விழித்திருக்கும் பொழுதுகள் ….
கண் திறந்து….
நாசி திறந்து…..
வாய் திறந்து….
உடல் விழித்திருந்தால்….
அது விழிப்பாகுமா?
அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்…
அகம் என்றால்….?
புத்தி…
மனம்…
இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்….
ஆன்மா விழித்தெழும்….
ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்….
பிரபஞ்சத்தின் பெருங்கதவு திறக்கிறது….
எத்தனை வியப்பான நிகழ்வுகள்….
விழித்திருத்தல் என்பது…
மெய்யான விழிப்பாக ….
மெய்யை உணர்ந்த விழிப்பாக இருத்தலே உயிர்களின் உச்ச லட்சியம்…..
– ஆலோன் மகரி