வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ எனது முதல் நாவல் இப்போஅது புத்தகமாக கைகளில் வந்து விட்டது. Notion Press மூலமாக “அர்ஜுன நந்தன்” இப்போது அழகான புத்தகமாக வெளி வந்துவிட்டது.
இந்த புத்தகம் வாங்க விரும்புபவர்கள் கீழே இருக்கும் லிங்க் மூலம் வாங்கிக் கொள்ளலாம்..
Notion Press Link:
https://notionpress.com/read/arjuna-nandhan
Amazon.in:
Amazon.com:
Amazon.co.uk:
Flipkart :
அந்த கதையில் இருந்து சில துளிகள் ……
“என்னடா செஞ்சி வச்சி இருக்கீங்க இவன” , நரேன்.
“விசாரிச்சோம் பாஸ்”
“சார் அர்ஜுன் சார்க்கு ஒரு கால் வந்தது அதான் அந்தப் பக்கம் போனாரு”, முகில்.
“யார் கால் பண்ணாங்கனு தெரியுமா”?
“இல்ல சார் அவர் கால் வந்ததும் வெளியே போய்டார்”
“அப்ப நான் கால் பண்ணதும் வெளியே போய்ட்டான் அப்படித் தானே நந்து? “
“அய்யய்யோ பாஸ் அவன் வேணும்னே எங்கள சிக்கவச்சிட்டு போய்டான் ஒரு மணி நேரம் டைம் குடுங்க அவன் எங்க இருந்தாலும் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்தறேன்”, நந்து.
“நீயும் ஓடிட்டா யாரு பாடிய டிஸ்போஸ் பண்றது? “, நரேன்.
“பாஸ் அவன் இன்னும் சாகல பாருங்க கண்ணுமுழி அசையுது”, நந்து.
“காமெடி பண்றியா டா?”, நரேன்.
“இல்ல சமாளிச்சிட்டு இருக்கேன். இல்ல இல்ல எந்த டாக்டர்ற கூப்பிடுறது னு யோசிட்டு இருக்கேன். “, நந்து.
“சொல்றேன்ல. என் வார்த்தைக்கு என்ன மரியாதை? வந்து உக்காந்து சாப்பிடச் சொல்லு பாண்டி”, கோபமாகக் கூறிவிட்டு டைனிங் டேபிலுக்குச் சென்றுவிட்டான் நெடுமாறன்.
“பூவு… போ உள்ள தம்பி கோச்சிக்கும் அப்பறம்”, பாண்டி.
வேண்டா வெறுப்பாகச் சாப்பிட அமர்ந்தாள். டைனிங் டேபிள் நிறைய அசைவ உணவுகளை பரப்பி வைத்து இருந்தனர்.
செட்டிநாடு சிக்கன் பிரை, கல் தோசை, மட்டன் கைமா, நண்டு பிரை , மீன் பிரை, அப்பம் என இருக்க பூவழகி சாப்பிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
கைகழுவி வந்து அமர்ந்தவள் அங்கிருந்தவர்களை மறந்தாள்.
டேபிளில் இருந்த பாதியை சாப்பிட்டு விட்டு தலை நிமிர்ந்தாள், அப்பொழுது பாண்டி அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு இருந்தவன்.
“என்ன அண்ணா அப்படி பாக்கற?”, பூவழகி.
“இல்ல ஒரு வாரமா நீ சாப்பிடலியா பூவு? “, மலைத்து விழித்து கேட்டான் பாண்டி.
“காலைல சரியா சாப்பிடல அண்ணே. அதான் ஐட்டம்ல நல்லா இருந்ததும் உள்ள போயிடிச்சி”, சிரித்துக் கொண்டு பதில் கூறினாள்.
“ஆமா எங்கள பலி குடுக்க அவளமாதிரி யாரும் பிளான் பண்ணி அனுப்ப முடியாது”, என நரேன் வந்து அமர்ந்தான்.
“ஏன் நரேன்? எதுக்கு இவ்வளவு கோபம்?”, செந்தில் .
“அவங்க பிளான் கேட்டீங்க தானே செந்தில்?”, நரேன்.
“இல்ல நான் யாத்ரா கூப்டான்னு மேல வந்துட்டேன். என்ன பிளான்?”, செந்தில்.
“சொல்லு டா”, என நரேன் அர்ஜூனைப் பாத்துக் கூறினான்.
“அது ஒன்னும் இல்ல செந்தில் இவரும் நந்துவும் அந்த அசிஸ்டண்ட்அ யோகி கிட்ட விட்டுட்டு வர சொன்னேன்”, அர்ஜுன்.
“நரேன்…. நரேன்…..அது நம்ம செழியன் தானே? என்னாம்மா பைட் பண்றான். அவனும் நந்துவும் இவ்வளவு நல்லா பைட் பண்ணுவாங்களா?”, ஜொல்லு விட்டுக்கொண்டே கேட்டாள் யாத்ரா.
“ஆமா. ரெண்டு பேரும் நல்லாவே சண்டை போடுவானுங்க அத விட நல்லா சண்டைய இழுப்பானுங்க. அவனுங்கள வச்சிட்டு டிபார்மெண்ட்ல நான் படற பாடு எனக்கு தான் தெரியும்”, எனக் கூறினான்.
“ச்சா….. சச் எ மேன்லி ஹேண்சம் ஹீ இஸ் …. யாத்ரா பேபி இவன்கிட்ட க்ளீன் போல்ட் ஆகிட்டியேடா. என்ன நடந்தாலும் சரி இவன தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிடனும்”,என அவனின் வீரத்தில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தாள் யாத்ரா.