17 – ருத்ராதித்யன்
17 - ருத்ராதித்யன் ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது. புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள். அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல, புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல் நடந்து வந்தாள். அவள் கீழே வந்ததும் பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும் பறந்து வந்தது. "ஏய்….இன்னும் தூங்கலியா நீங்க? ", என ...