வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – செளந்தர்யா.நெ
2. படிப்பு – எம்.ஏ.ஆங்கிலம்
3. தொழில்/வேலை – ஆசிரியை
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
பள்ளி காலத்தில் இருந்து..
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாசிப்பை தான் நாடுவேன்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
பள்ளி காலத்தில் நூலகத்தில் எடுத்து வாசித்த பழக்கம் உண்டு. இப்போது நேரமின்மை காரணத்தால் பெரும்பாலும் கணினி வழியே..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
எத்தனை என்று கணக்கு கிடையாது. என்னுடைய மனநிலையை பொறுத்து வாசிப்புகள் அமையும்.
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
புத்தகத்தில் படித்த திருப்தி இல்லை.
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
தாக்கம் என்று எதுவும் ஏற்பட்டது கிடையாது. என்னுடைய கவலைகளை மறக்க வாசிப்பை நாடுவேன்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
இல்லை இதுவரை அப்புடி நடந்தது இல்லை.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
பெரும்பாலும் ஆசியுரை வைத்தே. சிலது முன்னுரை.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
மொத்தமாக சொன்னால் அழகான இயல்பான குடும்ப கதைகள்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
நல்ல புரிதல் உள்ள உறவாக தான் தெரிகிறார்கள்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அன்புடன் அதியமான் அண்ணா.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்றைய எழுத்தாளர்களை விட இவர்களை எளிதாக நம்மால் தொடர்பு கொள்ள முடிகிறது.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
ஆம் என்று தான் நினைக்கிறேன்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
செந்தமிழை தவிர மற்றது நெருக்கமாக இருக்கிறது.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
சாண்டில்யனுடைய கடல் புறா, யவனராணி, கல்கியின் பொன்னியின் செல்வன்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
எல்லாம் நல்லதையே …
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
குடும்ப கதைகளில் வித்தியாசமான கரு இருந்தால் விரும்பி படிப்பேன்.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
என் வேலை நேரம் தவிர கதைகளே என்னை ஆக்ரமித்து விடும்.
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
இதுவரை அப்படி எதுவும் செய்தது கிடையாது.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
சத்தமின்றி முத்தமிடு
அதியமான் அண்ணா
ஸ்ட்ராபெரி ஆசைகள்
அன்பே நீ இன்றி
சங்கீத ஜாதி முல்லை
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
அன்புடன் அண்ணாவில், அண்ணாவின் மரணம் என் மனதை தொட்ட பாதித்த விஷயம்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இதற்கு சத்தியமாக பதில் தெரியவில்லை. என்னை பொறுத்த வரையில் நல்லதாகவே இருக்கின்றது.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களைகொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
நான் இதுவரை அப்படி நடந்து கொண்டதில்லை. எனக்குமே அதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
அன்றைய எழுத்தாளர்கள் :
சாண்டில்யன்
கல்கி இருவர் மட்டுமே.
இன்றைய எழுத்தாளர்கள் :
மல்லிகா மணிவண்ணன்
சரண்யா ஹேமா
ஸ்ரீகலா
விஜயலட்சுமி ஜெகன்
கவிப்ரீத்தா
அவர்களின் சிறப்பே அவர்கள் எழுத்துக்கள் தான்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
அப்படி எந்த வித எதிர்பார்ப்பும் கிடையாது. ஆசிரியருடைய கற்பனையை அப்படியே கொடுத்தால் போதும்.
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
எனக்கு எந்த வித வேறுபாடும் தெரிந்ததில்லை. இருவரின் எழுத்துக்களும் ஆளுமை நிறைந்தது தான்.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
சாண்டில்யனுடைய ஆட்டோகிராப்.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிப் பட்ட மனநிலையை கொடுக்கிறது?
எதிர்மறை முடிவு கொண்ட கதைகளை நான் தவிர்த்து விடுவேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
ஆடியோவாக எந்த கதைகளையும் நான் கேட்டதில்லை.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது எழுத்தாளரின் விருப்பமே, இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
வேறு ஒன்றும் தோன்றவில்லை. அனைத்தையும் நீங்களே கேட்டு விட்டீர்கள்.
மிகவும் அருமையான நேர்காணல் சௌந்தர்யா உமையாள் .. எல்லா கேள்விகளுக்கும் உங்க எதார்த்தமான பதில் இந்த நேரத்தை இனிமையா குடுத்திருக்கு. முக்கியமா கதையின் போக்கு ஆசிரியரின் விருப்பபடி தான் வேணும் ன்னு நீங்க சொன்னது நெறைய எழுத்தாளர்களுக்கு சந்தோஷம் குடுக்கும்.
எனக்கும் சாண்டில்யன் ஐயா கிட்ட ஆட்டோகிராப் வாங்க ஆசை தான்.. நல்ல தேர்ந்தெடுப்பு உங்ககிட்ட இருக்கு சிஸ்டர்.. எப்பவும் படிச்சிட்டே இருங்க .. உங்க கருத்துக்களை சொல்லுங்க..
உங்க வாசக அனுபவத்தை எங்கக்கூட பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
வாசிப்பை நேசிப்போம்..