21- காற்றின் நுண்ணுறவு
21- காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக் கிளம்பினான். "அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….", என சாக்க்ஷி வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தாள். மாமல்லனிடம் எப்படி வல்லகி வராததன் காரணம் கூறுவது என்கிறக் குழப்பத்துடன் கார் ஓட்டியபடி வந்தான். பிறைசூடன் மாலை கிளம்பி இரவிற்குள் சென்னை வந்து சேர்ந்தவர் பெண்கள் இருவரையும் தன் இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் தங்க ஒரு தளத்தையே கொடுத்தவர். அதில் ...