What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
மைதா கேக்
இது சுலபமாக செய்யக்கூடிய மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஓர் இனிப்பு தின்பண்டம். வீடுகளில் சிறுவர்கள் இருந்தால் இது நிச்சயம் செய்து கொடுப்பது வழக்கம் தான். 90 களில் இது மிகவும் பிரசித்தியான ஸ்நாக்ஸ். இப்போதைய குழந்தைகளுக்கு இது தெரியுமா என்பது சந்தேகம் தான். நமது பால பருவங்களை நினைவு கூறும் ஓர் அழகான நிகழ்வுடன் இதை செய்யலாம் வாருங்கள்…
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 250 கிராம்
அரைத்த சர்க்கரை – 1 டம்ளர்
டால்ட்டா – 50 கிராம் (optional)
ரீ பைன்ட் ஆயில் – 200 மில்லி
செய்முறை:
– மைதா மாவை சர்க்கரை, டால்ட்டா இரண்டையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து உருண்டைகளாக்கிக் கொள்ளவும். சப்பாத்தி பலகையில் இவற்றை வைத்து, வட்ட வடிவமாக தேய்த்துக் கொள்ளவும்.
– அனைத்து பக்கமும் கணம் ஒரே போல வரும்படியும், மிகவும் அழுத்தம் கொடுத்து தேய்க்காது மிதமான அழுத்தம் கொண்டு பரப்பி தேய்த்து கொள்ளவும்.
– அதன்பின், கூரான கத்தி வைத்து சிறிது நெய் அல்லது எண்ணெய்யை கத்தியில் தடவிக்கொண்டு, தேவையான இடைவெளி விட்டு சாய்ந்த கோடுகளாக வெட்டவும். எதிர்பக்கமும் அதே போல சாய்ந்த கொடுகளாக வெட்ட, டைமண்ட் வடிவத்தில் அந்த மாவு இப்போது இருக்கும்.
– பின்னர் வாணலியில் எண்ணெய் வைத்து நன்றாக சூடானதும், வெட்டி வைத்திருக்கும் மைதா துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
– மிதமான தீயில் வைத்து, பொன்னிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும் போது வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதோ மைதா கேக் தயார்..
குழந்தைகளின் விடுமுறை காலங்களில் கடையில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. நீங்களும் முயன்று பார்த்துவிட்டு கூறுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….