வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ எனது அடுத்த புத்தகம் “அகரநதி பாகம் – 1”. இந்த கதை நான் எழுதவே ரொம்பவும் கஷ்டப்பட்டேன். காதல் நமக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம், அதனால இதை எழுதரத்துக்குள்ள பட்டபாடு.. யப்பா .. ஆனாலும் கஷ்டப்பட்டு அதை எழுதி முடிச்சிட்டேன். இப்ப அந்த கதை இரண்டு பாகமா பிரிச்சி போட்டு இருக்கேன்..
இரண்டு பாகமும் notion press இல் வெளியாகி இருக்கிறது..
இந்த புத்தகத்தை வாங்க..
Notion Press:
https://notionpress.com/read/agaranadhi
https://notionpress.com/read/agaranadhi-part-2
At amazon.in :
At amazon.com :
At Amazon.co.uk:
At Flipkart :
https://www.flipkart.com/agaranadhi/p/itmf8bad3972a2d0?pid=9798885217071&affid=editornoti
https://www.flipkart.com/agaranadhi-part-2-2/p/itmd69de2d1f32b2?pid=9798885218566&affid=editornoti
இக்கதையின் சில துளிகள்..
“ஏய் நில்லு அத என்கிட்ட குடு”, எனக் கூறித் துரத்தியபடி ஓடியவள் எதிரே வந்தவர்களைக் கவனியாமல் இடித்தாள்.
அவள் இடித்த வேகத்தில் எதிரே வந்தவன் கீழே விழப் போக, அதற்குள் இன்னொரு மாணவன் அவனை விழாதுப் பிடித்தான்.
“கண்ணு தெரியல உனக்கு நான் தான் துரத்திட்டு ஓடி வரேன்ல நகரமாட்ட”, என வசைபாடியபடி விழுந்தவள் எழுந்து நின்றாள்.
“ஹே பாப்பா…. நீ பாத்து ஓடிவரணும் அத விட்டுட்டு நீ கண்ணு தெரியாம ஓடி வந்து இடிச்சிட்டு விழுந்தா அவன் என்ன பண்ணுவான்?”, இன்னொரு மாணவன்.
“நான் அப்படி தான் வருவேன் நீங்க நகந்து போங்க. உன்னால என் பேட் அவ தூக்கிட்டு ஓடிட்டா. வா வந்து அந்த பேட் வாங்கி குடு”,என இடித்தவன் கைப் பிடித்து இழுத்தாள்.
அந்த சமயம் அகரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
பின்னாள் பார்த்து கொண்டே வந்தவள் அகரனின் மேல் மோதினாள். அவள் மோதியதில் அவனும் படிகளில் விழுந்தான் அவனின் மேல் அவளும் விழுந்தாள்.
“ஹேய்…. “, என கத்திய அகரன் அவளை பார்த்தவுடன் அமைதியானான்.
இருவரின் கண்களும் ஒன்றை இன்னொன்றை தழுவியபடி அப்படியே உறைந்து இருந்தது.
கண்களில் தான் எத்தனை காவியம்….
கண்மணியின் கருவென இருவரும் ஒருவரை ஒருவர் தன்னுள் புதைத்துக் கொள்ள….
சுற்றம் மறந்து …..
தங்களை மறந்து….
அவர்களை அவர்களுள் அறிந்திடும் தேடல் தொடங்கியது…. 💖💖💖💖💖💖
அவள் எழும் சமயம் அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான் அகரன்.
“அகன்…. நீ தூங்கலையா?”, என கண்கள் விரியக் கேட்டாள் நதி.
“நீ உள்ள வந்தப்ப முழிச்சிட்டேன். சரி நீ வந்தியே என்னை கொஞ்சுவன்னு பாத்தா பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு நெத்தில போனா போகுதுன்னு முத்தம் குடுத்துட்டு போற…. இத நான் ஒத்துக்க மாட்டான்”, என அகரன் அவளை தன்னருகில் நெருக்கியபடி பேசினான்.
“விடு அகன். எல்லாரும் எந்திரிக்கற நேரம். நான் போகணும்”, என நதியாள் அவனிடம் இருந்து விடுபட முனைந்தாள்.
“ம்ம்ஹூம்ம் … என்னை கொஞ்சிட்டு எங்க வேணா போ”, அகரன் பிடிவாதமாக அவளை அணைத்தபடிக் கூறினான்.
“இப்படி நீ பிடிச்சா உன்னை எப்படி கொஞ்ச முடியும்? கைய விடு.. தள்ளி படு…..”, என நதியாள் நெளிந்தாள்.
“அதுல்லாம் முடியாது…. இப்படியே என்னை கொஞ்சு…. நான் வேணா பழையபடி கண் மூடி படுத்துக்கறேன்”, என கண்கள் மூடி தலையை அவள் புறமாக வைத்துக் கொண்டான்.
“அச்சோ…. உன்னால இம்சை அகன்…. “, நதியாள் எரிச்சலுடன் கூறினாள்.
“இப்பதாண்டி என்னை பத்தி அவ்வளவு பேசின. உடனே இம்சைங்கற இப்ப”, அகரன் வம்பிலுத்தான்.
Happy ending love story