வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் –சித்ரா பாலாஜி
2. படிப்பு -M.com
3. தொழில்/வேலை – இல்லத்தரசி
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
2016 ல் இருந்து தான் என் வாசிப்பு தொடங்கியது…… கல்யாணம் ஆன பிறகு தான் நான் படிக்க ஆரம்பித்தேன்…..
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?
பொதுவாகவே என்னுடைய நேரம் படிக்கிறதுல தான் கழியும்….. ரொம்ப
மனஅழுத்தம் இருக்கும் போது கண்டிப்பா படிப்பேன்…..
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
செல்பேசி வழியில் தான் ..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
நான் இது வரைக்கும் புத்தகம் வாங்கினது இல்ல மா…… ஆன்லைன் la உள்ள கதைகளை தான் படிச்சிகிட்டு இருக்கேன்… பரிசா வந்த புத்தகம் தான் இருக்கு ..
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
ரெண்டுலயும் தான்….. எனக்கு பெரிசா வித்தியாசம் தெரியல ரெண்டுதுக்கும்..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
என்னுடைய கவலைகளை என்னால மறக்க முடியுது வாசிக்கும் போது… Romba relaxed feel panren..
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
அப்படி ஒண்ணும் சொல்ற மாறி எதுவுமே இல்ல மா..
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
தலைப்பு, ஆசிரியர், முன்னுரை ..
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்?(சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், வரலாறு.. சரித்திரம்.. புராண கதைகள்..
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நான் தினமும் பாக்குற ஒரு நபரா தெரிகிறார்கள்..
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அப்படி எதுவும் இல்லை.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்கள் அன்றைய காலத்தை சார்ந்து எழுதினார்கள். இன்றைய காலத்தவர் இன்றைய காலத்தை வைத்து எழுதுகிறார்கள்.
ஆனால் இன்றைய கதைகளில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக கஷ்டங்கள் இருப்பது போல காட்டுகிறார்கள். இன்றைய சமூதாயத்தை வெளிபடுத்துவது போல ஒரு சிலர் எழுதுகிறார்கள்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.. இன்று கதைகளை படித்து படித்து ஓரளவு தமிழை தடுமாற்றம் இல்லாமல் படிக்கிறேன். என்னை பொறுத்தவரையில் தமிழ் வளர்கிறது..
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
வழக்குமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி எல்லாமே ..
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
இதுவரை வரலாற்று நாவல்கள் படித்தது இல்லை. பொன்னியின் செல்வன் படிக்க ஆசை கொண்டுள்ளேன்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
இன்றைய கதைகளில் இயல்பு குறைவாக இருப்பதாக உணர்கிறேன்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
பிடிக்கும். நிச்சயம் படிப்பேன்..
கண்டிப்பாக வித்தியாசமான கரு கொண்ட கதைகள் ரொம்ப பிடிக்கும்
அறிவியல் சார்ந்த கதைகள் விரும்பி படிச்சி இருக்கேன் ..
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
என்னோடய வேலைகள் போக மத்த நேரம் முழுக்க வாசிப்புக்கு ஒதுக்குவேன்…
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
விமர்சனம் கண்டிப்பா கொடுக்கிறேன் நான் வாசித்த கதைகளுக்கு….
என்னோட விமர்சனம் முலமாக தான் அவங்க தவறுகளை சுட்டிக்காட்டுறேன்..
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
நான் படித்த எல்லா கதையுமே எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள் தான் ..
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள்என்ன?
பெண்களுக்கும்…. குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிக்கு, கதைகளில் மட்டுமே தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கிறது, நிஜத்தில் நிறைய பேருக்கு தண்டனை கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருக்கிறது .. இன்று பெண்களும், குழந்தைகளும் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று தெரிகிறது..
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
அன்று புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும். இன்று கைப்பேசி இருந்தால் போதும். அதே போல நிறைய பேர் எழுதும் வாய்ப்பும் அமைகிறது. என்னை பொறுத்தவரையில் இன்றைய எழுத்து உலகம் விரிந்து தான் உள்ளது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை..
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள்:
ரமணிசந்திரன்
ராஜேஷ் குமார்
காஞ்சனா ஜெயதிலகர்
இன்றைய எழுத்தாளர்கள்:
கொஞ்சம் லிஸ்ட் பெருசு தான்.. ஆனாலும் இவங்க கதைகள் எல்லாம் நான் தவறாம படிச்சிட்டு வரேன். அதனால சொல்றேன்..
ஸ்ரீகலா
jb
n . சீதாலக்ஷ்மி
இன்ஃபா அலோசியஸ்
நிவேதா ஜயந்தன்
தமிழ் மதுரா
அருணா
வநிஷா
கவி சந்திரா
சரண்யா ஹேமா
ராஜி அன்பு
ரிது வெங்கட்
ஜனனி நவீன்
தாமரை
நயனி
மத்தவங்க கோச்சிக்காதீங்க பா..
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எதிர்பாராத திருப்பங்கள், இயல்பு, தடைபடாத கதை போக்கு, கரு ..
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
இதை பற்றி எந்த கருத்தும் எனக்கு இல்லை…
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
நான் படிக்கும் கதைகளின் அத்தனை ஆசிரியரிடமும் வாங்க ஆசை ..
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதை போக்கு அப்படி ஒரு முடிவை தான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற மாதிரி இருந்தால் அப்படி முடிவதில் தவறு இல்லை. கருவிற்கும், கதை போக்கிற்கும் தகுந்த முடிவுகளே கதையை முழுதாக உணரவைக்கும்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
வநிஷா , ஸ்ரீகலா , இன்ஃபா இவங்க ஆடியோ கதைகள் கேட்டு இருக்கேன். கதை சொல்பவர்களை பொறுத்தே அதன் சிறப்பு இருக்கிறது.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
இருப்பதால் எந்த தவறும் இல்லை.. ஒரு முடிவு மற்றொரு தொடக்கம்.. இது இயற்கை தானே ..
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எல்லா எழுத்தாளர்களும் எல்லா வகை கதைகளையும் எழுத வேண்டும். காதல், குடும்பம், மர்மம், திகில், அறிவியல் புனைவு, வரலாறு இப்படி எல்லாமே எழுத வேண்டும்.
ஒரு கதையை ஆரம்பித்தால் கண்டிப்பாக அதை முடிக்கவும் வேண்டும்.
அதிக கால தாமதம் செய்யாமல் பதிவுகளை கொடுக்க வேண்டும்.
ஆசிரியர் எப்படி கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஒரு கதையை ஆரம்பிக்கிராறோ அப்படியே முடிக்க வேண்டும். யாருக்காகவும் அதை மாற்றக்கூடாது.
ஒரு சிறந்த வாசகரின் நேர்காணல், அவரிடம் நான் பெற்றது சில மாதங்களுக்கு முன்னால்.. இன்று இதை தளத்தில் பதிவிடுகிறேன்.. ஆனால் இதை படித்து என்னிடம் பேச அவர் நம்முடன் இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
சித்ரா சகோதரி அவர்கள் நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த வாசகி. போட்டி கதைகளில் இவர் கொடுக்கும் ஊக்கமும், கருத்தும் தான் பலரை முழுதாக போட்டியில் பங்கேற்க வைக்கும். என் sms போட்டிக்கும் இவர் தான் விடாமல் எனை ஊக்கப்படுத்தி, ஒவ்வொரு பதிவிற்கும் கருத்து சொல்வார்.
இவரின் நேர்காணலை இன்று இங்கே பதிவிடுவதில் அவருக்கு நன்றி கூறுவதாக நினைக்கிறேன். உங்களை போல வாசகர்கள் கிடைப்பது அரிது சித்ரா சிஸ்.. இத்தனை சீக்கிரம் நீங்கள் சென்றிருக்க கூடாது .. We Miss You..
வாசிப்பை நேசிப்போம்..