வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த க்ரிஸ்பி எழுத்தாளர் யாருன்னா ..
உடனே சொல்லிட்டா எப்டி .. கொஞ்சம் க்ளுஸ் தரேன் யோசிங்க ..
இவங்க எனக்கு எப்படி அறிமுகம் ஆனாங்க தெரியுமா ?
நம்ம சங்கமம் தளத்துல இரட்டை ரோஜாக்கள் போட்டி நடந்தது .. அதுல தான் நான் இவங்க எழுத்து எனக்கு அறிமுகம் ஆச்சி ..
நான் இதுவரை பாத்தா எழுத்துக்கள்ல இவங்களோடது வித்யாசமா தெரிஞ்சது. இவங்களோட இன்னொரு முக்கியமான சிறப்பு அறிவியல் மற்றும் மருத்துவ குறிப்புகளோட இவங்க கதைய கொண்டு போறது தான் ..
ரொம்பவே யங் அண்ட் கார்ஜியஸ் லேடி ..
யாருன்னு உள்ள போய் பாக்கலாம் வாங்க ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – பூர்ணிமா கார்த்திக்’பூகா’
2. இயற்பெயர் – கும்பகோணம் நாகராஜன் பூர்ணிமா
3.படிப்பு –
இளங்கலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, முதுகலை உடலியங்கியல் துறை, பிஜி டிப்ளமோ மருத்துவ ஆராய்ச்சி
4. தொழில் –
பதினோரு வருடமாக துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு இப்போது புதிதாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன்.
5. பிடித்த வழக்கங்கள் –
புதுசா ஏதாவது முயற்சி செய்வது உதாரணத்திற்கு கை வினைப் பொருட்கள், புது வித சமையல், புதிய படிப்பு இப்படி. அடுத்து கதை படிப்பது, மதிய தூக்கம், இரவு நேர விழிப்பு, விளையாடுவது, இப்படி நிறைய…
6. கனவு –
தெரியலியே… அப்பப்ப நிறைவேற்றிக் கொள்ளும் சின்ன சின்ன கனவைக் காண்பதினால் இப்போது மனதில் அப்படி ஏதும் தோன்றவில்லை போல்.
7 . உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
இரண்டாம் பிரசவத்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் பிழைத்ததால் ஏற்பட்ட மனச்சோர்வை திசை மாற்ற பிரதிலிபியில் எழுதத் தொடங்கினேன். நம்ம கதை மற்றும் கவிதையையும் நாலு பேர் படிச்சு நல்லா இருக்குன்னு சொல்றாங்களே அப்படிங்கற சந்தோஷத்துல இன்னும் இன்னும் எழுத ஆரம்பிச்சேன்.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
எட்டு வயதில் இருந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் வாசிக்காத நாட்கள் மிகவும் குறைவு. கோகுலம், அம்புலிமாமா, சிறுவர் மலரில் தொடங்கியது இன்று எல்லா விதமான கதைகள் கட்டுரைகள் படிப்பது வரை வந்திருக்கிறது. படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் மற்றும் நான் எதிர்பார்க்கும் விஷயம் என்னன்னா அந்த கதை அல்லது கட்டுரையில் இருந்து நிச்சயம் ஏதாவது புதுசா தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
மன அழுத்தம் தான். அதுக்கு அப்புறம் எனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் எழுதத் தொடங்கினேன்.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2018 செப்டம்பரில் பிரதிலிபியில் எழுத ஆரம்பித்தேன்.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
சிலர் இது போல் எங்க வீட்டுல நடந்திருக்குன்னு இன்பாக்ஸ்ல சொல்லிருக்காங்க . ஆனா இன்னும் மத்தவங்க மனசுல தாக்கம் வர அளவிற்கு சிறந்த கதையை நான் கொடுக்கவில்லை, நிச்சயம் ஒரு நாள் கொடுப்பேங்குற நம்பிக்கை மட்டும் இருக்கு.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
சிந்தனையை நிச்சயம் மாற்ற முடியும். உலகில் தோன்றிய அனைத்து புரட்சிக்கும் முதல் வித்திட்டது எழுத்து தான். நம் மனநிலையை மாற்றுவதில் எழுத்து பெரும் பங்கு வகிக்கிறது. எழுத்துலகின் மாயம் நிஜ உலகின் வலிகளையும் ஏமாற்றங்களையும் சற்று நேரம் மறக்க உதவுகிறது.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் . இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதிப்பு புத்தகம் அம்மா…மின்னூல் மகள்.. இரண்டுக்குமே தனித்தனி அடையாளங்கள் இருக்கு இருந்தாலும் அச்சு புத்தகமாய் நம் கதையை பார்க்கும் சுகமே தனி தான்.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ?
நான்கு புத்தகங்கள் ஸ்ரீ பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய பதிப்பகத்தாருக்கும், லதா அக்கா மற்றும் உஷா அக்காவிற்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
- சாக்லேட் மன(ண)ம்
- உனக்கென காத்துக் கிடப்பேனே
- வான்மகனோ ! வசீகரனோ !
- உயிரூற்றின் உதிரமவள்
(அவற்றை பெற தொடர்பு கொள்ள – +91 7038304765 ) – ஸ்ரீ பதிப்பகத்தையோ என்னையோ தொடர்பு கொள்ளலாம்.
15 . ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
முன்பு சொன்ன அம்மாவிற்கு ஆடியோ புத்தகம் பேத்தி… ஆடியோ கதைகளை கேட்டு கொண்டே நம் வேலைகளை எளிதாக முடிக்கலாம். ஆனால் ஒன்று அதைப் படிப்பவரின் தமிழ் உச்சரிப்பும், வாக்கிய அமைப்பும் சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் கதையோடு ஒன்றிட இயலாது.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
என்னைப் பொறுத்தவரை இவங்க எழுத்தை நம்பிப் படிக்கலாம்பா அப்படின்னு எங்கேயோ யாரோ முகம் தெரியாதவங்க சொல்றாங்கன்னா அதுவே பெரிய வெற்றி தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இல்லை அப்படி எண்ணியது இல்லை.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
இத்தியாதி காதல் மற்றும் நீயே நினைவாய்
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கருவை யோசிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிறகு அதைப் பற்றி தேடிப் படிக்க ஒரு வாரம், பாத்திரப் படைப்பு ஒரு வாரம் என்று யோசித்து அதன் பிறகு தான் எழுத ஆரம்பிப்பேன்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
சங்கமம் தளத்தில் எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் முதல் பரிசு
கதை சங்கமம் போட்டியில் ஆறுதல் பரிசு
சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு
மேலும் பிரதிலிபியில் சிறார் கதை, குடும்பக்கதை, விலங்குகளுக்கான சிறுகதை மற்றும் மகாநதி போட்டியில் முதல் பரிசு
ப்ரேமா அக்கா தளத்தில் சிறுகதைக்கு இரண்டாம் பரிசு
அன்னா ஸ்வீட்டி தளத்தில் நடந்த புதினம் 2020 இல் க்யூட் என்டர்டெயின்மென்ட் விருது மற்றும் சிறுகதைக்கான இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன்.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
எதிர்வினை கருத்துக்கள் இதுவரை வந்ததில்லை. ஒருவேளை அதிகம் பேர் என் கதையைப் படித்ததில்லை அதனால் கூட இருக்கலாம்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
சிறுகதை மற்றும் நாவல். கவிதை படிக்க ரொம்பப் பிடிக்கும். கதையோடு சேர்ந்து மற்றவர்களை பயணிக்க வைக்க விருப்பம் ஆதலால் என் நோட்டு கதைக்குத் தான்.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
ஒருவேளை அந்த கதைக்கருவைப் பற்றி அதிகம் கேள்விப்படாமல் இருக்கலாம் அல்லது ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். இல்லை கதை எப்படி இருக்குமோ என்று ரிஸ்க் எடுக்க தோன்றாமல் இருக்கலாம்.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
உண்டு… இத்தியாதி காதல், வண்டிலா மலர்வனம், காதல் நோய் தீருமோ, விடாது வினை
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
ஒவ்வொருக்கு ஒவ்வொரு விஷயத்தில் விருப்பம் அதிகம். படிக்கும் விஷயங்கள் நமக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் தருவது போலவும், நற்சிந்தனைகளைத் தருவது போலவும், நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க உதவுவது போலவும் இருந்தால் நல்லது.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
அந்த படைப்பு நம்மை எவ்வளவு தொலைவு இழுத்துச் செல்கிறதோ அவ்வளவு வார்த்தைகள்.
27 . எழுதுபவர்கள் பெரும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
நம் எழுத்தை சிலர் படித்து கருத்து சொல்வதே பெரும் பயன் தான். அது முதல் படி அதற்கும் மேல் நம் படைப்பை புத்தகமாக வெளியிடும் போது வரும் கணிசமான வருமானம் இரண்டாம் பயன். அடுத்து நம் எழுத்தால் நிச்சயம் நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் தயங்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களை கதைக்குள் சொல்வது.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
பஞ்ச்:
- கொலை செய்யுங்கள் தற்கொலை எண்ணத்தை..
- பாரம்னு பார்த்தா தன் உடம்பை தான் தூக்கிச் செல்வதே பாரம் தான், பாசம்னு பார்த்தா அடுத்தவங்களுக்காக வாழுறது கூட பாரமில்லை.
- கட்டுக்கடங்காத காதலை தன் கால் கட்டை விரல் அணைப்பில் காவேரி ஆற்றிடம் சொல்லிவிடுகிறான் சுதந்திரன்.
- காதல் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
அமேசான் :
https://www.amazon.in/Poornima-Karthic/e/B07NKHF3WL/ref=dp_byline_cont_ebooks_1
Pratilipi :
https://tamil.pratilipi.com/user/59dpx449w8?utm_source=android&utm_campaign=myprofile_share
Youtube :
https://youtube.com/c/PoornimaKarthic
பாத்தீங்களா நம்ம க்ரிஸ்பி எழுத்தாளர் .. இவ்ளோ பரிசு வாங்கிட்டு இன்னும் நான் பாதிப்பு ஏற்படுத்தர கதைகளை குடுக்களைன்னு வேற சொல்றாங்க ..
தன்னடக்கம் இருக்கணும் தான் ஆனா இவ்ளோ இருக்க கூடாது நீமா பேபி ..
இவங்க எழுத்து நடை இன்னொரு சிறப்பு. ஒரு சிலரோட எழுத்துக்கள் தான் வர்ணனை இல்லாத கதைகளையும் ரசிக்க வைக்கும். அப்படிப்பட்ட எழுத்து தான் இவங்களுக்கு இருக்கு . இன்னொன்னு இவங்க உபயோகிக்கர தமிழ் வார்த்தைகள். காண்டிப்பா அதுல காந்தம் இருக்குங்க ..
இவங்க படைப்புகள் எல்லாமே ஒரு வித தனி தன்மையோட காண்டிப்பா மனசுல இடம் பிடிக்கும் . இவங்க படிப்பையும் நமக்கு தேவையான வாழ்வியல் விஷயங்களா இவங்க சொல்றது ரொம்பவே இன்னிக்கி இருக்கற சமூகத்துக்கு அவசியம் .
மனநிலை நிபுணர் போல இவங்க சொல்ற விஷயங்கள் நம்ம பிரச்சனைக்கு ஒரு வழி கிடைச்ச மாதிரி இருக்கும் . மனசு தான் எல்லாம் .. நல்லது நினைக்க நினைக்க நல்லதே நடக்கும்-னு சொல்ற இவங்க மனசு போல, இவங்களுக்கு நல்லதே எப்பவும் நடக்கணும்னு நாமளும் வேண்டிக்கலாம் .
நிச்சயமா இவங்க பயணம் இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கு . ஆரம்பநிலை எழுத்துல இவங்க இவ்ளோ மனச இழுக்கறப்போ இனிமே அவங்க எழுத்தை மெருகு ஏத்த ஏத்த பெரிய வாசகர் பட்டாளம் இவங்களுக்கு உருவாகும்ங்கறதுள நமக்கு ஆச்சரியம் இருக்காதே ..
சீக்கிரம் நீங்க ஆரம்பிச்ச அந்த இரட்டை ரோஜா கதைய எழுத ஆரம்பிங்க செல்லங்களா ..
இனிமே நீங்க எடுக்கற எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நீமா பேபி ..
சீக்கிரமே அடுத்து ஒரு சூப்பர் எழுத்தாளரோட வரேன் ..