வாசகருடன் சில நிமிடங்கள் …
1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2 (கிறுக்கன்)
2. படிப்பு – சுதந்திரம்
3. தொழில்/வேலை – பிடித்ததை செய்வது
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
படிக்க தொடங்கிய நேரத்தில்..
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
படிச்சா மனசு மாறும்னு தோணும் போது..
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
கைப்பேசி வழியாக…
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
காசும் மனசும் தேவையான அளவு இருக்கும் போது..
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
இரண்டும்..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
ஐ நமக்கு வாசிக்க வருதே..!
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
அப்படி மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு கதைக்கும் நான் ஒருவித குணத்தோடு இருக்க வேண்டும்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
குறிப்பிட்ட பதிப்பகத்தில் புத்தகம் வாங்கும் அளவிற்கு நான் புத்தக பிரியன் இல்லை. இருந்தாலும் இப்போதைக்கு என் நண்பர்களின் புத்தகங்களை வாங்குகிறேன். காலப்போக்கில் தேர்வு செய்யும் நிலை வரும் என நம்புகிறேன்.
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
முன்பு காதல், திகில், மர்மம் என்று படித்து வந்தேன். இப்பொழுது சுயசரிதை மேல் ஒரு அலாதி பிரியம் ஏற்பட்டுள்ளது. அது என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்துகிறது என நான் நம்புகிறேன்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
கதையின் போக்கு நம்மை சில நேரங்களில் ஒரு ரசிகனாகவும் பயணிக்க வைக்கிறது. சில நேரங்களில் நண்பனாகவும் பயணிக்கிறது. அதில் நான் நண்பர்களை மட்டுமே பெரிதும் தேர்வு செய்கிறேன் என்று தோன்றுகிறது.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
ஆரம்ப கல்வி பயிலும் போது தமிழ் புக்கில் வந்த கதைகள்..
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அன்று இன்று என்று ஒன்றுமில்லை..
என்றும் நன்று என்று தோன்ற வேண்டும்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
மொழிக்கு தான் எழுத்து வடிவம் கொடுத்து வளர்கிறது என்று நான் நம்புகிறேன்.
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
புரிந்தால் போதும் அது மௌன மொழி என்றாலும் எனக்கு நெருக்கம் தான்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
என் பாட்டி சொல்லும் என் தாத்தாவின் வரலாறு, என் அம்மா சொல்லும் என் அப்பாவின் வரலாறு போல் நாளை என்னைப் பற்றி பேசும் வரலாறு பிடிக்கும்.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
காதலின்றி குடும்பமில்லை… அதில் மனிதர்களை விட ஜீவராசிகளின் வாழ்வியலில் நம்பகத்தன்மை அதிகம் உள்ளதாக நான் உணர்கிறேன்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
எதுவாக இருந்தாலும் புரிந்தால் வாசிப்பேன்..
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
அந்த புத்தகத்தை பொறுத்து மாறுபடும்…
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
விமர்சனம் என்பது அவர்கள் தவறை சுட்டிக் காட்டுவதற்காக மட்டும் இல்லாமல், கேள்விகள் கேட்டு அவர்களை மேலும் சிறந்து இயங்க வைக்கும் வகையில் இருந்தால் சிறப்பு.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
இதுவரை படித்த அனைத்து புத்தகங்களும்…
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
சமீபத்தில் மீனாட்சி அடைக்கப்பன் அவர்களின் ஊஞ்சல் கதையில் வந்த வண்ணத்தி என்னும் கதாப்பாத்திரம்.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
அதை பற்றி சொல்ல எனக்கு அறிவில்லை.
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்கிற அவசியம் உங்களுக்குமில்லை.
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
ஒரு கதை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமென்று இல்லை. பிடிக்கவில்லை என்றால் பொங்கல் வைக்கவும் வேண்டாம். முடிந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் நிறை குறைகளை பேசுங்கள்.
கொண்டாடவில்லை என்றால் கூட பரவாயில்லை… யாரையும் மிதிக்க வேண்டாம்.
அனைவரும் சிறந்தவர்கள் தான்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
நேற்று எழுத தொடங்கியவர்கள் முதல்
இந்த நிமிடம் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும்.
மனதில் தோன்றியதை கிறுக்கினால் கூட சிறப்பு தான்.
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
எதையும் எதிர்பாராமல் வாசிக்க பிடிக்கும்…
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
எண்ணத்தில் மட்டுமே உள்ளது.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
மு.மேத்தா
வாலி (நிராசை)
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எதிர்மறை முடிவு என்பது மனிதனின் வாழ்வின் அங்கமாகிய ஒன்று. அதன் தாக்கம் நெஞ்சை வாட்டினாலும் அதனால் கிடைக்கப்பெறும் அனுபவம் நம்மை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என நம்புகிறேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
செவிக்கு இன்பமாக இருக்க வேண்டும்…
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
தகப்பன் தொடங்கி பிள்ளையை வந்தடைகிறது…
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
மனிதனாக இருக்க முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.
மிகவும் ஏதார்த்தமான உரையாடல் நண்பரே.. கத்திரி பதில் தான் எல்லாவற்றுக்கும்.
வரலாற்று புத்தக கேள்விக்கு உங்களின் பதில் டக்கென சிரிப்பை வரவழைத்தது, ஆனாலும் நாம் கண்டு கேட்கும் முதல் வரலாறு என்பது அது தானே.
நண்பர்களுக்காய் வாங்கும் புத்தகங்கள் மட்டுமின்றி எல்லாருடைய புத்தகங்களும் இனி உங்கள் கண்களில் படட்டும்.
ஒரு புத்தகத்தை கையில் எடுத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிப்பது என்பது வரம். அப்படியே இனியும் உங்களின் வாசிப்பு தொடரட்டும்.
ஆண் பெண் பேதம் எண்ணத்தில் மட்டுமே உள்ளது என்று கூறியது மிக சிறப்பு. உங்களின் எண்ணங்கள் மிகவும் சீரான பாதையில் செல்கிறது என்று புரிகிறது.
தகப்பன் தொடங்கி பிள்ளையை வந்தடைகிறது என்று கூறியது மிகவும் பொருத்தமான பதில் தான்.
உங்களின் வாசிப்பு பயணம் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
சிறப்பான பதில்களை கொடுத்ததற்கு நனி நன்றி.
வாசிப்பை நேசிப்போம்…