What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Click to rate this post!
[Total: 0 Average: 0]
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ எனது முதல் சிறுகதை, இப்போது முதல் புத்தகமாக Notion Press மூலமாக இப்போது கைகளில் வந்துவிட்டது..
“சித்ர விசித்திரம்” ஒரு அட்வென்சர் பயணம் ..
இந்த புத்தகத்தை வாங்க..
Notion Press:
https://notionpress.com/read/chitra-vichithiram
அந்த கதையில் இருந்து சில துளிகள் ..
“சரி சரி…. இன்னும் அந்த ஆள காணோம். அந்த ஆளுக்கு குடுக்க வேண்டியது எங்க?”, இதயா.
“இதோ இந்த பைல இரண்டு புல், நாலு சுருட்டு கட்டு, இரண்டு கவுளி வெத்தலை இருக்கு”, நாகேஷ்.
“கொட்ட பாக்க ஏன் விட்ட? அதையும் வாங்க வேண்டியது தானு?”, சப்தனிகா கடுப்பாக கேட்டாள்.
“அட ஆமா அத மறந்துட்டேனே… அதுக்கு பதில் நிஜாம் பாக்கு வாங்கிட்டேன் சகா பேபி”, நாகேஷ்.
“டேய்… இன்னொரு தடவை என்னை பேபின்னு சொன்ன உன்ன இங்கயே புதைச்சிடுவேன் பாத்துக்க”, சப்தனிகா விரல் நீட்டி எச்சரித்தாள்.
“தங்கப்போறது இல்ல. இவ குளிச்சிட்டு தான் உள்ள போக முடியும்”, அதியன்.
“குளிக்கனுமா?”, என நாகேஷ் அதிர்ச்சியடைந்தான்.
“உன்ன இல்ல டா. அவ தான் குளிக்கணும். நீ போன பொங்கலுக்கு குளிச்சவன் எப்படியும் அடுத்த பொங்கலுக்கு தான் குளிப்ப…. ஷாக்க குறை”,என சப்தனிகா அவனை வாரினாள்.
“அப்பாடா….. இப்ப தான் நிம்மதியா இருக்கு…. எங்க என் உடம்புலையும் தண்ணி பட்ருமோன்னு பயந்துட்டேன்”,என நாகேஷ் கூறிப் பெருமூச்சுவிட்டான்.
“கருமம் கருமம்…..பின்னாடி தள்ளி வாடா…. நாத்தம் இப்பவே குடலை பிறட்டுது…. குளிக்கறதுல உனக்கு என்னடா கஷ்டம்?”, சப்தனிகா.
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….