11 – அர்ஜுன நந்தன்
செந்தில் பரிதிக்கு அழைத்து அவசரமாக ஒரு இடத்திற்கு வரச்சொன்னான்.
நம்ம செந்தில் பரிதிக்கு போன் பண்ணதும் அவன் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தப்ப ஒரு பொண்ணு ஒருத்தனப் போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு இருந்தா.
செந்தில் அந்த பொண்ண பிடிச்சி இழுக்க முயற்சி பண்றான் ஆனா அந்தப் பொண்ணு அடிக்கறத நிறுத்தவே இல்ல.
பரத் ஒரு பக்கம் திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கறான். என்ன நடக்குதுனு புரியாம பாத்துட்டு இருக்கான்.
பரிதி வந்து அந்த பொண்ண பிடிச்சி இழுத்துட்டு வந்து,” ஏய் ரவுடி, நில்லு . ஏன் அவன போட்டு அந்த அடி அடிக்கற? யாரு அவன்?”.
“என்ன தைரியம் இருந்தா மேல கை வைப்பான் அவன். விடு டார்லிங் அவன ஒரு கை பாத்துட்டு வரேன். டேய் உன்ன சும்மா விடமாட்டேன் டா “, அவள் கத்த.
அடி வாங்கியவன் எழ முடியாமல் தப்பிப் போக முயற்சிச் செய்தான். அவள் மறுபடியும் திமிறிக் கொண்டு அவனைக் கீழேத் தள்ளி மிதிக்க.
செந்திலும் பரத்தும் அவனைக் காப்பாற்ற பரிதி அவளை இழுக்கவென ஒரே களேபரம் நடந்தேறியது சிறிது நேரத்தில்.
“ஏய் ராங்கி நில்லு. அவன கொன்னுட்டா யாரு பதில் சொல்லுவா? நீ எங்க இருந்து திடீர்னு வந்து குதிக்கற ?”, செந்தில்.
அவள் அவனை விடாது அடிக்க பரிதி இழுக்க ,”அவன கொன்னா கூட தப்பு இல்ல. விடு டார்லிங் என்னை”, அவள்.
பரிதி அவளை இழுத்துக் கொண்டு காரில் உட்கார வைத்தாள். அடி வாங்கியவனை செந்திலும் பரத்தும் அனுப்பி வைத்தனர்.
“உன் மேல கை வச்சான்னு இவ்வளவு அடி அடிக்கற. எங்க என்னாச்சி. எனக்கு கால் பண்ணப்ப தேனில இருக்கேன்னு சொன்ன. எப்ப இங்க வந்த ?”,பரிதி.
“நான் இப்ப தான் வந்தேன். இவன் பஸ் ஸ்டேன்ட்ல ஒரு பொண்ணு மேல கை வைக்க போனான் .அதான் அங்க இருந்து இவன தூக்கிட்டு இங்க வந்து அடிச்சேன்”, அவள்.
“அடிபாவி கை வைக்க போனதுக்கா இந்த அடி? உன்மேல கை வச்ச மாதிரி சாத்திட்டு இருந்த”, செந்தில் கேட்க.
“பொண்ணு மேல கை வச்சா இல்ல கை வைக்கனும்னு நினைச்சாளே அடிக்கனும். அப்பதான் பயம் வரும் இந்த மாதிரி பொறுக்கிங்களுக்கு”, அவள்.
“சரி வா வீட்டுக்குப் போலாம்”, பரிதி.
“நான் ஆல்ரெடி செந்தில் இருக்கற வீட்ல பேக் வச்சிட்டேன்”, அவள்.
“வீடு பூட்டி இருக்கு . நீ எப்படி உள்ள போன?”,செந்தில்.
“அதுலாம் ஒரு பூட்டு . இழுத்தேன் வந்துரிச்சி”, பரிகாசமாக்க் கூறினாள் அவள்.
செந்தில் கோபத்தில் காரை உதைக்க பரிதியும் பரத்தும் அவர்களை பார்த்து என்ன சொல்வதென நின்றிருந்தனர்.
பரத் பரிதியிடம் ,”இவங்க யாரு?”
“இவ தான் இன்னொரு ஏஜெண்ட்”, பரிதி.
“நீங்க ரவுடினு சொன்னிங்களே அவங்களா?” பரத்.
ஆம் என பரிதி தலையசைத்தாள்.
“சரி வீட்டுக்கு போய் பேசிக்கலாம் கிளம்புங்க . நான் நைட் வரேன்”, பரிதி.
“நான் கொஞ்சம் இந்த ஊரச் சுத்திப் பாக்கணும் .நானும் நைட் வரேன் சீனியர்”, செந்திலை பார்த்துச் சொன்னாள்.
பரத் செந்திலிடம் ,” இவங்க பேரு என்ன சார்?”.
“ஐ ம் யாத்ரா. நீ தானே பரத். வா வந்து எனக்கு ஊர சுத்திக் காட்டு”
“அவனுக்கு வேல இருக்கு. வரமாட்டான்”, செந்தில்.
“ரொம்ப பொங்காதீங்க சீனியர். அப்பறம் அக்கா பாவம். டார்லிங் எனக்கு ஒரு பைக் வேணும் நைட் குடுத்துடு. இப்ப பரத் பைக்க நான் எடுத்துட்டுப் போறேன்”, யாத்ரா.
“வந்ததும் ஆரம்பிச்சிட்டா பாத்தியா பரிதி. எனக்கு டார்ச்சர் குடுக்கறதுக்குன்னே பொறந்து வந்து இருக்கா போல”, செந்தில் கொதித்துக் கொண்டு இருந்தான்.
“விடுங்க செந்தில் இந்த கேஸ்ல இவ தான் சரி. நாம யோசிக்கறத செஞ்சிட்டு வந்து நிப்பா. நமக்கு தலவலி குடுக்கறத விட பத்து மடங்கு அவனுங்க தலைய அவங்களே ஒடச்சிக்க வைப்பா. அதிகமா யாரையும் போட்டு தள்ளாம பாத்துக்கணும் அது தான் முக்கியம்”, பரிதி.
“அதுவும் சரிதான். பிசாசு யாரையும் விடாது”, சிரித்துக் கொண்டேக் கூறினான் செந்தில்.
“சரி அப்பறம் பாக்கலாம்”, பரிதி.
“டேய் வாடா அங்க நின்னுட்டு என்ன பண்ற?”, செந்தில் பரத்தை அழைத்தான்.
“என் பைக். வெண்பா கோவிலுக்கு வர சொன்னா சார்”, பரத்.
“வாடா நான் கூட்டிட்டு போறேன். பைக் நைட் வந்துரும்னு நினைக்கிறேன். எதுக்கும் நீ இன்சூரன்ஸ் பேப்பர்லாம் எடுத்து வச்சிக்கோ”, செந்தில்.
பரத் ஙே என முழித்தபடி செந்திலின் பின்னே அமர்ந்தான்.
யாத்ரா பைக்கில் பறந்துக் கொண்டு இருந்தாள். அவளைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம்.
சராசரி உயரத்தை விடச் சற்று அதிகமான உயரம். பாலும் மஞ்சளும் கலந்த நிறம். முதல் பார்வையில் அனைவரையும் ஈர்க்கும் அவளது திமிர். தினமும் உடற்பயிற்சி செய்வதால் உரமேறிய உடல். எதையும் விளையாட்டு போல் செய்து முடிப்பவள். அவளின் பார்வையில் படாத விஷயங்கள் இல்லை என கூறுமளவு கண்கள் சுழழும். அடக்கம் பேச்சிற்குக் கூட ஒத்துக் கொள்ள மாட்டாள். ராங்கி ரவுடி என பட்ட பெயர்கள் நீளும்.
அவள் போட்டு இருந்த ஜீன் குர்தி அவளை மேலும் கம்பீரமாய் காட்ட கண்களில் கூலர்ஸ் மாட்டிக்கொண்டு ஸ்டைலாகப் பறந்தாள்.
அவள் போய் நின்ற இடம் காவ்யா ஜுவல்லர்ஸ்.
கடைக்குள் சென்றவள் கடையை முழுதாக ஸ்கேன் செய்துக் கொண்டு இருந்தாள். சந்திரகேசவன் அறைக்குள் போகமுடியாது. நகை கடைகளில் பிரதானப் பாதுகாப்பு அறைக்கு எப்பொழுதும் கண்காணிப்பு அதிகம். அவ்விரண்டு இடம் தவிர அனைத்து இடங்களையும் மனதில் பதியவைத்துக் கொண்டாள். பெயருக்கு ஒரு ஆபரணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் மனதில் ஒரு வரைபடம் தயாரித்துக் கொண்டாள். பின் அங்கிருந்து சேரலாதனின் கட்சி ஆபிஸ், அவன் செல்லும் இடங்களுக்கு அவனறியாமல் பின் தொடர்ந்து சென்றாள்.
கடைசியாக வெண்பாவின் வீட்டிற்குள் அவன் கார் நுழைந்ததும் அந்த வீட்டை சுற்றி வந்து ஆராய்ந்தாள்.
இரவு ஏறிவிட செந்தில் இருக்கும் வீட்டிற்குச் சென்றாள்.
நடு இரவு ஆனதால் பரிதியும் அங்கே வந்து சேர்ந்தாள்.
இருவரும் பைப்பைப் பிடித்து மேலே ஏறி வீட்டிற்குள் நுழைந்தனர்.
செந்திலும் பரத்தும் அவர்கள் சேகரித்த விஷயங்களைக் குறித்து கொண்டிருந்தனர்.
“சீனியர் என்ன சமைச்சி இருக்கீங்க? எனக்கு ரொம்ப பசிக்கிது”, கூறிக்கொண்டே டைனிங் டேபிளை ஆராய்ந்தாள் யாத்ரா.
“உனக்கு சமைச்சி போடவா நான் இங்க ஒக்காந்துட்டு இருக்கேன். நடுராத்திரி வரைக்கும் ஊர சுத்திட்டு இருந்தல வெளியவே சாப்பிட்டு வரவேண்டியது தானே?”, செந்தில்.
“ஒரு ரவுண்ட் சாப்டேன் இப்ப பசிக்கிது. எனக்கு சாப்பிடனும். செஞ்சி குடுங்க”, யாத்ரா.
“ஒன்னும் இல்ல செய்ய. நாளைக்கு மார்கெட் போனாதான் செய்ய முடியும்”,செந்தில்.
“என்ன சீனியர் அக்கா நியாபகத்துல வீட்ல செய்யற வேலைய பத்தி வெளிய சொல்லிட்டு இருக்கீங்க. கெத்து மிஸ் ஆகிற போகுது”, சிரித்துக் கொண்டேக் கூறினாள் யாத்ரா.
“வந்து ரிப்போர்ட் பண்ணு முதல்ல. அப்பறம் உன் வயித்துக்கு கொட்டறத பாக்கலாம்”, செந்தில்.
“ஐ.. அப்ப எனக்கு ஹாட்பேக்ல சாப்பாடு ரெடி”, என கத்திக் கொண்டே ரிப்போர்ட் செய்யப் போய் நின்றாள்.
பரத் வெண்பா கூறியதை பரிதியிடம் கூறிக்கொண்டு இருந்தான்.
“அவ வீட்ல இப்ப அவங்க அம்மாவ பாத்துக்க தான் ஒரு நர்ஸ் தேவைபடுதாம். அங்கயே தங்கி இருந்து பாத்துக்கணும். வாரத்தில் இரண்டு நாள் வெளிய போயிட்டு வர அனுமதி குடுப்பாங்களாம்”, பரத்.
“அந்த சேரலாதன் கிட்ட வேலைக்கு சேர முடியாதா?”, பரிதி.
“அவனோட வேலைக்கு அவன் பையன் தான் ஆள சேர்ப்பானாம் பரிதி. அதான் யோசிச்சிட்டு இருக்கோம். பட் எப்படி பட்ட வேலைன்னு அங்க சேந்தப்பறம் தான் சொல்லுவானுங்க”, செந்தில்.
“நான் போறேன் அவன்கிட்ட வேலைக்கு”, யாத்ரா.
“கம்முனு இரு. வேற யாராவது அனுப்பலாம் அங்க”, செந்தில் அதட்டினான்.
“யார அனுப்பினாலும் நம்ப முடியாது சீனியர். நானே போறேன். யார் எல்லாம் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்றேன்”, யாத்ரா.
பரிதி யோசனையுடன் அமர்ந்து இருந்தாள். செந்தில் யாத்ராவினை அனுப்ப மறுத்துக் கொண்டு இருந்தான்.
“பரத் உங்களுக்கு தெரிஞ்ச நர்ஸ்அ அங்க வேலைக்கு அனுப்புங்க. அப்பப்ப நமக்கு தகவல் குடுக்கற மாதிரி ஆள பாத்து அனுப்புங்க. யாத்ரா எப்ப சேரலாதன் கிட்ட ஜாயின் பண்ண போற?”,பரிதி.
“சூப்பர் டார்லிங் இதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. இன்னும் ஒரு நாள் அந்த சந்தனபாண்டியன்அ பாலோ பண்ணிட்டு போய் அவன் பையன் மூலமாவே ஜாயின் பண்ணிக்கறேன்”, யாத்ரா.
“சரி உனக்கு ஒரு வாரம் தான் டைம் நான் டெல்லி போறதுக்குள்ள நீ எல்லாத்தையும் எடுத்துட்டு வெளிய வந்துரனும்”, பரிதி.
“பரிதி இது ரொம்ப ரிஸ்க் .இவள மட்டும் எப்படி அங்க தனியா அனுப்பறது? கொஞ்சம் யோசி “, செந்தில்.
“யோசிக்க டைம் இல்ல சீனியர்”, என கூறிக்கொண்டே கதவின் திரைச்சீலை மறைவில் நின்று இருந்தவனை ஒரே அடியில் கீழே சாய்த்தாள் யாத்ரா அதே சிரிப்புடன்.
அவர்கள் அறியாமல் ஒருவன் உள்ளே இருப்பதை யாரும் கவனிக்காமல் மும்முறமாய் பேசிக்கொண்டு இருக்க யாத்ராவின் கண்களில் அவன் சிக்கினான்.
“இனிமே இந்த வீடு சேஃப் இல்ல. வேற வீடு பாக்கணும்”, யாத்ரா கூறிக்கொண்டே ஜன்னல் வழியாக வெளியே குதித்து வேறு யாரேனும் இருக்கிறார்களா எனத் தேடினாள்.
யாரும் இல்லை என தெரிந்ததும் உள்ளே வந்து அங்கிருக்கும் பொருட்களை எடுத்து கொள்ள கூறினாள்.
யாத்ராவின் சொல்படி பொருட்களை எடுத்துக் கொண்டு அவள் பின்னே வண்டியில் தொடர்ந்தனர் மற்ற மூவரும்.
அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு பங்களாவிற்குள் நுழைந்தாள்.
ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தது அந்த பங்களா. புதிதாக கட்டபட்டது என பார்த்ததும் தெரிந்தது. சுற்றி பெரிய காம்பவுண்ட் சுவர், தோட்டம் , நடுவில் அழகான அளவான வீடு.
யாத்ரா அந்த வீட்டின் கதவில் கை வைத்து அழுத்த கதவு திறந்தது. பரத் வாயை பிளந்துக் கொண்டுப் பார்க்க செந்திலும் பரிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
“இது யார் வீடு யாத்ரா?”, பரிதி.
“நம்ம வீடு தான் டார்லிங்”, யாத்ரா.
“நம்ம வீடா?”, செந்தில்.
“ஆமா சீனியர். 6 மாசத்துக்கு முன்னாடி நம்ம சேம்பர் செக்யூரிட்டி சிஸ்டம் கரெப்ட் ஆச்சே நியாபகம் இருக்கா?”, யாத்ரா.
“ஆமா அந்த மூல கெட்டவன் என்னைய கண்டுபிடிக்க சொல்லி உயிர வாங்கினான் யாரு செஞ்சான்னு கேட்டு”, செந்தில்.
“நான் தான் பண்ணேன். அந்த சிஸ்டம் ரீலோட் பண்ணப்ப நானும் ஒரு காப்பி போட்டுகிட்டேன். அத வச்சு இந்த வீட்ல சில பல வேலைகள் செஞ்சி நமக்காக ரெடி பண்ணேன். இது என் அப்பாவியான பிரண்ட் வீடு. அவன் வெளிநாட்ல இருக்கான். நாம இந்த கேஸ் முடியர வரை இங்க தங்கிக்கலாம். நோ டென்சன்”, யாத்ரா.
“அடிப்பாவி பிராடு…… என்ன என்ன வேலை பாக்கற நீ? டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் கூட நிம்மதியா இருக்க கூடாதுன்னு முடிவோட இருக்கியா நீயி?”, செந்தில்.
பரிதி பரத்தை சைகையால் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுப் பொருட்களை வைத்து விட்டு அமர்ந்தாள்.
செந்திலும் யாத்ராவும் வழக்கம் போல சண்டை போட்டுக் கொண்டு இருக்க , பரிதியை காணாமல் திரும்பி பார்த்த யாத்ரா உள்ளே வந்து அவர்களை அந்த வீட்டின் அடிதளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் கேஸ் சம்பந்தப்பட்ட பொருட்களை அங்கே வைத்து விட்டு முதல் தளத்தில் இருந்த அறைகளை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டனர்.
பின் அங்கே அடித்தவனை அங்கிருந்து டிஐஜி முதன் முதலில் விசாரித்தக் கட்டிடத்திற்கு கொண்டுச் சென்றுக் கட்டி வைத்தனர்.
பரிதி கூற வேண்டியவைகளைக் கூறிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
“சீனியர் எங்க என்னோட சாப்பாடு?”, யாத்ரா.
“கைய கழுவிட்டு வந்து ஒக்காரு”, செந்தில்.
“வந்துட்டேன். அடடா… சூப்பர் சீனியர் . நாட்டு கோழி பிரை, இட்லி மட்டன் குருமா , ஆம்லேட் , மீன் ரோஸ்ட். இப்ப ஒரு பிடி பிடிக்கலாம்” , பத்து நிமிடத்தில் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் நம் கலாட்டா நாயகி.
“கொஞ்ச நேரம் தூங்கறேன் சீனியர் மார்னிங் பசிக்கறப்ப எந்திரிக்கறேன். குட் நைட் பரத்”, யாத்ரா.
செந்தில் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு தூங்கச் சென்றான்.