக் களையச் சொல்லி உடலின் ஒவ்வொரு நரம்பையும் கொறடா வைத்து இழுத்து விட்டதில் ஒவ்வொரு நரம்பும் அறுபட்டு உள்கசிவு ஏற்பட ஆரம்பித்து மயங்கிச் சரிந்தான்.
இதையெல்லாம் பார்த்து ராகவி பயந்து நடுங்கி நாச்சியாரின் பின்னால் ஒளிந்துக் கொண்டு, ” போலாம் பேபி… எனக்கு பயமா இருக்கு… இங்க இருக்க வேணாம்… எப்படியாவது தப்பிச்சி போயிடலாம்… ப்ளீஸ் பேபி… ப்ளீஸ்”, முழுதாக சத்தம் வெளியே வராமல் கெஞ்சினாள்.
“போலாம் ரா… நீ பயப்படாத…. நமக்கு ஒன்னும் ஆகாது”, என சமாதானம் கூறி முன்னால் நகரும் போது ம்ரிதுள் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
நாச்சியார் ஒரு நொடி உள்ளே பயந்து தன்னை சமன் செய்துக்கொண்டாள்.
“அடடா… இரண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா… வாங்க சாப்பிட போலாம்…. நான் வரதுக்குள்ள சாப்ட்ருவீங்களோன்னு நினைச்சேன்”, ம்ரிதுள் உற்சாகமாகப் பேசியபடி முன்னே நடந்தான்.
“அந்த ஸ்கீரீன்ல இருக்கறது யாரு?”, நாச்சியார் அதித் படத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்”, என யோகேஷ் பதிலளித்தான்.
“எங்களுக்கு பிடிக்காத தேவையில்லாத நிறைய விஷயங்கள நீங்க செய்ய வைக்கறீங்க… அவன் பேர் சொன்னா நாங்க அவன எதாவது பண்ணிடுவோம்னு நினைக்கறீங்களா?”, நாச்சியார் இளக்காரமாக கேட்டாள்.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு தெனாவட்டு இருக்க கூடாது நாச்சியா… உங்களால என்ன புடுங்க முடியும்னு இவ்வளவு அதுப்பு உனக்கு?”, யோகேஷ் அவளிடம் இறங்கிப் போக விருப்பமின்றிப் பேசினான்.
“இவ்வளவு நேரம் இவன் புடுங்கினதுல மட்டும் என்னத்த சாதிச்சீங்க நீங்க இரண்டு பேரும்”, என நாச்சியா கேட்டதும் யோகேஷ் ஆத்திரப்பட்டுக் கையோங்கினான்.
நாச்சியா அவன் இதயத்தில் அழுத்தம் கொடுத்து, விலாவை உதைத்து, இரண்டு கைகளையும் பிடித்து, பின்பக்கமாகக் கொண்டுச் சென்று மடக்கினாள்.
வலி தாங்காமல் யோகேஷ் கதறவும், அடியாட்கள் துப்பாக்கியுடன் நாச்சியாவை குறிவைத்து நின்றனர்.
“ரிலேக்ஸ் காய்ஸ்….. இரண்டு பேர் மட்டும் யோகேஷ தூக்குங்க… நாச்சியா அவன விடு… உன் வித்தை நல்லா இருக்கு.. இது வர்மக்கலை தானே…. முறையா தான் கத்திருக்க போல… நல்ல வேகம்… ஆனா ஒரு பொண்ணுக்கு இத்தனை வேகம் ஆச்சிரியமா தான் இருக்கு…. “, எனக் கூறியபடி யோகேஷ் அருகில் வந்து அவனை நிற்கவைத்து இரண்டு தோள் பட்டையிலும் அழுத்தம் கொடுத்து கைகளை முன்னே திருப்பினான். பின்னர் இதயத்திற்கு அருகிலும் பின்பிக்கமும் அழுத்தம் கொடுக்க யோகேஷின் மூச்சுத் திணறல் நின்றது. ஒரே நிமிடத்தில் யோகேஷ் மீண்டும் பழையநிலைக்கு திரும்பி இருந்தான்.
நாச்சியா அவனை ஊடுருவும் பார்வைப் பார்த்துவிட்டு, ராகவியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ம்ரிதுள் இப்பவும் அவள ஒன்னும் பண்ணப்போறது இல்லையா நீ?”, இருமியபடிக் கேட்டான் யோகேஷ்.
“ஆட வெட்றதுக்கும், அத வேக வைக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு தான் அருவால தூக்கணும்… ஏற்பாடு பண்ணு”, எனக் கூறிவிட்டு மீண்டும் ஜிதேஷ் இருந்த அறையில் புகுந்துக் கொண்டான்.
“பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பாரு .. எப்ப அவளோட மொத்த டீமும் இங்க வரும்?”, ம்ரிதுள்.
“நடுவுல பாரஸ்ட்செக் போஸ்ட்ல இருந்த நம்ம ஆளுங்கள மாத்திட்டாங்க போல… அதான் லேட் ஆகுது… வண்டி வரமுடியல… பார்டரும் தாண்ட முடியல…. “
“இங்கிருந்து இருபது பேர அனுப்பு… நடக்க வச்சி கூட்டிட்டு வரட்டும். ஒரு பொருள் கூட மிஸ் ஆகக்கூடாது…. “, எனக் கூறிய ம்ரிதுள் கண்கள் மின்னலென ஜொலித்தது.
“சரி ம்ரிதுள்”, என யோகேஷ் இருவரின் உதவியோடு மெல்ல நடந்தான்.
“உடம்பு செட்-அப்பயே திருப்பிட்டு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்தா போதுமா? சரியான சைக்கோங்க எல்லாம்…..சே…. அந்த சார்லஸ் மட்டும் சுழல்ல மாட்டாம இருந்திருந்தா இவன் இங்க வந்தே இருக்க மாட்டான். அந்த ஜேக் இன்னும் கண்ணுமுழிக்கல…. எனக்கே இப்படி இருக்கு… அந்த டீம் என்னாச்சோ தெர்ல…. “, என முனகியபடி நடந்தவனை ம்ரிதுள் அழைத்தான்.
“எந்த செக் போஸ்ட்ல ஆள மாத்தி இருக்காங்க?”, யோசனையுடன் கேட்டான்.
“**********லையும், ************** லையும் மட்டும் மாத்தி இருக்காங்க… “, யோகேஷ்.
“ஷிட் ஷிட்…. யாரோ பாலோ பண்றாங்க…. அதகூட கவனிக்காம என்ன பண்ணிட்டு இருக்க நீ? உடனே அவங்கள வரவேணாம்னு சொல்லு… யாரும் இந்த அருவி பக்கத்துல வரவே கூடாது….. உடனே சொல்லு…. இடியட்… யூஸ்லெஸ் ****க்கர்”,என திட்டிவிட்டு யாரையோ தொடர்புக் கொண்டான்.
வெகு நேரமாக அழைப்பு மணி அடித்துக்கொண்டே இருந்தது. கால் மணிநேரம் கழுத்து மீண்டும் அலைபேசி அலற,” ஹாலோ….”, என்றொரு குரல் ஒலித்தது.
“யார் நீ? “, ம்ரிதுள் கம்பீரமாகக் கேட்டான்.
“நீ யாருன்னு சொல்லு நான் யாருன்னு சொல்றேன்”, யாழினியனும் கனீரென பதில் கொடுத்தான்.
“அசிஸ்டண்ட் கமிஷ்னர் யாழினியன்…. நீ இவ்வளவு தூரம் வந்துட்டியா? க்ரேட்”, எனப் பாராட்டினான்.
“பரவால்லயே அந்தளவுக்கு நான் பேமஸ் ஆகி இருக்கேன் போலவே…. கொஞ்ச தூரத்துல தானே நீயும் இருக்க… சீக்கிரமே மீட் பண்ணலாம்”, எனக் கூறி யாழினியன் வைத்து விட்டு அங்கிருந்த பொருட்கள் அத்தனையும் வேற இடத்திற்கு மாற்ற உத்திரவிட்டு விட்டு தர்மதீரனுக்கு அழைத்தான்.
“ப்ரோ….. பெருச்சாளி சிக்கிடிச்சி”, என சந்தோஷமாகக் கூறினான்.
“அவன் மூனுதலை பாம்பு.. அவனுக்கு மேல ஒருத்தன் இருக்கான்னு இப்ப தான் தகவல் வந்தது… நாம ஒரு இடத்துக்குப் போகணும்… சொல்றப்ப உடனே கிளம்பி வா இனியா”, அடிபட்ட வெறியில் வார்த்தைகளைத் துப்பினான்.
“சஸ்பெண்ட்ல தானே இருக்கேன். எப்ப கூப்டாலும் வரேன் ப்ரோ…. இங்க இருக்கற சரக்க நீங்க சொன்ன இடத்துக்கு தானே அனுப்பனும்?”, யாழினியன்.
“இல்ல … நாச்சியா வீட்டுக்கு அனுப்பிடு”, எனக் கூறி மேலும் சில விஷயங்களை விவாதித்துவிட்டு வைத்தான்.
அதித் ஒவிஸ்கர் ஜேக் கண் முழித்ததாக தகவல் வந்ததும், அவனை தன் இருப்பிடம் அழைத்து வர உத்திரவிட்டான்.
“பாஸ்… அவன் பாடி கண்டிஷன்ல இப்ப இங்க கூட்டிட்டு வரமுடியாது”, உடன் இருந்தவன் கூறவும், “அப்ப அவன நான் போய் பாக்கணுமா?”, எனக் கோபமாக கேட்டான்.
“இல்ல பாஸ்… இன்னும் இரண்டு நாள்ல நடக்க ஆரம்பிச்சிடுவான்னு சொன்னாங்க…. அவனே வந்து பாக்கவைக்கலாம்…. அந்த டைஸி டீம் தான் என்ன பண்றதுன்னு உங்கள கேக்கறாங்க”, என தயங்கித் தயக்கிக் கூறினான்.
“டைஸி”, என மென்மையாக உரைத்துவிட்டு, “அவள கிளம்பி இன்னிக்கு நைட் டீம்மோட இங்க வரச் சொல்லு…. பேசிக்கலாம்”, என மென்னகையுடன் உரைத்துவிட்டு அருகில் இருக்கும் மதுபாட்டிலைத் திறந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகப் போதை ஏற ஏற, “டைஸி….. மை ஸ்வீட் டார்லிங்…. ஐ லவ் யூ…. மிஸ்ஸிங் யூ சோ மச்…. “, என உளற ஆரம்பித்தான்.
டைஸிக்கு தகவல் அனுப்பியதும் அவளும் பறக்க ஆரம்பித்திருந்தாள் மிகுந்த பயத்துடன்….