Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
மீன் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 1 கிலோ
தூள் உப்பு – 1 ½ டீ. ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ½ டீ. ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப..
செய்முறை :
மெல்லிய துண்டுகளாக மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மீனை தயிர் மற்றும் கல் உப்பு போட்டு கழுவினால் அந்த நாற்றம் முழுதாக மறைந்து, சாப்பிடும் போது கவுச்சிவாடை வராது.
முதலில் உப்பு, மிளகாய் தூள் இரண்டையும் கொஞ்சமாக நீர் சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும். மீன் துண்டினில் எல்லா பக்கமும் நன்றா தடவிக் கொள்ளவும். மசாலா தடவிய மீனை வெயிலில் நன்றாக காயவைக்கவும்.
அவ்வப்போது மீன் துண்டுகளை திருப்பி திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக காய வைக்கவும். நன்றாக வெயிலில் காய்ந்தபின், தோசை கல்லிலோ, வாணலியிலோ பொரித்து எடுக்க, சுவையான மீன் ரோஸ்ட் தயார்…
தோசை கல்லில் பெரிதாக எண்ணெய் செலவாகாத காரணத்தினால் அது பல வழிகளில் நன்மையே பயக்கும். இரும்பு கல்லில் பொரித்து சாப்பிட தனி ருசியும் கொடுக்கும்..
முயற்சித்து பாருங்கள்..
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications