• About us
  • Contact us
Wednesday, June 17, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

18 – ருத்ராதித்யன்

March 16, 2024
Reading Time: 1 min read
0
1 – ருத்ராதித்யன்

18 – ருத்ராதித்யன்

 

“ஜான்…. அவனுங்க எந்த பக்கம் போனானுங்க?”, எனச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள் யாத்ரா. 

“இந்த பக்கம் தான் வந்தாங்க பூவழகி….. இரு மரத்துல ஏறி பாக்கறேன்”, எனக் கூறியபடி சற்று உயரமான மரத்தை பார்த்து ஏறினான். 

“குரங்குல இருந்து நாம வந்தோம்னு நீயே நிரூபிப்ப போலவே ஜான்… இப்படி ஏறுற….”, என அவளும் மெல்ல மரம் ஏறியபடி கூறினாள். 

“நாம வேற குரங்கு வேற பூவழகி. எல்லாரும் தப்பா பேசிட்டு இருக்காங்க… நாம குரங்கோட பரிணாம வளர்ச்சி இல்லை… ஆனா அதோட குணத்துல சிலது நமக்கும் இருக்கு அவ்வளவு தான்”, என பார்வையைச் சுழற்றியபடி பேசினான். 

“நீ எப்ப ஜான் சைன்டிஸ்ட் ஆன?” , ஏறி வாகாக ஒரு கிளையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு கேட்டாள். 

“உன்கூட சேந்தப்பறம் தான் பூவழகி…. “, என அவனும் சிரித்தபடிக் கூறினான்..

“இதுல உள்குத்து இருக்கா ஜான்?”

“இல்ல… ஆனா நீ குத்த வேண்டியவன் அந்த பக்கம் போறான்…. வா போலாம்”, என இறங்கப்பார்த்தான். 

“இரு இறங்காத….அவன் என்ன பண்றான்னு இங்க இருந்தே பாக்கலாம். நம்ம பைனாகுலர் எடு”, எனக் கூறி கிளையில் முன்னே நகர்ந்து அமர்ந்து கூர்ந்துப் பார்த்தாள். 

ஜானும் அவளும் அட்வான்ஸ்டு பைனாகுலரில் பதுங்கி பதுங்கி ஓடுபவனைப் பார்த்துக்கொண்டிருந்தனர்..

“இந்த பக்கம் இவன் எங்க போறான் ஜான்?”, அவன் செல்லும் மார்கத்தை தோராயமாக கணித்தபடி கேட்டாள். 

“அந்த பக்கம் சின்னதா ஒரு டேம் தான் இருக்கு…. அங்க இவனுக்கு என்ன வேலை?”, ஜானும் யோசித்தபடி பார்க்க இருவரும் ஒரு நொடி திடுக்கிட்டு இறங்கி அவனைத் தொடர்ந்து ஓடினர். 

ஜானை அவனை பின்தொடரும் படி கூறிவிட்டு, யாத்ரா வேறு பாதையில் அந்த டேம் இருக்குமிடம் நோக்கி ஓடினாள். 

மேகமலைக்கு அவள் வரும்போதெல்லாம் ஆதியும் அர்ஜுனும் மாறி மாறி அவளை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று அதற்கான குறுக்கு வழிகளையும் காட்டியிருந்தனர். 

அது இப்போது மிகவும் உதவியது.. 

பின் அவசர உதவிக்கு ஆதியை அழைத்தாள்… 

“சொல்லு யாது… எங்க இருக்க?”, ஆதி தூக்க கலக்கத்தில் கேட்டான். 

“அத்தான்…. சீக்கிரம் நம்ம காட்டு டேம்க்கு கிளம்பி வாங்க…. புது வண்டில… தாஸ கூப்டுவாங்க”, எனக் கூறி வைத்துவிட்டாள். 

“ஹலோ… ஹலோ…. வச்சிட்டா…. “, என ஆதி முனகியபடி இரண்டு நிமிடத்தில் தயாராகி கீழே வந்தான். 

அவள் தன் நினைவடுக்குகளை கிளறியபடியே பாதையை கணித்து ஓடினாள். 

அடர்ந்தக்காட்டு பகுதியாதலால் ஓட்டத்தின் வேகம் பல இடங்களில் தடைப்பட்டது. 

பாறைகளும், புதர்களும் வழிநெடுகிலும் விரவி கிடக்க, அதையெல்லாம் சற்று சிரமத்துடன் கடந்து சென்றாள் யாத்ரா. 

அவள் அணிந்திருந்த கருப்பு ஜெர்கினும், பேண்டும் அவளுக்கு  ஏற்படும் காயங்கள் ஆழமாகாமல் காப்பாற்றியது. 

“சே… வெயிட் போட்டுட்டேன் போலவே… வெயிட் குறைக்கணும் யாத்ரா….இங்க வந்தா கன்ட்ரோல் இல்லாம சாப்ட்ற நீ”, என தனக்கு தானே பேசிக்கொண்டு டேம்மின் தடுப்பு சுவருக்கு மிக அருகில் வந்து நின்றாள். 

அங்கே ஏற்கனவே நான்கு பேர் சுவற்றில் ஆங்காங்கே வெடிகுண்டை பதித்துக்கொண்டிருந்தனர். 

அதைக் கண்டவள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என மறைந்திருந்தபடி பார்த்தாள். 

மொத்தம் ஆறு பேர் அங்கே இருந்தனர். 

டேம் இன்ஜார்ஜும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பது புரிந்தது. அங்கிருந்த புதிய இன்ஜினியரை அடித்து போட்டுவிட்டு அவசரமாக வெடிகுண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். 

“ஜான்…  இங்க ஆறு பேர் இருக்கானுங்க… நீ எங்க இருக்க?”, கேட்டபடி ஷூவில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து கைகளில் சரியாக மறைத்து வைத்துப் பிடித்துக்கொண்டாள். 

“நான் அங்க வந்து சேர இன்னும் பதினைஞ்சு நிமிஷம் ஆகும் பூவழகி. இவன் வேணும்னே மெதுவா போறான்”, ஜான் அவனை கண்பார்வையில் வைத்தபடியே பேசினான். 

“சரி… அவன விட்றாத… நான் இங்க பாத்துக்கறேன்”, எனக் கூறியவள் மெல்ல காலடிகளை எடுத்து வைத்து மரத்தின் கீழே நின்றவனை நோக்கிப் பாய்ந்தாள். 

நொடியில் அவன் பின்தலை தண்டில் அடித்து மயங்கச்செய்து புதரில் மறைத்தாள். 

சலசலப்பு சத்தம் கேட்கவும்,

“டேய்…. சடையன் எங்கடா?”, அங்கிருந்த ஒருவன் வினவினான். 

“ஒதுங்க போயிருப்பான் .. நீ சீக்கிரம் வேலைய பாரு”, என ஒருவன் மறுமொழி கொடுத்தான். 

“சீக்கிரம் பண்ணுங்கடா… ஆளுங்க யாராவது வந்துட்டா பிரச்சினை ஆகிடும்”, டேம் இன்சார்ஜ் அவசரப்படுத்தினான். 

“இந்நேரத்துல யாருடா வரப்போறாங்க… அவ்ளோ தான் எல்லாம் ஆச்சி…. இந்த வொயர கனெக்சன் குடுத்துட்டு மேல போயிட்டு வெடிக்க வச்சிடலாம்… “, என ஒருவன் பதில் கொடுத்தான். 

“சீக்கிரம் பண்ணுங்க டா…. காட்டுல சுத்தற எவனாவது வந்துட்டா பிரச்சினை”, நொடிக்கு ஒரு தரம் அங்கிருந்த குறுக்கு சாலையை பார்த்தபடி மீண்டும் அவசரப்படுத்தினான் இன்ஜார்ஜ். 

“ஷட் சப்…. “, என ஒருவன் கத்தவும் மற்றவர்கள் கப்சிப் ஆகினர். 

“நீங்க எல்லாம் கிளம்புங்க.. நான் பாஸ்கிட்ட சொல்லிட்டு வரேன்”, என அந்த கூட்டத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒருவன் இருந்தது அப்பொழுது தான் கவனித்தாள் யாத்ரா. 

அவன் பைனல் கனெக்சன் கொடுப்பதை பைனாகுலரில் பார்த்துக்கொண்டாள். 

“இது எந்த கூட்டம்னு தெர்லியே….இதுக்கு கீழ நாலு கிராமம் இருக்கு… தண்ணி போனா அத்தனை ஊரும் அவ்வளவு தான்…. “, என மனதிற்குள் நினைத்தபடி அடுத்து செய்யவேண்டியதை முடிவு செய்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர காத்திருந்தாள். 

அனைவரும் கிளம்பி செல்கையில், “டேய் சடையனைக் காணோம்…  யாரோ இருக்காங்க”, என ஒருவன் கத்தவும் மற்றவர்கள் பதற்றமாகி சுற்றிலும் ஓட ஆரம்பித்தனர்..

“சே…. இங்கிருந்தா தெரிஞ்சிடும்…. எந்த பக்கம் போறது”, என யாத்ரா தலை தூக்கும் பொழுது ஒருவன் பார்த்துவிட்டு துப்பாக்கியால் சுட்டான். 

யாத்ரா சட்டென குனிந்தபடி புதரில் மறைந்து கத்தியை வீசினாள். 

“யாருன்னு பாத்து சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்புங்க”, அக்கூட்டத்தின் தலைவன் போன்றவன் கூறிவிட்டு வேறுபக்கம் சென்றான். 

“இந்த பக்கம் தான்டா பாத்தேன்… ஒரு பொண்ணு தான்டா”, என அவர்களுக்குள் பேசியபடி அவர்கள் யாத்ரா இருந்த பகுதியில் தேட ஆரம்பித்தனர். 

“பொண்ணா….”, என மற்றவர்கள் எகத்தாளமாக நகைத்தபடி, “ஏய் குட்டி… நீயா வெளியே வந்துடு…. உன்ன ஒன்னும் பண்ணமாட்டோம்”, என ஒருவன் குரல் கொடுத்தான்..

“வரலன்னா என்ன பண்ணுவ?”, எனக் கேட்டபடி யாத்ரா அவனுக்கு முன்னே வந்து நின்றாள். 

“டேய் குட்டி கும்முன்னு இருக்குடா…. இது நம்மல என்ன பண்ண போகுது?”, என அசால்டாக பேசியபடி அவள் அருகில் சென்றான் . 

யாத்ரா  இரண்டு நொடியில் அவனை அடித்து வீழ்த்தியதும் மற்றவர்கள் துப்பாக்கி உபயோகிக்க ஆரம்பித்தனர். 

ஆதி துப்பாக்கி சத்தம் கேட்டு குறுக்குவழியில் வேகமாக வண்டியை ஓட்டி வந்தான். 

யாத்ரா தன்னிடம் இருந்த துப்பாக்கியை உபயோகிக்காமல் அவர்களை அடித்தே வீழ்த்த எண்ணி மறைந்து மறைந்து தாக்கினாள். 

டேம் இன்ஜார்ச் துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஓட்டமெடுத்திருந்தான். 

யாத்ராவின் பார்வை வெடிகுண்டையும் இவர்களையுமே சுற்றியபடி இருந்தது. 

வெடிகுண்டை தயார் படுத்தியவன் காட்டுவழியில் புகுந்து சென்ற திக்கை நினைவு படுத்தியபடி, அவன் இயக்கும் முன் அதை தடுக்க முனைந்தாள். 

சில நொடிகளில் ஐந்து பேரில் இருவரை தாக்கி இருந்தாள். 

மற்ற மூவரும் துப்பாக்கி உபயோகித்தபடி இருக்க அவர்களை நெருங்க முயற்சித்து தேங்கி நின்றாள். 

அந்த நேரம் ஆதி, தாஸ் மற்றும் பீட்டர் வர யாத்ரா சத்தம் எழுப்பினாள். 

“அந்த பக்கம் தான் முனு பேர் இருக்காங்க…. “, எனக் கூறிவிட்டு வெடிகுண்டு இருக்கும் பக்கம் ஓடினாள்.

ஆதியும் அவளை பார்த்துவிட்டு அங்கு மறைந்திருந்தவர்களை நோக்கி சென்றான். 

ரௌடிகள் மூவரும் துப்பாக்கியை உபயோகிக்க ஆதி மரத்தின் பின்னால் மறைந்தான். 

தாஸும் பீட்டரும் புதரில் மறைந்தபடி அவர்கள் மூவரையும் சாய்க்க ஏதுவான இடத்தை பார்த்தனர். 

ஆதி சட்டென எதிர்பக்க புதரில் மறைந்துக்கொண்டு தன்னிடமுள்ள துப்பாக்கியால் ஒருவன் காலில் சுட்டான். 

ஒருவன் அடிபட்டு விழுந்ததும் மற்ற இருவரும் பதற்றமாகி ஆளுக்கு ஒரு பக்கம் ஓடும்பொழுது, தாஸும் பீட்டரும் அவர்களை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை தட்டிவிட்டு அடித்து மயங்கச் செய்தனர்.

யாத்ரா வெடிகுண்டு அருகில் சென்று அதை நிறுத்தும் வழியை ஆராய்ந்துக்கொண்டிருந்தாள். 

ரௌடிகள் மூவரும் சாய்ந்தபின் ஆதி அவள் இருக்கும் இடம் நோக்கி வந்தான்.

“யாது யார் இவங்க?”, எனக் கேட்டபடி வந்தவன் வெடிகுண்டைக் கண்டு திகைத்து நின்றான். 

“யாது… என்ன இது? யார் வச்சா?”, ஆதி பதற்றமாக வினவினான். 

“தெர்ல அத்தான்…. இதை டீ-ஆக்டிவேட் பண்ணணும்…. உங்ககிட்ட டூல் இருக்கா?”, யாத்ரா தலையை தூக்காமலே கேட்டாள். 

“சார்… “, என அழைத்தபடி பீட்டர் அருகில் வந்தான். 

“மேடம்… அத தொடாதீங்க… இது… இது…. நீங்க டீ-ஆக்டிவேட் பண்ணமுடியாது…. இருங்க நான் பாக்கறேன்”, என பதற்றத்துடன் வந்து அருகில் பார்த்தான். 

“பீட்டர் உனக்கு பாம் டீ- ஆக்டிவேட் பண்ண தெரியுமா?”, யாத்ரா.

“ஆரம்ப கட்டத்தை பத்தி அப்ப தான் கத்துக்க ஆரம்பிச்சேன். நீங்க தாஸு அண்ணன இங்க அனுப்பினதும் நானும் வந்துட்டேன்… இது பத்தி படிச்சி இருக்கேன். கொஞ்சம் சிக்கலான சீக்குவன்ஸ் இது… இருங்க இன்னும் ஆக்டிவேட் ஆகல”, என அவன் கூறும் போதே ஐந்து நிமிடங்கள் காட்டியது. 

“அவன் ஆக்டிவேட் பண்ணிட்டான்…. அத்தான் தூரமா போங்க… தாஸ் நீயும் போ….. பீட்டர் டூல் வச்சிருக்க தானே?”, என இறுக்கமான குரலில் கேட்டாள். 

“இல்ல யாத்ரா நீ இல்லாம நான் போக மாட்டேன்”, என ஆதியும் அங்கேயே நின்றான். 

“அத்தான்ன்”, என யாத்ரா டென்ஷனுடன் கூறவும் பீட்டர் சீக்குவன்ஸாக செல்லும் வொயரை கட் செய்தான். 

“மேடம் அவனுங்க இதை சரியா சொருகல… இனி பிரச்சினை இல்ல…. நீங்க எல்லாரும் கொஞ்ச தூரம் தள்ளி போங்க”, என பீட்டர் லைட்டை அடித்து அதன் அமைப்பை கூர்ந்துப் பார்த்தான். 

“பீட்டர் கடைசியா அவன் இந்த இரண்டும் தான் கனெக்ட் பண்ணான் . நான் பாத்தேன்”, என யாத்ரா கீழே இருந்த இரண்டு வொயரைக் காட்டினாள். 

அதில் இருந்த மஞ்சள் வொயரை பீட்டர் கட் செய்யும் போது யாத்ராவின் தோளை ஒரு குண்டு துளைத்தது. 

ஆதி சட்டென யாத்ராவின் பின்னே  இருள்மறைந்த பகுதியில் சுட்டபடி துரத்திக்கொண்டு ஓடினான் . 

“பீட்டர் சீக்கிரம் பண்ணு… “, எனக் கூறிவிட்டு தன்னை சுட்டவனைத் தேடி ஓடினாள். 

ஐம்பது அடி தூரத்தில் ஒருவன் ஓடிவது கண்டு அவனை துப்பாக்கி கொண்டு கெண்டைக்காலில் சுட்டாள். 

ஆதியும் அதே போல இன்னொரு காலை குறிப்பார்த்துச் சுட இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதும் அவன் சரிந்து விழுந்தான். 

“அத்தான் அவன் உயிரோட வேணும் “, எனக் கூறிவிட்டு பீட்டர் இருக்கும் இடம் ஓடினாள். 

பீட்டர் ஒருவழியாக அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்திருந்தான். 

“முடிஞ்சதா பீட்டர்?”, எனக் கேட்டபடி அவன் அருகில் வந்தாள். 

“முடிஞ்சது மேடம்… அய்யோ மேடம் இரத்தம் வழியுது உங்க கைல”, எனக் கூறி பதறினர் பீட்டரும் தாஸும். 

“தாஸ் துண்டு குடு”, என அவன் கழுத்தில் இருந்த துண்டை எடுத்து தோளில் வைத்து இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முனைந்தாள். 

“அவனை தூக்கிட்டு வந்துட்டேன் யாது…. எங்க கொண்டு போறது?”, ஆதி அவனின் கைகால் வாய் என அனைத்தும் கட்டியிருந்தான். 

“நம்ம தேனி போயிடலாம் அத்தான்”, யாத்ரா வலியை பொறுத்தபடி பேசினாள். 

“முதல்ல உனக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணணும். தாஸ் வண்டி எடு”, எனக் கூறிவிட்டு யாத்ராவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு நடந்தான். 

பீட்டர் கைகால்கள் கட்டி இருந்தவனை தூக்கிக்கொண்டு வண்டியில் பின்னால் படுக்கவைத்து காயத்தை துணியால் கட்டினான். 

“பீட்டர்….நீ அந்த பாம் அ எடுத்துட்டு வா… தாஸ் இன்ஜினியர் மயங்கி இருக்காரு… அவரை பாரு… மத்தவனுங்கள போலீஸ் கிட்ட ஒப்படைச்சிடு….”, என யாத்ரா பீட்டரை மட்டும் ஏற்றிக்கொண்டு செல்லலாம் என்றாள். 

ஆதியும் மறுபேச்சு பேசாமல் மருத்துவமனைக்கு சென்று யாத்ராவிற்கும், பாம் வைக்க வந்தவனுக்கும் மருத்துவம் பார்த்து தேனிக்கு வண்டியைச் செலுத்தினான். 

ஆதி அர்ஜுனுக்கு இடையில் தகவலை கொடுத்தான். ஆனால் தகவல் அறியப்படாமலே இருந்தது. 

அங்கே அர்ஜுனும்…..

 

முந்தின அத்தியாயம் படிக்க.. 

அடுத்த அத்தியாயம் படிக்க .. 

முதல் அத்தியாயம் படிக்க.. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 2,568

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (384)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (164)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    563 shares
    Share 225 Tweet 141
  • 1 – அகரநதி

    506 shares
    Share 202 Tweet 126
  • 1 – அர்ஜுன நந்தன்

    484 shares
    Share 193 Tweet 121
  • 1 – வலுசாறு இடையினில் 

    456 shares
    Share 182 Tweet 114
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    400 shares
    Share 160 Tweet 100
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply