விடியல் வரும் காத்திரு…..
இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது….
முதல்முறை…..
யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்….
அடுத்தமுறை ….
எனக்கு பிடித்தவருக்கு கூறினார்…..
பலமுறைகள் கடந்தும்….
என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்….
நேற்று….
எனக்கும் கூறினார்…..
அன்றெனது காதில் விழுந்த முதல்முறையை நினைக்கையில்….
செயலன்றி ஏதும் மாறாது….
ஏதுவான சிந்தனையன்றி நாமும் மாறுவதில்லை….
நிச்சயமாக நாளை அடுத்த தலைமுறைக்கும் இதே வார்த்தைகள் சென்றடையத்தான் போகிறது….
அதற்குமுன்…..
இன்று நம் விடியலைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்போம்…..
பிடித்தமோ பிடித்தமல்லதோ….
நல்லதோ நன்றல்லதோ….
ஒன்றுமோ ஒன்றாதோ…..
நடக்குமோ நடக்காதோ…..
யாவையும் மீண்டுமொருமறை சிந்தித்து செயல்படலாம்…..
கடந்துவிடபோகும் வார்த்தையில் வலு சேர்த்துவிடலாம் நாளைய தலைமுறைக்கு….
– ஆலோன் மகரி