- 2022 Aalonmagari. All Rights Reserved.
திமிராய் நிராகரத்தவளே... - உன்திமிர் கண்டே அடிமையாகிபோனேன்....நம் ஒழுக்கத்தின் திமிரை ஒன்றாக்கி புது திமி(உயி)ர் உருவாக்குவோம் வா...... - ஆலோன் மகரி
கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ......
விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....பிரபஞ்சத்தின்...
வினையெல்லாம் வினைதானா?நீங்காத கறையாக....குறையாத மணமாக.....விதைத்தவை அனைத்தும்....நம் கண் முன்னே முளைத்திடுமா?முளைத்ததெல்லாம் நீ வினையாற்றி வளர்த்தாயா?எவ்வினையும் உன்வினைதான்...ஆனால்...நிகழ்பவையனைத்தும் உன் வினையால் மட்டுமே அல்ல.....ஆற்றும் வினைதான்...ஆற்றல் மிக்கதாக ஆற்றிவிடு....எதிர்வினையோ...உள் வினையோ.....நேர்மறையோ...எதிர்மறையோ....ஆற்றும்...
கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி
காரணமேதும் தேவையில்லை.....உன்னை....உன் அன்பை .....ஒரு நாள் ....ஒரே நாள்.....கண்படும் தூரத்தில்... உன் குரலிசை கேட்கும் தொலைவில்.....தொலையாமல் தொலையவே ஆசை.....பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?இல்லை....உன் கன்னத்தில் விழும்...
பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி
எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி
பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….அதில் வாழும் உயிர்களும் பலவகையே….அவற்றின் உண்ணல், உறங்கல்,.....மனிதரும் அதுபோல் தான்…..பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..பூமியும் ஓர்...
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.