வாசகருடன் சில நிமிடங்கள் ..
1. பெயர் – சுபகீதா
2. படிப்பு – முதுகலை பொருளாதாரம் இன்னும் சில.
3. தொழில்/வேலை – தமிழ் வகுப்பு ஆன்லைனில் எடுக்கிறேன்.
4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு. அதற்கு முன்பே துக்ளக் படிக்கும் வழக்கம் மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது.
5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?
படிக்கும் பொழுது தேர்வு சமயங்களில். இப்போது நேரம் கிடைக்கும் பொழுது.
6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?
புத்தகம் எனது முதல் தேர்வு. இப்போது கணினி வழியிலும்..
7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?
தோராயமாக ஐந்து முதல் 15 புத்தகங்கள் வாங்குவேன். சில புத்தகங்கள். நானும் என் குழந்தைகளும் படிக்கும் படிக்கு வாங்குவேன். புத்தக கண்காட்சி வருடம் தோறும் சென்று வாங்குவது பிடித்தமான விடயம்…
8. Ebook / Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்?
புத்தகம்… நிதானமா ஆழ்ந்த வாசிப்புக்கு புத்தகம் சரியான ஒன்று. பொன்னியின் செல்வன் புத்தகம் வழியாக படிக்கும் பொழுது உண்டான தித்திப்பு ஆன்லைன் வாசிப்பில் எனக்கு கிடைக்கவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து..
9. வாசிப்பினால் உங்களுக்கு ஏற்பட்ட முதல் தாக்கம் என்ன?
ரமணி சந்திரன் அவர்கள் நாவல் படிக்கும் பொழுது மனது லேசாகும். அது முப்பது வயது வரை. இப்போது அழுத்தமான கதைகள் தேடுகிறேன்.
10. வாசிப்பினால் கிடைத்த அனுபவத்தினால் உங்களது செயல்பாடு / குணாதிசயங்கள் மாற்றிக் கொண்டது உண்டா? அது என்ன?
இருமுறை குளிப்பதும் பல் துலக்குவதும், வீட்டில் அனுசரிச்சு போவதும் ரமணிம்மா நாவல்களில் கற்று இன்று வரை கடை பிடிக்கிறேன்.
11. புதிய புத்தகங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? (அட்டை படம், தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், முன்னுரை.. )
அட்டை படம் தவிர மற்றவை…
12. உங்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் / கதைகள் மிகவும் பிடிக்கும்? (சுயசரிதம், மர்மம், திகில், சாகசம், காதல், குடும்பம், ஆன்மீகம், ரொமான்டிக், வரலாறு, புராண கதைகள், இலக்கியம் , சரித்திரம் , etc….) ..
மேற்கண்ட அனைத்தும்….
13. “எழுத்தாளர்” என்பவர் உங்களுக்கு எப்படிபட்ட உறவாக தெரிகிறார்கள்?
எழுத்தாளர் பற்றி சொல்வதை விட ஆழமான நல்ல எழுத்துகள் சிறந்த மன நல மருத்துவர் என்பேன்.
14. உங்கள் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்படுத்திய புத்தகம்/கதை என்ன?
படிப்பது சுகமே! – திரு இறையன்பு
போர் தொழில் பழகு – திரு இறையன்பு
ஜல்லிக்கட்டில் பசுமாடுகள் – அய்க்கண்
இன்னும் பல….
15. அன்றைய எழுத்தாளர்களுக்கும், இன்றைய எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கு தோன்றும் வித்தியாசங்கள் என்னென்ன?
காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள். புதியதாக எழுதுபவர்கள் கொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்கலாம்.
16. இன்றைய எழுத்தினால் மொழி வளர்ந்து வருவதாக நினைக்கிறீர்களா?
பதில் சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும்!
17. “வழக்குமொழி, பேச்சுமொழி, வட்டார மொழி, செந்தமிழ் மொழி”
இதில் எது வாசிக்கும் போது உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது? எந்த வகையை அதிகமாக வாசிப்பீர்கள்?
எதுவாக இருந்தாலும் பிழைகள் அர்த்த மாறுபாடுகள் இல்லை என்றால் வாசிப்பு இனிமை.
18. வரலாற்று நாவல்கள் வாசிப்பீர்களா? எந்த நாவல் மிகவும் பிடிக்கும்?
கடல் புறா, நம் பொன்னியின் செல்வன் இன்னும் சில…
19. இன்றைய காதல்/குடும்ப நாவல்கள் பற்றிய தங்களின் கருத்து என்ன?
குடும்ப நாவல்கள் கலவை.. சில அருமை ரகம், சில பரவாயில்லை ரகம்.
காதல் நாவல்கள் சலிப்பு. இதழ் ஒற்றலில் ஆரம்பித்து ஒரே வரிகள் திணிப்பு. டெம்ப்ளட் கதைகள்.
20. வித்தியாசமான கரு கொண்ட கதைகளை பிடிக்குமா? அறிவியல் சார்ந்த புத்தகங்கள்/ கதைகள் வாசிப்பீர்களா?
நிறைய பிடிக்கும். வாசிப்பு சுகமும் கூட.
21. வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவீர்களா? எத்தனை நேரம்?
சுமார் அரைமணி நேரம்…
22. வாசித்த புத்தகம் / கதை பற்றி விமர்சனம் கொடுப்பீர்களா ? எழுத்தாளரின் தவறுகளை எந்த விதத்தில் சுட்டிக்காட்டுவீர்கள்?
கற்பனைக்குள் நுழைவு செய்ய விருப்பம் இல்லை பிடிக்காத கதைகள் கடந்து விடுவேன்.
சில எழுத்தாளர்கள் எழுத்து பிழை சொன்னால் எடுத்து கொள்வார்கள். அவர்களுக்கு தனியே சொல்லுவேன். பொதுவில் இல்லை.
மனதில் ஆழ பதியும் கதைகளுக்கு விமர்சனம் சொல்வேன்.
23. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் / கதைகள் (5)
எனக்கு மறக்க முடியாத கதைகள் நிறைய உண்டு. உடல் பொருள் ஆனந்தின்னு ஒரு கதை. அதை டிவி சீரியல் கூட எடுத்தாங்க. அதை படிச்சிட்டு ஒரு மாசம் தூக்கம் இல்லாம சுத்தினேன். ஸ்ரீரங்கத்து தேவதைகள், வாஷிங்டனில் திருமணம் , மீண்டும் ஜீனோ இதெல்லாம் என்னோட பிடிச்ச கதைகள். துப்பறியும் சாம்பு.. சமீபத்துல கிடைச்சது. என்னோட பசங்களுக்கு படிச்சு காமிச்சேன். லட்சுமி அவங்களோட கதைகளும், அருமை. மறக்க முடியாது.. சூரியகாந்தம். கதைகள் இயல்பா நம்ம வாழ்க்கையில் எங்கோ நடந்த மாதிரி ஒரு பாதிப்பை குடுத்தா எழுத்தோட தாக்கம் அதிகம்னு சொல்லுவேன். இப்போது நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க அது ஆரோக்கியமான விஷயம். ஆன்லைன் ல நிறைய கதைகள் வாசிக்கிறேன்.
பால்நிலா, மிதிலாவிலாஸ், அரக்கு மாளிகை,அலை ஓசை… இன்னும் நிறைய…
24. நீங்கள் வாசித்ததில் மறக்கமுடியாத / மனதை மிகவும் தொட்ட விஷயங்கள் / தகவல்கள் என்ன?
திஷியின் கதைகள் இப்போது தாக்கத்தை கொடுக்கிறது வித்யாசமாக இருக்கு. விண்வெளி வேட்டை, பிடித்திருந்தது.
கருடா சௌக்கியமா.. நிதர்சனமான விஷயங்கள். இன்னும் போட்டிக்காக எழுத பட்ட நிறைய கதைகள் வித்யாசமான உணர்வு கொடுத்தது.
25. இன்றைய எழுத்து உலகம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
இன்றைய எழுத்துலகம் பெரியது. ஆன்லைன்னில் நிறைய படிக்க கிடைக்கிறது. அதிகம் சிரமம் இல்லாமல் தேட முடிகிறது. இது கண்டிப்பாக ஆரோக்கியமான ஒன்று.
நல்ல எழுத்துக்கள் நம்மை வேறு உலகத்திற்கு இழுத்து செல்லும்…
26. அன்று முதல் இன்று வரை வெகு சில ஆசிரியர்களின் புத்தகங்கள் / கதைகள் மட்டுமே அதிகமாக வாசகர்களை அடைகிறது. பல நல்ல விஷயங்களை கூறும் புத்தகங்கள் அதிக வரவேற்பு பெறுவதில்லை. நீங்கள் அந்த எழுத்தாளர்களை கொண்டாட மறுக்கும் காரணம் என்ன ?
எனக்கு பெரிய எழுத்தாளர், புதிய எழுத்தாளர் வித்தியாசம் இல்லை. விமர்சனம் வைத்து படிக்க தொடங்குவேன். பிடித்தால் தொடர்ந்து முடிப்பேன். இல்லாவிட்டால் தொடர்ந்து அவர்கள் கதைகள் வாசிப்பை கடந்து விடுவேன்.
27. உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் (அன்றைய 5வர் & இன்றைய 5வர்) ஏன் அவர்கள் எழுத்து பிடிக்கும்? அவர்களின் சிறப்பாக நீங்கள் கருதுவது என்ன?
சுஜாதா, சாண்டில்யன், இந்துமதி, சிவசங்கரி, வித்யா சுப்பிரமணியம், கல்கி, அண்ணாதுரை
இவர்களை ஏன் பிடிக்கும் என்று சொல்ல அவசியம் இல்லை.
இன்றைய எழுத்தாளர்கள்
இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிம்மா, முத்துலட்சுமி ராகவன், இன்னும் ஆன்லைன் எழுத்தாளர்கள் நிறைய….
28. ஒரு புத்தகத்தில் / கதையில் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
அழுத்தம், ஏதாவது சமூகம் சார்ந்த விஷயம், தகவல்கள் கொஞ்சம், திணிக்க படாத ரொமான்ஸ், குடும்ப நிகழ்வுகள்…
29. எழுத்தில் ஆண் / பெண் பேதம் இல்லை. ஆனால் மொழி ஆளுமை உள்ள எழுத்து ஆண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா அல்லது பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளதா? உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?
பள்ளியில் படிக்கும் பொழுது துணைப்பாடம் எழுதுவோம். அதை சிறப்பாக எழுதும் திறன் வளர்த்துக்கொண்டோருக்கு இப்போது எழுதும் திறன் எளிதாக வரும். ஆண் பெண் பேதம் இல்லை.
சுற்றி நடக்கும் விஷயங்கள் எளிதாக கிரகிக்கும் நபரால் சிறந்த படைப்பு கொடுக்க முடியும்.
30. யாருடைய ஆட்டோகிராப் இருக்கிறது அல்லது வாங்க வேண்டும் என்று ஆசை?
ரமணி அம்மா, காஞ்சனா ஜெயதிலகர்…
31. கதைகளில் எதிர்மறை முடிவுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதன் தாக்கம் உங்களுக்கு எப்படிபட்ட மனநிலையை கொடுக்கிறது?
கதை சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருந்தால் ஒப்புக்கொள்கிறேன்.
32. ஆடியோ கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு ஆடியோ கதையை கூறுங்கள்.
படிப்பது சுகமே!… ஆடியோ கேட்பது இல்லை.
33. ஒரு கதையில் இருந்து மற்றொரு கதையின் தொடக்கம் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?
முந்தைய கதையோடு பொருந்தும் போது சரி தான்!
34. மேற்கண்ட விஷயங்கள் தவிர நீங்கள் எழுத்தாளர்களிடம் வேறு என்ன கூற ஆசைபடுகிறீர்கள் ?
கொஞ்சம் புதிய விதமாய் எழுதலாம். நிறைய டெம்ப்லேட் கதைகள், படிக்கும் ஆர்வத்தை குறைகிறது.
என்ன ஒரு அருமையான நேர்காணல்.. மிகவும் தேர்ந்த வாசிப்பு அனுபவம் உள்ள ஒரு வாசகர்.
இவங்களோட உள்வாங்குதல் திறன் நிஜமா வியக்க வைக்குது. கதைல வந்தத படிச்சிட்டு தினம் ரெண்டு வேலை குளிச்சி, பல் துளக்குவேன்னு நீங்க சொன்னது நிஜமா ஆச்சரியமா இருந்தது. அதுல உங்க வாசிப்பின் ஆழம் புரியுது.
நீங்க சொன்னது போல நல்ல கிரகிப்பு இருந்தால் தான் நல்ல அழுத்தம் நிறைந்த எழத்து உருவாகும். அந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது சிஸ்..
எழுத்தாளர்களை விட நீங்க எழுத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ரொம்ப பிடிச்சு இருக்கு. உண்மையில் நல்ல எழுத்துக்கள் நல்ல மனநல மருத்துவர் மட்டும் இல்ல வழிகாட்டியும் கூட ..
உங்களோட பொன்னான தருணங்கள எங்களோட பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றிகள். உங்க வாசிப்பு நிச்சயம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு நல்வழி காட்டும்ன்னு தெரியுது. உங்க அனுபவங்கள் தொடரட்டும், வாசிப்பும் தொடரட்டும்.
வாசிப்பை நேசிப்போம் …