வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
இன்னிக்கி நம்ம பாக்க போற சமையல் குறிப்பு..
சிக்கன் 87
தேவையான பொருட்கள் :
- சிக்கன் – 1 கிலோ
- சீரகம் – 4 டீ ஸ்பூன்
- மிளகு – 4 டீ ஸ்பூன்
- சோம்பு – 4 டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1 கிலோ
- வரமிளகாய் – 10 (பெரிதாக)
- கடுகு – 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
மசாலா தயாரித்தல்:
சீரகம், சோம்பு, மிளகு மூன்றும் தனி தனியாக வாணலியில் வெறுமனே வறுத்து எடுக்கவும். வாசனை வரும்வரை மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும்.
அதோடு, வராமிளகாய், வெங்காயம் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
சிக்கனை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
இந்த குழம்பை வார்க்கப்பட்ட இரும்பு சட்டியில் வைத்தால் சுவையாக இருக்கும். சூடான சட்டியில், 100 கிராம் எண்ணை விடவும். எண்ணை நன்றாக காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை போட்டு, அரைத்து வைத்துள்ள மசலாவை ஊற்றவும்.
10 நிமிடம் நன்றாக எண்ணையில் கொதிக்க விடவும். சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளவும். கல் உப்பு உபயோகிப்பது நல்ல ருசியுடன், உடலுக்கும் நல்லது. 10 நிமிடம் வதக்கிய பிறகு, ஒரு லிட்டர் சுடு நீரை காய்ச்சி அதில் ஊற்றவும்.
அதிக வெட்பத்தில் நன்றாக வேகவிடவும். அவ்வப்பொழுது நன்றாக கிளறிவிட்டு கொண்டே இருக்கவும். அடிபிடிக்காமல் சீராக குழம்பு தயாராக இது உதவும். குழம்பு கெட்டியாகி எண்ணை மேலே வந்ததும் இறக்கி விடவும்.
அடியில் நிற்கும் சிறிது குழம்போடு சூடான சாதத்தை அந்த இரும்பு சட்டியிலேயே பிரட்டி சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும்.
இன்றும் சில கிராமபுர வீடுகளில் வார்க்கபட்ட இரும்பு சட்டியில் செய்யும் எந்த குழம்பிலும் இது போல அடி நிற்கும் குழம்புடன் சாதம் போட்டு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதில் சத்து அதிகம் என்ற கூற்றும் உண்டு.
இது இட்லி, சப்பாத்தி, தோசை, சாப்பாடு எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.
காய்ச்சல், சளி போன்ற சமயங்களில் இப்படி செய்து சாப்பிட்டால் உடனடியாக உடல்நிலை சீராகும். சளி இறங்குவதோடு தொண்டை குழாயில் இருக்கும் கிருமிகள் நீங்கும்.
நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்..