வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – ஷைனி மோள்
2. படிப்பு – M.Phil ஆங்கில இலக்கியம்
3. தொழில்/வேலை – வீடும் வீடு சார்ந்தது (வீட்டு எஜமானி)
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?
2001 டிசம்பர் மாதம். முதல் வாசிப்பு – தங்கமலர் (தினத்தந்தி) – இலவச சிறுவர் இணைப்பு.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
எப்போதும்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பா, இரவின் நிசப்தத்தில் வாசிக்க ரொம்ப பிடிக்கும்.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
இப்போ மொபைல் வழியில் ..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
*வாங்குவதில்லை ..
*படிப்பது கணக்கு வச்சது இல்லை ..
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
எப்படி வாசித்தாலும் முழுமையடையும் ..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
“Escapist Tendency” என்னால் சில கவலைகளை ஒத்தி வைத்து வேறு உலகத்தில் சஞ்சரிக்க முடிந்தது.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
ஆம். நிறைய விஷயங்கள். உறவுகள், புரிந்துணர்தல், சுத்தம், சுகாதாரம்… நான் இப்படித்தான்னு சில புத்தகங்கள் என்னை சுட்டிக்காட்டி இருக்கு, என்னோட தவறுகளை ..
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
விமர்சனம் .
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….)
திகில், வரலாற்றுப் புதினம், காதல், குடும்பம்.
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
புத்தகமே சிறந்த ஆசான். புத்தக எழுத்தாளரும் கூட ..
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
அப்படி தெளிவா சொல்ல தெரியல. “Fifty shades of Grey” படிச்சப்போ sexual fantasy விட ஒரு உறவை எப்படி பாக்கணும்னு தோணிச்சி. சில அறிவுரைகளை வேண்டி நினனப்போ கார்த்தி சௌந்தர் சாரின் “தாம்பத்யம்” பெரிதும் உதவியது.
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
அவங்க காலத்தை சார்ந்து எழுதி இருக்காங்க. ஏனென்றால் “Literature is the mirror of life”
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
இது பற்றி தெரியவில்லை ..
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி” இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
எல்லாமே தான். கதைக்கேற்ப மாறுபடும். வரலாற்று புதினம் எனில் செந்தமிழ். என்னோட சொந்த ஊர் சார்ந்த மொழிவழக்குல வாசிக்கறப்போ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். அதுல நிறைய வார்த்தைகள் எனக்கு புரியும்.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
ஆம். சாய் சக்தி “காபாடபுரம் முதல் கீழடி” வரை பிடித்தமானது.
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
Contemporary ஆக இருக்கு.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
பிடிக்கும். ரொம்ப இஷ்டம் இல்லை.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
முடிஞ்ச அளவில் ..
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
நல்லா இருந்தா சொல்வேன். குறை சொல்ல நான் யார் ? சொல்லமாட்டேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
நிறைய இருக்கு ..
The old man and the sea.
தாம்பத்தியம் ..
Etc ., etc .,
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
*Man can be defeated but not destroyed.
* குடும்ப கட்டுப்பாடு என்பதை ஆணும் செய்யலாம்-னு “விநயம்” – கார்த்தி சௌந்தர் மூலம் தெரிஞ்சிக்கிட்டேன்.
இன்னும் வாழ்வியலோட கலந்திருக்கும் பல விஷயங்கள் ..
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
பழையன கழித்தல் புதியன புகுதல் ..
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
Exposure கிடைப்பதில்லை அதான் எல்லாரையும் சென்று அடைவதில்லை.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
நிறைய பேர் இருக்காங்க. குறிப்பிட்டு சொல்ல தெரியல.
*கார்த்தி சௌந்தர்
*அன்பின் ஷிஜோ
*Alice Walker
*jane Austen
*சாய் சக்தி
*தோழர் லெனின்
*ராமு ராமமூர்த்தி
*பாமா
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
Simple .. ஒரு வாக்கியம் வாசிக்கறப்போ அடுத்தடுத்து என்னனு தூண்டனும்..
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
சொல்ல வந்ததை ஏற்புடன் சொன்னால் ஆண் என்ன ? பெண் என்ன ?
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
2008 Taj Hotel attack, Ajmal kasab Autograph.
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்குஎப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
எதிர்மறை கருத்து என்பது ஆசிரியரோட விருப்பம். புடிச்சா ஏத்துக்கலாம் இல்லைனா விட்டுடலாம் .. அது கதையின் போக்குக்கு அவசியமா இருந்துச்சுன்னா இருந்துக்கலாம் ..
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
விருப்பமில்லை, கேட்டதில்லை ..
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
அது எழுத்தாளர் விருப்பம் ..
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
எழுதுங்கள் .. எழுதிக்கொண்டே இருங்க ..
உணர்தல் வழி வாசிப்பு உங்க பேச்சுல நல்லா தெரியுது சிஸ். எழுத்தின் இயல்பை தேடும் உங்க மனப்பாங்கு மிகவும் அருமை. இதுபோலான வாசகர்கள் இந்த காலகட்டத்துல ரொம்பவே அபூர்வம் தான். எப்பவும் இப்டியே இருங்க இயல்போட ..
ஒரு தேநீர் இடைவேலைல கிடைக்கற ஆசுவாசம் உங்க நேர்காணல்ல எங்களுக்கு கிடைச்சி இருக்கு. தப்பா எழுதினா சுட்டிக்காட்டலாம் தப்பில்ல. அப்ப தான் எழுதரவங்களுக்கும் தப்பு புரியும்.
எப்பவும் வாசிச்சிக்கிட்டே இருங்க. சந்தோஷமான இயல்பான தருணங்களாக பயணம் தொடரட்டும். இந்த நேர்காணலில் கலந்து கொண்டதற்கு நனி நன்றி.
வாசிப்பை நேசிப்போம்..