வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
இன்னிக்கி நம்ம பக்க போற எழுத்தாளர் ..
இவங்க ரொம்பவே ஃபேமஸ் .. முக்கியமா இவங்க எடுக்கற கதை கரு தான் முக்கியமான அட்ராக்ஷன் . எவ்ளோ சென்சிடிவ் கரு எடுத்தாலும் அதை இவங்க குடுக்கற விதம் தான்ங்க அவ்ளோ அழகு ..
இவங்க குடுக்கற தகவல்கள் எல்லாம் வேற லெவல்ல இருக்கும் .. ஒவ்வொரு கதைக்கும் இவங்களோட உழைப்பு அவங்க கடைல நம்ம கண்கூடா பாக்கலாம் . அவளோ தகவல் சேகரிச்சி கதையோட அதை இணைச்சி குடுக்கறது இன்னொரு பிளஸ் ..
யாருன்னு தெரிஞ்சதா ?
வாங்க உள்ள போய் பாக்கலாம் ..
எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….
1. புனைபெயர் – சாராமோன்
2. இயற்பெயர் – சரண்யா
3. படிப்பு – முதுகலை கணிதம்
4. தொழில் – தற்போது VIP
5. பிடித்த வழக்கங்கள் – புத்தகம் படிப்பது
6. கனவு –
கணிதத்தில் ஆராய்ச்சி பட்டம் பெறுவது
7. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்தின் மீதான தாக்கம் என்ன?
எழுத்தின் மீது கொண்ட ஆர்வம் , கூடவே வாசிப்பனுபவம் . அதுவே என்னை எழுத்துலகத்திற்கு அழைத்து வந்தது.
8. உங்களின் வாசிப்பு அனுபவம் பற்றி –
சிறுவயதில் இருந்தே எழுத்தின்மீது ஏற்பட்ட ஈர்ப்பு. போண்டா, பஜ்ஜி சுற்றி தரும் துண்டு பேப்பரைக் கூட விடாமல் படிக்கும் பழக்கம் உள்ளவள்.
9. உங்களை எழுத தூண்டியது எது?
எழுத்தின் மீதுள்ள ஆர்வக்கோளாறில் விளையாட்டாய் ஆரம்பித்தது.
10. எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
செப்டம்பர், 2018. ஆனால் மாதத்திற்கு ஒரு அத்தியாயம் என்ற நிலையில் இருந்தவள் 2019 ல் தான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தது.
11. உங்களது எழுத்தை படித்தவரிடம் அதன் தாக்கத்தை உணர்ந்தது உண்டா?
அதன் தாக்கத்தை உணர்ந்ததால் தான் தொடர்ந்து எழுத்துலகில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விளையாட்டாய் ஆரம்பித்த என் எழுத்தையும் ஏற்று அதனை கொண்டாடும் வாசக கண்மணிகளால் தான் என் எழுத்துப்பயணம் தொடர்கிறது.
12 . எழுத்தால் எதையும் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா ?
கண்டிப்பாக. நல்லவை, கெட்டவை என இரண்டுமே உள்ளது. நாம் படிக்க, எழுத தேர்ந்தெடுக்கும் புத்தகத்தைப் பொறுத்து.
13 . மின்னூல் , பதிப்பு புத்தகம் இவற்றினைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
மின்னூல் புத்தகம் தற்கால ஆரம்பக்கட்ட எழுத்தாளர்களின் வரபிரசாதம் என்றே சொல்லலாம். எளிதாக வாசகர்களிடம் தங்கள் எழுத்தை கொண்டு செல்ல எளிய வழியாக அமைந்துள்ளது மின்னூல் தான்.
பதிப்பு புத்தகம் – என்னதான் மின்னூல் புத்தகங்கள் வந்துவிட்டாலும் நமது எழுத்தை பதிப்பு புத்தகமாய் பார்ப்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவு. எனக்கும் கூட. எனது முதல் புத்தகத்தை கையில் ஏந்தியபோது எனது குழந்தையை கையில் ஏந்திய உணர்வு.
14. நீங்கள் பதிபித்த பதிப்பு புத்தகங்கள் எத்தனை ?
இடையிலான மௌனங்கள்
மலர்வன தாழம்பூக்கள்
(அவற்றை பெற தொடர்பு கொள்ள ) – செங்கோபுரம் பதிப்பகம்
வாட்ஸ்அப் எண் – +91 93846 93210
மின்னஞ்சல் முகவரி – [email protected]
15. ஆடியோ புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை என்ன ?
படிக்க நேரமில்லாமல் இருப்பவர்களுக்கு ஆடியோ புத்தகங்கள் வரபிரசாதம். கதை கேட்க விரும்புபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
16 . எழுத்தாளரின் வெற்றி என்பது எதன் அடிப்படையில் இருக்கிறது ?
தான் கூற வந்த / சொல்ல வந்த கருத்தை வாசகர்களின் மனதில் பதிய வைத்துவிட்டாலே வெற்றி தான்.
17 . உங்கள் படைப்பில் எதையாவது எழுதி இருக்க வேண்டாம் என்று எண்ணியதுண்டா ?
இதுவரை அப்படி எதுவும் எண்ணியதில்லை. ஆனால் ஒவ்வொரு படைப்பிலும் எனது எழுத்து மெருகேறி கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
18 . உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று கொடுத்ததாக நினைக்கிறீர்கள் ?
ஒவ்வொரு படைப்பும் அதற்கான வாசக கண்மணிகளால் கொண்டாடப்பட்டிருந்தாலும் என்னை அதிக வாசகர்களுக்கு எழுத்தாளராய் காட்டியது “அவனின் அவள்” நாவல் தான். எனது முதல் நாவலின் இரண்டாம் பாகம்.
19 . கதை கரு மற்றும் கதா பத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ? அதற்கான மெனக்கெடல் எந்த அளவிற்கு கொடுப்பீர்கள் ?
கதைக்கரு முதலில் எனது மனதில் ஓட்டிப் பார்க்கும்போது எனது மனதை முதலில் அது சமன்படுத்த வேண்டும். அதன்பின் தான் கதைக்கருவிற்கேற்ற கதாபாத்திரங்களை உருவாக்குவேன். என்னை சுற்றி உள்ள உறவுகளும் எனது கதைகளில் கதாபாத்திரங்களாக வலம் வருவர்.
20 . நீங்கள் பெற்ற போட்டி பரிசுகள் –
சுதாரவி நாவல்ஸ் தளத்தில் நடைபெற்ற குறுநாவல் போட்டியில் எனது படைப்பான “காகித மலரவள்” வெற்றி பெற்றது.
பிரதிலிபியில் நடைபெற்ற கதைத்திருவிழாவில் எனது படைப்பான “உயிர்மெய்” வெற்றி பெற்றது.
21. எதிர்வினை கருத்துக்களை எப்படி கையாள்கிறீர்கள்?
நேர்மறை கருத்துக்களை எந்தளவு ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் எதிர்மறை கருத்துக்களையும் ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் இங்கு தனிப்பட்ட விரோதங்களை தான் எதிர்மறை கருத்துக்களாய் பலர் பதிவிடுகின்றனர். அதனை எளிதாக கடந்துசெல்ல வேண்டும். ஆரோக்கியமான எதிர்மறை கருத்துகள் கண்டிப்பாக நமது எழுத்தை மேம்படுத்த உதவும்.
22 – நீங்கள் அதிகம் எழுத விரும்புவது எது ? (கதை , கவிதை, தொடர்கதை, நாவல் , சிறுகதை) ஏன் ?
தொடர்கதை. எனக்கு கதையை விரைவில் முடிக்க உந்துதலாய் இருப்பது தொடர்கதை தான்.
23 – ஏன் மாறுபட்ட கதைக்கரு கொண்ட கதைகள் வாசகர்களை அதிகமாக சென்றடைவதில்லை?
வாசகர்களை சென்றடையவில்லை என்று கூற இயலாது. அதற்கான வாசகர்களும் உள்ளனர். நாம் தான் அவர்களை இனங்கண்டுகொள்ளவில்லை.
24 . குடும்பம் காதல் சாராத கதைகளை நீங்கள் எழுதியது உண்டா? (படைப்பின் தலைப்பு)
காகித மலரவள், உயிர்மெய்
25 . அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களாக நீங்கள் கருதுவது என்ன என்ன?
முகம் சுளிக்க வைக்காத எழுத்தாய் இருந்தாலே போதுமானது.
26 . ஓர் படைப்பின் வார்த்தை அளவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
அது கதைக்கருவை பொறுத்து மாறுபடும். மற்றபடி வார்த்தை அளவுகள் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் விருப்பம்.
27. எழுதுபவர்கள் பெறும்பாலும் பயன் அடைவதில்லை. அவர்கள் பயன்பெற நீங்கள் கூறும் சில யோசனைகள் என்ன?
அமேசான் கிண்டிலில் மின்னூலாக பதிவிடலாம். தற்போது நாவலுக்காக பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. அங்கும் எழுதி பயன்பெறலாம். உதாரணம் – பிரதிலிபி, Bynge Tamil app.
28. உங்கள் தனி தன்மை என்று தாங்கள் கருதுவது என்ன ?
எனது எழுத்தைப் படித்தவுடன் இது ‘சாராமோகனின்’ எழுத்துகள் என வாசக கண்மணிகளால் கண்டுணர வேண்டும். அதில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.
29 . உங்களது கவிதை , பிடித்த வாக்கியம் , பழமொழி (பைனல் பஞ்ச்).
அப்படி எதுவும் இல்லையே 🙊
30 . உங்கள் படைப்புகள் (லிங்க்குகளுடன்) (Youtube also ):
நாவல்கள்
💓 உன்னுள் நான்.. என்னுள் நீ..
💓 பிறைநிலா
💓 அவனின் அவள்
💓 மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 1)
💓 இடையிலான மௌனங்கள்
💓 ஜானகி(யின்) ராமன்
💓 மலர் தீண்டும் அனல் காற்று (பாகம் 2)
💓 மலர்வன தாழம்பூக்கள்
💓 எண்ணம் யாவும் நீயாகிட!
💓 காதல் எண் : 4243 (Ongoing)
குறுநாவல்கள்
💓 உயிரியற்கையாம் காதல்
💓 காகித மலரவள்
💓 உயிர்மெய்
💓 இணைந்திடுவோமா எனதுயிரே!
💓 ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
அமேசான் –
யூ டியூப் சேனல் திரி :
பிரதிலிபி :
https://tamil.pratilipi.com/user/saranyamohan-vwem90q979
இதோ நம்ம லவ்லி எழுத்தாளரோட அருமையான பயணம் .. இவங்க பேர் கதை படிக்கும் முன்னயே மேக்ஸிமம் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கும். இவங்க கதை படிச்ச அப்பறம் நிச்சயம் இவங்க எழுத்து உங்க விருப்ப பட்டியல்ல சேர்ந்துடும்.
அழகான எழுத்து நடை, மொழி கையாளுதல், மனசுல தைச்சு நிக்கற கதை கரு, இதோட அவங்களோட கதை போக்குன்னு எல்லாமே நம்ம மனசுல அப்டியே நிக்கும் ..
இவங்க நம்ம சமூகத்துல நம்ம பண்ற தப்பு எல்லாம் ஒண்ணு ஒண்ணா கதையா சொல்றபோ நம்ம தெரியாம புரியாமா பண்ற தப்பு எல்லாம் கண்டிப்பா நம்மல யோசிக்க வைக்கும் ..
நிச்சயம் இவங்க எழுத்துல காலத்துக்கும் நிக்கற படைப்புகள் கண்டிப்பா குடுப்பாங்க .. நம்மல கண்டிப்பா யோசிக்க வைக்கும், நம்மல திருத்தவும் வைக்கும்.
“உயிர்மெய்” ல நீங்க சொன்ன மூன்றாம் நான்காம் பாலினத்தவர்கள் பத்தின தகவல்கள் எல்லாம் நிச்சயம் பெரும்பாலோருக்கு தெரியாது. ஒவ்வொரு திருநங்கையும் எவ்ளோ கஷ்டங்கள் நம்மளால படறாங்க, அவங்களோட அடிபடை தேவைகளை கூட நம்ம இன்னிக்கி வரை செஞ்சி தரலன்னு புரியறப்போ நிஜமா என்மேலயும் கோவம் வருது.
இடையிலாத மௌனங்கள்ல மதி, இளஞ்செழியன் மனசுல நின்னுட்டாங்க சிஸ்டர்.. மதியோட குணமும், அவளோட வாழ்க்கை மலர்ந்த விதமும், அந்த கதையோட மொத்தமும் இன்னும் மனசுக்கு இதம் குடுக்குது ..
இதம் கொடுக்கும் எழுத்தும், சாட்டை எழுத்தும் உங்களுக்கு வசபட்டு இருக்கு. இதை நீங்க எப்பவும் விடாதீங்க .. எழுத்துல உங்களுக்கு அற்புதமான இடம் காத்திருக்கு ..
உங்களோட எழுத்து பயணம் காலத்துக்கும் தொடரணும் சிஸ்டர் .. உங்களோட எல்லா முயற்சிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துகள் ..
இன்னிக்கி நம்ம பயணம் எல்லாருக்கும் பிடிச்சி இருக்கும்ன்னு நினைக்கறேன் ..
அடுத்து ஒரு சுட்டி எழுத்தாளரோட சீக்கிரமே வரேன் ..