வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த busy எழுத்தாளர் யாருன்னா .. ???
இவங்க ஒரு பன்முக திறமைசாலி .. இவங்க கதைகளில் முக்கியமா நான் கவனிச்ச விஷயம் , கதை நேர்த்தி தான் . இவங்களும் சுருங்க சொல்லி டக்குன்னு வேலைய முடிப்பாங்க .
தேவை இல்லாத வளவளப்பும் இருக்காது , தேவை இல்லாத வார்த்தைகளும் வராது .
அவங்க tight ஷெட்யூல் ல எப்டியோ புகுந்து நம்ம பயணத்துக்கான நேரத்தை வாங்கியாச்சி ..
வாங்க யாருன்னு உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – நித்யா மாரியப்பன்
2. இயற்பெயர் – நித்யா மாரியப்பன் தான்
3. படிப்பு – M.Com, ICWAI Inter (studying)
4. தொழில் – Tax practitioner
5. பிடித்த வழக்கங்கள் –
ஐ லவ் ரீடிங்… புக் படிக்கிறதுனா உயிர்னு கூட சொல்லலாம்… இது அம்மா கிட்ட கத்துக்கிட்ட பழக்கம்… அப்புறம் எனக்கு மூவி பாக்குறது, மத்த லாங்வேஜ் சீரீஸ் பாக்குறதுலாம் ரொம்ப இஷ்டம்… இண்டர்நெட்ல எதாச்சும் உருட்டிட்டே இருக்குறதும் பிடிக்கும்…
6. கனவு –
ஹோம் பேக்கர் (Home baker) ஆகணும்னு ஆசை… இப்போ அதுவே கனவாவும் புரொமோட் ஆயிடுச்சு… கூடிய சீக்கிரமே பேக்கிங் கத்துக்கணும், கஃபே ஆர் பேக்கரி ஸ்டார்ட் பண்ணணும்னு ப்ளான் போட்டிருக்கேன்…
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
அடிப்படையில நான் ஒரு ரீடர்… ரீடிங் பழக்கம் ரொம்ப சின்ன வயசுல ஆரம்பிச்சது… தாத்தா வீட்டுல மன்த்லி புக்சுக்கும் மேகசினுக்கும் மட்டுமே ஒரு அமவுண்ட் தனியா ஒதுக்குவாங்க… நான் அங்க வளந்ததால புக்ஸ் படிக்கிறது தினசரி ஆக்டிவிட்டியா மாறிடுச்சு… அம்மாக்கும் புக்ஸ் மேல தீராக்காதல்… அதுவே ஜீன் மூலமா எனக்கும் வந்திருக்கும்னு நினைக்கேன்… பட் நாவல் படிக்கிற பழக்கம் எனக்கு ஆரம்பிக்கிறதுக்கு காரணம் எங்க சித்தப்பா… ராஜேஸ்குமார் சாரோட ஃபேன் அவர்… அவர் குடுத்த க்ரைம் நாவல் தான் நான் தமிழ்ல படிச்ச முதல் நாவல்… இன்னைக்கு ஆன்லைன் ரீடிங், கிண்டில்னு ஏகப்பட்ட ஃபெஷிலிட்டி வந்தாலும் புக்கை கையில வச்சு படிக்கிற சுகமே தனி… அதுக்கு நான் அடிமைனு கூட சொல்லலாம்… படிக்கிறது பிடிச்சதாலயோ என்னவோ எழுதவும் ஆரம்பிச்சிட்டேனு நினைக்கேன்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
என்னோட வாசிப்பு அனுபவம் ஆரம்பிச்சது ராஜேஸ்குமார் சாரோட ‘அகல்யாவின் ஆயுள் ரேகை’ கதையில இருந்து தான்… அதுக்கு அப்புறம் தான் பொன்னியின் செல்வன் மூலமா கல்கி ஐயாவோட எழுத்துக்கள் பரிச்சயமாச்சு… வாசந்தி மேம், சிவசங்கரி மேம், ரமணிம்மா, காஞ்சனா மேம், அமுதவல்லி கல்யாணசுந்தரம் மேம், மாலா கஸ்தூரிரங்கன் மேம் எல்லாரும் லைப்ரரி புக்ஸ் மூலமா அறிமுகமானாங்க… புக் படிக்க ஆரம்பிச்சா எனக்குள்ள சாத்தான் புகுந்துடும்னு எங்க மம்மி சொல்லுவாங்க… பிகாஸ் சாப்பாடு தண்ணி இல்லாம படிப்பேன்… ஸ்கூல் டைம்ல அதுக்காக திட்டு வாங்கி நிறைய கதைகளை தவற விட்டிருக்கேன்… அதுல முக்கியமானது எண்டமூரி வீரேந்திரநாத் சாரோட மீண்டும் துளசி… துளசி தளம் படிச்சப்பவே மம்மி திட்டிட்டே இருந்தாங்க… மீண்டும் துளசி புக்கை லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்ததும் பிடுங்கி வச்சிட்டாங்க… ரொம்ப வருசத்துக்கு அப்புறம் அந்தக் கதைய நான் 2019ல தான் படிச்சேன்… இப்போவும் சில கதைகளை ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஒன்லைன் சொல்லி தேடி பாத்து படிப்பேன்…
நாவல் உலகத்தை தாண்டி என்னை ஈர்த்த புக் ராகுல் சாங்கிரித்யாயனோட வால்காவிலிருந்து கங்கை வரை… இது எல்லாத்துக்கும் மேல நான் ஜே.கே.ரௌலிங், அகதா கிறிஸ்டியோட பயங்கரமான ஃபேன்… இவ்ளோ தான் என் வாசிப்பு அனுபவம்… இன்னைக்கும் இந்த ரைட்டர்ஸ் எல்லாரையும் நான் ஃபாலோ பண்ணி படிக்கிறேன்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
என்னோட ஒர்க் டென்சன் தான்… இன்கம்டாக்ஸ், ஜி.எஸ்.டி, டி.டி.எஸ்னு ஓடிட்டிருந்தப்ப ப்ரெயின் பயங்கரமா சூடாகும்… அவ்ளோ ஸ்ட்ரெஸ்… என்ன தான் ரீடிங் இருந்தாலும் இன்னும் ஸ்ட்ராங்கான ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேணும்னு தோணிக்கிட்டே இருந்தப்ப வாட்பேட்ல கிறுக்க ஆரம்பிச்சேன்… அங்க இருக்குற ரீடர்சுக்கு அந்தக் கிறுக்கல் பிடிச்சதால என்னை என்கரேஜ் பண்ணுனாங்க… நான் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சதுக்கு வாட்பேட் ரீடர்ஸ் தான் மெயின் ரீசன்… அதுக்கு அப்புறம் தான் அமேசான், ஃபோரம், பிரதிலிபி எல்லாமே!
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
ஜூலை 11 2019ல வாட்பேட்ல ஆரம்பிச்சேன்…
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
என் கதைகள்ல ஹீரோயினை சித்தரிக்கிற விதம் பிடிச்சு ரீடர்ஸ் பேசுவாங்க… அந்த மாதிரி போல்டா ஸ்ட்ரெய்ட் ஃபார்வேடா இருக்க ஆசைப்படுறோம் அக்கானு குட்டிப்பிள்ளைங்க சொல்லுறப்ப ஹேப்பியா இருக்கும்…
12. எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
அது எழுதும் நபரை பொறுத்தது… இங்க பொழுதுபோக்கா எழுதி ரீடர்சை சந்தோசப்படுத்துறவங்களும் இருக்காங்க, எழுத்தை தவம் போல கடைபிடிக்கிறவங்களும் இருக்காங்க… முந்தைய வகையறா ஆட்களோட நோக்கம் தங்களோட கதைய படிக்கிறவங்க நிம்மதியா ஃபீல் பண்ணணும்ங்கிறது.. ரெண்டாவது கேட்டகரி மக்கள் எதாவது ஒன்னை தங்களோட எழுத்து மூலமா புதுசா சொல்லணும்னு முயற்சி பண்ணிட்டே இருப்பாங்க…. இந்த ரெண்டு வகையறாவுமே தங்களோட எழுத்தால ஏதோ ஒரு மாற்றத்தை படிக்கிற ரீடர்சுக்குள்ள உருவாக்க தான் செய்யுறாங்க…
13. மின்னூல், பதிப்பு புத்தகம் இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மின்னூல்ங்கிறது ஸ்விகி, ஜொமேட்டோல ஆர்டர் பண்ணி சாப்பிடுற ஃபுட் மாதிரி… பதிப்பு புத்தகம் அம்மா கையில சமைச்ச சாப்பாடு… ஸ்விகில ஆசைக்கு ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாமே தவிர அதை என்னால முழுநேர சாப்பாடா எடுத்துக்க முடியாது… இது என்னோட கருத்து மட்டுமே!
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
இது வரை 4 புத்தகங்கள் வெளியாகிருக்கு… 5வது ஆன் தி வே…
கிருஷ்ணதுளசி
யாவும் நீயாக மாறினாய்
அமிர்தசாகரம்
அனுபல்லவி
காதல் கொண்டேனடி கண்மணி (வரவிருக்கும் புத்தகம்)
தொடர்புக்கு : ஸ்ரீ பதிப்பகம் (70383 04765)
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல எழுத்துக்களை பாத்து படிக்க முடியாதவங்களுக்கான வரப்பிரசாதம் தான் ஆடியோ புத்தகங்கள்… கதை சொல்லுறதும் கேக்குறதும் நம்ம ரத்தத்துல ஊறிப்போன பழக்கங்கள் தானே! சோ ஆடியோ புத்தகங்கள் கேக்குறது கூட நல்ல அனுபவம் தான்!
16. எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
பத்து பேர் அந்த எழுத்தை படிச்சாலும் அவங்க யாருக்கும் கதையோட கதாபாத்திரங்கள் ஏற்படுத்துன தாக்கம் மறக்க கூடாது… நம்ம சொல்ல வர்ற கருத்தை பாலின பேதம், வயது பேதமில்லாம வாசகர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுதுனா கண்டிப்பா அது எழுத்தாளருக்குக் கிடைச்ச வெற்றி தான்…
17. உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் எழுதுறேன்… சோ இதை எழுதிருக்க வேண்டாமோனு எந்தக் கதையையும் நான் நினைச்சதில்ல…
18. உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
வாட்பேட்ல எனக்கான அங்கீகாரத்தை பெற்று குடுத்த கதை ‘அன்பே என் அன்பே’... கிட்டத்தட்ட ஃபேன் பிக்சன் போல இருந்தாலும் ரீடர்ஸ் அதுக்கு குடுத்த சப்போர்ட்டை என்னால மறக்கவே முடியாது… அந்தளவுக்கு அவந்திகா & ராகவ் எல்லாருக்கும் பிடிச்சு போயிட்டாங்க…
ஃபோரம் சைட்ல எனக்கு அங்கீகாரம் கிடைச்சது ‘பூங்காற்றிலே உன் சுவாசம்’ மூலமா தான்… அதுக்கு அப்புறம் ‘வெய்யோனின் தண்மதி அவள்’ கதையும் அதே அளவு எனக்கு தெரிஞ்ச ரீடர்ஸ் மத்தில பேசப்பட்டது… இந்தக் கதைகளுக்கு அப்புறம் எனக்கு மௌன வாசகர்கள் அதிகமாயிட்டதால இதன் பின்னர் வந்த எந்தக் கதைகளும் பேசப்படல…
19. கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதை கருவ அன்றாட வாழ்க்கைல நம்ம ஃபேஸ் பண்ணுற சம்பவங்களை வச்சு சூஸ் பண்ணுவேன்… கதாபாத்திரங்களை வடிவமைக்கிறப்ப படிக்கிற ரீடர்சுக்கு பிடிச்சவங்களா இருக்குறதுக்கும், எழுதுற எனக்கு திருப்திய குடுக்குறதுக்கும் என்னென்ன குணாதிசயம் புகுத்தணுமோ அதையெல்லாம் புகுத்தி வடிவமைப்பேன்… முக்கியமா ‘என் ப்ராணநாதா’ டைப் ஹீரோயின்களோ, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டைப் ஹீரோக்களோ என் கதையில வைக்க மாட்டேன்…
எதாவது சமுதாயப் பிரச்சனைய வச்சு எழுதுனா கொஞ்சம் மெனக்கிட்டு தகவல்களை கலெக்ட் பண்ணுவேன்… அதோட உண்மைத்தன்மைய செக் பண்ணிட்டு தான் கதை எழுதவே ஆரம்பிப்பேன்… அப்பிடி மெனக்கிட்டு எழுதுனது தான் வெய்யோனின் தண்மதி அவள் & வந்தாயே மழையென நீயும் பாகம் 1&2…
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபில கதை கேளு காம்படிசன்ல நூறு கதைகள்ல ஒன்னா என்னோட ‘தேவதையே’ கதை செலக்ட் ஆச்சு… சங்கமம் தளம் நடத்துன ‘கதை சங்கமம் 2021’ போட்டில ‘காதல் கொண்டேனடி கண்மணி’க்கு ஆறுதல் பரிசு கிடைச்சுதுப்பா… வேற சொல்லிக்கிற மாதிரி எந்த போட்டியிலயும் ஜெயிக்கல…
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
நான் எதிர்வினை கருத்துக்களை கண்டுக்கவே மாட்டேன்… ஏன்னா அதுக்கு எனக்கு நேரம் இல்லங்கிறது தான் உண்மை… என்னைப் பொறுத்த வரைக்கும் எழுதணும், போஸ்ட் பண்ணணும், ஷேர் பண்ணணும், யாரும் கமெண்ட் பண்ணுனா ரிப்ளை பண்ணணும், யாருமே கமெண்ட் பண்ணலயா ரிப்ளை பண்ணுற டைம் மிச்சம்… அவ்ளோ தான்… இதுக்கு இடையில வாலண்டரியா வந்து அர்த்தமில்லாம நெகட்டிவிட்டிய பரப்புனா இக்னோர் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்… அதுல தலைய விட்டு ஃபீல் பண்ணுற டைம்ல இன்னும் ரெண்டு யூடி டைப் பண்ணலாம்னு நினைக்கிற ஆள் நானு! எழுத்துலக அரசியலால உண்டாகுற எந்த நெகட்டிவிட்டியும் என்னை பாதிக்கறதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன்…
22. நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ?
(கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
சந்தேகமே வேண்டாம், நாவல் தான் எழுத விரும்புவேன்… எனக்கு எதையும் விலாவரியா எழுதணும்… அதுக்கு நாவல் தான் சரிபட்டு வரும்.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
இங்க படிக்க வர்றவங்க பெரும்பாலும் விரும்புறது காதல் கதைகள் மற்றும் குடும்பக்கதைகளை தான்… சமீபத்துல ஆன்டி-ஹீரோ ஃபீவரும் அதிகமாயிடுச்சு… சோ காதல், குடும்பம், ஆன்டி-ஹீரோ கதைகளை எழுத தான் பெரும்பாலானவங்க விரும்புறாங்க… அதை படிச்ச ரீடர்ஸ் மட்டும் தான் போஸ்ட் போட்டு ரைட்டர்களை உற்சாகப்படுத்துறாங்க… மாறுபட்ட கதைகளை படிக்கிற ரீடர்ஸ் அந்தக் கதைகளைப் பத்தி பேசுறதில்ல… சைலண்டா படிச்சுட்டு நகர்ந்துடுவாங்க… ஏன்னா அதுல போஸ்ட் போட்டு விளையாடுறதுக்கு கருத்து தவிர வேற ஒன்னுமே இருக்காது… இதை தாண்டி ரீடர்சோட ரசனைனு ஒன்னு இருக்கு… பெரும்பான்மை ரீடர்சோட ரசனைய கவர்றது காதல் படைப்புகளும் குடும்பநாவல்களும் தான்!
24. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
வெய்யோனின் தண்மதி அவள் – தாதுமணல் கொள்ளை, இண்டர்செக்ஸ் பத்தி எழுதுன கதை
வந்தாயே மழையென நீயும் பாகம் 1 – டார்க்நெட், பார்ட்டி ட்ரக்ஸ் பத்தி எழுதுன கதை
வந்தாயே மழையென நீயும் பாகம் 2 – பக்திய வச்சு காசு பாக்குற சாமியார் பத்தி எழுதுன கதை.
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
பொன்னியின் செல்வன், வால்காவிலிருந்து கங்கை வரை, பாலம்.
26. ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
வார்த்தை அளவுகள் என்னை பொறுத்த வரைக்கும் எழுத்துக்கு இருக்குற கட்டுப்பாடு… அது இல்லனா சுதந்திரமா எழுதலாம்ங்கிறது என்னோட எண்ணம்.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அமேசான் கிண்டில் பெரிய வரப்பிரசாதம்… அதுல உங்களுக்குனு வாசகர் வட்டத்தை உருவாக்குங்க… பத்தோட பதினொன்னா ஒரே மாதிரி கதைகள் வர்றப்ப நீங்க வித்தியாசமா எழுதி வாசகர்களை உங்களை கவனிக்க வைங்க… அடுத்து பாக்கெட் நாவல்கள் செயலில ஆடியோ நாவல்களா உங்க கதைகளை குடுக்கலாம்… அவங்களும் நியாயமான தொகைய குடுக்குறாங்க…
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
என் ஹீரோயின்கள் அழுமூஞ்சிகளாவோ சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியாவாகவோ இருக்க மாட்டாங்க… வெறும் ஐ கேண்டியா அவங்களை நான் காட்ட மாட்டேன்… எதையும் போல்டா ஹேண்டில் பண்ணுற டைப் தான் என்னோட ஹீரோயின்ஸ்… என் ஹீரோக்கள் முன்னாடியே சொன்ன மாதிரி ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் வகையறாக்கள் இல்ல… குறிப்பா மேன்-ஹேண்ட்லிங், ஹராஸ்மெண்ட் பண்ணுறவனை நான் ஹீரோவா காட்ட மாட்டேன்… ரீசண்டா நான் பாக்குற படிக்கிற விசயங்களை கதையில சேத்துப்பேன்… கதை படிக்கப்ப ரீடர்சுக்கு ட்ரெண்டியா ஃபீல் ஆகணும்… லவ் சீன்ஸை எய்ட்டீன் இயர்ஸ் பொண்ணு படிச்சாலும் ரசிக்கணும், எய்ட்டி இயர்ஸ் பாட்டி படிச்சாலும் ரசிக்கணும்… காதல்ங்கிற பேர்ல விரசத்தையோ காமத்தையோ காட்டுறதுல எனக்கு உடன்பாடு இல்ல… இது தான் என்னோட தனித்தன்மைனு நினைக்கேன்.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
Be yourself; everyone else is already taken – Oscar Wilde
30. உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
பிரதிலிபி :
https://tamil.pratilipi.com/user/nithya-mariappan%F0%9F%93%96%E2%9C%92-uzfz0mr0y1
அமேசான் :
https://www.amazon.in/~/e/B081MRF244
யூடியூப் :
மேகதூதம் தமிழ் நாவல்கள் –
https://www.youtube.com/channel/UC-csIq7e5B-kIFkoupJOmkQ
எழிலன்பு நாவல்கள்:
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?members/nithya-mariappan.4/
சங்கமம் நாவல்கள் :
பாத்தீங்களா நட்பூஸ் நம்ம நித்யா சகியோட பதில்கள் பட்டாசா படபடங்குது ..
இவங்க கதைகளும் இப்டி தான் படபடன்னு எழுதி முடிச்சிடுவாங்க .. இவங்களோட எழுத்து நடை மிகப்பெரிய பலம்னு சொல்லலாம் . முடிஞ்சவரை கலப்படம் இல்லாத தமிழ் தான் இவங்க உபயோகிக்கறாங்க ..
இன்னொன்னு கதைய நேர்த்தியா இவங்க கொண்டு போற விதம் ரொம்ப அருமையா இருக்கும் . கதைல எத்தனை கதா பத்திரங்கள் வந்தாலும், கதா நாயகன் கதா நாயகினு இவங்க சொல்லிட்டா கதை அவங்கள சுத்தி நேர்த்தியா நகரும் . இவங்க கதைல காதல் ரொம்ப அழகா காட்டுவாங்க .
இவங்க சொல்லி இருக்க மாதிரி பொம்மை கதா நாயகி இருக்க மாட்டாங்க . அதே போல கதா நாயகனுக்கும் பில்ட்-அப் இருக்காது . ரொம்ப இயல்பா இருக்கும் .
மொத்தத்துல டென்ஷன் அ இருக்கறவங்க இவங்க கதை படிச்சா கண்டிப்பா சிரிச்சி , நல்ல கதை படிச்ச நிறைவு கண்டிப்பா கிடைக்கும் .. அதுக்கு காரன்டி கண்டிப்பா சொல்வேன்ங்க..
இவங்க சீக்கிரமே CA முடிச்சி பெரிய ஆளாகனும் னு நாமளும் வேண்டிக்கலாம் .
எழுதறதையும் எப்பவும் விட்றாதீங்கா சகி .. உங்க எழுத்து பயணம் எப்பவும் தொடரந்துட்டே இருக்கணும் .. நீங்க எடுக்கற எல்லா முயற்சிகளுக்கும் எங்க எல்லாரோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
என்ன நட்பூஸ் நம்மா நித்யா சகி கூட வந்த பயணம் உங்களுக்கு பிடிச்சி இருந்ததா ?
சீக்கிரமே அடுத்து ஒரு அருமையான எழுத்தாளரோட வரேன் ..