வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நாம பாக்க போறவங்கள ரொம்ப நாளா நாம எல்லாருமே ஒரு விஷயதுக்காக தேடிக்கிட்டே இருக்கோம்.
அவங்களும் நமக்கு டிமிக்கி குடுதுட்டே இருக்காங்க .. இன்னிக்கி ரவுண்ட் கட்டி பிடிச்சி கேட்டுடலாம் வாங்க ..
இவங்க எப்டி நமக்கு அறிமுகம் ஆனாங்க தெரியுமா ?
ஐபிஎல் மேல பைத்தியமா இருந்த நம்மள ஆராவ் பார்பீ-னு ரெண்டு பேர ஏறக்கி நம்ம மைண்ட்ல விளையாட ஆரம்பிச்சி, இப்ப நம்மல எல்லாம் மாந்தன் எங்க ? யாளி எங்க ?-னு வருஷக்கணக்கா சுத்தல்ல விட்டுட்டு அமைதியா இப்போ மின்னிதழ் ஆரம்பிக்க போறாங்க .. அதுக்கு நம்ம வாழ்த்தும் சொல்லிடலாம்..
ஆமா .. நம்ம ரியாமூர்த்தி தான் .. இவங்க கிட்ட கதை மட்டும் இல்லைங்க இன்டர்வியூ கேக்கறதும் கொஞ்சம் கஷ்டம் தான் .. அவ்ளோ நான் பக்கம் பக்கமா பேசி தொண்டை வறண்டு மயங்கி விழறப்ப சரி தரேன்-னு சொன்னாங்க ..
வாங்க தண்ணி குடிச்சிக்கிட்டே நடந்துட்டு பேசலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – ரியா மூர்த்தி
2. இயற்பெயர் – நீலா
3. படிப்பு – M.Com (ca)
4. தொழில் – Data Entry
5. பிடித்த வழக்கங்கள் –
பாடல் கேட்பது, பென்சில் டிராயிங், ரீடிங், டெய்லரிங்
6. கனவு –
எல்லாரும் ரசிக்கும்படியான புதினங்கள் படைப்பது.
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான் தாக்கம் என்ன?
யவன ராணி.. காதலுக்கான விளக்கத்தை எனக்கு கற்பித்தவள்..
(இப்ப தான் புரியுது..)
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
ரமணியம்மா, ராஜேஷ்குமார், முத்துலட்சுமி ராகவன், இந்திரா சவுந்தரராஜன் கதைகளே என் வாசிப்பின் பெரும்பான்மை. என் குழந்தைகளுக்கு இந்த வருட ஆடிப்பெருக்கில் வேள்பாரி அறிமுகப்படுத்தி இருக்கிறேன்..
9. உங்களை எழுத தூண்டியது எது?
வாசிப்பு..
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
2018 முதல்
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
‘காதலில் கரைந்திட வா..’ முதல் கதைக்கே வாசகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆரவ் அப்படி ஒரு இடத்தைப் பிடிப்பானென்று ஆரம்பிக்கும் போது எனக்கே தெரியாது.
அதைத்தொடர்ந்து ஆடுகளம் கதையின் துருவ் பட்டையை கிளப்பினான். மாந்தன் இப்போது வரை தேடப்படும் குற்றவாளி.. ( இரண்டாவது பாகம் வரும் செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)
(வந்தே ஆகணும் ரியாக்கா)
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
ஆம்!.. வாசிப்போர் எழுத்தோடு வாழ்கிறார்கள். புத்தகத்தை மூடி வைக்கும் போது ஏதோ ஓர் அனுபவம்
எல்லாருக்கும் கிடைக்கிறது. அது அவர்களின் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் நல்லதொரு பாதையை உருவாக்க வல்லது.
13 . மின்னூல், பதிப்பு புத்தகம். இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
Pdf திருட்டு இருந்த போதும் மின்னூல்களே பெருமளவு ரசிகர்களின் விருப்பமாய் இருக்கிறது.
எழுத்தாளர்களுக்கு புத்தகபதிப்பு தம் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாய் பார்க்கப்படுகிறது. இரண்டுமே கைகோர்த்து நடக்கின்ற காலம் இது. இதைப்போலொரு காலம் இனி வருவது கடினம்.
என்னைப் பொறுத்த வரை புத்தகங்களே உடன் வசிக்கும் பிள்ளை போன்ற உணர்வைத் தருகின்றன..
14. நீங்கள் பதிப்பித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ? (அவற்றை பெற தொடர்பு கொள்ள ) –
மாந்த்ரீகன், கண் கவர் கள்வனே, காமுறக் காதல் கொண்டேன், ஆடுகளம், ஈங்கிசைக்கும் காதலே..
ஆடுகளம்
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
ஆடியோ நாவல்கள்தான் இனி கதையுலகின் எதிர்காலம். என் கதைகளை ஆடியோவில் வெளியிட எனக்கும் ஆசையுண்டு. உங்களில் யாரேனும் குரல் கொடுக்க தயாரெனில் இப்போதே ஆரம்பித்துவிடலாம்.. ஆர்வமுள்ளவர்கள் உள் பெட்டியை உடைக்கலாம்..
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
எழுத்தாளனின் வெற்றி அவர்களின் கதாப்பாத்திர தாக்கத்தால் உருவாகிறது.
ஒரு கதை.. ஒரு அத்தியாயம்.. ஒரு வரி.. ஒருவரின் உள்ளத்தை சுட்டதெனில் அது எழுத்தாளனின் வெற்றிதான்.
எழுத்துப்பிழை, கதைக்கரு அத்தனையும் அங்கே அடிபட்டு போய்விடும்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
ஆரம்ப காலத்து சிறுகதைகளில் சிலதை எழுதத் தெரியாமல் எழுதி இருக்கிறேன். அவற்றை திருத்தி மெருகேற்றிக்கொள்ள ஆசை, நேரம் வாய்க்கவில்லை..
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
காதலில் கரைந்திட வா, காதல்காரா காத்திருக்கேன், ஆடுகளம், மாந்த்ரீகன், நிலவின் கனவு(குறுநாவல்), பேய்க்காதலி (சிறுகதை), மறுமை (சிறுகதை) இது எல்லாமே வாசகர்களால் அந்தந்த காலகட்டத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கதைகள்.
வாசகர்களின் வாய்மொழியே கதைக்கான அங்கீகாரம் இல்லையா..
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கரு எப்போதும் ஒற்றைவரிதான். பெரும்பாலும் கனவில் தோன்றிய கதைகளையே எழுதுகிறேன். அவ்வப்போது சுருக்கமாய் எழுதிவிட்டு, நேரம் கிடைக்கும் போது அதைச்சுற்றி கதைப்பின்னல் உருவாக்கப்படும்.
கதைச் சூழலுக்கான இடம், பொருள் பற்றிய தேடல்தான் என் பெரும்பான்மை நேரத்தை காவுகொள்ளும்.
நேற்று இன்று நாளைக்காக எதிர்கால உலகம் பற்றி தேடித்தேடி எழுதினேன். மாந்த்ரீகனுக்காக கடந்தகாலத்தை தூர்வாரினேன். கண் கவர் கள்வனுக்காக இலங்கைப் போரைப் பற்றி நிறைய தேடினேன்.
அந்த கதைச்சம்பவமாய் அரை வரி வரும் ட்ரெயினுக்கு கூட வழித்தடம், நேரம் எல்லாம் அலசிப் பார்த்துதான் எழுதினேன்..
இப்போது மாந்த்ரீகன் 2க்காக ஆத்மாக்கள் பற்றி அலசி முடித்திருக்கிறேன்..
20. நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
பிரதிலிபியில் :
நம்ம சமையல் – உப்புக்கண்டம்
அடவி – பேய்க்காதலி
எந்திரன் – உண்மை விளம்பி
பயணங்கள் முடிவதில்லை – சீக்ரெட் ஹனிமூன்
நட்பே துணை – நட்பெனும் நட்சத்திரம்
தளங்கள் :
ஸ்ரீகலா தமிழ் நாவல்ஸ் – அழகிய சங்கமம் – நேற்று இன்று நாளை
அன்னா ஸ்வீட்டி – புதினம் – ஆடுகளம்
சங்கமம் – கதைச்சங்கமம் – ஈங்கிசைக்கும் காதலே
மின்னிதழ் :
பூஞ்சிட்டு – பாலாவின் சாகசங்கள்
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
ஒவ்வொரு கதைக்கும் நேர்மறை எதிர்மறை கருத்துகள் நிச்சயம் தேவை. அவைதான் நம்மை மெருகேற்றும்.
தற்சமயம் ஃபேஸ்புக்கில் வரும் கருத்துக்களெல்லாம் கதாசிரியரை குறிவைப்பதால் இப்போது அவற்றை நிராகரிக்க பழகிக்கொண்டேன்.
செல்வராணி அம்மா போல அக்கறை உள்ளவர்கள் இப்போதும் உடனுக்குடன் நேர்மறை எதிர்மறை விமர்சனம் தரத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் எழுத்தாளர்கள் எல்லோரும் கடமைப் பட்டிருக்கிறோம்..
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
நாவல்களே.. இயல்பிலேயே கதையை விரிவாய் எழுதும் கைகள் எனக்கு.
23. ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
காதலை நேசிக்கும் மனதிற்கு, புதுக் கதைக்கருவில் அவ்வளவாய் விருப்பம் வருவதில்லை. இருந்தும் முயற்சிக்கிறோம், தேடிப்படிக்கும் வாசகர் வட்டம் மெதுமெதுவாய் வளர்ந்து வருவதால்..
24. குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
குடும்பம், காதல் சாராத கதைகள்தான் அதிகம். ரியா என்றாலே த்ரில்லர் சஸ்பென்ஸ் எனும் பெயர் வந்துவிட்டது.
யதார்த்த குடும்ப கதைகள் இனி அதிகம் வரும்..
25. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
புத்தகம் எதுவாயினும், உங்களுக்கு படிக்கும் பழக்கம் இருந்தாலே எனக்கு பரம சந்தோஷம்..
உங்களால் முடியாதபட்சத்தில் அடுத்த சந்ததிக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்துவிடுங்கள்.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எல்லோருக்கும் தேவையான பதில் இது. எந்த ஒரு கதையும் ஐம்பதாயிரத்தை தாண்டாமல் இருப்பதே நல்லது. ஆன்லைன் வாசகர்களின் மனதை நிறைக்க அடுக்கடுக்காய் எழுதி தள்ளாதீர்கள்..
முறையான எழுத்துப் பழக்கத்திற்கு முதலில் இருந்தே பழக்கப்பட்டுவிடுங்கள். உங்கள் கதைகளும் நிச்சயம் நிறைய வாசகர்களைச் சென்றடையும்.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
ஆன்லைனில் எழுதுபவர்கள் முறையாய் அவற்றை கிண்டிலில் பதிப்பித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கதை உங்களுடையதுதான் என்று நிரூபிக்க ஆதரமாகவும், ஒரு வருமானமாகவும் இருக்கும்..
புத்தக பதிப்பிற்கு முயற்சிப்போர் ஆஃப்லைனில் எழுதிவிட்டு பதிப்பகத்திடம் கொண்டு போவதே சிறப்பான வழி.
ஆடியோ நாவல்களுக்கென நிறைய ஆப்கள் வரிசை கட்டி நிற்கின்றன. முறையான அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இல்லை.
இமேகசின் பரவலாய் இணயத்தில் உலவுகிறது. பெயர் பிரபலமாக விரும்புவோர் அவற்றினுக்கு எழுத முயற்சிக்கலாம்.
இது எதுவும் இல்லை என்றாலும் கதைக்களம் புதிதாய் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் உங்களது வாசல் தேடி வரும்.
28 . உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
சஸ்பென்ஸை மெயிண்டெயின் செய்வது..
சில கதைகளுக்கு வாசகர்கள் உள்பெட்டி வரை வந்து ‘அடுத்து என்னாகும்னு எனக்கு மட்டும் சொல்லுங்க’ என்று கேட்கும் போது சரியான பாதையில் கதை பயணிக்கிறது எனும் திருப்தி வரும்.
29. உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்)
நம் பலத்தை,
நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும்
ஓர் ஆயுதம்..
‘அவமானம்…’
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
Amazon kindle :
https://www.amazon.in/Rhea-Moorthy/e/B088X1QNJY/ref=dp_byline_cont_ebooks_1
நம்ம மாந்தன் பத்தியும் சொல்லிட்டாங்க சீக்கிரமே அவனோட நம்ம பயணிக்கலாம் .. இன்னும் நிறைய நிறைய படைப்புகள் நீங்க தரணும் நாங்க படிசிக்கிட்டே இருப்போம் ..
அடுத்து நம்ம இன்னொரு எழுத்தாளரோட இன்னொரு ஸ்டாபிங் போடலாம் .. அவரு யாருனு நீங்க யோசிச்சிக்கிட்டே இருங்க அவரோட சீக்கிரம் வரேன் ..
அவர பத்தி க்ளூ வேணுமா ? அவர் கதைல இது தான் னு நாம படிச்சி முடிக்கற வரைக்கும் கண்டு பிடிக்கவே முடியாது..
அவர் தான் .. யோசிங்க நானும் சீக்கிரம் அவர் ஸ்டாபிங் தேடி நிக்கறேன்..