ஏதொன்றின் சாயலாகவும் வேண்டாம்…. – நீ
நிஜத்தில் நீயாகவே இரு போதும்….
உன் அணுக்களில் நிறைந்திருக்கும்
உன்னை…..
வேறெவ்வித ஒப்பீடும் இல்லாது….
உன்னை….
உனக்காகவே காதல் செய்ய வேண்டும்….
உன்னில் இருக்கும் வெற்றிடத்தை….
என் நிஜத்தை நிரப்பி வாழ்ந்து கொள்ளலாம்….
வேறெந்த பொய்யும் வேண்டாம்….
புனைவும் வேண்டாம்….
நீ…. நீயாகவே இரு….
நீயாக மட்டுமே இரு…..
– ஆலோன் மகரி