6 – அகரநதி
அன்று காலையிலேயே அலுவலகத்தில் அனைவரும் பரப்பரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தனர்.
அங்கே ஒருவன் வாட்டசாட்டமாக அம்சமாக நடந்து வந்தான் கைகளில் பைலுடன். ஆறடிக்கு சற்று குறைந்த உயரம் மாநிறத்திற்கும் அதிகமான நிறம் அதற்கேற்ற உடல் எனக் கண்களைக் கவரும் அழகனாகவே இருந்தான்.
“மிஸ். ஸ்வப்னா…. சீக்கிரம் அந்த **** ஹோட்டல் பைலை ரெடி பண்ணுங்க. எம்.டி வந்தா உடனே கேப்பாரு”.
“இதோ மிஸ்டர்.சரண் நேத்து நைட்டே ரெடி பண்ணிட்டேன். அந்த டிசைன்ஸோட காப்பி இதுல இருக்கு. முக்கியமான யுனிக் டிசைன் நான் சாருக்கு மெயில் பண்ணிட்டேன்”, ஸ்வப்னா.
“பைன். மீட்டிங் ரூம் ரெடியா பாருங்க. இன்னும் முப்பது நிமிஷத்துல ஆரம்பம் ஆகிடும்”, சரண்.
“ஓகே சார்”,என மீட்டிங் ரூம் நோக்கி சென்றாள் உதவியாளர் ஸ்வப்னா.
அலுவலத்தின் வளாகத்தில் மிதமான வேகத்தில் கருப்பு நிற ஹோண்டாசிட்டி கார் நின்றது.
அதில் இருந்து ஆறடி உயரத்தில், விடாது செய்த உடற்பயிற்சியால் வலுவேறிய உடற்கட்டுடன் நல்ல சிகப்பு நிறத்தில் ஆணழகனாய், கம்பீரத்துடன் அலை அலையாக இருந்த தலைமுடியைக் கோதியபடி காரில் இருந்து இறங்கி வந்தான்.
அந்த கருநீல நிற கோட்டில் யாரையும் ஈர்க்கும் தோற்றத்துடன் அலுவலத்தில் மின்னலென உள்நுழைந்தான்.
ரிசப்சனிஸ்ட் எழுந்து நின்று காலை வணக்கம் செலுத்த மற்றவர்களும் எழுந்து நின்று மரியாதைச் செலுத்தினர்.
நேராக எம்.டி அறைக்கு சென்று தன் கையில் கொண்டு வந்த லேப்டாப்பை மேஜையில் வைத்து இன்டர்காமில் சரணை அழைத்தான்.
“குட் மார்னிங் அகர்….” சரண்.
“குட் மார்னிங் சரண். மீட்டிங்கு எல்லாம் ரெடியா?”, அகரன்.
“ஸ்வப்னா மீட்டிங் ரூம் ரெடி பண்ணிட்டாங்க. இந்தா பைல் அப்பறம் முக்கியமான டீடைல்ஸ் உனக்கு மெயில் அனுப்பி இருக்காங்க”, சரண்.
“சரி பாக்கறேன். மதியம் லன்ட்ச்சுக்கு ஏற்பாடு பண்ணிடு”, அகரன்.
“சரி அகர். இன்னிக்கு அந்த ஹோட்டல் நமக்கு தான்”, அகரன்.
“அது நீ எக்ஸ்ப்ளைன் பண்றதுல இருக்கு”, அகரன்.
“ஏது நானா?”, சரண் அதிர்ச்சியில் கேட்டான்.
“ஆமா. நீ தான்”, அகரன்.
“டேய் இது அநியாயம். நான் எதுவும் ரெடி பண்ணல”, சரண்.
“ஏன் நீ தான் அசால்டா 7 ஸ்டார் ஹோட்டல விட பெட்டரா டிசைன் பண்றவனாச்சே. இத பண்ணமாட்டியா?”,அகரன் சரணை நோக்கி ஒரு புருவம் உயர்த்திக் கேட்டான்.
“கேட்டுட்டியா. அது சும்மா அந்த பொண்ணு கிட்ட பில்டப் பண்ணேன் டா. அழகா இருக்கு கரெக்ட் பண்ணலாம்னு”, எனத் தலையைச் சொறிந்தபடிக் கூறினான்.
“அந்த பொண்ணுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு. நீ இங்க இருக்கிற வேலைய பாத்தா போதும். போய் மீட்டிங் ரூம் ரெடியான்னு பாத்துட்டு ரெபிரஸ்மெண்ட் ஏற்பாடு பண்ணு”, என அனுப்பி வைத்தான்.
“இவன் அப்பதான் உள்ளயே வந்தான் எப்படி கேட்டு இருக்கும்?”, சரண் மனதில் நினைத்து கொண்டே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
“உன் மூஞ்ச பாத்தாலே தெரியும் நீ என்ன பில்டப் அங்க குடுத்துட்டு இருப்பன்னு. போய் வேலைய பாரு. ப்ரொஜெக்டர் சிஸ்டம் கூட கனெக்ட்ல இருக்கா பாரு”, அகரன்.
“ஓகே சார்”, சரண் கடுப்பாகக் கூறி வெளியேறினான்.
அவன் செல்வதைக் கண்ட அகரன் மென்னகைப் புரிந்தான்.
அடடா அகரா என்ன மென்னகை உனக்கு? மீசை முளைக்கும் வயதில் பார்த்தவனை இப்பொழுது 26 வயதில் முழு ஆண்மகனாய் கம்பீரமாக வளர்ந்து நிற்பவனை பார்க்கும்போது கண் நிறைந்து தான் போகிறது.
சொன்னதை போலவே ஆர்கிடெக்சர் படித்து சொந்தமாக இப்பொழுது ஒரு கட்டிடக்கலை கம்பெனி ஆரம்பித்துவிட்டான்.
காலேஜில் சேரும் பொழுதே சரணையும் கூடவே இழுத்துக் கொண்டான். இரு வருடம் வேறு கம்பெனியில் வேலைப் பார்த்து, அனுபவத்தை ஈட்டியபின் தான் சொந்தமாக ஆரம்பித்தான்.
வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். ஊரில் விவசாயம் முதல் பல தொழில்களை பெற்றவர்கள் பார்த்தாலும், சொந்தமாக தான் ஒரு தொழில் செய்தே தீருவேன் என இப்பொழுது ஆரம்பித்து வெற்றி காணத் தொடங்கியுள்ளான்.
சரணின் அப்பாவும் அகரனுடன் இருந்தால் தன் மகன் உருப்படுவான் என அவனுடனேயே அனுப்பிவிட்டார்.
இவனின் தனித்துவமான கட்டுமான கலையைக் கண்ட ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டல், புது கிளையை ஆரம்பிக்க இவர்களை நாடியுள்ளனர்.
இவர்கள் கொடுக்கும் கொடேசன் முதல் டிசைன்கள் வரை திருப்தியான பின் இவர்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்படும்.
அகரனின் தொழில் பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்று.. அதனால் மிகவும் சிரத்தையுடன் இதில் ஒவ்வொரு பகுதியையும் செதுக்கி இருந்தான் என்று தான் கூறவேண்டும்.
ஹோட்டல் தலைமை நிர்வாக அலுவலர்கள் வந்ததும் உபசரிக்கப்பட்டு மீட்டிங் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
“குட்மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். இது புது கிளை ஹோட்டலுக்கான லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சுரல் டிசைன். இன்டீரியர் டிசைன் , எலக்ட்ரிகல், பிளம்பிங், பையர் பைட்டிங் டிசைன்ஸ் ஆப் பர்பஸ்.
முதல்ல ஸ்பேசியஸ் என்ட்ரன்ஸ் டிராப்ஆப் பாயின்ட், அடுத்து லாப்பி , கோர்ட்யார்ட். உள்ள வந்ததும் ஹை சீலிங் ஹால் தேர் வீ ஹேவ் ரிசப்சன். லெப்ட் சைட் லிப்ட், ரைட் சைட் ஸ்டேர்ஸ். 10 ப்ளோர்ஸ். 3 சூட் ரூம்ஸ்.ரிமைனிங் 3பெட் , டபுள் பெட் ரூம்ஸ் வித் பர்னிச்சர்ஸ்.
உங்க முன்னாடி இருக்கிற பேபர்ஸ்ல ஓவர்ஆல் டிசைன்ஸ் அண்ட் கொடேசன் எல்லாமே இருக்கு. யூ கன்பர்ம் யுவர் ஹெட் அண்ட் வீ கேன் கோ அஹெட் வித் எவரி ஸ்மால் டிசைன்ஸ் ஆப் எ பில்டிங்”, எனக் கூறி அகரன் முடித்தான்.
“மிஸ்டர் அகரன். வீ லைக் ஆல் யூவர் டிசைன்ஸ் அண்ட் கோட். வில் டிஸ்கஸ் வித் ஹெட் அண்ட் கான்டாக்ட் யூ”, எனக் கைக்குழுக்கினர்.
அனைத்து டிசைன்களையும் பார்த்தவரகள் தங்கள் பட்ஜெட்டில் சிறந்த டிசைனுடன் பல விஷயங்களையும் உள்ளடக்கிய இவர்களின் கொடேசன் பிடித்து விட மேலிடத்தில் தகவல் தெரிவித்து விடுவதாகக் கூறி விடைப் பெற்றுச் சென்றனர்.
சரண் வாயை பிளந்தபடிப் பார்த்திருந்தான். மீட்டிங் முடிந்தும் இன்னும் அப்படியே சமைந்து போய் அமர்ந்து இருந்தான்.
“சரண்…. டேய் சரண்…”, என அகரன் அவன் தலையில் அடித்தான்.
“டேய் என்னடா இது? நேத்து நைட் வரைக்கும் வேற டிசைன்ஸ் சொன்ன இப்ப மொத்தமா வேற இருக்கு”, சரண்.
“அது ஒன்னும் இல்ல நம்ம ஆப்போசிட் கம்பெனிக்கு நம்ம டிசைன் போயிடிச்சின்னு தகவல் வந்தது அதான் மாத்திட்டேன்”,அகரன் கூறிக்கொண்டே தன் சேரில் அமர்ந்தான்.
“அதுக்குள்ளயா? நான் நேத்து சாயங்காலம் விசாரிச்ச வரைக்கும் ஒன்னும் போகலன்னு தானே தகவல் வந்தது. யாருடா அனுப்பினது?”, சரண்.
“யாருன்னு தெரியல. விசாரிக்கணும். சரி வா சாப்பிட போலாம்”, அகரன்.
“அதுக்குள்ளயா? மணி 12 தான்டா ஆகுது?”,சரண்.
“நேத்து நைட் இருந்து சாப்பிடல டா. நான் சாப்பிட போறேன் நீ வரியா இல்லையா?”, அகரன்.
“வா போலாம்”, சரண் அவனின் தோளை அழுத்தியபடி வெளிய வந்தவன் கையெடுத்து விட்டு ஸ்வப்னாவிடம் கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.
கல்லூரி வளாகம். மாணவ மாணவிகள் அனைவரும் மைதானத்தில் சுற்றி நின்று இருந்தனர்.
ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்த அணியாக இருந்தனர். காலேஜ் டிபார்மெண்ட்களுக்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டி.
பைனல் மேட்ச் இன்டீரியர் டிசைன்ஸ் டிபார்மெண்டிற்கும், கம்ப்யூட்டர் சயினஸ் டிபார்மெண்டிற்கும் நடந்தது.
இன்டீரியர் டிபார்மெண்ட் கடைசி ஓவர் 14 ரன் எடுக்கவேண்டிய நிலை.
பேட்டிங்கில் இந்த பக்கம் சஞ்சய் அந்த பக்கம் நம் நதியாள்.
“சஞ்சய் …. சஞ்சய்….”, எனச் சுற்றி இருந்த கூட்டம் கோஷமிட்டனர்.
முதல் பால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சஞ்சய் இந்த பக்கம் வந்ததும் பேட்டிங் பொசிஷனில் நதியாள் நின்றாள்.
5 பால் 13 ரன். அனைவருக்கும் ஆவல் அதிகரிக்க அமைதியாக இருந்தனர்.
அடுத்த பால் வரவும் நதி ஓர் அடி முன் வைத்து அடித்ததில் பால் பொன்டரி லைன் தாண்டி பறந்து விழுந்தது.
“சிக்ஸ்”, என அம்பையர் கைத்தூக்கினார்.
இப்பொழுது 7 ரன் 4 பால்.
“யாள்…. யாள்….. யாள்…..”, எனக் கூட்டம் ஆர்பரித்தது.
“கமான் யாள்…..ஹிட் அனதர் சிக்ஸ்”, மீரா கத்திக் கொண்டு இருந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் “வீ வாண்ட் சிக்ஸர் …… வீ வாண்ட் சிக்ஸர்”, எனக் கோஷமிட்டனர்.
பீல்டிங் மாற்றப்பட்டு அடுத்த பால் வீசினர். அதைக் கண்ட நதியாள் இதழ்கடையில் மென்னகைப் படறவிட்டு, நின்ற இடத்தில் இருந்தபடியே அடித்ததில் அதுவும் பரந்து கூட்டத்தைத் தாண்டி விழுந்தது.
“ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ………….”, மீராவுடன் அவள் வகுப்பு தோழிகளும் குதித்து ஆர்ப்பரித்தனர்.
“சூப்பர் யாள்…. அடுத்து சிங்கில் போதும்”, சஞ்சய்.
“ஹாட்ரிக் அடிக்கணும் சஞ்சய்”, எனக் கூறி தன்னிடத்தில் சென்று நின்றாள்.
“வீ வாண்ட் ஹாட்ரிக்….. வீ வாண்ட் ஹாட்ரிக்”, எனக் கூட்டமாக கத்தினர் மாணவ மாணவிகள்.
“என்ன மைக்கேல்… அடுத்த பாலுக்கு என்ன பீல்டிங் செட் பண்ற?”,நதியாள் கண்களில் திமிருடன் கேட்டாள்.
“நீ அவுட் ஆகற பீல்டிங்”, மைக்கேல்.
“பாப்போம்”, நதியாள்.
அடுத்து ஸ்லோபாலாக போட்டான் மைக்கேல். அவன் ஓடிவருவதில் இருந்தே அவன் ஸ்லோபால் தான் போடப்போகிறான் என்பதை அறிந்த நதி இரண்டடி இறங்கி வந்து அடித்ததில் அதுவும் கூட்டத்தை தாண்டிப் பறந்தது.
“ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏ……….”,என அனைவரும் கத்தினர்.
“சூப்பர் யாள்….”, அவளை அனைவரும் தூக்கிச் சுற்றினர்.
“ஹே மைக்……. நான் ஜெயிச்சிட்டேன் இன்னிக்கு மதியம் நீ தான் ஹோட்டல்ல லன்ச்சுக்கு ஸ்பான்ஸர்”, நதியாள்.
“முறைவாசல் செஞ்சி தொலையறேன். எங்க போகணும்?”, மைக்கேல் எரிச்சலுடன் கேட்டான்.
“ஹோட்டல் *********”, நதியாள்.
“ஏய்… அங்க வேணாம் என் பட்ஜெட் தாங்காது. ப்ளீஸ் யாள் கொஞ்சம் மனசு இறங்கு”, மைக் கெஞ்சினான்.
“இதுல்லாம் நீ என்கிட்ட பந்தயம் வைக்கிறதுக்கு முன்ன யோசிக்கணும் தம்பி. இப்ப நான் சொல்றத நீ கேட்டே ஆகணும். இல்லைன்னா இந்த ஒரு மாசம் சாப்பிங் செலவு உன்னோடது”, நதியாள்.
“அய்யய்யோ… அதுக்கு நான் கந்து வட்டி வாங்கியாவது இந்த ஹோட்டல் கூட்டிட்டு போயிடறேன். 1 மணிக்கு ரெடியா இருங்க வந்துடறேன்”, எனக் கூறிச் சென்றான் மைக்கேல்.
“என்ன யாள்? என்ன பந்தயம்?”, சஞ்சய்.
“அது இன்னிக்கு மேட்ச்ல ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கணும்னு. அப்படி அடிக்கலன்னா அவனுக்கு நான் ரெக்கார்ட் எழுதி தரணும். நான் ஜெயிச்சா நான் சொல்ற ஹோட்டல்ல லன்ட்ச்சுக்கு நம்மல கூட்டிட்டு போகணும்”, நதியாள்.
“எத்தனை பேர் போறோம்?”, மீரா.
“நம்ம கேங் மட்டும் தான். க்ளாஸ்ல யாருக்கும் சொல்லாதீங்க. பாவம் மைக் செலவு தாங்கமாட்டான்”, நதியாள்.
“சரி சரி. நாமலே 6 பேர் அவன் குரூப்போட சேத்தா பத்து ஆகிடும்”, சஞ்சய்.
“அதுக்கே அவன் எவ்வளவு வீட்ல வாங்கிகட்டுவானோ”, என மீரா கூற அனைவரும் சிரித்தனர்.
“சரி நான் ரூம் போயிட்டு ரெடி ஆகி வறேன். எல்லாரும் சார்ப்பா 12.45 க்கு வெளியே இருக்கணும் இல்லைன்னா விட்டுட்டு போயிடுவேன்”, நதியாள்.
“போனா நாங்க வரமாட்டோமா?”, எனத் திலீப் கேட்டான்.
“வந்துக்க ஆனா பில் நீ தான் பே பண்ணிக்கணும்”, நதியாள்.
“நான் இப்பவே வெளியே போய் நிக்கறேன் யாள்”, என வெளியே சென்றான் திலீப்.
“மானத்த வாங்கறான்”, என ஸ்டெல்லா தலையில் அடித்துக் கொண்டாள்.
“சரி சரி எல்லாரும் ரெடி ஆகி வாங்க”, எனக் கூறிவிட்டு நதியாள் மீராவை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
“ஹே நில்லுங்க டி நாங்களும் வரோம்”, என அவர்கள் பின்னே ஸ்டெல்லாவும் ரிஸ்வானாவும் ஓடினர்.
இது தான் நம்ம நதியாளோட கேங்க். மீரா, ஸ்டெல்லா , ரிஸ்வானா பேகம், சஞ்சய், திலீப்.
அவர்கள் அனைவரும் தயாராகி வெளியே நிற்க, நதியும் மீராவும் ஹாஸ்டலில் இருந்து வந்துக் கொண்டு இருந்தனர்.
நதியாள குட்டி பொண்ணா பாத்தோம் இப்ப எப்படி இருக்கான்னு பாக்கலாம்.
அதே அதிகாலை மஞ்சள் நிறம் மெருகேறி பொன்னாக மிளிர்ந்தது, கூர்மையான விழிகள், எடுப்பான நாசி, ஐந்தடி 3 அங்குலம் உயரம், சற்று பூசினாற் போன்ற உடல்வாகு, இடுப்பிற்கு கீழ் தொங்கும் அடர்த்தியான கூந்தல் என யாரையும் மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம்.
அருகிலேயே மீரா சராசரி உயரத்துடன் பளிச்சென்ற முகம், உயரத்திற்கேற்ற உடல்வாகு, நல்ல அழகி. தோழிகள் இருவரும் இணைபிரியாமல் தான் இன்னும் இருக்கிறார்கள்.
நதியாள் புளூ ஜீன்ஸ் மற்றும் கருப்பு சர்ட் அணிந்து வந்தாள். மீராவின் கையில் வெள்ளை ஸ்ரக் அவளுக்காக காத்திருந்தது.
மீரா சுடிதார் அணிந்து பாந்தமாக அருகில் நடந்து வந்தாள்.
“ஏய் மீரா . இன்னிக்கும் சுடியா? எடுத்து வச்ச ஜீன்ஸ் எல்லாம் எப்ப போடுவ?”,நதியாள்.
“இன்னிக்கு போட்டுக்க தோணல. விடு அப்பறம் போட்டுக்கலாம்”, மீரா.
“இப்படியே சொல்லு உனக்கு ஜீன்ஸ் எடுக்கிறதே வேஸ்ட்”, நதியாள்.
“சரி நீயே போட்டுக்க அதையும்”, மீரா.
“உனக்கு எடுத்து குடுத்துட்டு நானே போட்டுக்க, எனக்கே எடுத்துக்க மாட்டேனா?”, நதியாள்.
“சரி விடு.இப்ப வா அடுத்த டைம் வெளிய போறப்ப போட்டுக்கறேன். இந்தா ஸ்ரக் இத போடு”, மீரா.
“அப்பறம் பேசிக்கறேன் உன்ன”, நதியாள் அவளை முறைத்தபடிக் கூறினாள்.
“வாங்க மேடம் இவ்வளவு நேரம் ஏன் லேட்?”, திலீப்.
“நாங்க வெளியே போறமாதிரி நீட்டா ரெடியாகி வந்து இருக்கோம். நீ பிச்சைகாரனாட்டம் அப்ப இருந்து வெயில்ல நின்னுட்டு இருக்க. போய் ஒழுங்கா குளிச்சிட்டு வந்து சேரு”, ஸ்டெல்லா.
“ஏய்ய்…..”, திலீப்.
“போடா….”, ஸ்டெல்லா.
“ஓவரா பேசர”, திலீப்.
“நீ ஓவரா நாறுர”, என மூக்கை மூடியபடிக் கூறினாள் ஸ்டெல்லா.
“டேய் மச்சான் மூனு நாளைக்கு முன்ன தான் குளிச்சேன். அதுக்குள்ளயா ஸ்மெல் வருது”, என சஞ்சய் அருகில் சென்றுக் காட்ட, அவன் பிடித்து தள்ளிவிட என்று அந்த இடம் கலேபரம் ஆனது.
“நிறுத்துங்க டா”, நதியாள்.
“அவன விட்டுட்டு போலாம் வா யாள்”, ஸ்டெல்லா.
“கம்முனு இரு ஸ்டெல்லா”, நதியாள்.
“இரண்டு பேரும் குளிச்சிட்டு நீட்டா வந்தா தான் அந்த ஹோட்டலுக்குள்ள விடுவாங்க. சீக்கிரம் வந்துடு சஞ்சய்”, மீரா.
“மாட்டேன். நீங்க என்னை விட்டுட்டு போக பாக்கறீங்க”, திலீப் அடம் பிடித்தான்.
“லூசு. போய் டீசென்டா ரெடி ஆகி வா. நானும் இங்க நிக்கறேன்”, ஸ்டெல்லா.
“சரி நானும் மீராவும் மைக்கோட போறோம். நீங்க நாலு பேரும் சீக்கிரம் வந்து சேருங்க. ஒன் ஹவர் தான் டைம். ஸ்டெல்லா சீக்கிரம் இழுத்துட்டு வந்துடு”, எனக் கூறி நதியாள் ஒரு ஸ்கூட்டியில் மீராவை அமரவைத்துக் கொண்டுச் சென்றாள்.
“சீக்கிரம் குளிச்சிட்டு வந்து தொல எரும. சஞ்சய் இவன இழுத்துட்டு போய் நீட்டா ரெடி பண்ணி கூட்டிட்டு வா”, என ஸ்டெல்லா கூறினாள்.
“ஏன்டா எனக்கு பொண்ணா பாக்க போறீங்க நீட்டா ரெடி ப்ணணி கூட்டிட்டு வரசொல்றா”, திலீப்.
“அது ஒன்னு தான் இப்ப உனக்கு கொறச்சல். வச்சி இருக்கிற அரியர்ஸ் இந்த செம்லயாச்சும் கிளியர் பண்ணு”, சஞ்சய்.
“ஏன்டி இப்ப இங்க என்னையும் உக்கார வச்ச?”, ரிஸ்வானா.
“எனக்கு கம்பெனி குடுக்க உன்ன விட்டா யார் இருக்கா? சீக்கிரம் வந்துடுவாங்க போயிக்கலாம் ரிஸ்”, ஸ்டெல்லா.
அங்கே அகரனும் சரணும் ஹோட்டலுக்குள் உள்நுழைந்தனர். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரும்படி சரணிடம் கொடுத்து விட்டு அகரன் வாசலில் நின்று இருந்தான்.
அந்த சமயம் நதியாள் மைக்கேல் கேங்குடன் அதே ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.