26 – ருத்ராதித்யன்
அர்ஜுனும் யாத்ராவும் கீழே குனிந்ததும் ஒரு கத்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் குத்தி நின்றது.
“ஹாய் லவ் பேர்ட்ஸ்…. வெளியே வாங்க”, எனக் கூறியபடி அவன் அங்கே வந்தான்.
“நீ எங்க இங்க?”, அன்ஜுன் கேட்டபடி யாத்ராவிற்கும் கைக்கொடுத்து எழ உதவினான்.
“ஓஹ் ஓஹ் ஓஹ்….. சச் எ லவ்லி மேன்னர்ஸ் மிஸ்டர் அர்ஜுன்…. உங்க லவ்வரா? ரொம்ப அழகா இருக்கா … அதே சமயம் திமிரும் அலட்சியமும் அதிகமாவே தெரியுது”, எனக் கூறியபடி ஆயுஸ் அவர்கள் அருகில் வந்தான்.
“ஐ நோ… ஷி இஸ் கார்ஜியஸ் … என்னை மாதிரி ஒரு சிபிஐ ஆபீசர் லவ்வரா இருக்கறப்ப அவ முகத்துல திமிர் இருக்கறது தப்பே இல்ல ஆயுஸ்….”, என யாத்ராவை தன் கைக்குள்ளேயே வைத்துக்கொண்டு பேசினான்.
யாத்ரா முகத்தில் எதுவும் காட்டாமல் அர்ஜுனின் கைகளை மட்டும் பிடித்தபடி உரையாடலைக் கவனித்தாள்.
“நாட் பேட்…. சரி வாங்க கிளம்பலாம்”, எனக் கதவைத் திறக்கச் சென்றான்.
“நீ கூப்டதும் நான் வரணும்னு என்ன அவசியம் இருக்கு ஆயுஸ்…. அதுவும் உன்ன போல ஒரு மிருகத்தை கொன்னு உயிர்வாழ்ற க்ரிமினல் கூப்டதும் நான் வருவேன்னு தப்பு கணக்கு போடாத”, என அர்ஜுன் நிதானமாக கால் மேல் கால் போட்டபடி அமர்ந்துக்கூறினான்.
“ஹாஹா…. அச்சா பாயிண்ட் அர்ஜுன்…. லேகின்…. நீ வரலன்னா உன் தோஸ்த் நந்தன் உயிரோட இருப்பான் ஆனா அவன் உடம்புல தோல் இருக்காது… நியாபகம் இருக்குமே”, என ஆணவத்தோடுச் சிரித்தபடிக் கூறினான்.
“ஹாஹாஹா….. சேம் டெக்னிக்…. எனக்கு போர் அடிக்குது ஆயுஸ்… நீ கேரளால இருந்து எப்ப வந்த?”, என அர்ஜுன் கேட்டதும் ஆயுஸ் முகத்தில் அதிர்ச்சிப் பரவியது.
“உனக்கு அது இப்ப தேவையா அர்ஜுன்…. உன் லவ்வர பாரு”, என அவன் கூறியதும் தான் யாத்ராவின் கண்கள் சொருகியபடி இருந்ததைப் பார்த்தான், லேசாக மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தது.
“ரது … ரது…. என்னாச்சி?”, என அர்ஜுன் பதறியதும் ஆயுஸ் சிரித்தபடி, “இப்ப போலாமா அர்ஜுன்….பத்து நிமிஷத்துல அவள காப்பாத்த ட்ரை பண்ணலாம்.. லேட்டானா நீ தான் அவ சாவுக்கு காரணம்”, என உள்ளத்தில் துளியும் ஈரம் இன்றிக் கூறினான்.
அர்ஜுன் அவளை வேகமாக கைகளில் தூக்கிக்கொண்டு வெளியேறினான்.
“ஹாஹாஹா…. க்யா செண்டிமெண்ட் அர்ஜுன்…. உனக்கு மனசு இல்ல, நீ மனுஷனே இல்லைன்னு கேள்விப்பட்டேன்… ஆனா இந்த பொண்ணு உன்னை இந்த அளவுக்கு வீக் பண்ணி இருக்காளா?”, என ஆச்சரியத்துடன் பொறுமையாக நடந்து வந்தான்.
அர்ஜுன் யாத்ராவை ஒரு பக்கம் தோளில் போட்டுக்கொண்டு, ஆயுஸின் கைகளையும் இழுத்துக்கொண்டு லிப்டில் ஏறினான்.
“ஹேஹே… எதுக்கு இவ்ளோ அவசரம் அர்ஜுன்…? பொறுமையா போலாம்…. “, என ஆயுஸ் நகைத்தான்.
அர்ஜுன் முகத்தில் கோபமும் தவிப்பும் மாறி மாறி வந்து, அவனது வசீகர வதனத்தை ஆக்கிரமித்து இருந்தது.
ஆயுஸ் இருவரையும் ஒரு கேரவனில் ஏற்றிக்கொண்டு டில்லியை விட்டு வெகுதூரம் வந்திருந்தான்.
“இவளுக்கு ஆன்டி-டாட் குடு ஆயுஸ்”, அர்ஜுன் குரலில் அப்போதும் பயமில்லை, கட்டளையே மிகுந்திருந்தது.
“இப்பவும் கம்பீரம் குறையல…. சூப்பர் அர்ஜுன்…. அதான் இந்த பொண்ணு உன்னை ப்யார் பண்ணுது போல….”, எனப் பேசியபடி ஒரு சிறிய ஊசியை அவள் கைநரம்பில் செலுத்தினான்.
மருந்து சென்றுப் பதினைந்து நிமிடத்தில் யாத்ரா கண் திறந்தாள்.
“செழியன்….”, என தீனமானக் குரலில் அழைத்தாள்.
அர்ஜுன் அவசரமாக அருகில் வந்து, அவளை எடுத்து தன் மாரோடு அணைத்துக்கொண்டான்.
“உனக்கு ஒன்னுமில்ல ரதுமா….. நான் பாத்துக்கறேன்”, எனக் கூறிய வேகத்தில் ஆயுஸின் கழுத்தைப் பிடித்து இரண்டடி மேலே தூக்கி இருந்தான் அர்ஜுன்.
“ஹாஹாஹா அர்ஜுன்…. உன் மேல கை வைக்கறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அது தெரிஞ்சும் நான் ஏன் வந்தேன்னு நீ இன்னும் யோசிக்கல…. என்னை இறக்கிவிடு”, எனத் திக்கித் திணறிக் கூறினான்.
அர்ஜுன் கண்ணில் யாத்ரா மயங்கிய நிலையும், நேற்று மிருகங்கள் தோல் இல்லாமல் செத்து கிடந்த நிலையும் வந்து அவன் கோபத்தை அதிகரிக்கவே, அவன் கழுத்தை இறுக்கினான்.
“வேணாம் செழியன்.. பொறுமையா இருங்க”, என யாத்ரா கூறியதும், ஆயுஸின் கழுத்தில் இருந்துக் கையை எடுத்தான்.
“உன்னோட ரிமோட் அந்த பொண்ணு தானா அர்ஜுன்…. ஹாஹா…. நம்ம பாஸுக்கு வசதியா இருக்கும்”, என எகத்தாளமாக மீண்டும் மீண்டும் சிரித்தான்.
“போதும்… எங்க கூட்டிட்டு போற?”, என அர்ஜுன் வெளியே பார்வையைப் பதித்தபடிக் கேட்டான்.
“முக்கியமான இடத்துக்கு தான்…. இந்த பொண்ண எங்க பிடிச்ச? பாக்கவே ஒருமாதிரி மஜாவா சூப்பரா இருக்கா…. “, எனப் பேசியதும் யாத்ரா அவனை முறைத்தாள்.
“முறைக்காத பொண்ணு…. நீ என்னோட வரியா?”, என அவன் ஆர்வமும் ஈர்ப்பும் கண்கள் மின்ன கேட்டதும் அர்ஜுன் அவனை மிதித்து துவைத்துக்கொண்டிருந்தான்.
யாத்ரா அத்தனையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள். அந்த கேரவன் புத்தம் புதிதாக இருந்தது.
வழக்கமான ஒன்றை விட இது ஒன்றரை மடங்கு பெரிதாகவே இருந்தது.
மேலே ஒரு மாடியும் இருப்பது போல தெரிந்தது. கேரவன் முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது.
அனைத்தும் பணத்தினால் குளிரூட்டப்பட்ட வசதிகள், பொருட்கள் மற்றும் பல விஷயங்களைக் கொண்டிருப்பதுக் கண்டு யாத்ரா அமைதியாகவே இருந்தாள்.
“செழியன் போதும் விடுங்க….”, குரலை அவள் தழைத்தே பேசினாள்.
“இன்னொரு தடவை என் லவ்வர் பத்தி எதாவது பேசின உடம்புல உயிர் இருக்காது”, என ஆத்திரம் குறையாமல் மீண்டும் உதைத்தான்.
இத்தனை அடிக்கும் அவன் தடுக்கத்தான் முயன்றானே ஒழிய அர்ஜுனை அடிக்க முயலவே இல்லை.
“எதுக்கு டைம் வேஸ்ட் பண்றான்னு விசாரிங்க… இங்க நாம மட்டும் இல்ல”, என யாத்ரா அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினாள்.
“உனக்கு ஒன்னுமில்லையே… உடம்பு நல்லா தானே இருக்கு? வலி ஒன்னும் இல்லையே”, என அவளை ஆதரவாக அணைத்தபடி, ஏதோ அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.
“ம்ம்…. தாகமா இருக்கு செழியன்”, என யாத்ரா கொஞ்சம் சத்தமாகவும் சோர்ந்த குரலிலும் கூறினாள்.
“இப்ப தண்ணி குடிக்க கூடாது மிஸ் யாத்ரா பூமிநாதன்….”, எனக் கூறியபடி ரிஷித் வந்தான்.
உடன் கண்மயா கலக்கத்துடனும், ஒரு ஆசுவாசத்துடனும் நடந்துவந்தாள்.
“மிஸ்டர் ரிஷித் சக்ரவர்த்தி”, என யாத்ரா முணுமுணுக்கவும், அர்ஜுன் அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“சரியா சொல்லிட்டீங்க யாத்ரா…. சச் எ பிஸிக் யூ ஹேவ் … இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் தான்… ஆனா அந்த ஆர்யன கவுத்த மாதிரி இங்க எதுவும் பண்ணமுடியாது”, எனக் கூறியபடி இருவரின் அருகிலும் வந்து, இருவரையும் அளந்தபடிச் சுற்றி வந்து ஆயுஸைத் தூக்கிவிட்டான்.
“தேங்க்யூ பார் யூவர் காம்ப்ளிமெண்ட் ரிஷித்… சகஸ்ரா எங்க?”, யாத்ரா கண்மயாவின் அருகில் சென்று நின்றுக் கேட்டாள்.
“அவ தூங்கிட்டு இருக்கா தானே மாயா?”, எனக் கேட்டபடி அர்ஜுன் எதிரில் வந்து நின்றான்.
“என்னை உனக்கு தெரியாதுல்ல மிஸ்டர் நாகார்ஜுன இளஞ்செழியன்… நான் ஒரு சைன்டிஸ்ட்”, என கைகளை நீட்டினான்.
“சேட்டிஸ்ட் னு கூட சொல்லலாம் மிஸ்டர் ரிஷித்…. உங்கள போல குற்றவாளிங்களுக்கு நான் கைகுடுக்கறதே இல்ல”, எனக் கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டான்.
“வெரி பேட் மேன்னர்ஸ்…. இட்ஸ் ஓக்கே… யாத்ரா…. இன்னும் இரண்டு மணிநேரத்துக்கு நீங்க தண்ணி குடிக்க கூடாது… அதுக்கப்பறம் எல்லாமே நீங்க சாப்டலாம்…உங்களுக்கு நல்ல வெரைட்டியான ரசனை இருக்கு யாத்ரா… ஆள் செலக்ஷனும் சரி சாப்பாட்டுலையும் சரி…. இன்னிக்கு என்கூட ஒரு பார்ட்டில கலந்துக்கோங்க இரண்டு பேரும்… மாயா…. இவங்க ரூம் காட்டு… ஆனா தனி தனி ரூம் தான் “, என வாயிற்குள் சிரித்தபடி ஆயுஸை அழைத்துச் சென்றான்.
“என்ன கண்மயா நடக்குது? இவன் தான் நீ சொன்ன ஆளா?”, அர்ஜுன்.
“சகஸ்ராவுக்கு என்னாச்சி கண்மயா? அவ எங்க?”, என யாத்ரா கேட்டதும் கண்மயா அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“அவ நிலைமை தான் ரொம்ப மோசமா இருக்கு யாதுமா…. வாங்க காட்டறேன்”, என அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே சகஸ்ரா பாதி நினைவில் கிழிந்த நாராக கிடந்தாள்.
முகத்தில் விகாரம் வரத் தொடங்கியிருந்தது. கைகால்கள் நேராக இல்லாமல் ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது.
“ஏன் சகஸ்ரா இப்படி ஆகிட்டாங்க? என்ன பண்ணாங்க இவங்கள?”, அர்ஜுன் ஒரு வாரத்திற்கு முன் தான் பார்த்தா பெண்ணா இது என்பது போல பார்த்தபடி கேட்டான்.
“என்னை வேலை செய்ய வைக்க அவன் சராவ யூஸ் பண்றான் சார். அவளுக்கு பேரலைஸ் இன்ஜெக்ஷன் போட்டு போட்டு இன்னிக்கு அவ உடம்பு இப்படி ஆகிடிச்சி… என்னால அவன் சொல்றது எல்லாம் செய்ய முடியல சார்… அவன் எண்ணம் அவ்ளோ கொடூரமா இருக்கு… இயற்கைய அழிக்க நினைக்கறான்… அதையே செய்யவும் சொல்றான்”, கரகரத்த குரலில் கண்மயா கூறிவிட்டு சகஸ்ராவின் கைகளைப் பிடித்தாள்.
“இப்ப எங்கள எதுக்கு கொண்டு வந்திருக்கான் மாயா டார்லிங்?”, யாத்ரா யோசனையுடன் கேட்டாள்.
“தெரியல யாதுமா… நீங்க வந்திருக்கறதே இப்ப பாத்ததும் தான் எனக்கு தெரியும்… புது டெஸ்டிங் பாடி வந்திருக்குன்னு சொல்லி தான் என்னை கூட்டிட்டு வந்தான்”, கண்மயா கூறிவிட்டு சகஸ்ரா எழுந்து அமர உதவினாள்.
“செழியன் இங்கிருந்து நீங்க தப்பிச்சிடுங்க”, தீவிரமான முகபாவத்துடன் கூறினாள்.
“எல்லாருமே தப்பிக்கலாம் ரது”, அழுத்தமாகக் கூறினான்.
“எல்லாருமே தப்பிக்கறது பெரிய விஷயமில்ல செழியன்….. ஆனா இவன உயிரோட விட எனக்கு விருப்பம் இல்ல”, யாத்ரா அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூறினாள்.
“அப்ப சேந்தே கொல்லலாம் ரது… அதுக்கு முதல்ல இவங்க இரண்டு பேரையும் நாம சேவ் பண்ணணும் அத யோசி”, அர்ஜுன் கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“நீங்க இரண்டு பேரும் தெளிவா இருந்தா தானே அது நடக்கும்?”, எனக் கூறியபடி ரிஷித் சிறிய இன்ஜெக்ஷனை அர்ஜுன் மற்றும் யாத்ரா மீது செலுத்தினான்.
அவர்களை காக்க கண்மயா முன்னே வந்ததில் அவள் கழுத்தில் அந்த ஊசி தைத்தது.
அர்ஜுனும் யாத்ராவுமே மயங்கி சரிந்தனர்.