• About us
  • Contact us
Sunday, April 19, 2026
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon
Aalonmagari
  • Login
  • Register
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
No Result
View All Result
Aalonmagari
No Result
View All Result

3 – விடா ரதி… 

March 24, 2025
Reading Time: 1 min read
0
1.விடா ரதி…

3 – விடா ரதி… 

“பலமா தாக்கப்படணுமா?” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து சட்டென விழிகள் மலர அவனை நோக்கினாள். 

அவன் அறைக்கதவைத் திறந்து அவளைத் திரும்பிப் பார்த்து ஒரு மென்னகைச் சிந்திவிட்டுச் சென்றான். 

“இப்ப லவ் பண்ண சொல்றானா? ஆனா ஏன் அன்னிக்கி அப்படி சொன்னான்?” எனத் தனக்குள் பேசியபடி யோசனையில் ஆழ்ந்தாள். 

சில வருடங்களுக்கு முன்பு….. 

மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம்… அன்று அவளுக்கு நேர்காணலில் வேலைக் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு வரும் முன்னரே அலைபேசி வழியே அனைவரிடமும் கூறியிருந்தாள்.

லேசாக இருட்டியிருந்த மாலை வேளையில், கையில் கணினிசார் வேலையில் தேர்வானக் கடிதத்துடன், பேருந்தில் இருந்து இறங்கி தன் வீட்டிற்கு செல்லும்போது அவனைக் கண்டாள். அவனோடு இன்னொருவர் நின்றிருந்தார்‌. அவனது நண்பர் தான். பலமுறை இருவரையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறாள். ஆனால் பேசியதில்லை. அவனோடும் கூட பேசியதில்லை தான்..‌ 

அவளுடையது ஒரு தலைக்காதல் என்று தான் நாம் வைத்துக்கொள்ள வேண்டும்…‌ ஏனென்றால் அவனோடு பேசியதும் இல்லை, அவளது விருப்பத்தைப் பகிர்ந்துக் கொண்டதும் இல்லை. ஆனால் அவன் மீதான நேசம் மட்டும் மனதின் ஆழத்தில் இருந்து வேர்பிடித்து வளர்ந்துக் கொண்டிருந்தது. 

வார்த்தை தான் பரிமாறவில்லையே தவிர கண்கள் அவனைக் காணும் போதெல்லாம் ஆயிரம் கதை பேசும். அவனது கண்களை விட்டு இவள் கண்கள் எடுக்காமல் தான் கடந்து செல்வாள் ஒவ்வொருமுறையும். அந்த பத்தொன்பது வயதில் அவளுக்கு அதற்கு மேல் எப்படி விருப்பத்தை கூறுவதென்று தெரியவில்லை. அவனிடம் பேச நினைத்து அவனது அலைபேசி எண்ணை நண்பர்களுடன் சேர்ந்து, பல திருட்டு வேலைகள் செய்து பெற்றபோது, அவனுக்கு பெண் தேடுகிறார்கள் என்ற செய்தி அவளை வந்துச் சேர்ந்தது. 

அதெப்படி அவனுக்கு வேறு பெண் தேடலாம் நான் தான் இருக்கிறேனே என்று மனதிற்குள்ளேயே இவள் கோபம் கொண்டுத் திட்டிக்கொண்டிருந்தாள். 

இவளுக்குள் பேசினால் அவனுக்கு கேட்டுவிடுமா? இதை எப்படி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டுமென அவளுக்கு அப்போது தெரியவில்லை என்பது தான் நிதர்சனம். 

இத்தனை ஆண்டுகளில் அதை அவளும் பலமுறை  யோசித்திருக்கிறாள், அன்று விவரம் போதவில்லை. அவளுக்கு தான் போதவில்லையே தவிர அவள் தோழியர் கூட்டத்தில் பலருக்கு நல்ல விவரங்கள் இருந்தன என்று காலம் சென்று அறிந்தாள். 

உண்மையில் அந்த நேசம் அன்று அவளைப் பலமாக சோதித்துப்பார்த்தது.  நட்பென்ற பெயரில் பல துரோகிகளும் உடன் இருந்தனர் என்று அன்று அவளுக்குத் தெரியவில்லை. 

இத்தனை உணர்வுகளுக்கு மத்தியில் நேர்காணலில் வேலையும் கிடைத்தது, மிக மகிழ்ச்சியாக வீடு நோக்கிச் செல்லும்போது, அவன் கூறிய சொற்கள் இன்னும் அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

“நீ இவள லவ் பண்ற தான டா….” அவன் நண்பன் இவளைக் கைக்காட்டிக் கேட்டான். 

“நான்….. நான் அவள லவ் எல்லாம் பண்ணல டா…..” என அவனும் அவளைப் பார்த்துக் கூறினான். 

அந்த வார்த்தைகள் மூளைக்குள் சென்று அர்த்தம் அறிந்ததும் அவளுக்கு கோபம் தான் முதலில் வந்தது. அதில் பத்து நிமிடத்தில் சென்று சேர வேண்டிய இல்லத்திற்கு ஐந்து நிமிடங்களுக்குள் சென்றுச் சேர்ந்தாள். வீட்டில் இருப்பவர்கள் வாழ்த்தியது  கூட அவளுக்கு சுயவுணர்வை மீட்டுத் தரவில்லை. 

அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னும் கூட மனதில் ஒரு ஓரத்தில் நம்பிக்கை இருந்தது. 

அந்த நம்பிக்கை எப்படி ? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம்… அதற்கான சான்றுகளாக அவனது கண்கலந்து நின்றப் பார்வைகள் ஏராளமாக இருந்தது. அவ்வப்போது அவன் அவளிடம் பேச முனைந்த தருணங்களும் இருந்தன. அவள் தான் அதிகப்படியானப் பதற்றத்தில் ஓடியிருக்கிறாள். அதை நினைத்து பல இரவுகள் நொந்துக் கொண்டதும் உண்டு. ஒருவாறாக மனதை சமன் செய்துத் தொலைபேசி எண் கையில் கிடைத்த நேரம், அவனுக்கு பெண் தேடியச் செய்தி வந்த வேகத்தில், திருமணம் முடிவான செய்தியும் உடனே அவளை வந்துச் சேர்ந்தது. 

“அவன்கிட்ட பேசி இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்ல சொல்லவா?” தன் தோழி மீனாவிடம் கேட்டாள். 

“அந்த பொண்ண பத்தி நினைச்சு பாத்தியா ரதி? அந்த பொண்ணு எவ்ளோ ஆசையோட இருக்கும்… ஒரு பொண்ணோட லைஃப் கெடுக்க போறியா?”

“அப்போ நான்… என் காதல்?” உள்ளம் உடைந்துக் கேட்டாள். 

“இனிமே அவன மறந்துட்டு வேற வேலைய பாரு….” என மீனா அசிரத்தையாகக் கூறினாள். 

இவள் கோபம் கொண்டு வகுப்பைவிட்டு வெளியே சென்றுவிட்டாள். அதற்கு பின் முற்றிலும் பித்துப்பிடித்தவள் போல தான் இருந்தாள். 

இன்று……. 

“ரதி… ரதி….” ராக்கி அவளை அழைத்தான். 

“ஆஹ…. சொல்லு ராக்கி.. சொல்லுங்க ரகு……. “

“என்ன சொன்ன?”

“இல்ல நீங்க தான் கூப்பிட்டீங்க… அதான் என்னன்னு கேட்டேன்….”

“இல்ல…. மொதல் வேற ஒரு பேரு சொன்னியே…. அத சொல்லு…”

“ரகு…”

“இல்ல… அதுக்கு முன்ன சொன்னது…”

“ரா…. ராக்கி….”

“இந்த பேர் உனக்கு எப்படி தெரியும்?” அவளைக் கேட்டான். 

“இது உங்கள எப்பவும் கூப்பிடுற பேர் தானே…?”

“இந்த பேர் சொல்லி கூப்பிடறவங்க இப்ப யாரும் இல்ல… என் க்லோஸ் சர்கிள் ஆளுங்களுக்கு மட்டும் தான் தெரியும்… இப்போ சில வருஷமா யாரும் அப்படி கூப்பிடறதும் இல்ல…. உனக்கு எப்படி தெரியும் ரதி?” அவன் வேகமாகக் கேட்டான். 

தனக்குள் பேசும் பழக்கதோஷத்தில் அந்தப் பெயரைக் கூறியது இப்போது தான் நினைவுக்கு வந்தது. 

“அது… அது….”

“இப்போவாது எதையும் மறைக்காம சொல்லு ரதி….” அவன் குரலில் இருந்த எதோ ஒன்று அவனை நிமிர்ந்துப் பார்க்க வைத்தது. 

“நான் உங்கள நேசிச்சேன் ரகு…. என் காலேஜ் டேஸ்ல….. நீங்களும் என்னை நேசிக்கறதா நெனைச்சேன்….. ஆனா அப்படி இல்லன்னு அன்னிக்கி சாயிந்தரம் அந்த பழைய பில்டிங்கிட்ட நீங்க சொன்னதும் ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருந்தது. எனக்கு அப்போ எப்படி  பேசி என்ன பண்றதுன்னு புரியல… உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கு அப்பறம் உங்க ஃப்ரெண்ட் சதீஷ்கிட்ட பேசி உங்களோட மனநிலை அதுல என்னனு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணேன். ஆனா…. அவரு என்கிட்ட பேசவே விரும்பல…. என்னை எல்லா வகைலையும் பிளாக் பண்ணிட்டாரு…. “ என அவன் முகபாவனைகள் பார்த்துக் கொண்டே கூறினாள். 

“சதீஷ் ஆ?”

“நீ ஏன் என்கிட்ட நேரா கேக்கல ரதி?”

“நீங்க அப்படி சொன்னதுக்கு அப்பறம் நான் எப்படி பேசறதுன்னு தெரியல…. ஒரு பக்கம் கோவம்… ஒரு பக்கம் மனவுளைச்சல்…. அந்த வயசுலே எப்படி பேசறது? எப்படி உங்கள அப்புரோச் பண்றதுன்னு தெரியல….”

ரகுபதியின் முகத்தில் பல சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது. 

“என் கல்யாணம் நின்னது உனக்கு தெரியாதா?” ஆழ்ந்தக் குரலில் கேட்டான். 

“ரெண்டு வருஷம் முன்ன தான் தெரியும்… அதுவும் சுந்தரி சொல்லி தான்….”

“உன் ப்ரெண்ட் பிரியா உன்கிட்ட எதுவும் சொல்லலியா?” இறுகியக் குரலில் கேட்டான். 

“இல்ல…. ஏன்….? அவகிட்ட நீங்க ஏதாவது சொன்னீங்களா?” என மனம் தடதடக்கக் கேட்டாள். 

“இல்ல… ஒன்னும் இல்ல…. நான் நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும்… நீ வீட்ட லாக் பண்ணிக்கோ…..” என அவள் முகம் பார்க்காமல் யோசனையில் கூறிக்கொண்டே வெளியேறினான். 

அவன் சென்றவிதம் அவள் மனதை அறுக்க, ஒரு யோசனையுடன் சுந்தரிக்கு அழைத்தாள். 

“சுந்தரி…. நாம ஒரு வேலை பண்ணனும்…..”

“இப்போ என்னடி?” அலுப்பாகக் கேட்டாள். 

“நான் சொல்றத முழுசா கேளு……” என ரகுபதி கேட்டது முதல் நடந்த சம்பாசனைகளைக் கூறிவிட்டுத் தனது எண்ணத்தைக் கூறினாள். 

“இது சரி வருமா?” சந்தேகத்துடன் கேட்டாள் சுந்தரி.

“உன் கல்யாணத்துக்கு எப்படியும் வருவா… அப்போ பிடிக்கலாம்… இல்லையா வேற பிளான் போட்டுக்கலாம்…“

“நிஜமா நீ நெனைக்கற மாதிரி நடந்து இருந்தா என்ன பண்ணுவ ரதி?”

“இன்னும் நெறைய விசயங்கள் எனக்கு தெரியல… புரியல சுந்தரி…. நீ நாளைக்கு ராத்திரி உனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லு. அப்போ தான் எங்க தப்பு நடந்ததுன்னு கண்டுப்பிடிக்க முடியும்…“

“சரி…. நாளைக்கு காலைல டிபனுக்கு இங்க வந்துடுங்க ரெண்டு பேரும்…” எனக் கூறிவைத்தாள் சுந்தரி. 

தன் வாழ்வில் தனக்குத் தெரியாத சூழ்ச்சிகள் பல நடந்திருப்பதை ரதியிவள் அறிவாளா? 

அப்படி  அறிந்தால் ? 

 

முந்தின அத்தியாயம் படிக்க.. 

அடுத்த அத்தியாயம் படிக்க..

 

முதல் அத்தியாயம் படிக்க..

Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Facebook Twitter Email
Post Views: 975

aalonmagari

Subscribe
Login
Notify of

0 Comments
Newest
Oldest
Inline Feedbacks
View all comments

About Me

Aalonmagari

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Categories

  • English (5)
  • Food Recipes (3)
  • Short story (2)
  • இன்னும் பல .. (5)
  • எழுத்தாளர் நேர்காணல் (31)
  • கதை (381)
  • கிறுக்கல்கள் (107)
  • சிறுகதை (10)
  • தொடர்கதை (161)
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல (7)
  • நாவல் (212)
  • நேர்காணல் (56)
  • புத்தகம் வாங்க (9)
  • மகரியின் பார்வையில் (5)
  • வாசகர் நேர்காணல் (25)

Popular

  • இயல்புகள்

    தேன் நிலா

    551 shares
    Share 220 Tweet 138
  • 1 – அகரநதி

    500 shares
    Share 199 Tweet 125
  • 1 – அர்ஜுன நந்தன்

    471 shares
    Share 188 Tweet 118
  • 1 – வலுசாறு இடையினில் 

    428 shares
    Share 171 Tweet 107
  • 1 – காற்றின் நுண்ணுறவு

    397 shares
    Share 158 Tweet 99
  • Terms & Conditions
  • Privacy Policy
Email us : aalonmagari@gmail.com

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • கதை
    • நாவல்
    • தொடர்கதை
    • சிறுகதை
  • கிறுக்கல்கள்
  • புத்தகம் வாங்க
  • நேர்காணல்
    • எழுத்தாளர் நேர்காணல்
    • வாசகர் நேர்காணல்
  • மகரியின் பார்வையில்
  • நாமளும் சமைக்கலாம் தப்பில்ல
  • English
    • Short story
  • Login
  • Sign Up
Facebook social icon Twitter X social icon Instagram social icon Pinterest social icon

Copyright © 2026. Aalonmagari. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.
SIGN UP FOR NEWSLETTER NOW
error: Content is protected !!
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
| Reply