வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இதோ இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த lazy எழுத்தாளர் யாருன்னு ஏதாவது கெஸ் இருக்கா?
எழுத்த வச்சி நம்மல நிறைய உணர்வுகளுக்கு ஆட்படுத்தறவங்க ஒரு வகைன்னா, எழுத்த வச்சி நம்ம சிந்திக்க வச்சி, நம்மல தூண்டி விடறது இன்னொரு வகை.
இவரோட எழுத்து ரெண்டாவது வகையை சேர்ந்தது. சின்ன கதையோ நாவலோ எதுவா இருந்தாலும் அதுல இவரோட முத்திரை குத்திடுவாருங்க. நாவல் விட இவருக்கு சிறுகதை எழுத தான் ரொம்ப பிடிக்கும். ஏன்னா .. நாவலுக்கு ரொம்ப எழுதணும், சிறுகதை சீக்கிரம் டக்குன்னு முடிச்சிடலாம். இதனால தான் இவர lazy ன்னு சொல்றேன்.
யாருன்னு உள்ள போய் பக்கலாமா ?
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – கோவளர் சுரேன்
2. இயற்பெயர் – சுரேந்திரன்
3. படிப்பு – B.Tech (Mechanical)
4. தொழில் – Quality Engineer & photographer & financial advisor
5. பிடித்த வழக்கங்கள் –
என்ன சொல்லலாம் என யோசிப்பதை விட என்ன சொல்ல கூடாது என யோசிக்க வச்சிடிங்களே…!
தற்போது சைக்கிளிங்,பெரும்பாலும் நண்பர்களுடன்…அக்காவின் குழந்தைகளுடன்…சில நேரங்களில் தனிமையின் பிடியில் சிறு பயணம்.
6. கனவு –
வாழ்வின் ஒரு கட்டத்தில் கனவு என்றால் என்ன என்கிற நிலைக்கு தள்ளப்படும்வரை அது மாறிக்கொண்டே இருக்கும். முடிந்தவரை சுயநலமாக இருக்க கூடாது என்பதே என் கனவு.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
எழுத்து உணர்வின் வெளிப்பாடு. சிலர் தன் கவலையை எழுத்தில் சொல்லி பலரை கண்கலங்கவைப்பதை போல் நான் முடிந்தவரை எழுத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் என நம்புகிறேன்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
இந்த கேள்விக்கு நான் தகுதியற்றவன்… ஆனால் முடிந்தவரை மனிதர்களை படிக்க முயற்சி செய்கிறேன்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
ஆரம்பத்தில் காரணமின்றி தோன்றியதை கிறுக்க பிடிக்கும். பிறகு சமூகத்தின் மீதான பார்வை அதனால் ஏற்பட்ட அழுத்தம். பிறகு நம் வாழ்வில் கடக்கும் மனிதர்கள் கொடுத்த அனுபவங்கள் தான் என நினைக்கிறேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
முதலாம் வகுப்பு அ என ஆரம்பித்தேன். 🤪மூன்றாம் வகுப்பில் நோட்டின் பின் பக்கம் படம் வரைந்து கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆறாம் வகுப்பில் பள்ளி கால அட்டவணை பின் கதை எழுதி அடிவாங்கிய அனுபவம்… அதோட பிரதிலிபியில் நான் கிறுக்கியதை பதிவிட்டேன். அதற்கு கிடைத்த விமர்சனங்கள் தான் என்னை இன்னும் எழுத தூண்டியது.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
என் எழுத்து என்னை முதலில் ஆச்சரியப்பட வைக்க வேண்டும்… அப்படி நான் நினைத்த எழுதிய சிறுகதைகளை வாசகர்கள் உணர்ந்ததை நானும் உணர்ந்தேன். காரணம் என் கதையில் தீர்வை விட அதை இப்படி கையாளும் போது எப்படி இருக்கும் என்கிற பார்வை தான் பெரும்பாலும் இருக்கும். அதை அவர்கள் கவனித்து விமர்சனம் செய்யும் போது அந்த நொடி பொழுதில் ஒரு பெருமிதம் கிடைக்கும். இது போதும் எனக்கு…இது போதுமே… என்று மனசுக்குள் ரீங்காரம் பிறக்கும்.
12. எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
பத்திரிக்கையில் வந்த செய்தியின் மூலம் ஆட்சியே மாறும் போது… வேற எது மாறாது.?முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை. அதை நான் நம்புகிறேன். முடிந்தவரை முயற்சியும் செய்கிறேன்.
13. மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
புத்தகமாக பலர் கைக்கு கிட்டாத நூல்கள்… மின்னூலாக கிட்டும் போது அது வரமே.
ஒருவரின் எண்ணம் உலகம் முழுவதும் பரவ, மின்னூல் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது என நம்புகிறேன். இன்றைய ஒடிடிதளம் போன்று.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ?
ஒன்று – தித்திக்கும் கொலைகாரி
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
எனக்கு தெரிந்த சிலர் அதை வெகு சிறப்பாக செய்கிறார்கள். என் வாசகர் ஒருவர் அவர்கள் வாழ்வில் நடந்ததை எனக்கு ஆடியோவாக அனுப்பி அதை முடிந்தால் கதையாக பதிவிட கேட்டுக் கொண்டதன் பேரில், நானும் அதை கேட்டு என்னை மீறி கண்ணீர் துளிகள் வெளிவந்தது. (என் இனிய தனிமையே) கிண்டில் மின்னூல். அது போல் உணர்வை வெளிப்படுத்தும் ஆடியோ கதைகள் வரவேற்புக்குறியது.
16. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
அவர்கள் எண்ணம் எழுத்தில் வலுபெரும் போது என எண்ணுகிறேன்.
17. உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
எதற்கு எழுத வந்தோம் என எண்ணிய நேரம் உண்டு. இனி எழுத வேண்டாம் எனவும் எண்ணியதுண்டு. பிறகு எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சிரிப்பாக சொல்ல முயற்சி செய்து தற்போது என்னை நானே தேற்றிக்கொண்டேன் என நம்புகிறேன். என்னை பொறுத்தவரையில் எல்லாமே சொல்லலாம். முன்னுரையில் அந்த கதையை பற்றி சொல்லிவிடுவதும் நல்லது.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
2019 கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் சிரிக்க எழுதிய கதையே தித்திக்கும் கொலைகாரி. கதையின் கரு என்று எதுவும் இல்லாமல் சிரிப்பே மருந்தாக வேண்டும் என்கிற எண்ணம் தான். அதற்கு கிடைத்த அங்கீகாரம் தான் புத்தமாக மாறியது. ஆனா மனசுக்குள்ள அடப்பாவிங்களா கருவோடு எழுதிய கதைக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற எண்ணமும் வந்து சென்றது.
19. கதை கரு மற்றும் கதா பாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
நம்மை சுற்றி நடப்பவை தான்… சில நிகழ்வுகள் நம்மை தூங்கவிடாது. அதுவே கதையின் கரு… நம்மை ஈர்த்த சிலர் அந்த கதையின் கதா பாத்திரங்கள் ஆகிறார்கள். இல்லையென்றால் கற்பனை தான்.
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
நீலவிழிகள் நடத்திய கவிதை போட்டி…
பிரதிலிபி நடத்திய எந்திரன் 2.0 போட்டி… பிறகு வேறு ஒரு போட்டியில் வெற்றி பெற்றேன்.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
நெருங்கியவர்கள் கருத்துகளில் கொஞ்சம் மனம் கலைவது உண்மை தான். யாரென்று தெரியாமல் நோக்கமின்றி பேசுபவர்கள் ஆஃபிஸ் ரூமை விட அதிக சேதாரம் பெறுவர்.
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை, கவிதை, தொடர்கதை, நாவல், சிறுகதை) ஏன் ?
சிறுகதை – ஒரு காட்சியில் கதை சொல்லி முடிப்பது ஒரு சவால்.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
நாம் அதுப் போன்ற எத்தனை கதைகளை இதுவரை ஆதரித்துஉள்ளோம்..? நமக்கே ஒரு மாறுதல் தேவைப்படும் போது வாசகர்களும் மாறுதலை எதிர்பார்க்க தான் செய்வார்கள் என நம்புகிறேன். காதலையே பல கோணங்களில் சொல்லியும் இன்றும் காதல் கதைகளை தான் பெரும்பாலும் எதிர் பார்க்கிறார்கள். நாம் அதில் சொல்ல வேண்டியதை சுவாரசியமாக சொல்ல வேண்டும் என எண்ணுகிறேன்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
பிழை எண் 405 கதை ஒரு மன நோயளியாக இருப்பவன் உயிரோடு இருந்தும் தன் வாழ்வை அவர்களுக்கு பிடித்தது போல் வாழ்வதில்லை… அவர்களை சரி செய்யும் முயற்சியில் ஏற்படும் பிழை என்ன..? இது தான் கரு. பிரதிலிபியில் வெற்றி பெற்றதும் இது தான். காதல் ஒரு பொழுதுபோக்கு இங்கு பலருக்கு.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
அனைவரும் பொன்னியின் செல்வன் சொல்லுவார்கள். அது சிறந்த படைப்பு தான். அதையும் தாண்டி குறிஞ்சி மலர் என் நெஞ்சில் இடம்பெற்ற ஒரு கதை. ஒரு ஆணுக்காக இன்னொரு ஆண்(நான்) இந்த அளவிற்கு வருத்தப்பட வாய்ப்பில்லை என்பது போல் ஒரு உணர்வு.
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
கதையின் கருவை சுருக்கி சொன்னாள் புரியாது என்றால் அளவுகள் மாறுபாடுவதில் தவறில்லை. வார்த்தையின் அளவை கதை தான் முடிவு செய்ய வேண்டும்.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
எழுதிற்கான மதிப்பு குறைந்திருப்பது உண்மை தான். அதை கொண்டு செல்ல இங்கு பல உக்திகள் இருக்கிறது. சரியான நபரை சந்தித்து அவர் வழி நடத்துதல் இருந்தால் நிச்சயம் மாற்றம் இருக்கும்.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
தனியா இருக்கிறதே தனிதன்மை தான்… அது சிலருக்கு வரம் பலருக்கு சாபம்.
இதோ இப்படித்தான் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அதற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத ஒரு உதாரணம் சொல்வது.
எதிரில் இருக்கும் அந்த நபரின் செயலை வைத்து அது காமெடியா இல்லை மொக்கையா என்று தெரிந்துவிடும்.
மாறுபட்ட சிந்தனையாக இருக்கலாம்…
உதாரணம் – என் பெற்றோரின் பெயரில் வரும் GV என்கிற முதல் ஆங்கில எழுத்தைஎன் பெயராக அழைத்தவர்களை… தமிழில் கோவளர் என்று அழைக்கவைத்தது தான்.
29. உங்களது கவிதை, பிடித்த வாக்கியம், பழமொழி (பைனல் பஞ்ச்).
கவி –
செல்லும் இடமெல்லாம் அவள் நியாபகம்...
மனசுக்குள் சொன்னேன் அது நீயில்லை என்று…
மனது கேட்டது அதை சொல்ல நீ யாரென்று..?
பிடித்த வாக்கியம் –
போராடி கிடைக்கின்ற தோல்வி கூட கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்
– எம்.எஸ்.தோனி
பைனல் பஞ்ச் – நல்லதை நினைக்கலாம்… நல்லதை மட்டுமே நினைக்காதே…. 🤪
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி
https://tamil.pratilipi.com/user/r39o60ve6r?utm_source=android&utm_campaign=myprofile_share
இதோ நம்ம கோவளர் அவர்கள் கூட ஒரு அருமையான பயணம் உங்க எல்லாருக்கும் புடிச்சி இருக்கும்-ன்னு நினைக்கறேன்.
இவரோட முக்கியமான சிறப்பே எதையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கறது தான். அந்த கோணம் இவரோட எழுத்துல அற்புதமா நம்ம உணரலாம்.
இவரோட “மூதேவி“ கதைல விளக்கம் குடுக்காமலே வாசிக்காரவங்கள அந்த சூழ்நிலைய உணர்ந்து வருந்த வைக்கவும், கோவபடவும் வைக்க முடியும்-ன்னு காட்டினாரு.
இவரோட வேலையின் காரணமாக இவரும் அதிகம் எழுதறது இல்ல. ஆனா ஒரு படைப்பு இவர் கொடுத்தாலும் அதில் நிச்சயம் எழுத்துல உயிர்புடன், உணர்வுகள் குவிந்து நம்மல தாக்கும், அதுல எந்த சந்தேகமும் இல்லை.
தித்திக்கும் கொலைக்காரி ஒரு பலதரப்பட்ட சூழ்நிலைகளை உள்ளடக்கிய ஒரு வித்யாசமான கதை. சின்ன சின்ன விஷயங்கள் கூட, எதார்த்தம் கலந்த நகைச்சுவையாக இருந்தது. இந்த கதை படிக்கறவங்களுக்கு வழக்கமா இல்லாம கண்டிப்பா வேற ஒரு கோணத்துல இருக்கறது புரியும்.
உங்களோட எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கவும், உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள்..
நிச்சயம் உங்க எழுத்து ஒரு சிறப்பான தனியிடம் வாசர்கள் மத்தியில் பெரும் என்பதில் சந்தேகமில்லை. எழுத்த மட்டும் விட்றாதீங்க எழுத்தாளாரே..
மீண்டும் ஒரு அருமையான எழுத்தாளரோட உங்கள சந்திக்கறேன்..