வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்…
ஒரு மகிழ்ச்சியான செய்தியோட வந்திருக்கேன்.. “யான் பதிப்பகம்” மூலமாக எனது முதல் நேரடி கதைப்புத்தகம் வெளியாக போகிறது. இந்த வாய்ப்பு கொடுத்த Megavani பேபிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்…
இந்த புத்தகம் டிசம்பர் 2024 சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும். தவிர ஃபோன் வழியாவும் வாங்க முடியும்.
book price – 230/-
பிரியா நிலையம் : 9444462284
Nivitha distribution : 9994047771 / 9962318439 (10% discount)
For Pre – Order : whatsapp – 8124489417
Srilanka – Aadhi distributions – 0773515574
“காற்றிலாடும் காதல்கள்”
அவ்வூரின் மலையுச்சியில் அமைந்திருக்கும் குகை தானாக சில ஆண்டுகள் முன்பு அடைத்துக் கொண்டதாம்.. அந்த நாட்களில் மட்டும் எல்லைகோவிலைத் தாண்டமுடியாமல் தடுக்கும் சக்தி என்ன ? அந்தக் குகையைத் திறக்கும் போராட்டங்களும், முயற்சிகளுமாக கற்பனையுலகில் அனைவரையும் திகைப்பும், தவிப்புமாக சஞ்சரிக்கவைத்திடும் இவர்களின் பயணம்.
கதையில் இருந்து சில துளிகள்…
இத்தனை வருடங்களாக அவனும் பலமுறை முயற்சித்துவிட்டான். ஆனாலும் இந்த இரண்டு தினங்களில் மட்டும் இரவு நேரம் ஊரைத் தாண்ட முடியவில்லை. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவன் மனது சொன்னாலும் மூளை அதை எதிர்த்து வாதம் செய்தது.
மற்ற நாட்களில் சாதாரணமாக இரவில் உலா வருபவனால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் அந்த எல்லையைத் தாண்டமுடிவதில்லை என்பது தான் உண்மையும் கூட…
“டேய் கீதா… என்னடா கண்ண தொறந்தே கனவு காணறியா? வாடா சீக்கிரம். மணி 10 ஆச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல தேவலோகத்துல இருந்து தேவருங்க வந்துடுவாங்க. நம்மள பாத்தா அவ்வளவு தான்.” என அவனின் ஆருயிர் நண்பன் இந்திரன் அவனை இழுத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான். பகவத்கீதன் மனதில் சோர்வு எழ, அப்படியே தரையில் படுத்து முற்றத்தின்வழியே சந்திரனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஏன்டா கீதா.. உன்கிட்ட எத்தன தடவை தான் சொல்றது? அமாவாசை பௌர்ணமில வெளிய வராதன்னு போன வாட்டியே அய்யா என்னை பிடிச்சி ஏசினாக தெரியுமா? ஊர்ல இருக்கறவனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். பெரிய பிரச்சினை ஆகிபுடும் டா. கொஞ்ச நாளைக்கு உன் ஆராய்ச்சி எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கம்முன்னு இரு. தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்க வேணாமா?”என இந்திரன் தன்பாட்டில் பேசிக்கொண்டிருக்க, இவனோ இம்முறையும் கொண்ட தோல்வியில் மனம் நொந்தான்.
“ஏன்டா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ ம்ம் கூட சொல்லாம சந்திரன வெறிச்சிட்டு கிடக்க. இங்க இந்திரன் பேசிக்கிட்டு இருக்கேன்ல” என புலம்ப, கீதன் அவனை ஒரு பார்வைப் பார்க்க கப்பென வாய்மூடிக்கொண்டு அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தான். கீதன் பார்வையிலேயே வேண்டாமென மறுக்க, “நீ காலைல இருந்து ஒரு வா சோறு கூட திங்கலன்னு தங்கச்சி சொல்லிச்சி. நீ உண்ணாம உறங்காம இப்படி இருந்தா ஆத்தா மனசு என்ன பாடுபடும்? எனக்கு தான் ஆத்தாளும் இல்ல, தங்கச்சியும் இல்ல. எந்த ஒறவும் இல்லாத அநாத பயலா திரியறேன். உனக்கு அவங்கெல்லாம் இருக்கப்ப என்னடா வெசனம்? சாப்பிட்டு வந்து படு. வயித்த காயப்போடாத கீதா..” எனக் கரிசனமாகப் பேசிப்பேசிச் சாப்பிட வைத்து தன்னருகிலேயே படுக்கவைத்துக் கொண்டான்.
———————————————————————————————————
“கீதன்.. ரொம்ப நன்றி. அருமையான வரவேற்பு குடுத்ததுக்கு. ஃபிரண்ட்ஸ்?”எனக் கைநீட்டினாள்.
“உன்ன வெறும் பிரெண்டா எல்லாம் என்னால பாக்க முடியாது மிரு. பி மை க்ரஷ். அது நாளைக்கு காதலாவும் மாறலாம். குட் நைட்” எனக் கூறி அவன் சென்றதில் அவள் அசையாது நின்றாள்.
“கிராக்க இருப்பானுங்க போல எல்லாரும்” எனத் தனக்குத் தானே பேசியபடி உள்ளே சென்றாள்.
———————————————————————————————————-
“எத்தன நாளு பாத்துட்ட நீ?” கீதன் இந்திரனிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்.
“நேத்து இருந்து பாக்கறேனே.“ விட்டேத்தியாக அவளைப்
பார்த்தபடிக் கூறினான்.
“இப்ப ரெண்டு பேரும் என்ன சொல்ல வரீங்க? நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு யோசிக்கறீங்களா? இவ கூட ஏண்டா பழகிணோம்ன்னு நெனைக்கறீங்களா?” படுத்தபடியே கேட்டாள்.
“மொத நீ என்ன நடந்துச்சின்னு முழுசா சொல்லு. உன் கூட பொறந்த பொண்ணு எப்புடி செத்துச்சி? நீ என்ன வேலை அவங்களுக்கு செஞ்சி குடுத்த?”கீதன் அவள் எதிரே அமர்ந்துப் பொறுமையாகக் கேட்டான்.
“தமிழ படிச்சா வேலையே இல்லைன்னு பொலம்புறவங்கள தான் இப்பவரைக்கும் பாத்திருக்கேன் புள்ள. உனக்கு மாசம் ஒரு கோடி தாரேன்னு சொல்லி கூப்பிடறாங்க. நிச்சயமா தப்பான வேலை தான். ஆனா அந்த கூட்டத்துல நீ எப்புடி போய் சிக்குன?” என இந்திரன் கேட்டதும் எழுந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
———————————————————————————————————-
“மறுபடியும் அரைகுறையா புரிஞ்சிட்டு அங்க போய் யார் உயிரும் போயிடக்கூடாதுன்னு தான். இப்ப உங்களையும், உங்க ரூம்ல இருந்த சுவடி தமிழ் புத்தகம் எல்லாம் பாத்ததும் உங்களால முடியும்ன்னு தோணிச்சி. அதான் குடுக்கறேன். எங்கப்பால இருந்து பலரும் விட்ட ஏதோ ஒண்ணு இதுல இருக்கணும். முழுசா தெரிஞ்சிட்டு இதுல இறங்குங்க. சந்திரனில்லா இரவுன்னா அமாவாசைன்னு அர்த்தம். அதான் முன்னயே பாக்க சொன்னேன்.”
மிருணாளினி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு,“உனக்கு இருக்க முதிர்ச்சில பாதி உங்கண்ணனுக்கு இருந்து இருக்கலாம். இது உன்கிட்ட இருந்ததும் தெரியவேணாம். என்கிட்ட வந்ததும் யாருக்கும் தெரியவேணாம். புரியுதா?”
“ஆனா இதுல ஆபத்து அதிகமா இருக்குன்னு தெரிஞ்சா உங்கள மட்டுமில்ல யாரையும் அந்த பக்கம் கூட போகவிடமாட்டேன். நீங்க இதப்பத்தி கண்டுப்பிடிச்சி முழுசா என்கிட்ட சொல்லணும். சத்தியம் பண்ணுங்க.” எனக் கைநீட்டினாள்.
Don’t Miss this funny and suspenseful travel…
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Post Views: 153