40 – அர்ஜுன நந்தன்
நரேனும் முகிலும் கண்களை நன்றாக சகஜமாக்கிக் கொண்டவர்கள் சுரங்க கோவிலில் நிற்பதை உணர்ந்தனர். அங்கிருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்க தான் இங்கிருக்கின்றனர் என்று புரிந்துக் கொண்டனர்.
“என்ன யோகி ஓடிபோக ரெடி ஆகிட்டு இப்படி பாதி வழில நின்னு அவன்கிட்ட பேரம் பேசிட்டு இருக்க?”, என நரேன் நக்கலாக கேட்டான்.
“ஹேய் நீ வாய மூடு. உன்ன இவ்வளவு நேரம் கொல்லாம வச்சிட்டு இருக்க காரணம் இருக்கு. இப்பவே உன்னை கொல்ல வச்சிடாத”, யோகி.
“காரணம் இருக்கிறவன் என்னை கொல்லமாட்ட டா. இத்தனை நாள் போதை பொருள் ஆயுதம் கடத்தறன்னு பாத்தா பொண்ணுங்கள கடத்தி விக்கிற ஈன வேலைய பாக்கற. உனக்கு வெக்கமா இல்ல?”, நரேன் அவனின் கோபத்தைக் கிளறினான்.
ஜாக்சன் நரேனின் முகத்தில் ஒரு குத்து விட்டான். பின் அவனை நேராக நிமிர்த்தி ,” சார் சொல்றத மட்டும் கேளு. எதாவது பேசின அவ்வளவு தான் நீ”.
முகில் சுற்றும் முற்றும் பார்த்தான் ஒருசிலர் ஓடி வந்து மறைந்து நிற்பதைக் கண்டவன் சற்று ஆசுவாச மூச்சை விட்டுவிட்டு ஜாக்சனை வம்பிலுத்தான்.
“டேய் எச்ச பொறுக்கி… நீ எல்லாம் ஒரு ஆளு உன்னய போய் நம்பினான் பாரு யோகி. அவன் கிறுக்கன் தான்டா. ஒரு ம****ம் உன்னால புடுங்க முடியாது”, முகில்.
“ஏய்.. ஓவரா பேசாத… காணாபோய்ருவ…..”, ஜாக்சன் துப்பாக்கியுடன் அருகில் வந்தான்.
“யாரு காணாம போகப்போறான்னு நாங்களும் பாக்கத்தானே போறோம் ஜாக்சனு. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி ஆட்டம் போடுவ? அந்த யோகி காப்பாத்துவானா? இல்ல அந்த கட்டப்பஞ்சாயத்து சந்தனபாண்டியனா? இல்ல இந்தா நிக்கறானே கமுக்கமா இந்த பழைய மினிஸ்டர் ஆ? சொல்லு நாங்களும் தெரிஞ்சிக்கறோம்”, என நரேன் நக்கலாக கேட்டுவிட்டு உதட்டில் வழியும் இரத்தத்தைத் துடைத்தான்.
சேரலாதன் நரேன் பேச ஆரம்பித்ததும் நரேனின் பார்வை சென்ற திக்கில் பார்த்தவன் ஒருசிலர் மறைந்து நிற்பதைப் பார்த்துவிட்டான். நைசாக யோகியின் அருகில் சென்று கிளம்பலாம் எனக் காதில் ஓதினான்.
நரேனும் முகிலும் ஜாக்சனுடன் வலுகட்டாயமாக வம்பிலுத்துக் கொண்டு பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க யோகியும் சேரலாதனும் நகரத் தொடங்கினர்.
“அங்க பாரு டா வெண்ண உன்ன விட்டுட்டு அவனுங்க கிளம்பிட்டானுங்க”, என நரேன் ஜாக்சனை பார்த்து கூறினான்.
“டேய் இவனுங்க தலைல துப்பாக்கி வைங்க டா. அந்த பொண்ணு கழுத்தலையும் கத்தி வைங்க. ஆளுங்க வந்துட்டாங்கன்னு துள்ளறானுங்க”, ஜாக்சன் கூறிக்கொண்டே சலீமை பிடித்து இழுத்துக் கொண்டு சந்தனபாண்டியனை பின்தொடர்ந்து ஓடினான்.
அனைவரும் அவசர அவசரமாக சுரங்கத்தை திறந்து உள்ளே ஓடினர் அனைவரையும் முன்னே விட்டு ஆர்யன் கடைசியாக உள்ளே நுழைந்தான்.
“என்ன டார்லிங் அவனுங்க பாட்டுக்கு இந்த பக்கம் போறானுங்க? நாம எப்ப பைட் பண்றது?”, அர்ஜுன் உடன் நடந்த யாத்ராவிடம் கேட்டான்.
“எங்க போயிருவாங்க செழியன். ஐஞ்சு ஆறு மணி நேரம் நடந்து அந்த பக்கம் மாட்டப்போறானுங்க அவ்வளவு தான்”, எனக் கண்ணடித்துக் கூறினாள் யாத்ரா.
“சரி நாம எந்த பக்கம் போறது இப்ப?”, அர்ஜுன்.
“ம்ம்….சஸ்பென்ஸ்”, யாத்ரா கூறிச் சிரித்தாள்.
அப்பொழுது அங்கே டி.ஐ.ஜி பரிதியுடன் வந்தார்.
“ஹாய் டார்லிங்…. எப்படி இருக்க? என்ன இந்த பக்கம்?”, என யாத்ரா பரிதியை கட்டிக்கொண்டுக் கேட்டாள்.
“கொழுப்பு அதிகமாகிடிச்சி உனக்கு. என்ன இந்த பக்கம்னு என்னையே கேக்கற….. என்ன சொல்லி போர்ஸ் கேட்ட இங்க என்ன பண்ற நீ?”, என அவள் காதைத் திருகினாள் பரிதி.
“அதான் மொத்தமா இந்த சுரங்கத்துல அடைச்சிட்டோம்ல”, அர்ஜுன் இடைபுகுந்தான்.
“அந்த கண்டைனர் வெளியே நிக்குது நம்மாளுங்க டேக்ஓவர் பண்ணிட்டாங்க. அந்த சலீம் தங்கச்சி மட்டும் அவனுங்க கிட்ட மாட்டிகிட்டா”, யாத்ரா.
“இரண்டு பேரும் வந்துடுவீங்களே எதாவது சொல்லிட்டா… அங்கிள் இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. இல்லைனா உங்கள தூக்கி சாப்ட்ருவாங்க “, எனப் பரிதிக் கூறினாள்.
“ஹலோ சார்”, என அர்ஜூனும் யாத்ராவும் டி.ஐ.ஜியை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
“ஹலோ மை யங் போல்க்ஸ் “,டி.ஐ.ஜி.
“டார்லிங் எங்கல புகழ்ந்த்து போதும். இங்க இப்படி நாம பேசிட்டு இருந்தா அங்க அவனுங்க ஓடிடுவானுங்க. அப்பறம் பேசிக்கலாம். அப்பறம் மீட் பண்றோம் டி.ஐ.ஜி சார்”, யாத்ரா.
“இங்க இருக்கறவங்கள அரெஸ்ட் பண்ணி இந்த இடத்த நீங்க கன்ட்ரோல்ல எடுத்துக்கோங்க சார். நாங்க வரோம் “, என அர்ஜூனும் யாத்ராவும் வண்டியில் கிளம்பினர்.
இந்த பக்கம் சுரங்கத்தில் நடக்க ஆரம்பித்தவர்கள் சில மணி நேர நடைக்குப் பின்னர் அந்தக் குப்பத்து நடுவில் இருக்கும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் அந்த சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் சமயம் கருப்பசாமியின் கையாள் (அதான் காவ்யா ஜூவல்லரி ல பாத்தோமே அவன்) அவர்களை வரவேற்று அங்கிருந்த மண்டபத்தில் தங்கவைத்தான்.
“குப்பத்துல யாரும் இல்லையே?”, சேரலாதன்.
“இல்லைங்க ஐயா… குட்டிகளைத் தூக்கினேன் பெருசுங்க கம்முன்னு நாம சொல்ற வேலைய செய்வாங்க இப்ப”, கருப்பசாமியின் கையாள் மாடசாமி.
“இந்த பொண்ணு கணக்கா இருக்குமா எல்லாம் ?”, சந்தனபாண்டியன் சலீமின் தங்கையைக் காட்டிக் கேட்டான்.
“1 வயசுல இருந்து 25 வயசு வரை இருக்கற பொம்பள குட்டிகளை தான் தூக்கினேனுங்க ஐயா”, மாடசாமி.
“எத்தனை குட்டி இருக்கும்?”, சந்தனபாண்டியன்.
“அறுபது இருக்கும் தோராயமா”, மாடசாமி.
“தலைக்கு ஒரு லட்சம் தரேன். அத்தனை குட்டியும் கப்பல்ல சேத்திடு . அதுக்கும் தனியா குடுத்திடறேன் “,சந்தனபாண்டியன் அங்கே விட்டு வந்த பெண்களுக்குப் பதில் இங்கிருப்பவர்களை தூக்கிச் செல்ல எண்ணிக் கேட்டான்.
“60 லட்சமா…. நீங்க என்ன சொன்னாலும் செய்யறேங்கய்யா”, எனப் பணத்தாசையில் தன் ஊர் பெண்களை விற்கத் தயாரானான் மாடசாமி.
“ஏன் ரவுண்ட் ஆ ஒரு கோடி கேக்க வேண்டியது தானே மாடசாமி. இவ்வளவு கம்மியா கேக்கற?”, எனக் கேட்டபடி நந்து கையில் துப்பாக்கியைச் சுழற்றியபடி வந்து நின்றான்.
“ஏய்… யார் நீ? எப்படி உள்ள வந்த? “, மாடசாமி பதற்றத்துடன் கேட்டான்.
“ஏன் பதட்டப்படற? பொறுமை பொறுமை… எனக்கும் பங்கு குடுக்கச் சொல்லு அறுபது என்ன? இன்னும் அறுபது பொண்ணுங்கள சப்ளை பண்றேன். எப்படி டீல் பேசலாம்?”, எனக் கேட்டபடி துப்பாக்கியை பின்னந்தலையில் வைத்துச் சொறிந்துக் கொண்டே சைகை செய்தான் நந்து.
“டேய் நீ நரேன் டீம் தானே?”, என யோகி கேட்டான்.
“அடடே பரவால்லையே… சார் உங்களால என்னையும் தெரிஞ்சி வச்சிருக்காங்க பாருங்க”, என நந்து நரேனை அழைத்துக் கூறினான்.
“ஆமாடா.. உங்கள எல்லாம் தெரிஞ்சதால தான் இப்படி நானும் நிக்கறேன் ” , என நரேனும் தன் கைக்கட்டை காட்டிச் சொன்னான்.
நந்து வந்ததில் இருந்து ஆர்யன் அங்கே மற்றவர்கள் யார் யார் இருக்கிறார்கள் எனத் தேட ஆரம்பித்தான்.
“ஹலோ ஆர்யன் , யார தேடறீங்க?”, நந்து .
“உன் உயிர் நண்பன தான். நீ முன்னாடி வந்திருக்க அவன் எங்க ?”, என ஆர்யன் கேட்டான்.
“இந்த கேங்லயே நீ தான் பிரில்லியண்ட். பாரு உங்கப்பன்ல இருந்து எவனாவது இத கேட்டானுங்களா?”, நந்து.
“பாபா…. வி ஆர் ஹெல்ப்லெஸ் நவ். ஜஸ்ட் சரண்டர்”, என ஆர்யன் யோகியைப் பார்த்துக் கூறினான்.
“நோ வே….. டூ யூ திங்க் தட் ஐ ம் ப்ரைன்லெஸ்? பாய்ஸ்…… டேக் த வெபன் “, யோகி ஆர்யனைப் பார்த்துக் கத்தினான்.
யோகியின் முன்னும் பின்னும் வந்தவர்கள் தோளில் இருந்த துப்பாக்கியை மாற்றம் செய்து மிஷன்கன்னாக புல்லட்டை லோட் செய்து சுடத் தயாராக நின்றனர்.
“அட் எனி காஸ்ட் ஐ வில் கெட் அவுட் ஆப் திஸ் பிளடி கண்ட்ரி”, யோகி கண்களில் தோல்விக் கலந்த ஆத்திரத்துடன் கூறினான்.
அவன் அருகில் நின்ற எட்டு பேர் கைகளிளும் இருக்கும் துப்பாக்கி நூற்றுக்கணக்கான ஆட்களை சுட்டுத்தள்ளும் என்பதை அனைவரும் அறிந்தனர்.
“யேய் யூஸ்லெஸ் இடியெட்…. ஒழுங்கா வழி விட்டா நீங்க உயிரோட இருக்கலாம் இல்லை உன்கூட எத்தனை பேர் இருந்தாலும் ஒருத்தனும் தப்ப முடியாது”, என யோகி மிரட்டல் விடுத்தான்.
“பார்ரா….. வில்லன் டையலாக்காம். இனி உன்ன யாராலயும் காப்பாத்த முடியாது”, என கூறி நந்து துப்பாக்கியை ஏந்தினான் சுட ஆயத்தமாக.
ஜாக்சன் நந்துவை குறிப்பார்த்துச் சுட எத்தனிக்க நரேன் அவனை எட்டி உதைத்துவிட்டான்.
ஆர்யன் முன்னமே நரேன் மற்றும் முகிலின் கைகட்டுகளை லூசாக்கி இருந்தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்தும் இருந்தனர்.
முகிலும் தன் கட்டடுகளை அவிழ்த்ததும் சலீமின் கட்டுகளைக் களைந்தான்.
உள்ளே துப்பாக்கி சத்தம் கேட்டதும் அந்த கோவிலின் கதவைத் திறந்துக் கொண்டு சிவியும் நெடுமாறனும் போலீஸ் போர்ஸ் மற்றும் கடற்கரை பாதுகாப்பு போர்ஸ்வுடன் கைகளில் துப்பாக்கியுடன் உள்ளே வந்தனர்.
யோகி, சேரலாதன் சந்தனபாண்டியன் மூவரையும் அரவணைத்தபடி எட்டு பேர் மெஷின் கன்னுடன் சுட ஆரம்பித்தனர்.
ஆர்யனும் தன்னைச் சுற்றி நின்றவர்களை சுட்டு தள்ளிவிட்டு நரேனிற்கும் முகிலிற்கும் துப்பாக்கியை தூக்கி வீசினான்.
நெடுமாறன் சகோதரர்களை தொடர்ந்து பரத் செந்தில் யோகியை நோக்கிச் சென்றனர். அந்த கோவிலின் பின் வழியாக மாடசாமி மூவரையும் வெளியே அழைத்துக் கொண்டு செல்ல திட்டமிட்டு கோவிலைச் சுற்றி ஓடினான்.
சிவியும் நெடுமாறனும் மிஷன்கன் வைத்திருந்தவர்களில் நான்கு பேரை வீழ்த்தி இருந்தனர். ஜாக்சன் யாருக்கோ போன் செய்து ஆட்களை அனுப்பச் சொன்னான். அதன் பலனாக நூறுக்கும் அதிகமான ஆட்கள் கோவிலை நோக்கி வந்தனர். நந்து கோவிலின் மதிலில் நின்றபடி அங்கு வருபவர்களை நோக்கி மயக்க மருந்து கலந்தக் குண்டுகளை வீசினான்.
அதில் சிதறியவர்கள் பிரிந்துத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் கைகளிலும் துப்பாக்கியும் வெடிகுண்டும் இருந்தது.
போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களும் பதில் தாக்குதல் நடத்தவென அந்த இடமே போர்களமாக மாறியது.
நந்து மும்முரமாகத் துப்பாக்கிச் சூட்டில் இருந்த சமயம் அவனை நோக்கி ஒருவன் சுட, அந்த குண்டு அவனின் தோளில் உரசி மதில் சுவற்றில் பட்டுதெறித்தது.
அவனை யாத்ரா சரியாக பிடித்து இழுத்ததால் உராய்வுடன் நந்து தப்பினான்.
“பாத்து இருங்க நந்நன். இன்னேரம் உங்க ஹார்ட்ல இறங்கி இருக்கும் அந்த குண்டு”, எனக் கண்டிப்புடன் எச்சரித்தாள் யாத்ரா.
“தேங்க்யூ. அர்ஜுன் எங்க?”, நந்து.
“அதோ “, என யாத்ரா காட்டிய திசையில் அந்த கோவிலின் தென்கிழக்கு மூலையில் நான்கு பேரை துவம்சம் செய்துக் கொண்டிருந்தான் நம் அர்ஜுன்.
அங்கிருந்தபடி யாத்ராவை நோக்கி பிளையிங் கிஸ் வேறு பறக்கவிட்டான். (பயபுள்ள எங்கிருந்தாலும் அவன் ஆள மயக்கறத விடறதே இல்ல).
அதைக் கண்ட நந்து தலையில் அடித்துக் கொண்டு,” இந்த இடத்துலயும் உங்களுக்கு ரொமான்ஸ் கேக்குதா?”.
“போய் உன் பிரண்ட்அ கேளுங்க நந்தன். நிறைய பேரை கொல்லணும். சீனியர் எங்க?”, யாத்ரா.
“அவனுங்கள பாலோ பண்ணிட்டு தான் போனாரு. அதோ அங்க”, என வடமெற்கு மூலையைக் காட்டினான் நந்து.
உடனே யாத்ரா அந்த இடம் நோக்கி இறங்கி ஓடினாள். அந்த சமயம் ஜாக்சன் அவள் முன் வந்தான்.
“இன்னாமா … எப்படிக்கீற? சோக்கா என்னைய தூக்கின்னு வந்துட்டல்ல நீ…. உன்னைய சும்மா விட்ருவேனா?”, எனக் கூறியபடி ஜாக்சன் அவளை நெருங்கினான்.
“அதுக்கு இப்ப என்னங்கற நீ?”, யாத்ரா தன் அடங்காத்திமிருடன் கேட்டாள்.
“உன்னைய கொல்லணும்னு தான் வந்தேன். ஆனா நீ செம பாலீஸா இக்கீற.. வா உன்னோட சந்தோஷமா இருந்துட்டு அப்பறம் கொண்ணுக்கறேன்”, என அவள் கையைப் பிடித்தான்.
அவன் தன் கையை பிடித்ததும் மர்மமாகப் புன்னகைத்தவள் தன்கையை லூசாகவிட்டு, அவனின் கையைப் பிடித்துச் சுழற்றி அவன் கழுத்தில் கத்தியை வைத்துக் கோடு போட்டாள்.
கண் இமைக்கும் நொடியில் தன் கழுத்தில் கோடு கிழித்த யாத்ராவை வெறிக் கொண்டு தாக்கப் பாய்ந்து வந்தான் ஜாக்சன்.
அவளும் அவனின் அத்தனை தாக்குதல்களையும் அசால்ட்டாக சமாளித்து ஒவ்வொரு தாக்குதலிலும் அவனுடம்பில் கத்தியால் காயப்படுத்திக் கொண்டே வந்தாள்.
அவள் இறங்கியதும் அவளை நோக்கி நகரத்தொடங்கிய அர்ஜுன் அவளின் தாக்குதல் முறைகளை மனதிற்குள்ளேயே மெச்சிக்கொண்டான்.
“சும்மா சொல்லக்கூடாது நம்மாளு சகலகலாவித்தகி தான்”, என நினைத்துச் சிரித்தான்.
ஜாக்சனின் உடம்பில் ஐம்பத்தி நான்கு கோடுகள் போட்டிருந்தாள் ஐந்து நிமிடத்திற்குள். அவன் உடம்பில் இரத்தம் கசிந்து அவன் பலகீனமாகிக் கீழே விழுந்தான்.
நெடுமாறனை அழைத்து ஜாக்சனைத் தூக்கி செல்லக் கூறினாள். அவனும் அவள் சொற்படி அவனை தூக்கிக் கொண்டு எங்கோ சென்று மறைத்து வைத்தான்.
சிவி அவளருகில் வந்து, ” பேபி… செந்தில் மெஸேஜ் அனுப்பிட்டாரு”.
“சரி. நான் அங்க போறேன். நீ பரிதிக்கு இன்பார்ம் பண்ணி வரசொல்லு”, எனக் கூறி அங்கிருந்து கோவிலின் வெளிவாசலை நோக்கி ஓடினாள் யாத்ரா.
அவள் ஓடும் பொழுதே அர்ஜுன், நந்து, நரேன் என மூவருக்கும் தகவல் அனுப்பி அவள் போகும் திசைக்கு வரச்சொன்னாள்.
நந்து முகிலை அழைத்து பெண்கள் எங்கே கடத்தப்பட்டு இருக்கிறார்கள் எனப் பார்த்து காப்பாற்றும்படி உத்திரவிட்டுச் சென்றான்.
முகில் கதிரைக் கண்டுபிடித்து விஷயத்தைக் கூறி பின் இருவரும் தேடத் தொடங்கினர்.
செந்திலும் பரத்தும் யோகி கூட்டத்தைப் பின்தொடர்ந்து, அவர்களை கடற்கரை நோக்கி திசைத்திருப்பி யாருமற்றக் காட்டுமறைவை நோக்கிச் செல்லவைத்தனர்.
அவர்கள் காட்டுப்பக்கம் திரும்பியதும் யாத்ராவிற்கு தகவல் கொடுத்தனர்.
யாத்ரா, அர்ஜுன், நந்து, நரேன் நால்வரும் காட்டில் ஆளுக்கொரு பக்கமாகப் புகுந்து அவர்களை நோக்கி வந்தனர்.
இன்னும் இரண்டு பேர் அவர்களுடன் மிஷின்கன் வைத்திருந்ததால் பதுங்கி பதுங்கி வந்தனர்.
செந்திலும் பரத்தும் கூடக் காட்டிற்குள் புகுந்துக் கொண்டு அவர்களை சுற்றிவளைக்கும் படி சத்தம் எழுப்பி அவர்கள் காட்டை விட்டு வெளிவராதவாறுப் பார்த்துக் கொண்டனர்.
அர்ஜூனும் நந்துவும் அந்த மெஷின்கன் வைத்திருந்தவர்களை அந்த பக்கம், இந்த பக்கம் என ஓடிப் பிரித்து அவர்களின் கன்னை தட்டிவிட்டு முதுகில் வைத்து ஒரு சுற்றுச் சுற்றி அவர்களின் கழுத்தை நெருக்கியபடி யோகியின் முன்னால் வந்து நின்றனர். இருவரின் கைகளிலும் அவர்களின் கழுத்தெழும்புகள் நொறுங்கி மயங்கிச் சரிந்தனர் அடியாட்கள்.
யாத்ரா அவர்களின் முன்னால் சென்றாள்.
மாடசாமியின் ஆட்கள் அவளைச் சுட ஆயுத்தமாகும் சமயம் ஆர்யன், ஜான், சிவி, நெடுமாறன், செந்தில், பரத் அனைவரும் அவர்களை நெருங்கி மாடசாமியின் அடியாட்கள் தவிர மற்றவர்கள் தலையில் துப்பாக்கியுடன் நின்றனர்.
ஆர்யன் தன் தந்தை யோகியின் தலையில் துப்பாக்கி வைத்து நிற்பதைக் கண்டவர்கள், சற்று அதிர்ந்து தன்னிலைத் திரும்பி அவனைக் கேட்கத்தொடங்கினர்.
“ஏன் தம்பி அப்பா தலைலயே துப்பாக்கி வச்சி நிக்கறீங்க?”, சந்தனபாண்டியன்.
“பின்னாடி திரும்பி பாருங்க”, ஆர்யன்.
அவர்கள் அதிர்ந்த சமயம் தான் நம்மாட்கள் மற்றவர்கள் அருகில் நெருங்கி துப்பாக்கி முனையில் அவர்களை நிறுத்தி இருந்தனர்.
சிவி சேரலாதன் தலையிலும், நெடுமாறன் சந்தனபாண்டியன் தலையிலும், செந்தில் மாடசாமி தலையிலும், ஜானும் பரத்தும் மற்ற அடியாட்களைக் குறிவைத்து நின்றிருந்தனர்.
“என்ன யோகி…. சவுக்கியமா?”, என யாத்ரா நக்கலாகக் கேட்டாள்.
“ஹேய்…. நீ தான் அத்தனைக்கும் காரணம். உன்ன கொல்லாம விடமாட்டேன்”, எனக் கோபத்தில் யோகி கத்தினான்.
“ரியன் செல்லம் உங்கப்பன் ஏன் இப்படி ஹைபிச்ல கத்தறான். அமைதியா இருக்க சொல்லு”, யாத்ரா காதைக் குடைந்தப் படிக் கூறினாள்.
“ஏது ரியன் செல்லமா? டேய் அர்ஜுன் உனக்கு அல்வா குடுத்துட்டா டா அவ. பாரு அவன செல்லம்ங்கிறா”, நரேன் அர்ஜூனின் காதில் கிசுகிசுத்தான்.
“கம்முன்னு இரு ண்ணா… கண்ட நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு”, நந்து அடிக்குரலில் சீறினான்.
“டேய் உண்மைய சொன்னா காமெடின்னா சொல்ற நீ?”, நரேன் நந்துவை முறைத்தான்.
“அடச்சீ வாய மூடுங்க. நொய் நொய்ன்னு” , அர்ஜுன் இருவரையும் அடக்கினான்.
“நீயே சொல்லு பியூட்டி நான் சொன்னா கேக்கமாட்டாரு”, ஆர்யன்.
“சரி என் பாணில தான் சொல்வேன். ஓக்கேவா ரியன்?”, யாத்ரா.
“நீ எப்படி சொன்னாலும் ஆர்யன் சார் மறுப்பு சொல்லமாட்டாரு பூவழகி. நீ சொல்லு”, ஜான்.
“இவன் ஒருத்தன் நேரங்காலம் தெரியாம பாசத்த காட்டிகிட்டு”, என செந்தில் முனுமுனுத்தான்.
“சரி. சீனியர் இவங்களுக்கு என்ன பணிஸ்மெண்ட் குடுக்கலாம்?”, யாத்ரா.
“அதான் பிளான்பண்ணிட்டல்ல நீயே சொல்லு”, செந்தில்.
“மாறா…. போய் அத கொண்டு வா”, யாத்ரா நெடுமாறனைப் பார்த்துக் கூறினாள்.
அவர்களை துப்பாக்கி முனையில் வைத்தே கடற்கரை பக்கமாக அவர்களை இழுத்து வந்தனர்.
அவன் சென்று ஒரு கன்டைனர் வண்டியை எடுத்து வந்தான். அதில் சில கண்ணாடி தடுப்புகள் எழுப்பப்பட்டு நீர் நிறப்பி இருந்தது. அதில் சில மீன்களும் நீந்திக் கொண்டு இருந்தது. அந்த கன்டைனரில் முதலில் இருந்த கண்ணாடி தடுப்பின் திரை விலக்கி காட்டினான் நெடுமாறன்.
அதில் ஜாக்சனின் உடலை மீன்கள் கடித்துத் தின்றுக்கொண்டு இருந்தன, அவனுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே. அவனை கொஞ்சம் கொஞ்சமாக கடித்து கால் பகுதியில் எழும்பு வெளியே தெரிந்தது. அவன் வலியில் கத்தக்கூட தெம்பில்லாமல் முனகியபடி கட்டப்பட்டு இருந்தான். அடுத்து தொடை பகுதியை தண்ணீரில் இறக்கக் கூறினாள் யாத்ரா.
“யாத்ரா…….”, செந்திலும் நரேனும் ஒரே குரலில் கூவினர்.
“என்ன சீனியர்?”, யாத்ரா.
“என்ன இது இப்படி ஒரு தண்டனை குடுத்து இருக்க? இது சட்டத்துக்கு விரோதமானது”, செந்தில்.
“இவன நீ அடிச்சே கொண்ணு இருக்கலாம் யாத்ரா”,நரேன்.
“உடனே செத்துட்டா இவனுங்களுக்கு எல்லாம் மத்தவங்களுக்கு குடுத்த வலி எப்படி தெரியும் சீனியர்? இதுவரைக்கும் எத்தனைப் பேரைத் துடிதுடிக்க கொண்ணு இருப்பானுங்க இவனுங்க? நீங்களே சொல்லுங்க இவங்களுக்கு என்ன தண்டனை குடுக்கலாம் நரேன்”, இருவரையும் பார்த்தபடிக் கேட்டாள் யாத்ரா.
அர்ஜுன், நந்து, பரத், ஜான், ஆர்யன் ஐவருமே அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சிவியும், நெடுமாறனும் அவள் எது சொன்னாலும் செய்யத் தயார் என்பதைப் போல அவளருகே நின்றனர்.
நரேனும், செந்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு யாத்ராவைப் பார்த்தனர்.
அந்த சமயம் கருப்பசாமியுடன் முகிலும், கதிரும் அந்த இடத்திற்கு வந்தனர்.
கருப்பசாமி வந்ததும் மாடசாமியை அடிக்கத் தொடங்கினான். “ஏன்டா ********** பரதேசி.. என்ன திண்ணக்கம் இருந்தா நம்ம குப்பத்து பொண்ணுங்கள கூட்டி குடுப்ப? உன் பொண்ணும் தானேடா அதுல இருக்கா”, என விடாது அடித்து நொருக்கினான் அவனை.
“அண்ணே விட்ரு … பணத்தாசைல தெரியாம பண்ணிட்டேன். இனிமே எந்த தப்பும் பண்ணமாட்டேன். அடிக்காதீங்க அண்ணே. என்னைய விட்ருங்க”, மாடசாமி கருப்பசாமியின் காலில் விழுந்து கெஞ்சினான்.
“உன்னையெல்லாம் சும்மா விடமாட்டேன்டா”, கருப்பசாமி.
“யாத்ராம்மா…. இந்த ஈனப்பிறவிய என்கிட்ட விட்ருங்க. நானே என் கையால கொண்ணாதான் ஆத்திரம் அடங்கும். உங்கனால இன்னிக்கு எங்க குப்பத்து வம்சமே தப்பிச்சி இருக்கு. ரொம்ப நன்றிம்மா”, எனக் கைக்கூப்பினார்.
“விடு கருப்பண்ணா…. நீ அவன எப்படி வேணா அடிச்சி கொண்ணுக்க, ஆனா பொணம் யார் கண்ணுக்கும் படக்கூடாது. நந்தன் மாடசாமிய மட்டும் அனுப்பிடுங்க”, யாத்ரா கூறினாள்.
கருப்பசாமி மாடசாமியை இழுத்துக் கொண்டுச் சென்றான் அங்கிருந்து.
“அவன அனுப்பிட்டா நமக்கு எவிடென்ஸ்?”, செந்தில்.
“எதுக்கு எவிடென்ஸ்? இந்த குப்பம் பேர் வெளிய வரக்கூடாது. இவனுங்கள அப்படியே அதே சுரங்கத்துல திருப்பி அனுப்புங்க அங்க வச்சி இவனுங்க கதைய முடிச்சிக்கறேன்”, கண்களில் ரௌத்திரத்துடன் கூறினாள் யாத்ரா.
“எதுக்கு அங்க அனுப்பற ? இங்கயே செய்ய வேண்டியத செஞ்சிடு “, எனக் கூறியபடி பரிதியும் அங்கு வந்தாள்.
“பரிதி மேடம் நீங்களும் இப்படி சொன்னா எப்படி?”, நரேன் கேட்டான்.
“வேற என்ன பண்ணச் சொல்றீங்க நரேன் சார் ? நாம எவ்வளவு எவிடென்ஸ் குடுத்தாலும் இவனுங்க ஈஸியா வெளிய வரானுங்க. இந்த மாதிரியான தப்புக்கு எல்லாம் தண்டனை கொடூரமா இருக்கணும். அப்பத்தான் மறுபடியும் இந்த தப்ப பண்ணமாட்டாங்க. அர்ஜூனும் யாத்ராவும் ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டாங்க. விசாரணை கமிஷன நாம பாத்துக்கலாம். ஜாக்சனை மட்டும் உயிரோட கொண்டு போலாம் சட்டத்துக்கு முன்ன காட்ட”, பரிதி.
“இவன வச்சி தான் அந்த ஹோம் மினிஸ்டர்ல இருந்து மத்தவங்கள பிடிக்க முடியும் பரிதி மேடம். அந்த இஷான் சர்மா தான் இந்த மாதிரியான வேலைக்கு ப்ரோகர்”, நரேன்.
“நீங்க யார வேணா பிடிங்க. ஆனா யோகிய மட்டும் நானும் சட்டபூர்வமா கொண்டு போக சம்மதிக்க முடியாது. சேரலாதன், சந்தனபாண்டியன் ஏற்கனவே அவங்க குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாச்சி. அவனுங்கள கொண்டு போறேன் நான். நீங்க ஜாக்சனைக் கொண்டு போங்க வேணும்னா இவனுங்களையும் சேத்திக்கோங்க. நான் வேணாம்னு சொல்லமாட்டேன்”, பரிதி திடமாகக் கூறினாள்.
“பரிதி….. இதனால எத்தனை பிரச்சினை கிளம்பும்னு தெரியாமையா இருக்கு உனக்கு? ஏன் இந்த பிடிவாதம்?”, செந்தில்.
“இவன் என்ன பண்ணான்னு உங்களுக்கு முழுசா தெரியுமா செந்தில்?”, பரிதி.
“நானே சொல்றேன் பரிதி மேடம்”, என ஆர்யன் முன்வந்தான்.
“வெறும் ப்ரௌன்சுகர், வெபன்ஸ் மட்டும் நாங்க கடத்தல. இந்த பேர்ல இத்தன காலமா சின்ன சின்ன குழந்தைங்கள கடத்தி அவங்க உடலுறுப்புகள் வித்தான். எத்தனை மாச பெண் குழந்தையா இருந்தாலும், அத கடத்தி வச்சிட்டு பல நாடுகளுக்கும் வித்துட்டு இவனுக்கு தேவைபடற குழந்தைகள……”, ஆர்யன் சொல்ல முடியாமல் தடுமாறினான்.
“அந்த வலில செத்த குழந்தை உடம்புல இருக்கற உறுப்புகளையும் விடாம, அதையும் காசாக்கிட்டான் இந்த பாவி”, என ஆர்யன் கூறினான்.
யோகி தப்பானவன் தான் ஆனால் இந்த அளவிற்கு பாவத்தை செய்பவன் என யாரும் எதிர்பாக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு அவன் இழைத்த அநியாயம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராதப் பாவச்சுமையை ஏற்றிவிட்டது.
இதற்கு பின் யாரும் யோகியின் முடிவைப் பற்றி மறுத்துக் கூற முன்வரவில்லை.
நந்து ,” இவங்கள இழுத்துட்டு போங்க”, என அங்கிருந்த போலீஸார் உடன் கதிர், முகில் மற்றும் பரத்தை போகச் சொன்னான்.
சிவியும் நெடுமாறனும் சேரலாதனைக் கண்களாலே கொல்லும் சக்தி இல்லாமல் போனதை நினைத்து வருந்தினர். அப்படி இருந்திருந்தால் இருவரும் சேரலாதனின் சாம்பலைக்கூட இந்த பூமியில் விட்டு வைத்து இருக்கமாட்டனர்.
“யாத்ரா…. நீ நினைக்கிற தண்டனைய நீ குடுத்துக்க. அவன நாளைக்கு கோர்ட்ல மட்டும் நிறுத்திட்டு அப்பறம் தூக்கிக்கலாம். தேவையில்லாத கமிஷன் நமக்கும் வேணாம். அவன் தப்பிச்சிட்டான்னு சொல்லிக்கலாம். நான் போய் அந்த குப்பத்து பொண்ணுங்கள சேப் பண்ணிட்டாங்களான்னு பாத்துட்டு வரேன். வாங்க நந்தன்”, என செந்தில் அழைத்துக்கொண்டுச் சென்றான்.
அவர்கள் சென்றதும் பெரும் அமைதி நிலவியது. ஆர்யன் தன் தொண்டையைச் செறுமிக் கொண்டு, ” நானும் சரண்டர் ஆகிடறேன் பியூட்டி”.
“வேணாம் மிஸ்டர். ஆர்யன். நீங்க சரண்டர் ஆகறதால எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல”, பரிதி.
“என்னால இனிமேலும் அவன் புள்ளைன்னு சொல்லிட்டு இந்த நாட்ல இருக்க முடியாது”, ஆர்யன்.
“சரி அது உங்க இஷ்டம். ஆனா நாங்க சொல்றபடி நீங்க நடக்கறதா உறுதி குடுத்தா இங்கிருந்து நீங்க போலாம். உங்க மேல ஏற்கனவே இருக்கற கேஸ்ல இருந்து ரிலீஸ் பண்ண ஏற்பாடு பண்றேன்”, பரிதி.
“என்ன உறுதி?”,ஆர்யன் புரியாமல் வினவினான்.
“நீங்க இதுவரை பண்ண இல்லீகல் பிசினஸ் கான்டாக்ட்ஸ மொத்தமா எங்களுக்கு குடுக்கணும். எங்களுக்கு இன்பார்மரா ஹெல்பரா இருக்கணும் எந்த நாட்ல இருந்தாலும்”, பரிதி.
“நான் ஏன் இதுல்லாம் பண்ணணும்?”, ஆர்யன் கடுப்பாகக் கேட்டான்.
“அப்படின்னா நீங்க இந்த நாட்ட விட்டு போக முடியாது. சிலபல கேஸும் இன்னும் உங்க மேல வரும்”, பரிதி.
“நான் பொய் சொல்லிட்டு இங்கிருந்து போயிட்டா என்ன பண்ணுவீங்க பரிதி மேடம்?”, ஆர்யன்.
“உன் வார்த்தைய நம்ப நான் ரெடி ஆர்யன். எதுவும் உன்கிட்ட கேட்காம வந்த யாத்ராக்கு இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ண நீங்க, நான் வாயத்தொறந்து கேக்கறப்ப ஏன் செய்யக்கூடாது?”, பரிதி ஓர் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“சரி. ஆனா என்னால ….”, ஆர்யன்.
“புரியுது. எல்லாமே இந்த நாட்டுக்கு அதிக கேடு குடுக்காம இருக்கிறவரைக்கும் நல்லது”, பரிதி.
“சரி முடிஞ்சதுல்ல வாங்க போலாம். எனக்கு பசிக்குது . பாருங்க இராத்திரி ஆகிரிச்சி. மத்தியானம் சாப்டது”, என யாத்ரா கூற அந்த இடம் சிரிப்பால் நிறைந்தது.
“உன்னால சாப்பாடு இல்லாம இருக்க முடியாதா?”, நரேன்.
“உங்களால பல்ப் வாங்காம இருக்கமுடியாது, அவளால பசிய தாங்க முடியாது. வா டார்லிங் நாம போலாம் . அங்க குப்பத்துல சூப்பரா சமைப்பாங்கலாம். நந்துவ அதுக்கு தான் அனுப்பினேன்”, என யாத்ரா கைப்பற்றி முன்னே நடந்தான் அர்ஜுன்.
அங்கிருந்தவர்கள் ,” நல்லா சேந்தாங்க ஜோடி”, எனத் தலையில் அடித்துக் கொண்டார்கள்.