24 – அகரநதி
நதியாளின் வானரப்படை ஆபீஸ் திறக்கும் சமயமே வந்துக் காத்திருந்தது. பின்ன நதி விட்ருவாளா? அத்தனை பேரையும் ஐஞ்சு மணிக்கே எழுப்பிவிட்டு ரெடியாக சொல்லி இழுத்துட்டு 8.00 மணிக்கு வந்துட்டாளே.
“அடியே இம்சைஅரசி… உனக்கே இது அடுக்குமா? 9.30மணிக்கு வரவேண்டிய ஆபீஸுக்கு 8 மணிக்கே இழுத்துட்டு வந்துட்ட. அந்த ஆயாவே இப்ப தான் கூட்டிட்டு இருக்கு. எங்களையும் இந்த வேலை பாக்க வைக்கதான் இப்பவே இழுத்துட்டு வந்தியா?”, ஸ்டெல்லா பொறிந்துத் தள்ளினாள், அவளின் தூக்கத்தைக் கெடுத்தக் காரணத்தால்.
“அந்த வேலைக்கும் குவாலிபிகேஷன் கேப்பாங்க ஸ்டெல் அது உனக்கு இல்லை. சோ அவ்வளவு பேராசை படாத”, திலீப்.
“டேய் திண்ணிபண்டாரம் . வாய மூடு இல்லை குரல் வளைய கடிச்சி எடுத்துடுவேன்”, ஸ்டெல்லா.
“முடியாதே உன்னால”, திலீப் ராகமாக இழுத்தபடிக் கூறினான்.
“டேய் வாய மூடு டா. விடு ஸ்டெல். வாங்க உள்ள போலாம். கேன்டீன் எந்த ப்ளோர்ன்னு கேட்டு போய் அங்க இருக்கலாம்”, சஞ்சய் சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.
“நீங்க போங்க. நான் இங்க சுத்தி பாத்துட்டு இருக்கேன்”, நதியாள்.
“நீ மட்டும் தனியா இங்க நின்னுட்டு இருக்க போறியா? அண்ணா வரப்ப நீ அங்க வாசல்ல நின்னா போதும். வா பேசாம”, மீரா அவளையும் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றாள்.
மனமே இல்லாமல் மீராவின் பின்னால் நடந்தாள் நதி.
“அகன் எத்தனை மணிக்கு நீ வருவ? உனக்காக நான் இங்க வையிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் வந்துடு டா. இந்த எரும மாடு சரண் உன்னை இழுத்துட்டு வராமா இன்னும் என்ன பண்றான்?”, மனதிற்குள் பேசியபடி நடந்தவள் கேன்டீனின் உள்ளே நுழைந்தாள் நதி.
“மச்சான்…எனக்கு மசாலா தோசை வாங்கி தாடா”, திலீப்.
“இப்பதானே டா வீட்ல பத்து இட்லி நாலு தோசைய முழுங்கின..இங்க வந்து மறுபடியும் கேக்கற. உனக்கு இருக்கறது வயிறா இல்லை போர்வெல்லா?”, ஸ்டெல்லா.
“நான் உன்ன கேக்கல. என் மச்சான்கிட்ட தான் கேட்டேன். நீ உன் வேலைய பாரு”, திலீப்.
“அவன் வாங்கி தரமாட்டான்”, ஸ்டெல்லா.
“வாங்கி தருவான்”, திலீப்.
“மாட்டான்”, ஸ்வப்னா.
“தருவான்”, திலீப்.
ரிஸ்வானா சிரிப்புடன் இவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்
“அடச்சீ வாய மூடுங்க . எங்க வந்தாலும் உங்க இம்சை பெருசா இருக்கு. யாள் இவங்கள பாரு”, மீரா அவர்களை அதட்டினாள்.
“ஹான்….என்ன மீரா?”, கனவிலிருந்து தன்னிலைக்கு வந்தாள் நதி.
“சுத்தம். டேய் ஜெய் இதுங்க மூனும் சரியே இல்லை. நாம தான் மேய்க்கணுமா?”, மீரா.
“அவங்கள கண்டுக்காத மீரா. இங்க வா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, சஞ்சய்.
மற்றவர்கள் அவரவர் வேடிக்கையில் மூழ்கிட மீரா சஞ்சயுடன் நான்கு டேபிள் தள்ளிச் சென்று அமர்ந்தாள்.
“என்ன ஜெய்?”,மீரா.
“யாள் ஏன் நேத்து இருந்து ஒரு மாதிரியா இருக்கா? யார்கிட்டயும் பேசல. இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் இங்க கூட்டிட்டு வந்து இருக்கா”, சஞ்சய்.
“நேத்து பைக்ல வேகமா போனதுக்கு அகரன் அண்ணா திட்டிட்டாங்கன்னு சொன்னா. அதுக்கப்பறம் எதுவும் பேசாம டிரா பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா. அவர சமாதானம் பண்ண தான் நம்மளையும் சீக்கிரம் கூட்டிட்டு வந்து இருக்கான்னு நினைக்கறேன்”, மீரா தனக்குத் தெரிந்த வரையில் கூறினாள்.
“அதான் ஏன் அவ அவ்வளவு வேகமா போகணும்? நான் பைக்க நிறுத்தரதுக்குள்ள திலீப்ப கூட இறங்கவிடாம மத்தியம் கிளம்பினா. வரப்ப முகமே சரியில்லை. திலீப் அவ நைட் தான் வருவான்னு சொல்ல சொன்னதா சொன்னான்.ஆனா கொஞ்ச நேரத்துல சரண் சார் டிராப் பண்ணிட்டு போனாரு. நேத்து கண்ணுமண்ணு தெரியாம அவ்வளவு ஸ்பீடா போனாளாம் திலீப் சொன்னான். அகரன் சார பாத்துட்டு பக்கத்துல இருந்த மேடம முறைச்சிட்டு இருந்தாளாம். அவ பிஹேவியரே புதுசா இருந்ததுன்னு சொன்னான்”, சஞ்சய்.
“அப்படியா? போறப்ப அவளும் என்கிட்ட சொல்லிட்டு போகல. அகரன் அண்ணா கூட யார் இருந்தாங்களாம்?”, மீரா.
“யாரோ க்ளைண்ட் இருந்தாங்களாம். பொண்ணு தான். அகரன் சார் கூட சகஜமா பேசிட்டு இருந்தாங்களாம். இவளும் அந்த பொண்ணும் பேசினது நார்மலா இல்லைன்னு சொன்னான் திலீப். அப்பறம் அந்த பொண்ணு உடனே வேலை இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்களாம்”,சஞ்சய்.
“ஓஓ…. இவ்வளவு நடந்து இருக்கா? அப்ப அந்த பொண்ணு கூட அகரன் அண்ணா இருக்காங்கன்னு தெரிஞ்சி தான் சொல்லாம போனாளா இவ?”, மீரா.
“அப்படி தான் எனக்கும் தோணுது. ஐ திங் யாள் அகரன் சார லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா”, சஞ்சய்.
“என்னடா சொல்ற?”, மீரா.
“ஆமா மீரா. நாம யாள்அ இத்தனை நாளா பாக்கறோம். நீ சின்ன வயசுல இருந்து பாக்கற அவளோட பிஹேவியர் இப்ப சேஞ்ச் ஆகி இருக்கறது உனக்கு தெரியுதா?”, சஞ்சய்.
“ஆமா ஜெய். முன்ன சொன்னதே தான் நான் இப்பவும் சொல்றேன் அவங்க இரண்டு பேரும் நல்ல ஜோடி. அண்ணா இவள நல்லா பாத்துப்பாங்க.. இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா முதல் சந்தோஷம் படற ஆள் நான் தான்”, மீரா.
“ஏன் நாங்க எல்லாம் சந்தோஷம் படமாட்டோமா? சரி நடக்கறத வேடிக்கை பாப்போம். அவளா எப்ப நம்மகிட்ட சொல்றான்னும் பாக்கலாம். அதுவரை அவகிட்ட இதபத்தி கேக்காத”, சஞ்சய்.
“சரி ஜெய். வா அங்க போலாம். நம்மல பாக்கறாங்க பாரு”, மீரா.
“அவனுக்கு ஒரு மசால் தோசை, ஸ்டெல்லுக்கு தூக்கம், ரிஸ்க்கு ரஹீம் சார், யாளுக்கு அகரன் சார பார்சல் பண்ணிட்டா போதும் நாம நிம்மதியா இருக்கலாம்”, சஞ்சய் சிரித்தபடிக் கூறினான்.
“ஹாஹா”, மீராவும் சிரித்தபடி நதியின் அருகில் அமர்ந்தாள்.
“என்ன மீரா சிரிச்சிட்டே வரீங்க?”, நதியாள்.
“ஒன்னும் இல்ல தினம் இப்படி வந்தா இங்க கேன்டீன் ஆரம்பிக்கறதுக்கு முன்ன காலியாகிடும் மொத்த குத்தகையும் நாம தான் எடுக்க வேண்டி வரும்னு ஜெய் சொன்னான்”, மீரா.
நதியாள் திருதிருவென்று விழித்தபடி அவர்களைப் பார்த்தாள். அவள் தானே இத்தனைச் சீக்கிரமாகக் கிளப்பிகொண்டு வந்தது. தான் ஏதாவது கூறினால் நம்மை இவர்கள் ஒருவழி செய்துவிடுவார்கள் என்று நன்கு அறிந்திருந்ததால் சிரித்தே மலுப்பினாள்.
“ஸ்டெல்லா ரிஸ் இந்த டிசைன் பாருங்க. இந்த கலர் ஷேட் நல்லா இருக்குமா சொல்லு”, என தனது லேப்டாப்பை அவசரமாக ஆன்செய்து அவர்களருகில் சென்றாள்.
“எஸ்கேப்பா ஆகற.. இத்தனை வருஷம் எங்கள எவ்வளவு படுத்தியிருக்க இப்ப எங்க டர்ன் பேபி…. உன்னால பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டு அப்பப்ப டென்சன் பண்ணுவோம்”, என மீரா மனதிற்குள் சந்தோஷமாச் சிரித்தபடிக் கூறிக்கொண்டாள்.
“என்ன மீரா ஓடிட்டா?”, சஞ்சய்.
“அப்பப்ப இப்படி இவள கேள்வி கேட்டு டென்சன் பண்ணலாம் ஜெய். நல்ல சான்ஸ் இப்பதான் நமக்கு கிடச்சி இருக்கு”, மீரா.
“அப்படிங்கற? ஆனா யாள் பாவம் மீரா”, சஞ்சய்.
“பாவம் தான். இதுல்லாம் சின்ன சின்ன ஃபன் தானே. அப்பப்ப நாம ரெக்கார்ட் பண்ணி வச்சிக்கலாம். பின்னாடி எதுக்காவது யூஸ் ஆகும். ஏன் அகரன் அண்ணா நதியாள் கல்யாணத்துக்கு கிப்டா கூட குடுக்கலாம்”, மீரா.
“ஹே… சூப்பர் ஐடியா மீரா. இன்னிக்கே ரெக்கார்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம் நாம”, சஞ்சய்.
பின் மணி 9 ஆனதும் அனைவரும் தங்களின் ஆபீஸ் தளத்திற்குச் சென்றனர்.
அப்பொழுது தான் ப்யூன் ஆபிஸைத் திறந்துக் கொண்டு இருந்தார். அவருக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அகரன் வேறு கம்பெனியில் இருந்தபொழுது அங்கே வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தவர், அகரன் அழைத்ததும் இங்கு வந்துவிட்டார். அகரனின் நேர்மையும் அன்பும் அவரை அந்த அளவிற்கு ஈர்த்து இருந்தது என்று சொல்லலாம்.
“அண்ணா…. ஆபீஸ் எப்ப ஸ்டார்ட் ஆகும்?”, திலீப் அவரைக் கேட்டான்.
“9.30க்கு தம்பி. நீங்க யாரு புதுசா இருக்கீங்க?”, அவர்.
“என் பேரு திலீப். இங்க பிராஜெக்ட் பண்ண வந்து இருக்கோம் இன்னிக்கு வர சொன்னாங்க”.
“சரி தம்பி உக்காருங்க. ஸ்வப்னா மேடம் வந்ததும் பாருங்க”,எனக் கூறி அவர் அவரின் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
தண்ணீர் கேன் கொண்டு வருவது, அங்கு வேலை செய்யும் பெண்களை வைத்து ஆபீஸை கூட்டச் செய்தார். பின் வழக்கமான வேலைகளை அங்கிருந்த கேபினில் பார்த்துவிட்டு அகரன் மற்றும் சரணின் அறைக்கு மத்தியில் அமர்ந்து விட்டார்.
அவரின் தினசரி இதுதான் போல. தன் வேலைகளில் கவனமாக நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற சிரத்தை தெரிந்தது அவரிடம். நம் வானரப்படைக்கு அவரின் மீது மதிப்பு வந்தது.
சரியாக 9.20க்கு ஸ்வப்னா வந்தாள். இவர்களை பார்த்துக் காலை வணக்கம் கூறிவிட்டு அவர்களைக் கான்பிரன்ஸ் ஹாலில் அமரச் சொன்னாள்.
சிறிது நேரத்தில் அந்த அலுவலக தொழிலாளர்கள் வந்துவிட்டிருந்தனர். சுமார் 9.45க்கு சரண் மட்டும் வந்தான்.
“குட் மார்னிங் சார் அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வந்துட்டாங்க”, சரண்.
“ஓ சரி… அவங்கள கொஞ்ச நேரம் உக்கார வைங்க. அகர் வந்தப்பறம் பீல்டு பிரிச்சிக்கலாம் அதுவரை எதாவது டிசைன் டிரை பண்ணிட்டு இருக்க சொல்லுங்க. அந்த ****** கன்ஸ்டரக்ஷன் பைல் உடனே வேணும்”, சரண்.
“ஓகே சார். உடனே கொண்டு வரேன். இன்னிக்கு மதியம் ஒரு மீட்டிங் இருக்கு சார்”, ஸ்வப்னா.
“யாரோட?”, சரண்.
“******** ரெஸ்டாரெண்ட் கூட சார்”, ஸ்வப்னா.
“அது அகர் தான் அட்டன் பண்ணணும். ஏற்பாடு பண்ணிடுங்க. அப்பறம் அகர் 12 மணிக்கு மேல தான் வருவான் சோ அவனோட அப்பாயிண்ட் எல்லாம் போஸ்ட்போன் பண்ணுங்க. அவன் வந்தப்பறம் அகெய்ன் ஷெடூல் போட்டுக்கலாம்”, சரண் கூறிவிட்டு தன் வேலைகளில் மூழ்கிவிட்டான்.
ஸ்வப்னா சரண் கூறியது போல அன்றைய வேலைகளைப் பிரித்து வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். நம் வானரப்படையை டிசைன்ஸ் போடச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். சரணும் வேலைப் பளு காரணமாக நதியை வந்து சந்திக்கவில்லை வெகுநேரம் வரையிலும்.
இங்கோ நதிக்கு பொறுமை உருகிக்கொண்டு இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக. அகரனைக் காண வேண்டும் என்கிற தவிப்பும், ஏக்கமும் அதிகமாக சரணை மனதில் திட்டிக்கொண்டு இருந்தாள். சரண் அலுவலகத்தில் இருந்தும் தன்னைப் பார்க்க வராதது அவளின் சினத்தை அதிகப்படுத்தியது.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் 11.30 மணி அளவில் சரணின் அறை நோக்கி சென்றாள்.
“என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல நீ? வந்து எங்கள பாத்துட்டு ஒரு வார்த்தை பேசிட்டு போகமாட்டியா? காலைல 8 மணில இருந்து இங்க இருக்கோம். உன் மொகரய காட்டினா என்ன ஆகிடுவ?”, என நதியாள் பொறிந்து தள்ளிவிட்டு பார்க்க அகரன் எதிரில் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் அவளின் கோபம் சொல்லாமல் விடைபெற்று சென்றுவிட, அனுமதி இல்லாமல் படபடப்பும் தடுமாற்றமும் அவளிடத்தில் தஞ்சம் புகுந்தது.
“என்ன சரண் மேடம் ரொம்ப கோவத்துல இருக்காங்க போல?”, அகரன்.
“அப்படித்தான் போல அகர். நீயே என்னனு கேளு”, சரண்.
“என்ன விஷயம் மிஸ்.நதியாள். ஏன் இவ்வளவு கோவம்?”, அகரன்.
“ஏன் எங்கள இன்னும் பாக்கவரல? பிராஜெக்ட் டைட்டில் சொல்லி வேலைய பிரிச்சிவிட்டா நாங்க ஆரம்பிச்சிருவோம்”, நதியாள்.
“வருவோம். அதுக்கு முன்ன இதுல சைன் போடுங்க மிஸ்.நதியாள்”, என அகரன் சில டாக்குமெண்ட்ஸை டேபிலில் போட்டான்.
“எதுக்கு? என்ன இது?”, நதியாள் சரணைப் பார்த்துக் கேட்டாள்.
“அதான் அப்பவே சொன்னேனே உன்கிட்ட பாண்ட்ல சைன் வாங்கிட்டு தான் சேத்திக்குவோம்னு. அதுதான் இது. எங்க வேணா போய் படிக்கலாம் ஆனா வேலை இங்க தான் செய்யணும். பர்ஸ்ட் ப்ரியாரிட்டி இங்க தான் குடுக்கணும். சைன் பண்ணிட்டு போ நாங்க வரோம்”, சரண்.
“நான் பண்ணமாட்டேன்”, நதியாள்.
“ஏன்?”,அகரன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“எனக்கு விருப்பம் இல்ல”, நதியாள்.
“பிராஜெக்ட் செய்ய கேட்டப்பவே உங்க கிட்ட சொல்லிட்டோம் மிஸ் நதியாள். இப்ப அபீஸியலா நீங்க இங்க ஜாயின் பண்ணியாச்சி பிராஜெக்ட்காக, அது உங்க டிபார்ட்மெண்ட் க்கும் சொல்லியாச்சி சோ நீங்க இப்ப டெர்மினேட் பண்ண முடியாது”, அகரன்.
“எல்லாருக்குமா இந்த பாண்ட்?”, நதியாள்.
“உங்களுக்கு மட்டும் இப்பயே பாண்ட். மத்தவங்க விருப்பப்பட்டா இங்கயே பிராஜெக்ட் முடிஞ்சி ஜாயின் பண்ணிக்கலாம்” , அகரன்.
“எங்க சைன் போடணும்?”, நதியாள்.
“இங்க”, என அகரன் ஐந்து ஆறு பக்கங்களைக் காட்டினான்.
அனைத்தும் முடிந்து நதியாள் வெளியே வந்து சிரித்தாள். உள்ளே அவர்கள் இருவரும் சிரித்தனர்.
(இந்த மூனும் என்னா பண்ணுதுங்க? அதுங்க உள்ள சிரிக்குது இவ வெளிய வந்து சிரிக்கறா?)
பின் நதியாள் தன் நண்பர்களிடம் சென்று உட்கார்ந்துக் கொண்டாள். அவள் முகத்தில் காலையில் இருந்த குழப்பம் இல்லாமல் சற்றே தெளிந்து இருந்ததை மீராவும் சஞ்சயும் கண்டனர்.
ஸ்வப்னா சரணும் அகரனும் வருவதாக கூறி செல்ல இவர்கள் தயாராக உட்கார்ந்தனர்.
மீரா சஞ்சயிடம் ரெக்கார்ட் செய்யச் சொல்ல சஞ்சயும் தயாராகத் தன் மொபைலை எடுத்து கேமரா ஆன் செய்தான்.
“ஹாய் காய்ஸ்… சாரி கொஞ்சம் வர்க் அதான் உங்கள வையிட் பண்ண வச்சிட்டோம். உங்களோட டைட்டில் இதுல இருந்து நீங்க சூஸ் பண்ணிக்கலாம். நதியாள் அகரன் கூட இருந்து அவன் சொல்றது எல்லாம் செய்யனும். மீரா அண்ட் ரிஸ்வானா அட்மினிஷ்டிரேசன்ல பண்ணிக்கலாம். ஸ்டெல்லா அண்ட் திலீப் நீங்க இன்டீரியர் டிசைனிங்க்கு யூஸ் பண்ற மெடீரியல்ஸ் கார்டனிங்ல சூஸ் பண்ணிக்கலாம். சஞ்சய் நீ ஓவர்ஆல் ஆர்கனைஸ்ல ஆல்ரெடி மினி பிராஜெக்ட் பண்ணி இருக்க சோ வாட் யூ வாண்ட் டு டூ நவ்?”, சரண்.
“வாட்எவர் யூ சே சார். ஐ ம் ரெடி டு லேர்ன் வாட் ஐ டோன்ட் நோ”, சஞ்சய்.
“தட்ஸ் குட். யூ டூ ஜாயின் வித் நதியாள். உங்களுக்கு இங்க தனி கேபின் குடுக்க சொல்றோம். கண்டிப்பா சைட் சீயிங் பண்ணணும். மீரா ரிஸ்வானா நீங்களும் அப்பப்ப செய்யணும். ஸ்டெல்லா அண்ட் திலீப் இன்னும் 3 டேஸ்ல கோர்ட்யார்ட் கார்டன் அண்ட் டெரஸ் கார்டன் டிசைன் குடுக்கணும்.அது சின்ன பிராஜெக்ட் நமக்கு கிடச்சி இருக்கு.. இது நீங்க பெட்டரா செஞ்சா உங்களுக்கு நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும். இன்டீரியர் மத்த ப்ராடெக்ஸ் எல்லாமே டிசைன் பண்ணிட்டு கோட் பண்ணிட்டு 3ர்ட் டே மதியம் எனக்கு குடுக்கணும். இப்ப அகரன் கூட அந்த ரெஸ்டாரெண்ட் க்கு மீட்டிங் யார் யார் போறீங்க. ஒன்லி டூ கேன் கோ நவ். அப்பறம் நீங்க அங்க இடம் பாத்துட்டு எது எது மாத்தலாம்னு சொல்லலாம்”, சரண்.
“நான் போறேன் அகன் கூட”, நதியாள்.
“கால் ஹிம் சார் அட் ஆபீஸ் யாள். வேற யார் கூட போறீங்க. இப்ப இருந்து இந்த மீட்டிங் எல்லாம் பாத்து கத்துகோங்க உங்களுக்கு யூஸ் ஆகும்”, சரண்.
“நான் போறேன் சார்”, சஞ்சய் முன்வந்தான்.
“ஓகே பைன். 12.30க்கு மீட்டிங் சோ 12க்கு ரெடியா இருங்க. ஸ்வப்னா கிட்ட டீடைல்ஸ் கேட்டுகோங்க யாள் அண்ட் சஞ்சய். யுவர் பிராஜெக்ட் ஸ்டார்ட்ஸ் நவ். ஆல் த பெஸ்ட் காய்ஸ்”, வாழ்த்துக் கூறி சரண் அங்கிருந்துச் சென்றான்.
“மிஸ் நதியாள் நீங்க ஸ்வப்னா கிட்ட என் ஷெடூல் கேட்டுகோங்க. மீரா நீங்க பிரோகிராம் மீட்டிங்லாம் எப்படி ஷெடூல் பண்ணணும்னு ஸ்வப்னா கிட்ட கேட்டுகோங்க. உங்க எல்லாருக்கும் எப்ப என்ன சந்தேகம் வந்தாலும் என்னையும் சரணையும் கேக்கலாம். ஆல் த பெஸ்ட்”, எனக் கூறி அகரனும் தன்னறைக்குச் சென்றுவிட்டான்.
இங்கு நடந்த அனைத்தும் சஞ்சய் தன் மொபைலில் பதிவு செய்தும் இருந்தான். அது பின்னாடி நாமலும் அந்த பையன ஓட்ட சொல்லி பாத்துக்கலாம் பிரண்ட்ஸ்…..
“யப்பா… படபடன்னு பட்டாசா ஆர்டர்ஸ் குடுத்துட்டு போயிட்டாங்க”, ஸ்டெல்லா.
“ஆமா. நம்மல வேலை வாங்காம இவங்க விட மாட்டாங்க போலவே”, திலீப் தீவிரமான முகபாவனையில் கூறினான்.
“பின்ன குடுக்கற ஸ்டைபனுக்கு வேலை வாங்காமலா இருப்பாங்க?”, மீரா.
“ஹேய் ஸ்டைபன் இருக்கா?”, ஸ்டெல்லா.
“ஆமா. ஆனா எவ்வளவுன்னு தெரியல”, ரிஸ்.
“மீரா ரிஸ்….நமக்கு ஒரு முப்பது இல்ல நாப்பது குடுக்க சொல்லுங்க”, திலீப்.
“ஏன் கம்மியா கேக்கறீங்க மிஸ்டர் திலீப் ரவுண்ட் பிகரா ஐம்பது பண்ணிடலாம்”, ஸ்வப்னா கூறிக்கொண்டே உள்ளே வந்தாள்.
“சாரி உங்கள பாக்க சொன்னாங்க ஐஞ்சு நிமிஷம் லேட் ஆனதும் நீங்களே வந்துட்டீங்க”, சஞ்சய்.
“இட்ஸ் ஓகே சஞ்சய். உங்க கேபின் போகலாம் வாங்க”, ஸ்வப்னா அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.
அந்த தளத்தின் கடைசியில் ஒரு தடுப்பு எழுப்ப பட்டு கேபினாக மாற்றி இருந்தனர். இவர்கள் ஆறுவருக்கும் தனி தனி டேபில் சேர் போடப்பட்டு இருந்தது. பின்னால் பால்கனி போல செட்டப் போடப்பட்டு அங்கே பூ ஜாடிகள் வைக்கப்பட்டு இருந்தன. எதையோ செய்ய ஆரம்பித்து பாதியில் விட்டது போல இருந்தாலும் பார்வைக்கு நன்றாகவே இருந்தது அந்த கேபின்.
“நைஸ். தேங்க்யூ மிஸ் ஸ்வப்னா”, நதியாள்.
“யூ ஆர் வெல்கம் மேம்”, ஸ்வப்னா.
நதியாள் ஸ்வப்னாவைப் பார்க்க ,” நீங்க சரண் சாரோட சிஸ்டர் ஆல்சோ அகரன் சாருக்கும் க்ளோஸ் ரிலேட்டீவ். ஐ மஸ்ட் கால் வித் ரெஸ்பெக்ட்”, எனக் கூறினாள்.
“நோ சச் பார்மாலிட்டீஸ் . கால் மீ பை நேம். நானும் உங்கள பேர் சொல்லி கூப்பிடலாம்ல?”, நதியாள்.
“கண்டிப்பா. சரி காய்ஸ். இங்க உங்க திங்ஸ் வச்சிட்டு அவங்கவங்க வர்க் ஏரியாக்கு போகலாம். சஞ்சய் நதியாள் வாங்க உங்களுக்கு சார் மீட்டிங்கு தேவையான டீடைல்ஸ் சொல்றேன்”, என அங்கிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்றாள் ஸ்வப்னா.
“அவங்க போய்டாங்க நாம எங்க போறது?”, திலீப்.
“கண்ணுங்களா…. வாங்க உங்களுக்கு இடத்த காமிக்க சொல்லி இருக்காங்க”, ப்யூன்.
“ஹாய் அண்ணா. உங்க பேர் என்ன? நான் திலீப், இது மீரா அது ஸ்டெல்லா அது ரிஸ்வானா”, திலீப் அவரிடம் கைக்குழுக்கினான்.
“என்ன தம்பி நீங்க என் கைய பிடிச்சி குழுக்கறீங்க. என் பேரு முருகப்பன். எல்லாரும் முருகான்னு கூப்பிடுவாங்க”, ப்யூன் முருகன்.
“முருகண்ணே…. இங்க கேன்டீன்ல எந்த எந்த ஐட்டம் நல்லா இருக்கும். அசைவம் கிடைக்குமா?”, திலீப்.
“முதல்ல வேலைய பாரு. அண்ணா எங்களுக்கு எங்க யார பாக்க சொல்லி இருக்காங்கன்னு சொல்லுங்க”, மீரா.
“மீராவும் ரிஸ்வானா பொண்ணுக்கும் ஸ்வப்னா மேடம்கிட்ட வேலை, மத்த ரெண்டு பேரையும் வரைய சொல்லி இருக்காங்களாம். எதாவது தேவைபட்டா ஷீலா மேடத்த பாக்க சொன்னாங்க. வாங்க கைகாட்றேன்”, முருகன்.
“போலாண்ணா….”, என ஸ்டெல்லாவும் மீராவும் முன்னே செல்ல திலீப் ரிஸ் பின்னே சென்றனர்.
“மேடம் இந்த பசங்க தான் உங்க பொறுப்பு. சரண் சார் சொன்னாரு”, ஷீலாவிடம் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மீராவையும், ரிஸ்வானாவையும் ஸ்வப்னாவின் கேபினுக்கு அழைத்துச் சென்றார்.
ஸ்வப்னாவின் கேபின் காலியாக இருக்க சிறிதுக் காத்திருக்கக் கூறிவிட்டு முருகன் சென்றுவிட்டார்.
அகரனின் அறையில் சஞ்சய், நதியாள், ஸ்வப்னா, அகரன் நால்வரும் மீட்டிங்குக்கு தேவையான விஷயங்களை வரிசைபடுத்திப் பார்த்துவிட்டுக் கிளம்பத் தயாராகினர்.
“ஓகே ஸ்வப்னா. நாங்க கிளம்பறோம். அந்த ***** கன்ஸ்டரக்ஷன் கம்பெனி கிட்ட இருந்து கால் வந்தா சரண பாக்க சொல்லுங்க”, எனக் கூறி தன் கோர்ட்டை எடுத்துக் கொண்டு அகரன் வெளியே செல்ல, நதியும் சஞ்சயும் பின்னே தொடர்ந்தனர்.
“சார் எங்க போறோம்?”,சஞ்சய்.
“******** ரெஸ்டாரெண்ட”,எனக் கூறி டிரைவிங் சீட்டில் அமர்ந்தான் அகரன்.
“சார் நான் டிரைவ் பண்ணட்டுமா?”, சஞ்சய்.
“நோ தேங்கஸ் சஞ்சய். நீங்க உக்காருங்க. நதியாள் பின்னாடி உட்காரட்டும்”, அகரன்.
“ஏன் சார் நீங்க டிரைவர் போட்டுக்கல?”,சஞ்சய்.
“ஐ லவ் டு டிரைவ் சஞ்சய்”, அகரன் கண்ணாடி வழியே நதியைப் பார்த்துவிட்டு,”ஆனாலும் ஸ்பீட்ல கன்ட்ரோலா இருப்பேன்” , எனக் கூறினான்.
“ஆமா சார் கன்ட்ரோல் இருந்தா தான் நல்லது. ஆனா யாள் பயங்கர ஸ்பீடா போவா…. பாக்கவே எங்களுக்கு பயமா இருக்கும் பட் அவளோட டிரைவிங்லயும் நிதானமும் கன்ட்ரோலும் இருக்குன்னு அவபின்னாடி உக்காந்துட்டு போனா தான் தெரியும்”, சஞ்சய்.
“அதிக வேகம் எப்பவும் ஆபத்து தான் சஞ்சய். கொஞ்சம் பொறுமையா போகலாமே”, அகரன்.
“அதுவும் சரிதான் சார்”,சஞ்சய்.
இருவரின் உரையாடலும் கேட்டும் கேட்காதது போல நதியாள் உட்கார்ந்து இருந்தாள். எதாவது பேசினா விட்டதுல இருந்து பூஜை ஆரம்பமாகும். பத்தாததுக்கு சஞ்சயும் இருக்கான் நல்லா சாம்பிராணி போடுவான்ன்னு புள்ள சைலண்ட் ஆ வருது.
“என்ன யாள் அமைதியா இருக்க?”, சஞ்சய்.
“நீங்க இரண்டும் பேரும் பேசறப்ப நான் என்ன பேச?”, நதியாள்.
“பேசறதே உன்னபத்தியா இருக்கறப்ப பேசலாம்”, அகரன்.
“நான் தான் நேத்தே சாரி சொல்லிட்டேன். இன்னும் என்ன?”, நதியாள்.
“எதுக்காக நீ சொன்ன சாரிய நான் அலாட் பண்றது?”, அகரன்.
“ஸ்பீடா வந்ததுக்கு”, நதியாள்.
“அப்பவும் நீ பேசினதுக்கு இல்ல”, அகரன்.
“நான் விளையாட்டா தான் சொன்னேன். அதுக்கு தண்டனையும் நீங்க நேத்தே குடுத்துட்டீங்க அப்பறம் அதை ஏன் இப்ப இழுக்கறீங்க?”, நதியாள் எரிச்சலுடன் கூறினாள்.
“இப்பவும் பேசினது தப்புன்னு உணரலியா”, அகரன் கோபத்துடன் கேட்டான்.
“உங்களுக்கு இப்ப என்ன? மன்னிப்பு கேக்கணும் அவ்வளவு தானே. மன்னிச்சிடுங்க சார். இப்ப வந்த வேலைய பாக்கலாம் ரெஸ்டாரெண்ட் வந்துடிச்சி”, எனப் பேச்சை அத்தோடு முடித்தாள் நதி.
இப்படி கூறிவிட்டு அவள் முதலில் இறங்கி விறுவிறுவென நடந்து வாசலை அடைந்திருந்தாள்.
“சார்…தப்பா நினைக்கலன்னா யாள் என்ன சொன்னான்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”, சஞ்சய்.
“அப்பறம் சொல்றேன் சஞ்சய். இந்த பைல் மட்டும் எடுத்துக்கோங்க”, எனக் கூறி அகரனும் முன்னே நடந்தான்.
“ம்ம்…நேத்து என்னமோ நடந்து இருக்கு போல”, மனதில் நினைத்து விட்டு இவனும் நடந்தான்.
அகரனும் நதியும் அந்த விளையாட்டு இடத்தைப் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இன்றும் அகரன் கருநீல நிற கோர்ட்டை அணிந்து இருந்தான். ஆனால் நதியாள் இளமஞ்சள் நிற சல்வாரில் பார்ப்பதற்கே பாந்தமாக கண்களில் நிறைந்து நின்றாள்.
இருவரின் இதழிலும் மென்னகைப் படர்ந்தது. பின் மீட்டிங் நடக்கும் இடம் சென்று காத்திருந்தனர். அப்பொழுது அங்கே…….