72 – ருத்ராதித்யன்
72 - ருத்ராதித்யன் “பைரவக்காட்டை பற்றி நமக்கு இன்னும் தீர்மானமாக தெரியாது மகளே…. அதை வைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி அவசியம் தானா என்பதை சிந்தியுங்கள்….. “, அரசர் கூறிவிட்டு எழுந்து சென்றார். அமரபுசங்கர் பைரவக்காடு எனும் வார்த்தை காதில் விழுந்ததும் மனதளவில் குமைந்துக் கொண்டிருந்தார். அந்த காட்டிற்கு செல்லும் வழியை கண்டறிய முற்படுகையில் தான் அவனின் பெற்றோர் அகாலமரணம் அடைந்தனர். அந்த மரணத்தினால் தான் இவர்களுக்கு ‘பைரவக்காடு’ என்ற இடம் இருப்பதே தெரிந்தது. ...