வினையெல்லாம் வினைதானா?
நீங்காத கறையாக….
குறையாத மணமாக…..
விதைத்தவை அனைத்தும்….
நம் கண் முன்னே முளைத்திடுமா?
முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?
எவ்வினையும் உன்வினைதான்…
ஆனால்…
நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல…..
ஆற்றும் வினைதான்…
ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு….
எதிர்வினையோ…
உள் வினையோ…..
நேர்மறையோ…
எதிர்மறையோ….
ஆற்றும் வினையின் ஆரம்ப புள்ளியில்….
அதற்கான எதிர்வினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிடு….
– ஆலோன் மகரி