31 – அர்ஜுன நந்தன்
நந்து அந்த அசிஸ்டண்ட்ஐ கண்டுபிடித்து தன் கஸ்டடியில் கொண்டு வந்தான். அர்ஜூனிடம் கூறியது போல அவனையும் அழைத்துக் கொண்டு சென்னைப் புறப்பட தயாராக இருந்தான்.
ஆர்யனை அடைத்து வைக்க தன் நண்பன் ஒருவனின் தனி வீட்டை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதைப் பார்த்து வைத்தான்.
கிளம்பும் சமயம் அர்ஜூனிடம் இருந்து போன் வந்தது. ” சொல்லு அர்ஜுன்”, நந்து.
“கிளம்பிட்டியா?”, அர்ஜுன்.
“இப்பதான் வெளியே போக போனேன்”, நந்து.
“சரி நீ வராத. அவன அங்கயே மறச்சி வச்சிக்க. நாங்க நாளைக்கு வந்திடறோம்”, அர்ஜுன்.
“ஏன்டா என்னாச்சி?”, நந்து.
யாத்ரா கூறியதை அவனிடம் கூறினான்.
“சரி இங்கயே அவன மறச்சி வைக்கிறேன். சென்னை அவுட்டர்ல தான் இடம் பாத்து வச்சி இருக்கேன். சக்திய அனுப்பறேன் பாத்துக்க. வீட்டு சாவியும் அவன்கிட்ட குடுத்து விடறேன். இன்னொரு ஆளயும் போட்டுட்டேன்”, நந்து.
“பரவால்லையே உன் பிரண்ட்க்கு இவ்வளவு யோசிக்கற திறமை இருக்கு செழியன்”, என யாத்ரா பாராட்டினாள்.
“ஸ்பீக்கர்ல போட்டு பேசிட்டு இருக்கியா டா பாவி?”, நந்து.
“இல்லடா ஹெட்செட் தான் போட்டுட்டு இருக்கோம்”, அர்ஜுன்.
“என்னடா நடக்குது அங்க?”, நந்து.
“ஒன்னும் நடக்கல. நீ அந்த கருப்பசாமிய வாட்ச் பண்ணு. நாங்க ஆர்யன தூக்கினதுல அவனுங்க கண்டமேனிக்கு நடந்துப்பானுங்க. அவனுக்கு எதுவும் ஆகாம பாத்துக்க”, அர்ஜுன்.
“அவன் எங்க இருக்கான்?”, நந்து.
“வேளாங்கண்ணில ” , யாத்ரா அவன் இருக்கும் இடத்தின் அடையாளம் மற்றும் யாத்ராவின் ஆள் எனும் அடையாள மொழி என அனைத்தும் கூறினாள்.
“சரி தூரமா இருந்தே பாக்க வைக்கறேன் பரத்அ”, நந்து.
“பரத்தும் வேணாம் நீயும் வேணாம் புது ஆள போடு வாட்ச் பண்ண. நாம வாட்ச் பண்றது கருப்பசாமிக்குக் கூட தெரியக்கூடாது. இப்ப நீ போய் அவன பாத்ததும் அவன் வேற இடத்துக்கு போயிறுவான்”, யாத்ரா.
“சரி சக்திய சென்னை அனுப்பறேன் இங்க பாலாஜி தான் இருக்கான். முகிலுக்கு தனி வேலை குடுத்தாச்சி. புது ஆளுன்னா யார போட?”, நந்து.
“அதான் கதிர் வரான்ல அவன போடு”, யாத்ரா.
“அப்ப சரி. பரிதிகிட்ட விஷயத்த சொல்லிட்டீங்களா?”, நந்து.
“யாரும் சொல்லல இன்னும். போன குடு”, என பரிதி அங்கு வந்து நின்றாள்.
“சொல்லிட்டு வரமாட்டயாக்கா? பேய் மாதிரி வந்து நிக்கிற”, நந்து.
பரிதி அவனை முறைத்துவிட்டு ,” அறிவுங்கறது உங்க யாருக்காவது இருக்கா? ” போனில் திட்டத் தொடங்கினாள்.
“ஹாய் டார்லிங். எப்ப வந்த? இவ்வளவு நேரம் நந்து மொக்க போட்டுட்டு இருந்தான் நீ இருக்கறத சொல்லவே இல்ல ” , யாத்ரா.
“நடிக்காதடி ராங்கி. உன்ன அங்க இருந்து கூட்டிட்டு வந்ததும் போன் பண்ண சொன்னேன். எவ்வளவு நேரம் ஆச்சி அந்த சேரலாதன் வந்து என்கிட்ட சொல்லி மிரட்டிட்டு போறான். அந்த அளவுக்கு உனக்கு விளையாட்டா போச்சா?”, பரிதி.
“இல்ல டார்லிங். அங்க இருந்து தப்பிச்சதும் இந்த நரேன் இம்சை தாங்கல. நொய் நொய்ன்னு கேள்வி கேட்டு கொன்னுட்டான். அவன பாலோ பண்ணி யோகி ஆளுங்க அட்டாக்குன்னு டைம் போயிரிச்சி. கோச்சிக்காத டார்லிங்”, ஐஸ் வைத்தாள் யாத்ரா.
“நரேன் இருக்காரா? அவர் எப்படி அங்க?”, பரிதி.
“அந்த யோகி தூக்கிட்டு வந்துட்டான். அவனயும் காப்பாத்தி கூட்டிட்டு வரவேண்டியதா போச்சி”, சோகமாகக் கூறி முடித்தாள்.
“நான் உயிரோட இருக்கிறதுல உனக்கு அவ்வளவு வருத்தமா?”, நரேன் யாத்ராவைப் பார்த்துக் கேட்டான்.
“சும்மா நரேன்”, யாத்ரா.
“அந்த அர்ஜுன் எங்க?”, பரிதி.
“அவனும் தான் நீ சொன்னத எல்லாம் கேட்டுட்டு சிரிச்சிட்டு இருக்கான் டார்லிங். அவன என்னானு கேளு”, என அர்ஜூனை மாட்டிவிட்டாள் யாத்ரா.
“டேய் நல்லவனே… என்னடா நடக்குது அங்க?”, பரிதி.
“யாத்ராவை சேப்பா கூட்டிட்டு வந்துட்டோம். நாளைக்கு வந்துடுவோம். நேர்ல பேசிக்கலாம்”, அர்ஜுன்.
“ச்சா…. இந்த டெக்னிக் நமக்கு தோணாம போச்சே.. இவ்வளவு டையலாக் பேசி எனர்ஜி வேஸ்ட்”, என யாத்ரா மனதிற்குள் கூறுவதாக நினைத்து சத்தமாகக் கூறினாள்.
“எனர்ஜி கொறஞ்சா நான் சாப்பாடு வாங்கி தரேன் பூஸ்ட் பண்ணிக்க யாத்ரா”, என அர்ஜுன் கூறினான்.
“நான் மனசுக்குள்ள நினைச்சது எப்படி நீ சொல்ற?”, யாத்ரா அர்ஜூனிடம் வினவினாள்.
“நீ சத்தமா சொன்னா எல்லாருக்குமே கேட்கும் “, என நரேன் பதிலளித்தான்.
“சரி எங்க போறோம் ?”, யாத்ரா.
“சென்னை தான். சிரஞ்ஜீவ் இந்தாங்க இந்த மேப் பாலோ பண்ணுங்க. மிட்நைட்ல பார்டர் தாண்டியாகனும் முடியுமா?”, அர்ஜுன் கேட்டான்.
“சார் இந்த வண்டி ஸ்பெஷலா பூவழகி சொன்னமாதிரி டியூன் பண்ணி இருக்கேன். விடிகாலைல சென்னைல இருக்கும்”, ஜான் கூறிவிட்டு தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
“பார்டர் தாண்டற வரைக்கும் நான் ஓட்றேன் சார்”, என சிவியிடம் கூறிவிட்டான்.
அவனும் சரி எனக் கூறி உறங்கச் சென்றான். ஒரு சொகுசு பேருந்தில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இருந்தது அந்த வேனில். அதனால் அந்த நீளமான வேனில் மூன்று பேர் படுக்கும் அளவுக்கு மெத்தையுடன் தயாராக இருந்தது.
நடுவில் ஒரு சில இடங்களில் நிறுத்தி சரியாக 6 மணிக்கு அர்ஜுன் கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“நல்ல வேகம் தான் போங்க”, என செந்தில் கூறினான்.
நரேனையும் கதிரையும் எழுப்பிய செந்தில், யாத்ராவை எழுப்ப திரும்பி அப்படியே நின்றான் அதிர்ச்சியில்.
அங்கே அர்ஜுன் யாத்ராவை குழந்தையை ஏந்துவது போலப் பிடித்துக்கொண்டு அப்படியே தூங்கிக் கொண்டு இருந்தான்.
அந்த காட்சியை தன் மொபைலில் சிரஞ்ஜீவ் படம் பிடித்துக் கொண்டான். பின் அவர்களையும் எழுப்பிக் கீழே இறங்கக் கூறினர்.
கீழே இறங்கிய யாத்ரா, கடலைக் கண்டதும் சிறு குழந்தையென மாறி கடற்கரைக்கு ஓடினாள்.
அதிகாலை நேரம் சூரியன் உதிக்கும் சமயம் சிகப்பும் மஞ்சளும் கலந்த கலவையாக வானம் காட்சியளித்தது, இதோ இதோ என சூரியனும் மேலே வர, மனம் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது யாத்ராவிற்கு. அவளின் குதூகலத்தைக் கண்ட அர்ஜுன் தூரத்தில் இருந்தே அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
ஜானை அழைத்துக் கொண்டு நீரில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அந்த சமயம் சக்தி வர வீட்டை திறந்து ஆர்யனை உள்ளே தூக்கிச் சென்றுக் கட்டி வைத்தனர்.
பின் அனைவரும் குளித்து ரெடியாக , அப்பொழுது தான் ஜானும் யாத்ராவும் வீட்டிற்குள் வந்தனர்.
சக்தி அவர்களை அறியாதததால் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான்.
“யார் நீங்க?”, சக்தி.
“இந்த நாட்டோட மகாராணி”, சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினாள் யாத்ரா.
“என்ன நக்கலா?”, சக்தி.
“பின்ன வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடாம வாசல்லயே வச்சி கேள்வி கேக்கற. உன் வீட்ல யாரும் நம்ம கலாசாரத்தை சொல்லி குடுக்கலியா?”, யாத்ரா.
“யாருன்னு தெரியாம உங்கள உள்ள விட முடியாது”, சக்தி.
“நாங்க போவோம் நீ முடிஞ்சத பண்ணு”, என ஜானின் கையைப் பற்றிக் கொண்டு அவனை தள்ளிவிட்டு உள்ளே சென்றாள்.
“ஏய்…. நில்லு… அப்பறம் பிரச்சினை ஆகிடும்”, சக்தி.
“பிரச்சினை தானே. அது என் பெஸ்ட் பிரண்ட் தான் நான் பாத்துக்கறேன். நீ என்ன பண்ற எனக்கு நல்ல டிபன் ரெடி பண்ணிடு. நான் குளிச்சிட்டு வந்துடறேன்”, எனப் படிகளில் ஏறினாள்.
அந்த சமயம் வெளியே வந்த கதிர் சக்தியிடம் யாத்ரா பற்றிக் கூறி அவனை டிபன் வாங்க அனுப்பி வைத்தான்.
மேலே எல்லா ரூமும் உள்பக்கமாக தாளிடப்பட்டு இருக்க, காண்டான யாத்ரா கதவை தட்டுகிறேன் பேர்வழி என உடைக்க ஆரம்பித்தாள்.
“டேய் எல்லாரும் ரூம் ஆக்குபை பண்ணிட்டா நான் எங்கடா போவேன். சீக்கிரம் வெளிய வாங்க டா”, யாத்ரா.
ஜான் சிரித்துக் கொண்டே கீழே இருந்த அறைக்குச் சென்றுவிட்டான்.
அப்பொழுது ஒரு அறையில் இருந்து வெளியே வந்தான் சிரஞ்ஜீவ் .
“எரும மாடு , எவ்வளவு நேரமா தட்டறது? இரண்டு ரூம்ல நீங்க சேர் பண்ணிக்க மாட்டீங்க? “, என திட்டிக் கொண்டே உள்ளேச் சென்றாள்.
“ஏய் உன் பேக் அங்க இல்ல”,சிரஞ்ஜீவ்.
“எங்க இருந்தாலும் எடுத்துட்டு வந்து வை இந்த ரூம்ல”, எனக் கூறி குளிக்கச் சென்றாள்.
“ராட்சசி இன்னும் அப்படியே தான் இருக்கா”, எனக் கூறிக் கொண்டு அவளது பையை கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான்.
உடல் அலுப்பு தீர குளித்தவள் தன் பையில் இருந்து கருப்பு சட்டை கருப்பு ஜீன் அணிந்து, முடியை உலர்த்தி ஹைபோனிடைல் போட்டுக் கொண்டு, இரண்டு துப்பாக்கியை உடையில் மறைத்துக் கொண்டாள். ஜான் கொடுத்த 4 கத்திகளையும் சாக்ஸ் மற்றும் பேண்டில் ஒளித்துக் கொன்டாள்.
அறையைச் சாற்றிவிட்டு கீழே படிகளில் வந்துக் கொண்டு இருந்தாள்.
அவளை கண்ட சக்தி வாய்பிளந்தபடி அப்படியே நின்றான். அவள் போட்டு இருந்த கருப்பு முழுகைச் சட்டையை பாதி மடித்து விட்டு இருந்தாள் , அதற்கு தோதான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சூ, ஒரு கையில் வாட்ச், முகத்தில் திமிரும் அலட்சியமும் போட்டிப் போட காற்றில் அசைந்தாடும் கூந்தலும் அவளை மேலும் மிடுக்குடன் காட்ட, சூரியனை சுட்டெறிக்க கிளம்பியப் பெண் புலியென கம்பீரமாய் இறங்கி வந்தாள்.
“வாவ்…. பியூட்டிபுல்”,என சக்தி வாய்விட்டேக் கூறினான்.
“அப்படி சொல்லித்தான் ஒருத்தன் இப்ப ரூம்ல மயக்கத்துல கடக்கறான் தம்பி. ஜாக்கிரதை”, என ஜான் எச்சரிக்கை விடுத்தான்.
அர்ஜூனும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல ஒரு பார்வை பார்த்து விட்டு சாப்பிட அமர்ந்தான்.
“சீனியர் நீங்க சமைக்கலியா”, என யாத்ரா செந்திலைக் கேட்டாள்.
“நான் உனக்கு ஆக்கி போடவா வந்தேன். ஒழுங்கா இருக்கறத சாப்பிட்டு ஊருக்கு கிளம்புற வழிய பாரு”, செந்தில் சிடுசிடுத்தான்.
“யாத்ரா.. சாப்பிடு டைம் ஆச்சி”,என அர்ஜுன் கூறினான்.
“உனக்கு டைம் ஆனா கிளம்பு நான் நல்லா சாப்டுட்டு தான் வருவேன். ஜான் இங்க நல்ல ஹோட்டல் எங்க இருக்கு?”, என ஜானை துணைக்கு அழைத்தாள்.
“பூவழகி “, ஜான் ஏதோ சொல்ல வாய் எடுக்க.
“இந்தாங்க மேம் உங்களுக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் “, என சக்தி அவளுக்கு தனியாக பிரித்து வைத்தான் பார்சல்களை.
நாட்டுகோழி குழம்பு இடியாப்பம், மீன் பிரை , மட்டன் கால் சூப் என அவளுக்கு வைத்தான்.
“நாட் பேட் தம்பி”, எனக் கூறிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினாள்.
“சரி அடுத்த பிளான் என்ன?”, எனக் கேட்டபடி செந்தில் வந்து சோபாவில் அமர்ந்தான்.
“நான் இங்க கொஞ்சம் செய்யவேண்டிய வேலைய முடிச்சிட்டு தஞ்சை வரேன். நீங்க கிளம்புங்க “, என அர்ஜுன் கூறினான்..
“சரி யாத்ரா எங்க?”, செந்தில்.
“ஏதோ வாங்கணும்னு வெளிய போனாங்க சார் . பைக்ல தான் போய் இருக்காங்க”, என சக்தி கூறினான்.
“ஹம்ம்….. ஏதோ அவ பிளான் பண்ணிட்டா”, செந்தில் முனுமுனுத்தான்.
பைக்கை எடுத்துக் கொண்டு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்த யாத்ரா, அங்கே காட்டுப் பகுதியில் ஏதோ நடமாற்றம் தெரிய அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு நடந்து அருகில் சென்றாள்.
அங்கே இருபது பேர் கடலில் இருந்த படகில் இருந்து பெட்டியை இறக்கி கரையில் இருந்த வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அந்த இடம் சதுப்பு பகுதியாக இருப்பதால் யாரும் வருவது இல்லை. ஏதோ தப்பான வேலை எனப் புரிந்தது.
அப்பொழுது ஒரு பெட்டி கீழே விழுந்தது. உள்ளே இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கீழே சிதறியது.
அதைக் கண்ட யாத்ரா நொடியில் அதைத் தான் கடத்தத் திட்டமிட்டாள்.
தன் மொபைலில் இருந்து ஜான் மற்றும் சிரஞ்ஜீவை மட்டும் தங்கள் வேனைக் கொண்டு தான் இருக்கும் லோகேசனுக்கு வரும்படி மெஸேஜ் அனுப்பினாள்.
அங்கிருந்து சற்று அவர்களுக்கு அருகில் வந்தவள் லோட் ஏற்றி கொண்டிருந்த வேனில் யாரேனும் இருக்கின்றனரா என நோட்டம் விட்டாள். யாரும் இல்லை டிரைவர் இருக்கையில் கூட.
மொத்தமாக இருபது பேர் தான் இருந்தனர். தனி ஆள் என தெரிந்தால் நம்மை மடக்கி விடுவர் ஆதலால் ஒருவர் அறியாமல் மற்றவரை சாய்க்க திட்டமிட்டாள்.
மரங்களுக்கு இடையில் ரோந்து சென்றவர்களை முதலில் சத்தம் வராமல் ஒவ்வொருவராய் தலையில் அடித்து சாய்த்தாள்.
பின் லோட் ஏற்றுபவர்களை அடித்துச் சாய்த்தாள். பெட்டி வைக்கச் சென்று சற்று நேரம் ஆகியும் யாரும் வராததால் ஒருவன் வண்டி அருகில் வந்தான். அவனை வீழ்த்த எண்ணிய யாத்ரா அவனின் பின்னந்தலையை குறிவைத்து அடிக்கும் சமயம் அவன் யாத்ராவை கண்டுவிட்டான்.
உடனே அவன் கொடுத்த குரலில் மற்றவர்களும் வந்து விட 8 பேரை ஒரே நேரத்தில் சமாளிக்கும் சூழ்நிலை உருவானது.
துப்பாக்கியை உபயோகிக்கலாமா என சிந்தித்தவள் வேண்டாமென முடிவு செய்து கைகளை மடக்கி ஆயத்தமாக நின்றாள்.
ஒரு சமயத்தில் இருவரை வயிற்றிலும் காலிலும் தாக்கியவள் அவளை நோக்கி வந்த மூவரையும் கத்தியால் கிழித்தாள். கை நரம்புகளும் கால் நரம்புகளும் அறுபட்ட நிலையில் அவர்கள் கதற மிச்சம் இருந்த மூன்று பேரை நோக்கி வந்தாள்.
அதற்குள் மயக்கத்தில் இருந்த நான்கு பேர் எழுந்துவிட ஆறு பேரையும் சுற்றி வந்து ஓடி காயங்கள் ஏற்படுத்தினாள். அவளின் யுக்தி புரியாமல் அவர்கள் குழம்பி நின்றனர் அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்த ஜானும் சிரஞ்சீவ்வும் அவளின் தோற்றத்தைக் கண்டு நின்றனர்.
இரண்டு கைகளில் கத்தியுடன் யார் உயிரை எப்பொழுது குடிக்கலாம் என இருக்கும் பார்வையுடன் உதட்டில் சிரிப்புடன் எதிரில் இருந்தவர்களை சாய்த்துக் கொண்டு இருந்தாள்.
ஐந்து நிமிடத்தில் அனைவரும் கீழேச் சுருண்டு விழ அங்கிருந்தபடி சிரஞ்ஜீவை அழைத்தாள்.
“இவனுங்கள அந்த பக்கம் தூக்கி போடு “,எனக் காட்டை கடக்கும் இடத்தைக் காட்டினாள்.
“யார் இவனுங்க?”, சிரஞ்ஜீவ்.
“வெபன் சப்ளையர்ஸ்”, எனக் கூறிக் கண்ணடித்தாள்.
அவள் கூறியது போலவே அவர்களை ஜானும் அவனும் சேர்ந்து தூக்கிப் போட்டனர்.
அந்த வேனில் இருந்ததை எல்லாம் யாத்ரா தன் வேனில் ஏற்றி இருந்தாள். படகில் இரண்டு பெட்டிகளை வைத்து அப்படியே மிதக்க விட்டாள்.
அவர்கள் வந்ததும் அவர்களுடன் முன்னிருந்த வீட்டிற்கு வந்துச் சேர்ந்தனர்.
அவள் ஏற்றிய ஆயுதங்களில் ஒரு பகுதியை மட்டும் கண்ணில் படும்படி வைத்தவள் மற்ற இரண்டு பகுதியை அந்த வேனில் இருந்த ரகசிய இடங்களில் வைத்தாள்.
“இத வச்சு என்ன பண்ண போற பூவழகி?”, ஜான்.
“பின்னாடி யூஸ் ஆகும் ஜான் . வா ஊருக்கு கிளம்புற வழிய பாக்கலாம். ஆல் பக்கீஸ் வைட்டிங் பார் அஸ்”, என முன்னே நடந்தாள்.